வெள்ளி, 31 மார்ச், 2023

தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் : வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

 

8

தஞ்சாவூர், மார்ச் 29- தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட்டு நாட்டு நலனை மேம்படுத்த முன்வர வேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கி மேனாள் தொழிற்சங்க தலைவர் களின் கூட்டமைப்பு (AFCCOM) வலி யுறுத்தியுள்ளது.

26.3.2023 அன்று தஞ்சாவூர் AIIEA மாளிகையில் சரோஜ் நினை வகத்தில் இக்கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பி.இராமன் தலை மையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் டி.வி.சந்திரசேக ரன், ஸ்டேட் வங்கி ஊழியர் சங் கத்தின் மேனாள் பொதுச்செய லாளர் டி.சிங்காரவேலு, மூத்த தலைவர்கள் மதுரை எம்.முரு கையா, என்.சுப்பிரமணியன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

நிர்வாகக் குழுவில் விவாதிக்கப் பட்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள்  - பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டவை வருமாறு:-

ஒன்றிய அரசும் இந்திய வங்கி கள் நிர்வாகமும் (IBA) வங்கி ஓய் வூதியர்களின் ஓய்வூதியத்தை தாம தமின்றி மறு சீரமைப்பு  செய்ய முன் வரவேண்டும்.

இந்திய ஸ்டேட் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூ தியர்களுக்கு சுகாதார காப்பீட்டு பிரிமியத்தை வங்கியே செலுத்த முன்வர வேண்டும்.

காப்பீடு பிரிமியத்துக்கு ஜி.எஸ்.டி. பிடித்தம் செய்யும் தவறான முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மருந்தகங்களை நிறுவ இந்திய ஸ்டேட் வங்கி முன் வரவேண்டும்.

வாழ்வாதாரம் இன்றி வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மூத்த குடிமக்களுக்கு மாவட்டம்தோறும் அரசு இல்லங்களை அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருக்கும் L.I.C., ONGC, BHEL, BSNL  ஆகிய பொதுத்துறை நிறுவனங் களை திட்டமிட்டு பலவீனப்படுத்தி தனியாருக்கு தாரை வார்க்கும் நாட்டு நலனுக்கு எதிரான முயற் சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

நாட்டின் நடைமுறையில் இருந்த 44 தொழிலாளர் நல சட்டங்களை ஒன்றிணைத்து நான்கே தொழிலாளர் சட்டங் களாக மாற்றி நடைமுறைப்படுத்த எண்ணும் ஒன்றிய அரசின் போக்கு தொழிலாளர் நலனுக்கும் முன்னேற்றத்துக்கும் எதிரானது. எனவே, ஒன்றிய அரசு அதை கைவிட்டு நாட்டு நலனை மேம் படுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இப்பொதுக்குழு கூட்டத்தில் எம்.சந்திரா கில்பர்ட், எம்.ரகுநா தன், என்.பாண்டுரங்கன், வீ.பூமி நாதன், ஆர்.லோகநாதன், எஸ். கருணாகரன், எஸ்.பாலசுப் பிர மணியன், அகமது உசைன், எம்.எம்.செல்வராஜ், எம். ராஜ கோபால், இக்கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் எம்.கே.மூர்த்தி உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயது இனி 58

 

சென்னை,மார்ச்30- சட்டப்பேரவையில் போக்குவரத்துதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (29.3.2023) நடந்தது. விவாதத்தின் நிறைவில், துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து பேசியதாவது: சென்னையில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பலர், பல மணி நேரம் தொடர்ந்து பணியாற்றுவதால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுவதாகவும், 58 வயதிலேயே பணி ஓய்வு அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதைத்தான் உறுப்பினர் சதன் திருமலைக்குமாரும் அவையில் பேசினார். முதலமைச்சருடன் கலந்து பேசி, போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து கழகங்கள் மீது அதிமுக உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இக்கழகங்கள் சீரழிந்ததற்கு அதிமுக ஆட்சிதான் காரணம். 2006-_11 திமுக ஆட்சியில் 48,898 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 38,399 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் 2016-_2021 வரையிலான 5 ஆண்டு ஆட்சியில் ஒரு நியமனம் கூட நடைபெறவில்லை. பணி ஓய்வையும் 60 வயதாக உயர்த்தினார்கள். அதனால் ஏற்படும் நிதி சுமை குறித்து கவலைப்படவில்லை.   இவ்வாறு அவர் கூறினார்.


தமிழ்நாட்டில் 75,321 வெளி மாநிலத் தொழிலாளர்கள் பதிவு: அரசு தகவல்

 

சென்னை, மார்ச் 30 தமிழ்நாட்டில் 75 ஆயிரம் வெளி மாநிலத் தொழிலாலர்கள் பதிவு செய்து உள்ளதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடைபெறுவதாக சில நாட்களுக்கு முன்பு வதந்தி பரப்பப் பட்டது. இதையடுத்து பீகார், ஜார்கண்ட் மாநிலத்தின் சார்பில் செயலர், ஆட்சியர் உள்ளிட்ட பிரதிநிதிகள் அடங்கிய குழு தமிழகம் வந்து தொழிலாளர்களை நேரில் சந்தித்து, களத்தில் இருந்த உண்மைத் தன்மையை காட்சிப்பதிவாக பதிவு செய் தனர். தொழிலாளர்கள் யாரும் தாக்கப்பட வில்லை என்பது உறுதியான நிலையில், வதந்தி செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 75,321 வெளி மாநில தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளதாக தொழிலாளர் நலத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொழி லாளர் நலத்துறையின் வெளி மாநில தொழிலாளர்களுக்கான<https://labour.tn.gov.in/ism/>  என்ற இணையதளத்தில் 75,321 பேர் பதிவு செய்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

 

புதுடில்லிநவ.27 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டு பட்ஜெட் டில் ரூ.73 ஆயிரம்கோடி ஒதுக் கப்பட்டதுஇந்த நிதி ஏற்கெனவே விடுவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த திட்டத்துக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடியை இந்த மாத தொடக்கத்தில் ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது.

இந்ததிட்டத் துக்கான ஊதியம் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு நிதியை விடுவிக்க ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளதாக அமைச்சகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த திட்டத்துக்காக எப்போதெல்லாம் கூடுதல் நிதி தேவைப்படுகிறதோஅப் போதெல்லாம் ஒன்றிய நிதிய மைச்சகத்தின் மூலம் தேவை யான நிதி பெறப்பட்டு வழங் கப்பட்டு வருவதாகவும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

முன்னதாக கடந்த 2020-2021ஆம் நிதியாண்டிலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு ரூ.61,500 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிலையில்பின் னர் ரூ.1,11 லட்சம் கோடியாக இந்த நிதி மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிக்கும் நாடுகளின்

எண்ணிக்கை 22 ஆக உயர்வு

சென்னைநவ.27 இந்திய தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை போட்டுக்கொண்டு சான்றிதழ் பெற்றவர்கள் தங்கள் நாடுகளுக்கு வரலாம் என பல நாடுகள் பச்சைக்கொடி காட்டி உள்ளனஇதுதொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

இந்த நிலையில் மேலும் 15 நாடுகள் இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை அங்கீகரித்துஇந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

இந்த நாடுகள் ஆஸ்திரேலியாவங்காளதேசம்பெலாரஸ்ஜார்ஜியாஈரான்கஜகஸ்தான்லெபனான்நேபாளம்நிகரகுவாபிலிப்பைன்ஸ்சான்மெரினோசிங்கப்பூர்சுவிட்சர்லாந்துதுருக்கி மற்றும் உக்ரைன் ஆகும்இந்திய தடுப்பூசி சான்றிதழுடன் இந்த நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள முடியும்.

இதன் மூலம் இந்திய தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதுஇந்த 22 நாடுகளின் தடுப்பூசி சான்றிதழ்களை இந்தியாவும் அங்கீகரித்துள்ளது.

இந்த தகவல்களை ஒன்றிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலைத் திட்டம் : ஒன்றிய அரசு நிதியைக் குறைத்த நிலையிலும் - பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்தியவர் முதலமைச்சர்! - அமைச்சர் இ.பெரியசாமி

 

12

சென்னை, மார்ச். 25- சட்டப்பேரவையில் நேற்று, நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் பங்கேற்றுப் பேசியபோது, குறுக்கிட்டு விளக்கமளித்த ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, "ஒன்றிய அரசு நிதியைக் குறைத்த போதிலும், பேரூராட்சிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்தியவர் முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தை தி.மு.கழக அரசு திறமையாகச் செயல்படுத்தும்!” என்று குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் அமைச்சர் இ.பெரியசாமி குறிப்பிட்டதாவது:- 

ஒன்றிய அரசு, மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்ற அடிப் படையில் ஒதுக்கீடு செய்வதைக் குறைத்து, 24 கோடி மனிதத்திறன்வேலை நாட்களை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியிருக்கிறது. இது வளர்ச்சியடைந்த மாநிலம். பிற்படுத்தப்பட்ட மாநிலங்களுக்கு கொஞ்சம் கூடுதலாக ஒதுக்குகிறோம் என்பதை அடிப்படையாக வைத்து, நம்முடைய மாநிலத்திற்கு கடந்த முறை, 24 இலட்சம், 25 இலட்சத்தைத் தாண்டவில்லை. இப்போது நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற தற்குப் பிறகு, இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டுமென்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக, கிட்டத்தட்ட வேலை நாட்களைப் பார்த்தீர்களென்றால் பல இடங்களிலெல்லாம் 20 நாட்கள் தாண்டாமல் இருந்தது. 20 நாட்கள், 30 நாட்கள் இருந்தது.கடந்த 4 மாதங்களில் எடுத்த நடவடிக்கைகளில் வேலை நாட்கள், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் 60, 70 நாட்களைத் தாண்டி, வேலை நாட்கள் ரூ.32 கோடியை இன்றைக்கு workers budget அய் 25 கோடி என்று மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக் கியிருந்தாலும், நாங்கள் அதையெல்லாம் எதிர்பார்க் காமல், 32 கோடி அளவிற்கு மனித திறன் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த அவைக்கு பெருமையோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். வருகிற ஆண்டுகளில் அந்த கோடி என்பதை 35 கோடி என்று, நீங்கள் நிதிநிலை அறிக்கையை படித்துப் பாருங்கள். மனித வேலை நாட்களை 35 கோடிக்கு உயர்த்துவோம் என்று சொல்லியிருக்கிறோம். வேலைத்திறன் நாட்களை 25 கோடியிலிருந்து 35 கோடி ஆக்குவோம் என்று சொல்லியிருக்கிறோம். இதுவே 35 கோடி நாட்கள் என்று சொன்னோமென்றால், 35 கோடியைத் தாண்டி, 40 கோடிக்கு மேலும் உயரும் என்று நிச்சயமாகச் சொல் கிறேன், இன்னும் சொல்லப் போனால், எல்லா கிராமங் களுக்கும் இந்த வேலைத் திட்டம் போய்ச் சேர வேண்டும். Cluster என்று பார்த்தால், கடந்த ஆட்சிக் காலத்தில் 20,000 clusters தான் இருந்தது. ஆனால், தற்போது கிராமங்களை இணைக்கக் கூடிய இந்த வேலைத்திறன் clusters, கடந்த இரண்டாண்டு காலத்தில் சுமார் 3,000 clusters  கூடுதலாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. வருகிற காலத்தில் அதை 30,000 ஆக உயர்த்தி, வேலைத் திறன் நாட்களை உயர்த்தி, ஊதியத்தையும் அவர்களுக்குக் குறைவில்லாமல் கொடுப்பதற்கு எங்களுடைய இந்த அரசு முதலமைச்சர் அவர் களுடைய வழிகாட்டுதலில் நிச்சயம் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றும். 

 பேரவைத் தலைவர் அவர்களே, 100 நாள் வேலைத் திட்டம், அதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் பொறுத்தளவில், அதற்கான நிதியை 100 சதவிகித நிதியை முழுமையாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும். ஆனால், எங்கள் முதல்வர் தளபதியார் அவர்கள், பேரூராட்சிக்கும் அதை விரிவுபடுத்துவேன் என்று சொல்லி, கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் Pilot Scheme போன்று ஒவ்வொரு மாவட்டத் திலும் ஒரு பேரூராட்சியைத் தேர்ந்தெடுத்து அந்தத் திட்டத்தை பேரூராட்சிகளி லும் செயல்படுத்திய அரசு எங்களுடைய அரசு என்பதை   உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  இவ்வாறு அமைச்சர் இ. பெரியசாமி குறிப்பிட்டார்.

100 நாள் வேலைத்திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிப்பதா? ஒன்றிய பாஜக அரசுக்கு இரா.முத்தரசன் கண்டனம்

 

6

சென்னை, மார்ச் 29- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்  செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:- 

ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை  திருத்தி அறிவித்துள்ளது. மார்ச் 25 அன்று வெளியான அரசிதழ் அறிவிப்புப்படி தமிழ்நாட்டில் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு ரூ.294  ஊதியம் வழங்க வேண்டும்.

"வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வேலை அட்டை  பெற்ற தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். தொழிலாளர் களின் குறைந்தபட்ச ஊதியமாக தினசரி ரூ.600 வழங்க வேண்டும்" என விவசாயத் தொழிலாளர்களும், தொழிற்சங்க அமைப்புகளும் வலியுறுத்தி வரும் நிலையில் ஒன்றிய அரசின் ஊதிய அறிவிப்பு பெருந்த ஏமாற்றமளிக்கிறது. பாஜக ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முடக்கி, அழித் தொழிக்கும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.  திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளர்க ளுக்கு தலா 100 நாள் வேலை வழங்க ஆண்டுக்கு ரூ. 2.74  லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொருளாதார  வல்லுநர்கள் கூறிவரும் நிலையில், ஆண்டுக்காண்டு நிதி ஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்து வந்த பாஜக ஒன்றிய அரசு வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கு வெறும் ரூபாய் 60 ஆயிரம் கோடியாக சுருக்கிக் குறைத்து விட்டது.

இந்த நிலையில் குறைந்தபட்ச ஊதியத்தை நியாயமான அளவில் உயர்த்தாமல், விவசாயத் தொழிலாளர்கள் உள் ளிட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்களை வஞ்சித்து வரும் பாஜக ஒன்றிய அரசை கண்டிப்பதுடன் ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.600 என நிர் ணயித்து வழங்க வேண்டும். -இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.

புதன், 22 மார்ச், 2023

அரசு வேலைக்கான வயது உச்சவரம்பு 32 ஆக உயர்வு அரசாணை வெளியீடு

 அரசு வேலைக்கான வயது உச்சவரம்பு 32 ஆக உயர்வு அரசாணை வெளியீடு. சென்னை, தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக சட்டசபையில் கடந்த 13-ந் தேதியன்று மனிதவள மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு ஒன்றை அமைச்சர் வெளியிட்டார். அவர், கொரோனா தொற்று காரணமாக பணியாளர் தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தாமதம் ஏற்பட்டால், நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அரசுப்பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பு தற்போது 30 ஆக உள்ளது. அது 32 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த அளவிற்கும் குறைவான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கும் தற்போது உயர்த்தப்பட்டுள்ள வயது உச்சவரம்பின் அளவு பொருந்தும்.

பட்டியலினத்தவர், பட்டியலின அருந்ததியர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் அனைத்து வகுப்பினர்களிலும் உள்ள ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள வயது உச்சவரம்பு நீட்டிப்பு அல்லது தளர்வுகள் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/State/2021/09/17033641/Government-raises-the-age-limit-for-government-employment.vpf



புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைப்பு தலைவராக கார்த்திகேய சிவசேனாபதி நியமனம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

 

சென்னை, டிச. 20- புலம்பெயர் தமி ழர் நலவாரியம் அமைத்து, அதன் தலைவர் மற்றும் உறுப்பினர் களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கான புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியம னம் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக் கும் தமிழர்களுக்கென நலத் திட்டங்கள், அவர்களுக்கான தூதரக உதவிகள்,செம்மொழி யாம் தமிழ்மொழியைத் தழைத் தோங்கச் செய்திட வெளிநாடு களில் தமிழ்க் கல்வி, கலை, பண் பாடு மற்றும் கருத்துப் பரிமாற் றத்திற்கென பல்வேறு சீர்மிகு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

அந்த வகையில், பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திடவும், அவர்க ளுக்குத் தேவையான உதவிகள் செய்திடவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப் பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, ‘வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம்’ 2011ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் நாள் மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலை ஞர் அரசால் இயற்றப்பட்டது. அதோடு, "புலம்பெயர் தமிழர் நலவாரியம்" ஒன்று உருவாக்கப் பட்டு, அவர்களுக்கென நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அப்போது அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற் பட்டபோது, முந்தைய ஆட்சியா ளர்கள் அதனை நடைமுறைப் படுத்த முன்வரவில்லை.

இந்த நிலையில், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தபிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம்' அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார். இந்த அறிவிப்பினைச் செயல் படுத்தும் விதமாக, கீழ்க்காணும் தலைவர், அரசுசார் அலுவலர் கள் மற்றும் அயலகத் தமிழர் பிரதிநிதிகளை உறுப்பினர்க ளாக கொண்டு புலம்பெயர் தமி ழர் நல வாரியத்தினை அமைத் திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தலைவராக கார்த்திகேய சிவசேனாபதி

அதன்படி, புலம்பெயர் தமி ழர் நலவாரியத்தின் தலைவராக திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், பழையகோட்டையைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனா பதி, மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் ஆறுமுகம் பரசுராமன், லண்டனில் வசிக்கும் முஹம்மது பைசல், அய்க்கிய அரபு அமீரகத் தில் வசிக்கும் சித்திக் சையது மீரான், வடஅமெரிக்காவில் வசிக்கும் கால்டுவெல் வேள் நம்பி, சிங்கப்பூரில் வசிக்கும் ஜி.வி.ராம் என்கிற கோபால கிருஷ்ணன் வெங்கடரமணன், மும்பையில் வசிக்கும் அ. மீரான் மற்றும் சென்னையில் வசிக்கும் வழக்குரைஞர் புகழ்காந்தி ஆகி யோர் அரசு சாரா உறுப்பினர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு சார்ந்த உறுப்பினர் களாக - பொதுத் துறைச் செயலா ளர், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அல்லது அவரால் நியமனம் செய்யப்படுபவர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செய லாளர் அல்லது அவரால் நிய மனம் செய்யப்படுபவர், வெளி நாடுவாழ் தமிழர் தொடர்பான பணிகளைக் கவனித்து வரும் அரசு சிறப்புச் செயலாளர் / அரசு இணைச் செயலாளர் / அரசு துணைச் செயலாளர், பொதுத் துறை, மேலாண்மை இயக்குநர், அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ் வுத் துறை ஆணையரகத்தின் ஆணையர் உறுப்பினர் செயல ராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாரியத்தில் நியமிக்கப் படும் தலைவர் மற்றும் உறுப்பி னர்களின் பதவிக் காலம், ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். இவ் வாரியம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களுக் கான நலத் திட்டங்களை செம் மையாகச் செயல்படுத்திட ஏது வாக, 5 கோடி ரூபாய் “வெளிநாடு வாழ் தமிழர் நலநிதி” என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும். அதோடு மட் டுமல்லாமல், மூலதனச் செல வினமாக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மற்றும் தொடர் செல வினமாக, நலத்திட்டங்கள் மற் றும் நிர்வாக செலவினங்களுக் காக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

இவ்வாரியத்தின் வாயிலாகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுவாழ் தமிழர்களின் விவரங் களைச் சேகரிப்பது அவசியமாத லால், அவர்கள் குறித்த தரவு தளம் (database) ஒன்று ஏற் படுத்தப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம், மருத் துவக் காப்பீடு திட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கப் படும். வெளிநாட்டிற்குச் செல் லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள், அங்கு பணியின்போது இறக்க நேரிடின், அவர்களது குடும்பத்தைப் பாது காக்கும் நோக்குடன், அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந் தைகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் இத்தகைய முனைப்பான நடவடிக்கை, வெளி நாடுகளில் தேமதுரத் தமிழோசை பரவுவதற்கும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் இன்னல்களைப் போக்குவதற் கும், அவர்களுக்கான நலத் திட் டங்களைச் செம்மையுறச் செயல் படுத்துவதற்கும் உறுதுணையாக அமையும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை" என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் இசைக் கலைஞர்கள் உறுப்பினர்களாக சேர தடை இல்லை: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

 

சென்னை, ஆக. 11- நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள், கரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளது போல, வாத்திய இசைக் கலைஞர்களுக்கும், பரதநாட்டிய கலைஞர்களுக்கும் தனியாக நலவாரியம் அமைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இந்த வழக்கிற்கு, தமிழக சுற் றுலா, கலாச்சாரத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-


இசைக்கருவிகளை இசைக்கும் பாரம்பரிய கலைஞர்களுக்கு பல் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு தரப்படுகிறது. மார்கழி மற் றும் அரசு, தியாகராஜர் ஆராதனை விழாக்கள் உள்ளிட்ட விழாக்களில் அவர்களுக்கு வாய்ப்பு தரப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறையில் இந்த கலைஞர்களுக்கு நிரந்தர சம்பளத்தில் பணி நியமனம் தரப்படு கிறது.


தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர் கள் நல வாரியத்தில் 35 ஆயிரம் 385 கலைஞர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கும் இவர்களின் குடும் பத்தினருக்கும் பல்வேறு நிதி உதவி திட்டங்கள் உள்ளன. விபத்து நிவா ரணம், குழந்தைகளுக்கான கல்வி உதவி, மகப்பேறு நிதி, திருமண உதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட் டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் 58 வயதை கடந்தவு டன் அவர்களுக்கு மாத ஓய்வூதிய மாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.


கரோனா ஊரடங்கால் பாதிக் கப்பட்டுள்ள, நாட்டுப்புற கலைஞர் கள் நல வாரியத்தில் பதிவு செய் துள்ள 24 ஆயிரத்து 736 பேருக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டுள் ளது. இரண்டாவது நிவாரண தொகையாக ரூ.1000 ஜூன் மாதம் 26ஆம் தேதி 24 ஆயிரத்து 656 பேருக்கு தரப்பட்டுள்ளது.


அரிதான இசை வாத்தியங்களான சாக்ஸாபோன், மாண்டலின், வீணை, புல்லாங்குழல் போன்றவற்றை இசைப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதால் இவர்க ளுக்காக தனி நல வாரியம் அமைக்க முடியாது. தெருக்கூத்து கலை நிகழ்ச் சிகளில் பங்கேற்கும் நாதஸ்வரம், தவில், கிளாரினெட், மிருதங்கம், தாள இசைக்கலைஞர்கள், தமிழ் நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர எந்த தடையும் இல்லை. அதனால், இவர்களுக்கு என்று தனி நல வாரி யம் அமைக்க முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு பதில் மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி கள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வரவுள்ளது.

பத்திரிகை நல வாரியம் உருவாக்கம் - செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் குழு அமைப்பு

 

சென்னைடிச. 4- பத்திரிகை யாளர்களின் நலன் காக் கும் வகையில் பத்திரிகை யாளர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளதுசெய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலை மையில் குழுவையும் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட அரசாணையில் கூறியி ருப்பதாவது:

உழைக்கும் பத்திரிகை யாளர்களுக்கு வழங்கப் பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் ஒருங் கிணைத்து செயல்படுத்து வதுடன்நல வாரிய உதவித் தொகை கள்நலத்திட்ட உதவிகள் அளிக்கும் வகை யில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப் படும் என்று சட்டப் பேரவையில் செய்தித் துறை அமைச்சர் கடந்த செப்.6ஆம் தேதி அறிவித் தார்.

இதையடுத்துபத்திரி கையாளர் நல வாரியம் அமைத்து ஆணையிடப்படுகிறதுநலிவுற்ற பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளு டன்பின்வரும் நலத் திட்ட உதவிகள் நல வாரி யம் மூலம் வழங்கப்படும்குறிப்பாக கல்வி உதவித் தொகையாக 10ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்பெண் குழந்தைகள், 11ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.

மேலும், 12ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள், 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன்மகள்முறையான பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.1,500, விடுதியில் தங்கி பட்டப் படிப்பு படிப்பவர்களுக்கு ரூ,1,750,முறையான பட்ட மேற்படிப்பு பயில் பவர்களுக்கு ரூ.2,000, விடுதியில் தங்கிப் படிப் பவர்களுக்கு ரூ.3,000, தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு ரூ.2,000, விடுதி யில் தங்கிப் படிப்பவர் களுக்கு ரூ.4,000, தொழில் நுட்ப பட்ட மேற்படிப்பு படித்தால் ரூ.4,000, விடு தியில் தங்கிப் படித்தால் ரூ.6,000, அய்டிஅய்பாலி டெக்னிக் படிப்பவர்க ளுக்கு ரூ.1,000,விடுதியில் தங்கி படித்தால் ரூ.1,200 வழங்கப்படும்.

திருமண உதவித் தெகை

இதுதவிரதிருமணத் துக்கு ரூ.2,000, மகப்பே றுக்கு ரூ.6,000, கருக் கலைப்பு,  கருச்சிதைவுக்கு ரூ.3,000, கண் கண்ணா டிக்கு ரூ.500, இயற்கை மறைவு உதவித்தொகை யாக ரூ.50 ஆயிரம்இறுதி நிகழ்வுக்கு உதவித் தொகையாக ரூ.5ஆயிரம் வழங்கப்படும்.

மேலும்பத்திரிகையா ளர் நல வாரிய உதவித் திட்டங்களை பரிசீலித்து செயல்படுத்த செய்தித் துறை அமைச்சரை தலை வராகவும், 7 பேரை அலு வல் சார்ந்த உறுப்பினர் களாகவும்,6 பேரை அலு வல் சாரா உறுப்பினர்க ளாகவும் கொண்ட குழு அமைக்கப்படும்.

விளம்பரக் கட்டணத்தில்..

நல வாரியத்துக்கு நிதி ஆதாரம் திரட்டஅரசு விளம்பரங்களுக்கான விளம்பர கட்டணத்தில் 1 சதவீத தொகைநல வாரியத்துக்கு வழங்கப் படும்நடைமுறையில் உள்ள பத்திகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழு கலைக்கப்பட்டுநல வாரிய உதவித் திட்டங் களுக்கு அமைக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு புதிய பரிசீல னைக் குழு அமைக்கப் படும்இந்த நடவடிக்கை கள் அனைத்தும் நீதிமன்ற உத்தரவின்படிஅமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஊடக மன் றத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாகும்இவ் வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.