சென்னை, ஜூன் 7 தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணை: வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு குடும்பநல உதவித் தொகைரூ.50 ஆயிரமாக வழங்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து, தற்போது வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசு தாரர்களுக்கு குடும்ப நல உதவித் தொகைரூ.1 லட்சமாக வழங்கப்பட்டு வருகிறது.
திருச்சியில் 5.5.2022 அன்று நடந்த 39ஆவது தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் முதலமைச்சர், தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் உயிரிழக்கும் பட்சத் தில் அவர்களது குடும்பத்திற்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தால் தற்போது வழங்கப்பட்டு வரும் குடும்பநல உதவித்தொகைரூ.1 லட்சத்தில் இருந்துரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளார்.
அதனடிப்படையில், வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பி னராக பதிவு பெற்றுள்ள வணி கர்களுக்கு நிபந்தனைகளுக்குட் பட்டு குடும்ப நல உதவித்தொகை உயர்த்தி வழங்க ஆணை வழங்கு மாறு வணிகவரி ஆணையர் அரசை கேட்டுக்கொண்டார்.
அதன்படி, வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக பதிவு பெற்று குறைந்தது ஓர் ஆண் டாவது உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
உறுப்பினர் மதிப்புக் கூட்டுவரி அல்லது சரக்குகள் மற் றும் சேவைகள் வரியில் பதிவு பெற் றிருப்பின் முறையாக மாதாந்திர நமுனா தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். உறுப்பினர் எவரும் வேறு எந்த நல வாரியத்திலும் பதிவு பெற்று நல உதவித் திட்டம் எதுவும் பெற்றிருத்தல் கூடாது. உறுப்பி னரின் மரணம் தற்கொலையாக இருத்தல் கூடாது.
மேலும், தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பினை செயல் படுத்தும் விதமாக வணிகர் நல வாரியத்தில் நிரந்தர உறுப்பினராக உள்ள வணிகர்கள் இறக்க நேரிட் டால் அவர்களின் குடும்பத்திற்கு நிபந்தனைகளுக்குட் பட்டு, குடும்ப நல உதவித்தொகைரூ.1 லட்சத்தில் இருந்துரூ.3 லட்சமாக உயர்த்த அரசு முடிவு செய்து ஆணையிடுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.