ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராடத் தடை


லக்னோ, ஏப். 2 உத்தரப்பிரதேசத்தில் மாநில பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்களும், ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அம்மாநில பாஜக அரசு தடை விதித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்கள் 18 உள்ளன. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உள்ளன. இந்நிலையில், மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிபவர்களை, எஸ்மா எனப்படும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் ஆதித்யநாத் அரசு கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களோ, ஊழியர்களோ வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தடை செய்யப் பட்டுள்ளது. மேலும், இதனை மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், வாரண்ட் இல்லாமல் அவர்களை கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 -விடுதலை,2.4.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக