செவ்வாய், 8 நவம்பர், 2022

10 லட்சம் பேர்களுக்கு வேலை பயிர்க் கடன் தள்ளுபடி! குஜராத் வாக்காளர்களுக்கு ராகுல்காந்தி உறுதி

 

புதுடில்லி, நவ.7 பாஜக அரசின் வஞ்சகத்திலிருந்து குஜராத் மக்களை காங்கிரஸ் காப்பாற்றும் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேர வைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில், இரண்டு கட்டங் களாக வாக்குப்பதிவு நடை பெறவுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாஜக அரசின் வஞ்சகத்திலிருந்து குஜராத் மக்களை காங்கிரஸ் காப் பாற்றும் என   ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "குஜராத் மக்களுக்கு, 500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர், இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள், 3 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். பாஜக அரசின் வஞ்சகத்திலிருந்து காங்கிரஸ் உங்களை காப்பாற்றும், மாநிலத்தில் மாற்றத்தின் திருவிழா கொண்டாடப்படும்" என்று தெரிவித்தார்.

ட்விட்டர் - இந்தியாவில் 90விழுக்காட்டினர் பணிநீக்கம்


புதுடில்லி,நவ.8 ட்விட்டர் நிறு வனத்தை எலான் மஸ்க் ரூ.3.75 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தியுள்ளார். அவர் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக கணிசமான பணியாளர்களை அடுத்தடுத்து பணி நீக்கம் செய்து வருகிறார்.

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத் தின் இந்திய பிரிவு வட்டாரங்கள் கூறியதாவது:

இந்தியாவில் 200 பேர் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த வாரம் 180-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 10-க்கும் மேற்பட்ட சிலரே இன்னும் பணி யில் தொடர்ந்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர் களில் 70விழுக்காடு வரை தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் வேலை செய்து வந்தவர்கள்.

இவை தவிர, சந்தைப் படுத்துதல், பொதுக் கொள்கை, பெருநிறுவன தொடர்பு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளை சேர்ந்த பணியாளர்களும் ட்விட்டர் நடவடிக்கை யால் வேலை இழப்புக்கு ஆளாகி உள் ளனர். பன்னாட்டு அளவில் அந்நிறுவனத் தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

வெள்ளி, 22 ஜூலை, 2022

வாரத்துக்கு 3 நாட்கள் விடுமுறை : ஒன்றிய அரசு முடிவு

பகுதி நேர ஆசிரியர்களுக்கு 10,000 ரூபாயாக ஊதியம் உயர்வு : தமிழக அரசு அரசாணை வெளியீடு


சென்னை,பிப்.2- தமிழகத் தில் பகுதி நேர ஆசி ரியர்கள் 12ஆயிரத்து 483 பேருக்கு  நிபந்தனை களுடன் மாத ஊதியம் ரூ.7,700-லிருந்து ரூ.10,000 ஆக அதிகரித்து வழங்குவதென தமிழக அரசு அறிவித்துள்ளது.

வாரத்தில் மூன்று நாட் கள் முழுவதுமாக பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை யுடன் பகுதி நேர ஆசிரியர் களுக்கான ஊதியம் ரூ.7,700 லிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், அரசுப் பள்ளி களில் கல்விசார் இணைச் செயல்பாடுகளை பயிற்று விக்கும் பொருட்டு தோற்று விக்கப்பட்ட 12483 பகுதி நேரப் பயிற்றுநர் பணியிடங் களில் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர பயிற்றுநர்களுக்கு நிபந்த னைகளுடன் இவர்களது மாத ஊதியம் ரூ.7700-லிருந்து ரூ.10000 ஆக அதி கரித்து வழங்கிட முடிவு செய்துள்ளது. தற்போது பணியில் உள்ள பகுதி நேரப் பயிற்று நர்களை தேவை யுள்ள பள்ளிகளுக்கு மறு ஓதுக்கீடு செய்து, இனிவரும் காலங்களில் வாரத்திற்கு மூன்று முழு நாட்கள் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும். பகுதி நேரப் பயிற் றுநர்கள் பணி புரியும் சார்ந்த பள்ளி தலைமையாசிரி யர்கள் வழங்கும் கால அட்ட வணையின்படி இவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு பயிற்று விக்க வேண்டும். இவர்களுக் கான வருகைப் பதிவேடு சார்ந்த தலைமையாசிரிய ரால் முறையாக பராமரிக் கப்பட வேண்டும். இவர் களின் ஊதியம் வருகைப் பதிவேட்டின்படி தலைமை யாசிரியர் மூலமாகவே விடு விக்கப்பட வேண்டும் என் றும் குறிப்பிட்டுள்ளனர். 

சனி, 2 ஜூலை, 2022

தமிழ்நாடு வணிகர் நலவாரிய உறுப்பினர்களுக்கு குடும்ப நலநிதி ரூ.3 லட்சமாக உயர்வு


சென்னை, ஜூன் 7  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை: வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பநல உதவித் தொகைரூ.50 ஆயிரமாக வழங்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து, தற்போது வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசு தாரர்களுக்கு குடும்ப நல உதவித் தொகைரூ.1 லட்சமாக வழங்கப்பட்டு வருகிறது. 

திருச்சியில் 5.5.2022 அன்று நடந்த 39ஆவது தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் முதலமைச்சர், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் உயிரிழக்கும் பட்சத் தில் அவர்களது குடும்பத்திற்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்பநல உதவித்தொகைரூ.1 லட்சத்தில் இருந்துரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளார். 

அதனடிப்படையில், வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பி னராக பதிவு பெற்றுள்ள வணி கர்களுக்கு நிபந்தனைகளுக்குட் பட்டு குடும்ப நல உதவித்தொகை உயர்த்தி வழங்க ஆணை வழங்கு மாறு வணிகவரி ஆணையர் அரசை கேட்டுக்கொண்டார்.

அதன்படி, வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக பதிவு பெற்று குறைந்தது ஓர் ஆண் டாவது உறுப்பினராக இருத்தல் வேண்டும். 

உறுப்பினர் மதிப்புக் கூட்டுவரி அல்லது சரக்குகள் மற் றும் சேவைகள் வரியில் பதிவு பெற் றிருப்பின் முறையாக மாதாந்திர நமுனா தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். உறுப்பினர் எவரும் வேறு எந்த நல வாரியத்திலும் பதிவு பெற்று நல உதவித் திட்டம் எதுவும் பெற்றிருத்தல் கூடாது. உறுப்பி னரின் மரணம் தற்கொலையாக இருத்தல் கூடாது. 

மேலும், தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பினை செயல் படுத்தும் விதமாக வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக உள்ள வணிகர்கள் இறக்க நேரிட் டால் அவர்களின் குடும்பத்திற்கு நிபந்தனைகளுக்குட் பட்டு, குடும்ப நல உதவித்தொகைரூ.1 லட்சத்தில் இருந்துரூ.3 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்து ஆணையிடுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


வெள்ளி, 10 ஜூன், 2022

தமிழ்நாட்டில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம்: அரசு அனுமதி

தெய்வ வரி