சனி, 27 ஜூன், 2015

தொழிலாளர் நல சட்டங்கள்-பட்டியல்

Sl. No. Name of the Act
(a) Labour laws enacted by the Central Government, where the Central

Government has the sole responsibility for enforcement

1. The Employees’ State Insurance Act, 1948

2. The Employees’ Provident Fund and Miscellaneous Provisions Act,

1952

3. The Dock Workers (Safety, Health and Welfare) Act, 1986

4. The Mines Act, 1952

5. The Iron Ore Mines, Manganese Ore Mines and Chrome Ore Mines

Labour Welfare (Cess) Act, 1976

6. The Iron Ore Mines, Manganese Ore Mines and Chrome Ore Mines

Labor Welfare Fund Act, 1976

7. The Mica Mines Labour Welfare Fund Act, 1946

8. The Beedi Workers Welfare Cess Act, 1976

9. The Limestone and Dolomite Mines Labour Welfare Fund Act, 1972

10. The Cine Workers Welfare (Cess) Act, 1981

11. The Beedi Workers Welfare Fund Act, 1976

12. The Cine Workers Welfare Fund Act, 1981
7
(b) Labour laws enacted by Central Government and enforced both by

Central and State Governments

13. The Child Labour (Prohibition and Regulation) Act, 1986.

14. The Building and Other Constructions Workers’ (Regulation of

Employment and Conditions of Service) Act, 1996.

15. The Contract Labour (Regulation and Abolition) Act, 1970.

16. The Equal Remuneration Act, 1976.

17. The Industrial Disputes Act, 1947.

18 The Industrial Employment (Standing Orders) Act, 1946.

19. The Inter-State Migrant Workmen (Regulation of Employment and

Conditions of Service) Act, 1979.

20. The Labour Laws (Exemption from Furnishing Returns and

Maintaining Registers by Certain Establishments) Act, 1988

21. The Maternity Benefit Act, 1961

22. The Minimum Wages Act, 1948

23. The Payment of Bonus Act, 1965

24. The Payment of Gratuity Act, 1972

25. The Payment of Wages Act, 1936

26. The Cine Workers and Cinema Theatre Workers (Regulation of

Employment) Act, 1981

27. The Building and Other Construction Workers Cess Act, 1996

28. The Apprentices Act, 1961
(c) Labour laws enacted by Central Government and enforced by the

State Governments

29. The Employers’ Liability Act, 1938

30. The Factories Act, 1948

31. The Motor Transport Workers Act, 1961

32. The Personal Injuries (Compensation Insurance) Act, 1963

33. The Personal Injuries (Emergency Provisions) Act, 1962
8
34. The Plantation Labour Act, 1951

35. The Sales Promotion Employees (Conditions of Service) Act, 1976

36. The Trade Unions Act, 1926

37. The Weekly Holidays Act, 1942

38. The Working Journalists and Other Newspapers Employees

(Conditions of Service) and Miscellaneous Provisions Act, 1955

39. The Workmen’s Compensation Act, 1923

40. The Employment Exchange (Compulsory Notification of Vacancies)

Act, 1959

41. The Children (Pledging of Labour) Act 1938

42. The Bonded Labour System (Abolition) Act, 1976

43. The Beedi and Cigar Workers (Conditions of Employment) Act, 1966
(d) There are also Labour laws enacted and enforced by the various State

Governments which apply to respective States.






புதன், 24 ஜூன், 2015

அரசின் ஓய்வூதியங்களைப் பெற விதிகளில் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு



சென்னை, ஜூன் 24_ முதியோர் ஓய்வூதியம் உள்பட தமிழக அரசின் எட்டு வகையான ஓய்வூதியங் களைப் பெற விதிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 1962-ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட விதிகளில் இப்போது திருத்தங்கள் கொண்டு வந்துள்ளதாக சமூகப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சமூகநலத் துறை வெளி யிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஓய்வூதியம் பெறுவதற் கான விதிகளில் உரிய திருத் தங்களைச் செய்ய வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையாளரிடம் இருந்து கோரிக்கை வரப்பெற்றது. இந்தக் கோரிக்கையை ஏற்று எட்டு வகையான ஓய்வூ தியத் திட்டங்களில் பயனாளி களுக்கான தகுதிகள் திருத் தம் செய்யப்படுகின்றன. அதன் விவரங்கள்: இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்: இந்தத் திட்டத் தின் கீழ், பயனாளிக்கு 60 வயது அல்லது அதற்கு மேல் இருப்பதோடு, அவர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்க வேண்டும் என்ற விதி இருந்தது. அதில் இப்போது செய்யப்பட்ட திருத்தத்தின் படி, அந்த பயனாளி ஆதரவற்ற நிலையில் இருக்க வேண்டும் என்பதும் சேர்க்கப்பட் டுள்ளது.
இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதியத் திட்டம்: வறுமைக் கோட்டுக் கீழ் இருந்து, 40 வயது அல்லது அதற்கு மேல் இருக்கும் விதவைகள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்படிருந்தது. இப்போது அதில், பயனாளி யாரும் துணையில்லாத ஆதரவற்றவராக இருக்க வேண்டும் என்பது கூடுத லாக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி தேசிய மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம்: வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்து, 18 வயது அல்லது அதற்கு மேல், 80 சதவீதம் மாற்றுத் திறனுடைய பயனாளி விண்ணப்பிக்க லாம் என்று கூறப்பட்டி ருந்தது. இப்போது, அதில் யாருடைய ஆதரவும் இல் லாதவராக இருக்க வேண் டும் என்பது சேர்க்கப் பட்டுள்ளது. ஆதரவற்ற மாற்றுத் திறனாளி ஓய்வூதியத் திட்டம்: ஆதரவற்ற, 18 வயது நிரம்பிய- அதற்கு மேலுள்ள, 60 சதவீதம் மாற்றுத் திறனுடைய, பணி செய்ய முடியாத மாற்றுத் திறனாளி விண்ணப்பிக் கலாம் என்ற விதி ஏற்கெ னவே உள்ளது. அதில், இப்போது "பணி செய்ய முடியாத' என்ற விதி நீக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற வித வைகள் ஓய்வூதியத் திட் டம்: ஆதரவற்ற நிலையில், அதேசமயம் சட்டப்படி யான வாரிசுகள் இருந்து, 18 வயது அல்லது அதற்கு மேல் வயதுடைய வித வைகள் விண்ணப்பிக்க லாம் என்ற விதி மாற்றப்பட்டுள்ளது.
ஆதரவற்ற நிலையில் இருந்தால் மட்டு மே ஓய்வூதியம் வழங்கப்படும் என்று திருத்தப்பட் டுள்ளது. முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்: ஆதரவற்ற, 60 வயது நிரம்பிய அல்லது அதற்கு மேற்பட்ட, நிலமில்லாத விவசாய கூலிகளாக இருந்து, மகன் அல்லது மகளின் ஆதரவு இல்லா மல், கூலி வேலை செய்ய முடியாத பயனாளிகள் விண்ணப் பிக்கலாம் என்ற விதி இருந்தது. இப்போது, அந்த விதிகள் திருத்தப் பட்டு, ஆதரவற்ற, 60 வயது நிரம்பிய அல்லது அதற்கு மேற்பட்ட, நிலமில்லாத விவசாயிகளாக இருக்கும் யாரும் விண்ணப்பிக்கலாம். ஆதரவற்ற- கைவிடப் பட்ட பெண்கள் ஓய் வூதியத் திட்டம்: ஆதர வற்ற நிலையில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்து சட்டபடியாக விவாகரத்து பெற்று 5 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். மேலும், நீதிமன்றத்தில் இருந்து கணவனைப் பிரிந்ததற்கான சான்றிதழ் பெற்றவராக இருக்கும் பெண்கள் ஓய் வூதியத்துக்கு விண்ணப் பிக்கலாம் என்ற விதி இப் போது நடைமுறையில் உள்ளது.
அதில், கடைசி விதியில் திருத்தம் செய்யப் பட்டுள்ளது. அதாவது, விவாகரத்து பெற்று 5 ஆண்டுகள் அல்லது கணவனைப் பிரிந்ததற்கான சான்றிதழ் ஏதேனும் ஒன்று இருந்தால் போதும் என திருத்தப்பட்டுள்ளது.  திருமணமாகாத ஏழைப் பெண்கள் ஓய் வூதியம்: திருமணமாகாத, ஆதரவற்ற 50 வயதைக் கடந்த ஏழைப் பெண்ணாக இருக்க வேண்டும் என்ற விதியில் ஏழைப் பெண் என்ற வார்த்தை திருத்தப் பட்டு, 50 வயதைக் கடந்த பெண் என்று திருத்தப்பட் டுள்ளது. தமிழக அரசின் எட்டு ஓய்வூதியத் திட்டங்களில் செய்யப்பட்டுள்ள இந்தத் திருத்தங்கள் மூலம் அதிக அளவிலான பயனாளிகள் விண்ணப்பிக்க வாய்ப்பு ஏற்படும் என்று சமூகநலத் துறை அதிகாரிகள் தெரி வித்தனர்.  நடைமுறைச் சிக்கல் களாக இருந்த விதிகள் இப்போது திருத்தப்பட்டு, அனைத்துப் பயனாளி களுக்கும் ஏற்ற வகையில் மாற்றப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

-விடுதலை,24.6.15

ஞாயிறு, 21 ஜூன், 2015

துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுப் பணிகளை விரைவாக நிறைவேற்றவேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவு


துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுப் பணிகளை விரைவாக 
நிறைவேற்றவேண்டும்

உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூன் 19_ துப்புரவுத் தொழிலாளர் களுக்கான சட்ட ரீதியான மறுவாழ்வுப் பணிகளை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறுவாழ்வுப் பணிகள் நிறைவேற்றப்படுவது குறித்து உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்
மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் மனி தர்களை ஈடுபடுத்துவதை தடை செய்வது மற்றும் அவர்களுக்கான மறு வாழ்வுப் பணிகளை நிறை வேற்று வது தொடர்பாக 2013 ஆ-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. கழிவு களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுத் தொழிலாளர்கள்பற்றி முழுமையான கணக் கெடுப்பு நடத்துவது,
அந்தத் தொழிலாளர் களுக்கு மாற்றுப் பணி உள்ளிட்ட மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத் துவது, கழிவுகளை அகற் றும் பணியின்போது உயி ரிழந்த தொழிலாளர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் நிவாரணம் வழங்குவது, இந்தப் பணிகளை செயல் படுத்துவதற்கான மாவட்ட, மாநில அளவிலான குழுக் களை அமைப்பது உள் ளிட்ட பல அம்சங்கள் பற்றி இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாற்றம் இந்தியா அமைப்பின் இயக் குநரான சமூக ஆர்வலர் ஏ.நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய் தார். 2013- ஆம் ஆண்டின் சட்டத்தில் கூறப்பட் டுள்ள அம்சங் களை உடனடியாக அமல் படுத்து மாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று அவர் தனது மனு வில் கோரியிருந்தார்.
மேலும், 1993 ஆ-ம் ஆண்டிலிருந்து பாதாள சாக்கடை கால்வாய்கள் மற்றும் செப்டிக் டேங்க் போன்ற இடங்களில் அடைப்புகளை அகற்றுவ தற்காக இறங்கியபோது விஷ வாயு தாக்கி 150-_க் கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் உயிரிழந்துள்ள னர். ஆனால், தமிழக அரசு சுமார் 50 பேரை மட்டும் அடையாளம் கண்டுள்ளது.
அவர்களில் கூட 29 தொழிலாளர் களின் குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, உயிரிழந்த தொழி லாளர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் வீதம் நிவா ரணம் வழங்கவும், துப் புரவுத் தொழிலில் ஈடு பட்டுள்ள தொழிலாளர் களுக்கான மறுவாழ்வுப் பணிகளை செயல்படுத்த வும் உரிய நடவடிக்கை களை எடுக்கும் வகையில் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் நாரா யணன் கூறியிருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அண்மையில் பிறப்பித்த உத்தர வில் கூறியுள்ள தாவது:
மனுதாரர் கூறியிருக் கும் குற்றச்சாட்டுகளை மனதில் கொண்டு 2013- ஆம் ஆண்டின் சட்டத் தில் கூறப்பட்டுள்ள அம் சங்களை செயல்படுத்தவும், இந்த விவகாரம் தொடர் பாக உச்சநீதிமன்றம் பிறப் பித்துள்ள உத்தரவுகளை அமல்படுத்தவும் அரசு அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினை மிகவும் தீவிரமானது.
இந்த விவகாரத்தில் ஏற்படும் அடுத்தடுத்த முன்னேற்றங்கள் மற்றும் சட்டத்தை செயல்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி இந்த நீதிமன்றம் கண் காணிக்கும். மேலும் இந்த விவகாரத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் தொடர்பாக மனுதாரரும் 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி யுள்ளனர்.
-விடுதலை,19.6.15,பக்கம்-5

பொருளாதார நெருக்கடியைக் கூறி ஊதியம் அளிக்க மறுக்கக்கூடாது:


பொருளாதார நெருக்கடியைக் கூறி ஊதியம் அளிக்க மறுக்கக்கூடாது:
ஊதியம் வழங்காத அதிகாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஜூன் 20_ மதுரை கூட்டுறவுச் சங்க ஊழியர்கள் 10 பேருக்கு 30 மாதங்கள் ஊதியம் வழங் காத அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரூ. 25ஆயிரம் அப ராதம் விதித்து அண்மை யில் தீர்ப்பளித்தது.
மதுரை செல்லூரைச் சேர்ந்த வி. புருஷோத்தமன் உள் ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்திய நாதன் இவ்வாறு உத்தர விட்டார். மனு விவரம் வருமாறு:
மதுரை கூடல்நகரில் உள்ள மாவட்ட கூட்டுறவு வேளாண் சேவை சங்கத் தில் 29 ஆண்டுகளாகப் பணியாற்றுகிறோம். 2008 ஜூலை முதல் 30 மாதங் கள் ஊதியம் வழங்க வில்லை. இதுதொடர்பான வழக்கில், எங்களது கோரிக் கையை வேளாண் துறை ஆணையர் மற்றும் வேளாண் பொறியியல் துறை பதி வாளர் பரிசீலிக்க 2011 இல் உயர்நீதிமன்றம் உத்தர விட்டது.
அதன்பிறகும் அவர் எங்களுக்கு ஊதியம் வழங்க மறுத்து கடிதம் அனுப்பியுளார். அதில், கூட்டுறவு சங்கம் என்பது ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். அதில் இருந்து வரும் லாபத்தில் தான் ஊதியம் வழங்க முடியும். ஊதியம் அளிக்க முடியவில்லை என்றால் சங்கத்தை கலைப்பதைத் தவிர வேறுவழியில்லை. கூடல்நகர் சங்கத்தில் பணிகள் நடக்கவில்லை. இயந்திரங்களை வாட கைக்கு விடவில்லை.
வரு கைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்திட்டுள்ளனர். எனவே ஊதியம் பெறும் உரிமை கிடையாது. மேலும் தொழிலாளர் நீதிமன்றத்தில்தான் இப் பிரச்சினையை ஊழியர்கள் தீர்த்துக் கொள்ள வேண் டும் எனக் கூறியுள்ளார். இந்தக் கடிதத்தை ரத்து செய்து ஊதியம் வழங்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இம் மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் மேற்படி சங்கத்தில் ஊழியர்களாக உள்ளனர். அதை தனி அலுவலர் நடத்தியுள்ளார். மனுதாரர்கள் தினமும் பணி வருகைப் பதிவேட் டில் கையெழுத்திட்டு உள் ளனர். அதனால் ஊதியம் வழங்க முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது எனக் குறிப்பிட்டு, தனி அலுவலருக்கு ரூ.25 ஆயி ரம் அபராதம் விதித்தார்.
மேலும் மனுதாரர்களுக்கு 30 மாத ஊதிய பாக்கியை ஒரு மாதத்தில் வழங்க தனி அலுவலருக்கு உத்தரவிட் டார். கூட்டுறவுச் சங் கத்தில் மனுதாரர்கள் நிரந்தரப் பணியாளர் களாக உள்ளனர். அவர்களுக்கு பணி வழங்க வேண்டியது அதிகாரியின் கடமையாகும். சங்கத்தை லாபகரமாக நடத்த அவர் முயற்சித்து இருக்க வேண் டும்.
ஒருவேளை அதை லாபகரமாக நடத்த முடி யாத நிலை ஏற்பட்டால் கூட குறிப்பிட்ட காலத் திற்குள் அதுகுறித்து ஊழி யர்களுக்கு தெரிவித்து அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்திருக்க லாம்.
அந்த கடமையில் இருந்து தனி அலுவலர் தவறியுள்ளார். எனவே பொருளாதார நெருக்கடி யைக்கூறி ஊதியம் அளிக்க மறுப்பதை ஏற்க முடியாது. ஊழியர்களுக்கு ஊதியம் தராமல் இருப்பது பட்டினி போட்டு இறக்கச் செய்வது போன்றதாகும் என உத்தர வில் நீதிபதி குறிப்பிட்டுள் ளார்.
-விடுதலை,20.6.15 பக்கம்-5
             
             
விடுதலை,20.6.15 பக்கம்-5

திண்டுக்கல் நாகலிங்கம் படத்திறப்பு - நினைவேந்தல்


 மறைந்த திராவிடர் தொழிலாளர் கழகத் தலைவர்
கட்டுப்பாடு மிக்கவர் கொள்கையில் ஆழமிக்கவர்
நாகலிங்கம் படத்தைத் திறந்துவைத்து தமிழர் தலைவர் நினைவேந்தல் 

உரை


 சென்னை, ஜுன் 20_ மறைந்த நாகலிங்கம் படத்திறப்பு, நினைவேந்தல் நிகழ்ச்சி 18.6.2015 அன்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. திராவிடர் தொழிலாளர் பேரவையின் மாநில செயலாளராகப் பணியாற்றியவரான நாகலிங்கம் படத்தைத் திறந்துவைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.
கழகப்பணியில் ஈடுபட்டு தம்முடைய வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது 4.10.2013 அன்று அவர் விபத்துக்கு ஆளாகி தொடர்ச்சியாக மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருந்துவந்தார். 7.4.2015 அன்று மறைந்தார். படத்தைத் திறந்துவைத்தபோது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவேந்தல் உரையில் குறிப் பிட்டதாவது:
மிகுந்த துன்பத்துக்கும், துயரத்துக்கும் இடையில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியாக, திராவிடர் தொழி லாளர் அமைப்பினுடைய பொறுப்பாளர், மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் நிறைந்திருப்பவரான அருமைத் தோழர் மானமிகு நாகலிங்கம் அவர்களு டைய படத்திறப்பு என்ற இந்த நிகழ்ச்சி அவருடைய தொண்டுக்கு நாம் வீர வணக்கம் செலுத்துகின்ற ஒரு நிகழ்ச்சி.
மிகப்பெரிய சோகத்துக்கு ஆளாகி இருக்கக்கூடிய நிலையிலே, அதை ஏற்றுக்கொண்டு, அவர் வழிநடத்து வதற்கு நான் திண்டுக்கல் சென்றிருக்க வேண்டும். அங்கே செல்ல வாய்ப்பு இல்லை என்ற காரணத்தாலே இங் கேயே அந்த நிகழ்ச்சியை வந்து நடத்திக்கொள்ளுகி றோம் என்கிற பெரு உள்ளத்தோடு இங்கே வந்திருக் கக்கூடிய அவருடைய அன்புசெல்வங்கள், குடும்பத் தவர்கள், அருமைத்தோழர்கள், தோழியர்கள், அறி வார்ந்த பெருமக்கள் எல்லோருக்கும் அன்பான வணக் கம். தோழர் நம்முடைய நாகலிங்கம் அவர்களைப்பற்றி நினைவுகள் எப்போதும் பசுமையாகவே இருக்கின்றன.  இங்கே கழகத்துணைத் தலைவர் அவர்களும், வீர பாண்டி அவர்களும், மற்றவர்களும் குறிப்பிட்டதைப் போல, கட்டுப்பாடு மிகுந்த ஓர் எடுத்துக்காட்டான இலட்சியத் தோழர், தொண்டர் தோழர் நாகலிங்கம் ஆவார். அப்படிப்பட்டவர்களைப் பார்ப்பது என்பது மிகமிக அரிது. இங்கே கவிஞர் அவர்கள் சுட்டிக் காட்டியதைப்போல திராவிடர் கழகத்தின்சார்பில் தொழிலாளர் அமைப்பை அரசியல்கட்சிகளைப்போல நாம் வளர்க்கவில்லை என்பது உண்மை. அதற்கு காரணமும் சொன்னார்கள். திராவிடர் கழகம் மக்களை தன் பின்னாலே அழைத்துப்போகக்கூடிய ஓர் இயக்கமாக இருக்கிறது, மற்ற அரசியல் கட்சிகள் மக்கள் பின்னாலே அவர்கள் செல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் மக்களுடைய எண்ணங்களை மாற்றக்கூடிய நிலையிலே இல்லை. மக்களுடைய வாக்குகளை பெறு வதற்காக அவர்கள் மனம் கோணாமல் இருப்பதற்கு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்வது எல்லா அரசியல் கட்சிகளுடைய இயல்பு.
ஆனால், திராவிடர் கழகம் என்ற சமூக அமைப்பு மக்களுடைய அந்த நீரோட்டத்தோடு போகக்கூடிய தல்ல, எதிர்நீச்சலடித்து திருத்த வேண்டியவர்களைத் திருத்தவேண்டிய ஒரு கடமை. அதுபோலவே நம் முடைய தொழிலாளர் அமைப்பு. தந்தைபெரியார் அவர்கள் பேசிய ஓர் உரையில் தலைப்பிருக்கிறது. திராவிடர் கழகம் என்றாலே தொழிலாளர்கள் அமைப்புதான்.
எனவே இந்தத் தொழிலாளர் அமைப்பு என்பது இருக்கிறதே அதிலும் திராவிடர் கழகமே ஒட்டு மொத்தமாக தொழிலாளர்கள் அமைப்புதான். ஏனென்றால், சூத்திரர்கள் கழகம். சூத்திரர்கள் என்றாலே மனுதர்மப்படி தொழிலாளர்கள்தான்.
மீகாமன் நாகலிங்கம்
ஆகவே, இந்தத் தொழிலாளர் அமைப்பிலேயே  தனியே போக்குவரத்து தொழிலாளர் என்று தனியே ஆரம்பித்து பெரிய அளவிலே அதை, மறைந்தும் மறை யாமல் என்றும் நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கிற கே.ஜி.எஸ். என்று அழைக்கப்படக்கூடிய திண்டுக்கல் சுப்பிரமணியம் அவர்கள் கடுமையாக உழைத்து அருமையாக கட்டினார். அவர் திடீரென்று மறைந்த வுடனே அந்த சோகம் தாங்கமுடியாத நிலையிலே இந்த கப்பலுக்கு யார் கேப்டன்? என்று நினைத்த நேரத்திலே ஓர் அருமையான மீகாமன் தோழர் நாகலிங்கம் கிடைத்தார்.
நாகலிங்கம் அடக்கமானவர், கொள்கை உறுதி நிறைந்தவர். அதிரடியாகப் பேச மாட்டார். ஆனால், நிரம்ப ஆழமானவர். அன்பு நெஞ்சத்தோடு எவரி டத்திலும் பழகக்கூடியவர். அவர் இங்கே நண்பர்கள் சுட்டிக்காட்டியதுமாதிரி ஒவ்வொருவர் இடத்திலும் நேரிடையாகச் சென்று தோழர்களிடம் பகிர்ந்து கொண்டு படிப்படியாக இந்த இயக்கத்தை தொழி லாளர்கள் இயக்கத்தை திராவிடர் கழகத்திலே ஒரு கட்டுமானத்திலே எப்படி கட்டடங்களை அஸ்தி வாரத்திலே நிறுத்தி மேலே கொண்டுவருவார்களோ, அதுமாதிரி கொண்டுவந்தவர். அப்படிப்பட்டவருக்கு விபத்தின் காரணமாக, தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவார்கள் இயற் கையின் கோணல் புத்தி என்று. அதன் காரணமாக நாம் அவரை இழக்க வேண்டியிருந்தது. இந்த நேரத் திலே நாம் எவ்வளவு துயரப்பட்டாலும், நாகலிங்கம் திரும்பி வரமுடியாது. அதேநேரத்திலே அவர் ஊட் டிய உணர்வை நாம் எப்போதும் புதுப்பித்துக் கொண்டே இருக்கலாம்.
அந்த உணர்வு நம்மை எதற்காக அவர் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார் ஓய்வு பெற்ற நிலை யிலேகூட. மிகப்பெரிய அளவுக்குப் பணியாற்றியபோது இருந்ததைவிட, பணி ஓய்வு பெற்றபிற்பாடு அவர் கடுமையாக உழைத்தார்.
அதுதான் திராவிடர் கழகத்துக்காரர்கள் சிறப்பு. இந்த இயக்கத்திலே வேலை செய்தால் என்ன கிடைக்கும்? மானம், மரியாதை கிடைக்கும். அவ் வளவுதானே தவிர, வேறு ஒன்றும் பெரிய லாபங்கள் இருக்காது. அதைப்பற்றி அவர்கள் கவலைப்படாமல் தொழிலாளர் இயக்கத்தைக் கட்டினார்கள். அதுவும் தனித்தன்மையோடு இருக்கக்கூடிய இயக்கம் திராவிடர் தொழிலாளர் கழகம் என்பது. அப்படிப்பட்ட ஓர் இயக்கத்துக்குக் கிடைத்த அரும் செல்வமாக பெரும் நிதியாக நமக்கு நாகலிங்கம் அவர்கள் கிடைத்தார்கள். பெரும் செல்வம். ஒரு வறியனுக்குக் கிடைத்த செல்வம். ஓர் ஏழைக்கு கிடைத்த  செல்வம் திடீரென்று பறி போய்விட்டால் அவனுடைய நிலைமை எப்படி இருக் குமோ, அதுபோல அதில் நல்ல வசதியானவர்கள் எல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கும்போது நேபாள பூகம்பம்மாதிரி ஒரே நாளில் பார்த்தீர்கள் என்றால், இப்போது அங்கே இருந்து ஒரு செய்தி வருகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கக்கூடியவர்கள் எண்ணிக்கை நேபாளத்தில் அதிகமாகி இருக்கிறது. காரணம் என்ன என்று சொன்னால் முழுக்க முழுக்க அப்படிப்பட்ட ஒருநிலை. அப்படிப்பட்டவர் களை நாம் நினைத்து வேதனைப்படுவது மட்டுமல்ல, அவர்களுடைய பணி தொடர வேண்டும். நாம் அதற்கு உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை எல்லோருக்கும் எடுத்துச்சொல்லி, அவருடைய வாழ்வு சிறக்க, அவருடைய பணி நடக்க பாராட்ட வேண்டும். ஒன்றரை ஆண்டு காலம் தொடர்ந்து போராடியதன் காரணமாக அவருடைய குடும்பத்தினரை நான் நெஞ்சம் நிறைந்து பாராட்டுகிறேன் மிகுந்த துன்பத் துக்கிடையேகூட. கொள்கையோடு நீங்கள் வந்திருக் கிறீர்கள்.
அவர் எதை விரும்பினார்களோ, அதைப்பற்றி செய்வேன் என்று சரவணன்  அவர்களும், மற்றவர் களும் சொன்னார்கள். இதுதான் அவருக்குச் செய்த சரியான இறுதிமரியாதை. எனவே, உங்களுக்கு இயக்க சார்பாக நன்றி செலுத்திக்கொள்வதோடு, அவர் இருந்தால் இந்த இயக்கம், இந்தக் குடும்பத்தோடு தொடர்புடைய இயக்கமாக இருக்குமோ, இந்தக் குடும்பம் விடுதலையோடு, எங்களோடு தொடர்புடை யவர்களாக இருப்பீர்களோ அப்படிப்பட்ட இரு வழிப்பாதைத் தொடர்புகள் தொடர வேண்டும்.
அதற்காக எல்லோரும் ஒத்துழைப்போம் என்று சொல்லி திராவிடர் தொழிலாளர் கழகத்தை சிறப் பாகக் கட்டி, அருமையாக எடுத்துக்காட்டாக நடத்து வதற்கு தோழர்கள் இங்கே வந்திருக்கிறார்கள் மறுபடி யும் நாம் சந்திப்போம். கலந்துரையாடுவோம். அதைச் செய்வதுதான் நாகலிங்கம் அவர்களுக்கு செய்யும் சிறப்பு.
திருச்சி பெரியார் சர்வீஸ்
ஸ்டேஷனில் நாகலிங்கம் பெயரில்  ஒரு பிரிவு
இன்னொரு செய்தி எல்லா ஓட்டுநர்களுக்கும் அவர் பயிற்சி கொடுத்தார். பாதுகாப்பாக ஓட்டுவது குறித்து பெரியார் கல்வி நிறுவனங்களிலே, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனங்களிலே என்னு டைய ஓட்டுநர்கள் உள்பட. அது நம்முடைய பாது காப்புக்கு பெரிய ஆயுள் காப்பீடு மாதிரி மிகப்பெரிய அளவில் அதையெல்லாம் செய்தார் நம்முடைய நாகலிங்கம் அவர்கள். திருச்சியிலே இருக்கிற பெரியார் சர்வீஸ் ஸ்டேஷனில் நாகலிங்கம் பெயரிலும் ஓர் பிரிவு அமைக்கப்படும். எனவே, அவருடைய மறைவு என்பது ஈடுசெய்யமுடியாத ஓர் இழப்பு. அந்த இடம் இன்னும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது. அதை நாம் நிரப்ப முயற்சி செய்யவேண்டும். அவருடைய புகழ் வாழ்க, அவருக்கு வீரவணக்கம். நன்றி, வணக்கம்.
_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.
திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திண்டுக்கல் மண்டலத் தலைவர் இரா.வீரபாண்டியன், திராவிடர் தொழிலாளர் கழகப் பொறுப்பாளர் சென்னை செல்வராசு, திண்டுக்கல் எம்.செல்வம், ஏ.மோகன் ஆகியோர் நினைவேந்தல் உரை ஆற்றினார்கள்.
பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தலைமைக்கழகப் பேச்சாளர் முனைவர் க.அன்பழகன், வட மாவட் டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் சாமி.திராவிடமணிதிராவிடர் இயக்க எழுத்தாளர் மஞ்சை வசந்தன், வட சென்னை மகளிரணி தங்கமணி குணசீலன், பெரி யார் புத்தக நிலைய மேலாளர் த.க.நடராசன், எம். பாண்டி, ஏ.சிதம்பரம், இரா.ஜவகர், கேஜிஎஸ். ஜீவானந்தம், ராஜி, மூர்த்தி, சிவகுருநாதன், சித்ரா, பூமா, ராஜி, நிவேதா, சுவேதா, ராதா, சின்னத்திரை நட்சத்திரங்கள் அரவிந்த், அன்வர், செந்தில், வினோத் மற்றும் நாகலிங்கம் இளைய மகனும், கலைத் துறையைச் சேர்ந்தவருமாகிய திண்டுக்கல் சரவணன் நண்பர்கள் ராஜாசங்கர், காளியப்பன், ஜெயக்குமார், கும்பகோணம் பஷீர், அருள்மோகன், விழுப்புரம் பழனி, நவநீதம், சுல்தான் மற்றும் ஆதித்யா ஜானி வசந்த் உள்பட பலரும் தமிழர்தலைவரிடமிருந்து அய்யாவின் அடிச்சுவட்டில், பெரியார் ஒரு சகாப்தம், வாழ்வியல் சிந்தனைகள உள்ளிட்ட நூல்களைப் பெற் றுக்கொண்டனர். மாநில மாணவரணி, இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் பிரின்சு என்னரெசு பெரியார் நன்றி கூறினார்.
-விடுதலை20.6.15,பக்கம்-4

விடுதலை20.6.15,பக்கம்-4

திங்கள், 8 ஜூன், 2015

தொடர்ச்சியாக அரசிடம் வேலை பார்ப்பவர் வேறு பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும்

தொடர்ச்சியாக அரசிடம் வேலை பார்ப்பவர் வேறு பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும்
மதுரை, மே 23_ புதிய ஓய்வூதியத் திட்ட காலத்தில் வேறு பணியில் சேர்ந்தவருக்கு, பணி தொடர்ச்சி உள்ளதால் பழைய பென்ஷன் திட்டமே பொருந்தும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. தூத் துக்குடியை சேர்ந்த டாக்டர் சுப்ரமணியன், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மருத்துவத்துறையில் சுகாதார அலுவலராக கடந்த 2000ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டேன். நோய் தடுப்பு பிரிவில் துணை இயக்குநராக 2012இல் பதவி உயர்வு பெற்றேன். இதன்பின், துறை அதிகாரிகளின் அனுமதியுடன் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு விண்ணப்பித்தேன். அந்த பணி எனக்கு கிடைத்தது. ஆனால் என்னை விடுவிக்கவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் கிளையில் நான் தொடர்ந்த வழக்கில் என்னை விடுவிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. 21.7.2014இல் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணியில் சேர்ந்தேன்.
ஆனால் எனது பணி புதிய ஓய்வூதியத் திட்டத் தின் கீழ் தான் வரும் என அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். 1.4.2003க்கு பிறகு பணியில் சேருபவர்களுக்கு மட்டுமே புதிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும். அதற்கு முன்னர் சேர்ந்து, தொடர்ச்சியாக பணி யாற்றுவோருக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே பொருந்தும் என விதிகள் உள்ளன. இதன்படி எனக்கு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர வேண்டும். நான் பணி தொடர்ச்சியாக அரசின் கீழ் தான் பணியாற்றியுள்ளேன். எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்ற அனுமதித்து, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், துறை அதி காரிகளின் முன் அனுமதி பெற்றே விண்ணப்பித் துள்ளார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகே பணியில் இருந்து மனுதாரர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகே துறை ரீதியாக வேறு பணியில் சேர்ந்துள்ளார். இதை பணி இழப்பு காலமாக கருத முடியாது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பணி தொடர்ச்சி உள்ளதாக கருதி பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

-விடுதலை,23.5.15பக்-4

தேசிய அடி நிலை குறைந்தளவு ஊதியம் உயர்வு-2015


மத்திய அரசு இந்தியா முழுமைக்கான தேசிய அடி நிலை குறைந்தளவு ஊதியத்தை (NFLMW) ரூ 115/- லிருந்து ரூ137/- ஆக 1.7.2013 முதல் முன் நாளிட்டு உயர்த்தி அதன் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது


இது குறித்து தமிழ் நாடு அரசின் ''உழைப்பவர் உலகம்'' மாத இதழில் வெளியான செய்தி வருமாறு..


பக்கம்-24

மத்திய அரசு இந்தியா முழுமைக்கான தேசிய அடி நிலை குறைந்தளவு ஊதியத்தை (NFLMW) ரூ 115/- லிருந்து ரூ137/- ஆக 1.7.2013 முதல் முன் நாளிட்டு உயர்த்தி அதன் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அதன் முழு பகுதி வருமாறு......

MINIMUM WAGES ACT, 1948            

Backqrgund

x The initiative started with the resolution placed by one Shri. K. G. R.

Choudhary in 1920 for setting up Boards for determination of minimum

wages in each industry.

* The International Labour Conference adopted in 1928 Convention No.26

and Recommendation No. 30 relating to wage fixing machinery in trades or

parts of trades.

x On the recommendation of the Standing Labour Committee and

Indian Labour Conference, a Labour Investigation Committee was

appointed in 1943 to investigate into the question of wages and other

matters like housing, social conditions and employment.

* A draft bill was considered by the Indian Labour Conference in 1945'

x The 8th meeting of the standing Labour committee recommended in

1946 to enact a separate legislation for the unorganized sector including

working hours, minimum wages and paid holidays.

x A Minimum Wages Bill was introduced in the Central Legislative

Assembly on LL.4.46 to Provide for fixation of minimum wages in certain

employments. It was Passed in

15.3.48.

1946 and came into force with effect from

Under the Act, Central and State Governments are appropriate

Governments to

(a) notify scheduled emPloyment

(b) fixlrevise minimum wages

The Act contains list of all these employments for which minimum wages

are to be fixed by the appropriate Governments'

There are two parts of the Schedule. Part I has non-agricultural

"*pfLV."ntt

whereas Part-II relates to employment in agriculture'

Criteria for notification of scheduled emolovment

Under the provisions of the Minimum Wages Act, 1948, both Central and

State Governments are appropriate Governments to fix, review and revise

the minimum wages of the workers employed in the scheduled

employments under their respective jurisdictions. The appropriate

Governments have also been empowered to notify any employment in the

schedule where the number of employees is 1000 or more and fix the

rates of minimum wages in respect of the employees employed therein.

There are 45 scheduled employments in the Central Sphere while in the

State Sphere the number of such employments is as many as 1679'

The Minimum Wages Act does not provide for any discrimination between

male and female workers or different minimum wages for them. All the

provisions of the Act equally apply to both male and female workers.

Norms for fixation / revision of minimum waqes

The norms include those which were recommended by the Indian Labour

Conference in its session held in 1957'

(a)

(b)

(c)

(d)

consumption units for one earner.

Minimum food requirements of 2700 calories per average Indian

adult.

Clothing requirements of 72 yards per annum per family'

Rent corresPonding to

Government's Industrial

the minimum area provided for under

Housing Scheme.

(e)Fuel,lightingandothermiscellaneousitemsofexpenditureto

constitute,20olo of the total Minimum Wages'

Methods for fixation/revision of minimum waqes Fixation

Section 3 empowers appropriate Government to fix the minimum rates of

wages in the scheduled employments.

Revision

Revise the Minimum rates at an appropriate interval

five years.

Procedure for Fixation / Revision

In Section 5 of the Minimum Wages Act, 1948, two

been provided for fixation/revision of minimum wages. They

method and Notification method.

Committee Method

not exceeding

Under this method, committees and sub-committees are set up by

appropriate Governments to hold enquiries and make recommendations

regard to fixation and revision of minimum wages, as the case may

Notification method

In this method, Government proposals are published in the official

Gazette for information of the persons likely to be affected thereby and

specify a date not less than two months from the date of the notification on

which the proposals will be taken into consideration.

After considering advice of the committees/sub-committees and all

methods have

are Committee

the

with

be.

the representations received by the

the appropriate Government shall,

fixlrevise the minimum wage in

employment and it shall come Into

the date of its issue.

specified date in Notification method,

by notification in the Official Gazette,

respect of the concerned scheduled

force on expiry of three months from

Variable Dearness Allowance (VDA)

In order to protect the minimum wages against inflation, the Central

Government has made provision of Variable Dearness Allowance (VDA)

linked to Consumer Price Index Number for Industrial Workers (CPI - IW).

As regards States Governments/Union Territory Administrations, 26 of

them have made VDA as a component of minimum wages. Both Central

and State Governments are revising the minimum wages in respect of

these scheduled employments from time to time with 100o/o neutralization.

Accordingly, VDA is revised periodically twice a year effective from 1st April

and 1st October in the Central Sphere.

Enforcement

The enforcement of the Minimum Wages Act, 1948 is secured at two

levels. While in the Central Sphere, the enforcement is secured through the

Inspecting officers .of the Chief Labour Commissioner (Central) commonly

designated as Industrial Relations Machinery (CIRM), the compliance in the

State Sphere is ensured through the State Enforcement Machinery. They

conduct regular inspections and in the event of detection of any case of

non-payment or under-payment of minimum wages, they advise the

employers to make payment of the shortfall of wages. In case of noncompliance,

penal provisions prescribed in the Act are taken recourse to.

National Floor Level Minimum Waoe

In order to have a uniform wage structure and to reduce the

disparity in minimum wages across the country, a concept of National Floor

Level Minimum Wage was mooted on the basis of the recommendations of

the National Commission on Rural Labour (NCRL) in 1991. Keeping in view

the recommendation of NCRL and subsequent rises in price indices, the

National Floor Level Minimum Wage was fixed at Rs.35/- per day in 1996.

Keeping in view the rise in Consumer Price Index the Central Government

raised the National Floor Level Minimum wage to Rs.40l- per day in 1998.

Further to Rs.45l- w.e.f.01.12.1999 and Rs. 50/- per day w.e.f'

01.09.2002.

Based on the norms suggested by the Working Group and its acceptance

by the Central Adv,isory Board subsequently in its meeting held on

1g.72.2003, the National Floor Level Minimum Wage was revised upwards

to Rs.66l- per day with effect from 1.02.2004. on the basis of increase in

the Consumer Price Index, the Central Government further revised the

National Floor Level Minimum Wages to Rs.137l- per day with effect from

01.07.2013.

It is, however, clarified that the National Floor Level Minimum Wage,

is a non-statutory measure to ensure upward revision of minimum wages

in different in States/UT's. Thus, the State Governments are persuaded to

fix minimum wages such that in none of the scheduled employments, the

minimum wage is less than National Floor Level Minimum Wage. This

method has helped in reducing disparity among different rates of minimum

wages to some extent.

To sum up, effective implementation of the Minimum Wages Act,

1948, including that of the revision of minimum wages at national floor

level minimum wage or higher; which primarily falls in the State sphere, is

assiduously pursued by us through discussion, writing letters, personal

interaction and visits to states, including the North-Eastern states. The

state Governments are regularly asked to fix and revise minimum wages in

scheduled employments to be at least at par with National Floor Level

Minimum wage of Rs.137l- per day as at present. what they actually do is

in keeping with their respective paying capacity.