வெள்ளி, 2 நவம்பர், 2018

2019ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாள்கள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, அக்.31 அடுத்த ஆண்டின் (2019) பொது விடுமுறை நாள்கள் அடங்கிய பட்டியலை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் 22 நாள்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்:-

- viduthalai, 31.10.18

புதன், 31 அக்டோபர், 2018

முன்மாதிரி திட்டம் பெண் தொழிலாளர்கள் மதிப்பை உறுதிப்படுத்த உட்காரும் உரிமை-அவசர சட்டம் அமல்!

திருவனந்தபுரம், அக்.27- பெண் தொழிலாளிகளின் மதிப்பையும், பாதுகாப்பையும் உறுதிப் படுத்த உதவும் வகையில் கடைகள், வணிக நிறுவனங்களில் பணியிடங்களில் உட்காரும் உரிமை குறித்து கேரள அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் நாட்டுக்கே மற்றுமொரு முன்மாதிரியாகி உள்ளது. இது தொடர்பான அவசரசட்டம் ஆளுநரால் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமலாகத் தொடங்கியுள்ளது.
1960ஆம் வருடத்திய கேரள கடைகளும் வணிக நிறுவனங்களும் சட்டத்தில் தொழி லாளிகளுக்கு சாதகமானதிருத்தங்கள் செய் வது தொடர்பான மசோதாவின் அவசர முக்கியத்துவம் கருதி ஆளுநர் இதுதொடர்பான அவசரசட்டத்தை பிறப்பித்துள்ளார்.
எல்டிஎப்அரசின்தொழிலாளர்நல நடவடிக்கைகளில் முக்கியமான மைல்கல் லாக இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந் துள்ளது என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டி.வி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். சட்டத் திருத்தத்தை உடனடியாக அமலாக்க தொழிலதிபர்களையும், இதுதொடர்பான உரிமைகளை உறுதிப்படுத்த தொழிலா ளிகளையும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
துணிக்கடைகள், நகைக்கடைகள், உண வகங்கள் போன்ற வணிக நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் உள்ளிட்டோரின் நீண்டகால கோரிக்கை வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. பெண்களின் மரியா தையை உயர்த்தும் வகையில் அவர்கள் பணி யாற்றும் இடங்களில் பாலின சமத்துவம் கடைப்பிடிக்கப்படும் என எல்டிஎப் அரசின் தொழில் கொள்கையில் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலை முதல் மாலையில் பணிமுடியும்வரை பெண் தொழிலாளர்களுக்கு உட்கார உரிமை இல்லாத நிலையே நீடித்து வந்தது. மிக கடினமான தொழில் சூழ்நிலையை அவர்கள் நேரிட்டு வந்தனர். பணி நேரத்தில் உட்காரவும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பு வழங்கவேண்டும் என பல்வேறு மய்யங்களில் பெண் தொழிலாளர்கள் போராட்டக் களம் கண்டனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு சட்டப்பூர்வமாக இருப்பிடத்தை உரிமையாகமாற்றியிருக்கிறது.எல்டிஎப் அரசு. பத்தாயிரக்கணக்கான பெண் தொழி லாளர்களின் மரியாதையும், மனித உரிமை களும் பாதுகாக்கப்படும் முடிவை அரசு எடுத்துள்ளது.
சட்டத் திருத்தத்தில் வழிவகை
பணியிடங்களில் இருக்கை வழங்கப்படா தது குறித்து நீண்டகாலமாக புகார் இருந்து வந்தது. சட்டத்திருத்தத்தின்மூலம் இருக்கை அவர்களது உரிமையாக மாறிவிட்டது. மாலை ஏழு மணிமுதல் காலை ஆறு மணிவரை பெண்களை வேலை வாங்கக் கூடாது என்பதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இரவு ஒன்பது மணிவரை வேலைசெய்யும் வகையில் பெண் தொழிலாளிகளை நியமனம் செய்ய சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதோடுபோதுமானபாதுகாப்பு,குடி யிருக்கும் பகுதிக்கான பயண வசதி போன்ற வற்றை உறுதி செய்து ஒன்பது மணிவரை பெண்களை அவர்களது அனுமதியோடு பணிக்கு நியமனம்செய்யலாம். இரவு ஒன்பது மணிக்குமேல் 2 முதல் 5 பெண்கள் கொண்ட குழுவாக மட்டுமே பணிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும். வாரத்தில் ஒருநாள் கடைகள் மூடப்பட வேண்டும் என்கிற நிபந்தனை கைவிடப்பட்டுள்ளது. வாரத்தில் ஒருநாள் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்கவேண்டும் என்கிற நிபந் தனை சேர்க்கப்பட்டுள்ளது. தொழில் பழகுநர் உள்ளிட்டோர் எந்த நிறுவனத்தில் பணியாற்றினாலும் தொழிலாளி என்கிற வரையறைக்கு அவர்களை உட்படுத்த அரசுக்கு அதிகாரம் வழங்கும் பிரிவு சட்டத்திருத்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சட்டமீறல்களுக்கான தண்டனை சட்டத்திருத்தத்தில் அதிகரிக்கப் பட்டுள்ளது.
சட்ட விதிகளை மீறும் தொழிலதிபர்களுக் கானஅபராதம்ஒவ்வொருபிரிவுக்கும்அய்ந் தாயிரம் ரூபாய் என்பதுஒரு லட்சம்ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்ட மீறலில் ஈடு படுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் பதினாயிரம் ரூபாயிலிருந்து இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கேரள கடைகளும், வணிக நிறுவனங்களும் சட்டத்தின்படி நிறுவன உரிமையாளர்கள் பதிவேடுகளை மின்னணு வடிவத்தில் பரா மரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கேரள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1960 இன்படி மூன்றரை லட்சம் நிறுவனங்கள் உள்ளதாகவரையறுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் பணியாற்றும் 35 லட்சம் தொழிலாளர்கள் இந்த சட்டத்தின் வரம்புக்குள் வருவார்கள்.
- விடுதலை நாளேடு, 27.10.18

வியாழன், 18 அக்டோபர், 2018

கோத்ரேஜ் தி.தொ.ச.[ GODREJ DWU ]: கோத்ரேஜ் தொழிலக ஆண்டு விழா - 2018

கோத்ரேஜ் தி.தொ.ச.[ GODREJ DWU ]: கோத்ரேஜ் தொழிலக ஆண்டு விழா - 2018:           மறைமலை நகரிலுள்ள கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்டு நிறுவன ஆண்டுவிழா 17.10.18 முற்பகல் தொழிற்சாலை வளாகத்திற்குள் கொண்டாடப்பட்டது.    ...

செவ்வாய், 24 ஜூலை, 2018

கலைச்செல்வன் பணி ஓய்வு - ரூ.10,000/ நன்கொடை


 

பெரியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் முதல்வர் கலைச்செல்வன் அவர்கள் பணி நிறைவு அடைந்ததையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து ரூ.10,000/- நன்கொடை வழங்கினார். அவரது பணியைப் பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை உள்ளனர். (திருச்சி -& 14.7.2018)
- விடுதலை நாளேடு, 17.7.18

திங்கள், 15 ஜனவரி, 2018

ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்கக் கோரிக்கை


திருச்சி பெல் நிறுவனத்தில் பணியாற்றும் எல்.சி.எஸ். தொழிலாளர்களைப் பணி நிரந்தரப்படுத்துவது தொடர்பாக மதுரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோரை சந்தித்து திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் மு.சேகர், சண்முகம் (திராவிடர் கழகம்), நடராசன் (பெல் தொழிற்சங்கப் பொதுச்செயலாளர், தி.மு.க.), தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) மற்றும் ராஜப்பா, மாரியப்பன் (திராவிடர் கழகம்), அங்குராஜ், காமராசு, தி.க.சாமி, மாரியப்பன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர் (12.11.2017).
- விடுதலை, 18.11.17

வேலையின்மை, குறைவான ஊதியம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி


புதுடில்லி, டிச. 5 நாட்டில் வேலையின்மை பிரச்சினை ஏன் தொடர்கிறது? தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் ஏன் வழங்கப்படுகிறது? ஆகிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரசு துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலை யொட்டி, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி தினமும் ஒரு கேள்வியை எழுப்பி வரு கிறார். அந்த வரிசையில், ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை கூறியிருப்பதாவது: நாட்டில் வேலையின்மை பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித் திருந்தது. அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி இன்னும் நிறைவேற்றாதது ஏன்? குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18,000 வழங்க வேண்டும் என்று ஏழாவது ஊதி யக் குழு பரிந்துரை செய்துள்ளது. இருந்த போதிலும், நிரந்தரத் தொழிலாளர்கள் மாதம் ரூ.10 ஆயிரமும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாதம் 5,500 ரூபாயும் பெறுவது ஏன்? என்று ராகுல் காந்தி அந்த சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்கி புயல் காரணமாக, கடலில் தத்தளித்த மீனவர்களை, துணிச்சலுடன் காப்பாற்றிய லட்சத் தீவுகளைச் சேர்ந்த மக்களுக்கு தலை வணங்குவதாகவும் மற்றொரு பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட் டுள்ளார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தியுள்ளார்.
-விடுதலை நாளேடு, 5.12.17

வியாழன், 19 அக்டோபர், 2017

தமிழக அரசு ஊழியர்களுக்கு படி உயர்வு: அரசு ஆணை வெளியீடு

சென்னை, அக். 18- அரசு ஊழியர் களுக்கு மருத்துவப் படி, இடர் படி, பராமரிப்பு படி உள்ளிட்ட  படிகளை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்டுள்ள ஆணை வருமாறு:
கடந்த 1995 ஏப்ரல் 21ஆம் தேதி மற்றும் அதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஊழியர்க ளுக்கு மருத்துவ செலவை திரும்பப் பெரும் திட்டத்தின் அடிப்படையில் தற்போது பெரும் மருத்துவச் செலவில் 15 சதவீதம் அதிகரிக்கப்பட் டுள்ளது. ஏற்கெனவே இருந்த படி ரூ.100லிருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப நல திட்டத்தில் சீருடை படி யாக கிரேட் 1 நர்சு, கண்காணிப் பாளர்கள், கிரேட் 2 தியேட்டர் நர்சுகளுக்கு ரூ.1880லிருந்து ரூ.3600 ஆகவும், பேருகால உத வியாளர்கள், கிராமப்புற நர்சு கள், ஹெல்த் இன்ஸ்பெக்டர்க ளுக்கு ரூ.1000லிருந்து ரூ.2000மாக வும் ஹெல்த் விசிட்டர்களுக்கு ரூ.900லிருந்து ரூ.1800ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வாசிங் படியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர், சிறைத் துறை மற்றும் வனத்துறை ஊழியர்களுக்கு அனைத்து கிரே டுகளுக்கும் ரூ.500ஆக வாசிங் படி உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், பொருட்களை பராமரித்தலுக்கும் படி உயர்த் தப்பட்டுள்ளது. அரசு வழக்கு ரைஞர்களுக்கு கோட், கவுன் பராமரிப்பு படியும் அதிகரிக் கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகா தார நிலையங்களில் உள்ள உதவி சர்ஜன், மருத்துவ அதி காரி (இந்திய மருத்துவம்) ஆகி யோருக்கும் படி அதிகரிக்கப் பட்டுள்ளது. மேலும், போஸ் மார்டம் அதிகாரி, போஸ்ட் மார்டம் உதவியாளர் ஆகியோ ருக்கும் படி அதிகரிக்கப்பட்டு உள்ளது. தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ அதிகாரிகளுக்கும், சிறப்பு உதவி அதிகாரிகளுக்கும், நர்சுகள் மற் றும் கண் காணிப்பாளர்களுக்கும் படி ரூ.2000மாக உயர்த்தப்பட்டு உள்ளது.
மலைப்பிரதேசங்களில் பணியாற்றும் அரசு ஊழியர் களுக்கு ரூ.1200லிருந்து ரூ.1500 வரை பனிக்கால படி அதிகரிக் கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தனி உதவியாளர்கள், தலை மைச் செயலக பிரிவு அலுவ லர்கள், ஆகியோருக்கும் சிறப் புப் படி உயர்த்தப்பட்டுள்ளது. டிஜிபி, தலைமைக் காவலர், கான்ஸ்டபிள், கிரேட் 1 மற்றும் கிரேட் 2 டிரைவர்களுக்கு இடர் படி அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாநில குற்ற ஆவண பிரிவு காவல்துறையினர், அதிரடிப் படை காவல்துறையினர், வெடி குண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர், கமாண்டோ பிரிவு காவல்துறையினருக்கும் படி உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.
வாடகைப்படி
அரசு வெளியிட்டுள்ள ஆணை வருமாறு: அரசுப் பணியில் ரூ.13,600 சம்பளம் பெறுபவர் களுக்கு வாடகைப் படியாக ரூ.1300ம் அதிகப்படியாக ரூ.64,201 சம்பளம் வாங்குப வர்களுக்கு ரூ.8300ம் மாத வாடகைப் படியாக உயர்த்தப் பட்டுள்ளது. அரசு குடியிருப் பில் வசிக்காத அரசு ஊழியர் களுக்கு இந்த தொகை 13,600 சம்பளம் பெறுபவர்களுக்கு வாடகைப் படியாக ரூ.1700ம், அதிகப்படியாக ரூ.64,201 சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ.8200ம் மாத வாடகைப் படியாக உயர்தப்பட்டுள்ளது. கிரேட் 1 முதல் கிரேட் 4வரையிலான ஊழியர்களுக்கு அவர வர் வாங்கும் சம்பளத்திற் கேற்ப இந்த தொகை அதிகரிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த 3 மாதத்துக்குள்  நிறைவு பெறும்
சென்னை, அக். 18- மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக சுரங்க ரயில் பாதை அமைக்கும் அனைத்துப் பணிக ளும் அடுத்த 3 மாதத்துக்குள் முழுமை யாக நிறைவு பெறும் என மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை பொது மேலா ளர் அரவிந்த் ராய் திவேதி கூறினார்.
மே தினபூங்கா முதல் தேனாம் பேட்டை (ஏஜி-டி.எம்.எஸ்) வரை நடை பெற்று வந்த 2 சுரங்கப்பாதை பணி களில் முதல் சுரங்கப் பாதைக்கான இறு திக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை செவ்வாய்க்கிழமை, தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருட் டிணன், தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெயகவுரி, முதன்மை பொது மேலாளர் விஜயகுமார் சிங் உள்ளிட்டோர் பார் வையிட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை பொது மேலாளர் அரவிந்த் ராய் திவேதி கூறியதாவது: சென்னையில் நடைபெற்று வரும் சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு கட் டத்தை எட்டியுள்ளன. அடுத்த 3 மாத காலத்துக்குள் அனைத்து சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகளும் நிறைவ டைந்து விடும். மே தின பூங்கா முதல் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலான பாதையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றார்.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக மாநில அரசு, மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த மாதம் (நவம்பர்) மாநில அரசு ஜப்பான் நிதி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
மாநகர போக்குவரத்து கழகத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து பொதுவான பயண அட் டையை பயணிகளுக்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில் சேவையை முற்றிலுமாக மெட்ரோ ரயில் நிறுவனத் தின் பொறுப்பில் கொண்டு வந்து இயக் குவது தொடர்பான பணிகள் நடை பெற்று வருகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் மெட்ரோ ரயிலுக் கான சென்னை சதுக்கம் கட்டப்பட வுள்ளது. அந்த பகுதியில் பாரம்பரியக் கட்டடங்களான ரிப்பன் மாளிகை, விக்டோரியா அரங்கம், அரசு மருத்துவ மனை, தெற்கு ரயில்வே தலைமையகம், சென்ட்ரல் ரயில் நிலையம் இருப்பதால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு மத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை சதுக்கம் கட்ட பாரம் பரிய கட்டடங்களைப் பாதுகாக்கும் அமைப்பின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார் அவர்.
மே தின பூங்கா முதல் தேனாம் பேட்டை (ஏ.ஜி - டி.எம்.எஸ்.) இடையே உள்ள 3 ஆயிரத்து 616 மீட்டர் நீளம் (3.5 கிலோ மீட்டர்) கொண்ட 2 சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வந்தன. இதில் முதல் சுரங்கப் பாதை பணியில் ஈடுபட்டிருந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் எல்.அய்.சி, ஆயிரம் விளக்கு ரயில் நிலையங்களின் வழியாக தேனாம்பேட்டை பகுதிக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் வர வில்லை. இயந்திரத்தில் உள்ள வெட் டுக்கருவிகளின் தேய்மானமே தாமதத் துக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், அதனை சரிசெய்து, பணி கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதே தடத்தில் உள்ள இரண்டாவது பாதையில் இன்னும் 450 மீட்டர் வரை தோண்ட வேண்டியுள்ளது.-விடுதலை,18.10.17