https://www.simpliance.in/minimum-wages
புதன், 23 ஆகஸ்ட், 2023
கடைகளில் பணியாற்றுவோருக்கு அடிப்படை வசதிகள் தமிழ்நாடு அரசின் மனிதநேய உத்தரவு
Viduthalai July 07, 2023 தமிழ்நாடு,
சென்னை, ஜூலை 7 - தமிழ்நாட்டில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் பதிவு செய்தல் மற்றும் பணியாளர்களுக்கு கழிப்பறை, ஓய் வறை, உணவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உருவாக்கும் வகையிலான சட்டத் திருத்தங்கள் ஆளுநர் ஒப்புதலைத் தொடர்ந்து அமலுக்கு வந்துள்ளன.தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதால், அச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு, தற்போது அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டப்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் பணி யாற்றும் நிறுவன உரிமையாளர் நிறுவனம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்துக்குள் பதிவுக்கு விண்ணப்பித்து, பதிவுச்சான்றிதழ் பெற வேண்டும். விண்ணப்பம் கிடைத்த பின் ஆய்வாளர் அந்த நிறுவனத்தை பதிவு செய்து, 24 மணி நேரத்தில் பதிவுச்சான்றிதழை வழங்க வேண்டும். வழங்காவிட்டால், பதிவுச் சான்றிதழ் வழங்கப் பட்டதாக கருதப்படும். விண்ணப் பத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்களில் மாற்றம் ஏதும்செய்யும் பட் சத்தில், 30 நாள்களுக்குள் சம்பந் தப்பட்டஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் பதிவுச் சான்றிதழில் திருத்தம் செய்து புதிய சான்றிதழ் வழங்கவேண்டும். ஒரு வேளை அந்த நிறுவனம் மூடப்பட்டால் 30 நாள்களுக்குள் தகவலை தெரிவித்து பதிவுச் சான் றிதழை ரத்து செய்ய வேண்டும்.
சட்டத்திருத்தம்
இதுதவிர, கடைகள் மற் றும் நிறுவனங்களில் பணியாற்றுவோ ருக்கு வசதி ஏற்படுத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப் பட்டது. இதற்கும் ஆளுநர் ஒப்பு தல் அளித்துள்ளதால் அந்த சட்ட மும் அமலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டப்படி, கடை அல் லது நிறுவன உரிமையாளர் பணியாற்றும் அனைவருக்கும் போதிய அளவு சுகாதாரமான குடிநீரை வழங்கவும், பராமரிக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
போதிய எண்ணிக்கையில் கழிப் பறைகளை அமைக்க வேண்டும். ஓய் வறை, உணவறைகளையும் அமைத்து போதிய நாற்காலிகள், சாய்வு இருக்கை கள் போடப்பட்டிருக்க வேண்டும். முதலுதவி வசதிகள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திங்கள், 21 ஆகஸ்ட், 2023
தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக புலம் பெயர் தொழிலாளர் கணக்கெடுப்பு
Viduthalai July 07, 2023 தமிழ்நாடு,
சென்னை, ஜூலை 7 - தமிழ் நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசு மாவட்ட வாரியாக கணக்கெடுப்பு நடத்தி வருகி றது. வெளிமாநிலங்களான ஒடிசா, பீகார், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தமிழ்நாடு வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர்.
தரவுகள் கிடைப்பதில் சிக்கல்
குறிப்பாக, கட்டுமானம், ஓட்டல் தொழில்களில் அதிகளவில் வடமாநிலத்தவர் ஈடுபட்டு வரு கின்றனர். இதுதவிர, பலர் சிறு தொழில்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தாக்குதல் சம்பவங்கள், விபத்துகள் நிகழ்தல், அரசின் சிறப்பு வசதிகள் ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றின் போது வெளி மாநில தொழிலாளர்கள் எவ்வ ளவு பேர் தமிழ் நாட்டில் உள்ளனர் என்ற தரவு கிடைப்பதில் சிக்கல் உருவாகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களி லும், வெளிமாநில தொழிலாளர் கள் குறித்த கணக்கெடுப்பை தொழிலாளர் துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, இதற்கென இணையதள வசதி தொடங்கப் பட்டு அதில் பதிவு செய்ய வேலை யளிப்போருக்கும், தொழிலாளர் களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டுள்ளது.
இதுதவிர, தொழிலாளர் துறை நேரடி கணக்கெடுப்பு நடத்தும் முயற்சியையும் எடுத்துள்ளது. தொழிலாளர்களின் புலம் பெயர்வு செயல்முறைகளை புரிந்து கொள் வது, அவர்கள் செய்யும் வேலை மற்றும் அவர்களின் வாழ்க்கை நிலையை அறிந்துகொள்வது போன்ற நோக்கங்களுடன் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
7 மாதங்களில் முடிக்கப்படும்
குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள் தொடர்பான கணக் கெடுப்பும் அனைத்து மாவட்டங்க ளிலும் மேற்கொள்ளப்படுகிறது. 7 மாதங்களில் கணக்கெடுப்பை முடித்து தரவுகளுடன் பரிந்துரை களை அளிக்கவும் தொழிலாளர் நலத்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வறியவர்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய அரசு 100 நாள் வேலைத் திட்டத்தில் ஓராண்டில் 5 கோடி பேர் நீக்கம்
Viduthalai July 26, 2023 இந்தியா,
புதுடில்லி, ஜூலை 26 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புஉறுதித் திட்டத்திலிருந்து(MGNREGS - Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) 5 கோடி பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் இத்தகவலை எழுத்துப் பூர்வ பதிலாகத் தெரிவித்துள்ளார். இது கடந்த 2021- _2022 நிதியாண்டை ஒப்பிடுகையில் 247% அதிகம் என்பது தெரியவந்துள்ளது. கிராமப்புற மக் களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட் டத்தின்கீழ் பதிவு செய்து கொண்ட வர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத் துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப் படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் பல கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன. இந் நிலையில், 2022- _2023 நிதி ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலிருந்து (MGNREGS - Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme ) 5 கோடி பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கவுரவ் கோகோய், விகே சிறீகாந்தன் ஆகியோர் 2022-_2023 நிதியாண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டோர் எண் ணிக்கை 244.3 சதவீதம் அதிகரித் துள்ளதாக பத்திரிகையில் வந்த செய்தியை சுட்டிக்காட்டி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கிரிராஜ் சிங் இந்தப் பதிலை அளித்துள்ளார்.
ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையில் ஆதார் எண்ணுடன் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டையை இணைக்க வலியுறுத்தியதும், இத்திட்டத்தின் கீழ் பணியாற்றுவோருக்கான ஊதியத்தை ஆதார் அடிப்படை பணம் செலுத் துதல் முறைக்கு மாற்றியதுமே பணியாளர்கள் வெகுவாகக் குறையக் காரணம் என்று குறிப்பிடப்பட்டி ருந்தது. 2023 தொடங்கி ஜூன் மாதம் 23 ஆம் தேதி வரை 61 லட்சம் பதிவு செய்யப்பட்ட பணியாட்களின் பெயர் இத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாக வும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஆதார் - ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டையை இணைப்பதற்கான கால அவகாசத்தை ஒன்றிய அரசு 4ஆவது முறையாக ஆகஸ்ட் 31 வரை நீட்டித்துள்ளது. இது இத்திட்டத்தின் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதையும் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களின் கேள்வியில் சுட்டிக்காட்டியிருக்க அதற்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த அமைச்சர் கிரிராஜ் சிங், "ஆதார் - ஊரக வேலை அட்டை இணைப்பை முறைப்படுத்தி உறுதி செய்தல் மாநில அரசுகளின் பொறுப்பு" என்று கூறியிருக்கிறார். மேற்குவங்க மாநிலத்துக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை முற்றிலுமாக ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. திட் டத்தை முறையாகப் பின்பற்றாததால் நிதியை நிறுத்தியதாக ஒன்றிய அரசு காரணம் கூறியுள்ளது.
அடுத்தபடியாக தெலங்கானாவில் 2727%, ஆந்திரப் பிரதேசத்தில் 1147%, என எதிர்கட்சி ஆட்சி நடக்கும் மாநிலங்களில் தொடர்ந்து பயனா ளிகள் நீக்கப்பட்டுள்ளனர். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட் டத்தின் பயணாளர்கள் நீக்கம் 247% ஆக அதிகரித்துள்ளதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். தாழ்த்தப் பட்ட பழங்குடின மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சிறுபான்மையினர் நூறுநாள் வேலை திட்டத் தினால் சிறு வருமானம் பெற்று பயன் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
விருப்ப ஓய்வுக்குப் பின்னும் பல ஆண்டுகள் ஊதியம் பெற்ற அரசுப் பொறியாளர்கள்
இதுதான் பிஜேபியின் கோர ஆட்சி!
Viduthalai July 26, 2023 இந்தியா,
விருப்ப ஓய்வுக்குப் பின்னும் பல ஆண்டுகள் ஊதியம் பெற்ற அரசுப் பொறியாளர்கள்
புதுடில்லி, ஜூலை 26 உத்தரப் பிரதேசத்தில் அரசுப் பொறியா ளர்கள் விருப்ப ஓய்வுக்கு பிறகும் ஊதியம் பெற்றிருப்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ஏற்பட்ட ரூ.100 கோடி இழப்பை அவர்களிடம் இருந்து வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உ.பி.யின் வீட்டு வசதி வளர்ச்சித் துறையில் கடந்த 2009-இல் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) திட்டம் அறி விக்கப்பட்டது. 58 வயதானவர் களுக்கான இத்திட்டத்தில் ஓய்வு வயது 60 வரையிலான அனைத்து சலுகைத் தொகையும் அளிக்கப் பட்டது. இதை, ஏற்று அத்துறையின் 299 பொறியாளர்கள் 2 வருட சலுகைகளுடன் விஆர்எஸ் பெற் றனர். ஆனால் அவர்களது பெயர்கள் அவர்கள் பணியாற்றிய அலுவலகப் பதிவேடுகளில் இருந்து அகற்றப்படவில்லை. இதனால் அவர்களுக்கும் மாத ஊதியமும் பிற சலுகைத் தொகைகளும் கிடைத்துவந்துள்ளது.
இச்சூழலில், அத்துறையின் ஓர் அலுவல கத்தில் புதிதாக அமர்த்தப்பட்ட ஒரு கணக் காளர், அலுவ லர்களின் பதிவேடுகளை சரி பார்த்துள்ளார். அதில் விஆர்எஸ் பெற்ற வர்களும் ஊதியமும் சலுகைகளும் பெற்றிருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
சிலர் உயிருடன் இல்லை: இது, மாநில கூடுதல் தலைமைச் செய லாளர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அத்துறையின் பிற அலுவலகங்களிலும் பதிவேடுகள் சரிபார்க்கப் பட்டன. இதில் மேலும் பலர் ஊதியமும் சலுகைகளும் பெற்றிருப்பதும் இதனால் அரசுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட் டுள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து இத்தொகையை திரும்ப வசூலிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இந்த தொகையை வசூலிப்பதே கேள்விக் குறியாகிவிட்ட நிலையில், அவர்களில் சிலர் தற்போது உயிருடன் இல்லை என்பதும் சிக்கலாகிவிட்டது.
குழு அமைப்பு: இந்த முறை கேட்டை விசாரிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட் டுள்ளது. இதன் முதற்கட்ட விசாரணையில், தற் போது பணியில் உள்ள சிலரின் உதவியால் இந்த முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரின் மீதும் நட வடிக்கை எடுக்க கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தர விட்டுள்ளார். இத்துடன், உ.பி.யின் வேறு சில துறைகளிலும் இந்த சட்டவிரோத செயல் நடைபெற்றிருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இதனால் அனைத்துத் துறைகளின் அலுவலர் பதிவேடுகளை ஆய்வுசெய்ய உத்தர விடப் பட்டுள்ளது
100 வயது தாண்டி ஓய்வூதியம் பெறுபவர்களை பெருமைப்படுத்தும் தமிழ்நாடு அரசு
Viduthalai August 05, 2023 அரசு, தமிழ்நாடு,
சென்னை, ஆக. 5- தமிழ் நாட்டில் அரசு பணியில் ஓய்வு பெற்று 100 வயதை தாண்டியும் ஓய்வூதியம் பெறக்கூடிய நபர் களை சிறப்பிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி முதல் கட்டமாக முக்கியமான நபர் ஒருவருக்கு அரசு சார்பாக பரிசு வழங்கப் பட்டு உள்ளது. சமீபத்தில் தமிழ் நாட்டில் நடைபெற்ற அமைச் சரவை கூட்டத்தில் ஓய்வூதியம் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த ஓய்வூதியத் திட்டங்களு டைய வரலாற்றை நாம் சற்று பின்னோக்கிப் பார்த்தோம் என்று சொன்னால், 1962-ஆம் ஆண்டில்தான் முதன் முறையாக இந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் அறிமு கப்படுத்தப்பட்டிருக் கிறது.
அன்றைக்கு மாதத்திற்கு ரூபாய் 20/-_ அன்றைய சூழ்நிலை யில் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு இந்தத் திட்டங்கள் துவங்கி வைக்கப்பட்டிருக்கிறது.புதிய திட்டம்:
இந்த நிலையில் தமிழ் நாட்டில் அரசு பணியில் ஓய்வு பெற்று 100 வயதை தாண்டியும் ஓய்வூதியம் பெறக்கூடிய நபர் களை கவுரவிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக முக்கியமான நபர் ஒருவருக்கு அரசு சார்பாக பரிசு வழங்கப்பட்டு உள்ளது.
அதன்படி நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு 107 வயது நிறைவடைந்த ஓய் வூதியர் கோபாலகிருஷ்ணன் அவர்களை நேரில் பாராட்டு தெரிவித்தார்.
கு.கோபாலகிருஷ்ணன் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டக் கருவூலம் மூலமாக 01-.05.-1972 முதல் குடிமை ஓய் வூதியம் பெற்று வருகிறார்.
அவரது ஓய்வூதிய கொடுவை ஆணை எண். கி-69690. ஓய்வூ தியர் பிறந்த தேதி 26.10.1916. அவர் தற்போது 107 வயதை நிறைவு செய்துள்ளார். தமிழ் நாட்டில் ஓய்வூதியம் பெறுபவர் களில் கு.கோபாலகிருஷ்ணன் அவர்களே வயதில் மூத்தவர் ஆவார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரு வாரிசுகள் உள்ளனர்.
இவர் இரண்டாம் உலகப் போர் (1939_ 1945) நடை பெற்ற காலத்தில் இராணுவத்தில் I.E.M.E படை பிரிவில் சேர்ந்து மோட்டார் மெக்கானிக் மற்றும் கனரக வாகன ஓட்டுநராக Lans Nayak பதவி நிலையில் அய்ந்து வருடங்கள் பணிப்புரிந்துள்ளார்.
அப்போது பர்மா, மணிப்பூர் போன்ற இடங்களில் நடை பெற்ற போரில் பங்கெடுத் துள்ளார். அன்றைய காலக் கட்டத்தில் அய்ந்து பதக்கங் களையும் பெற்றுள்ளார்.
அதன் பிறகு ஒன்றிய அரசுப் பணியில் சில காலம் சுங்கத் துறையில் பணியாற்றி உள்ளார். அதன் பிறகு தமிழ்நாடு காவல் துறையில் பணியில் சேர்ந்து நாகப்பட்டினம், காவல் நிலை யம் திட்டச்சேரியில் காவலராக (Police Constable) பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
அவர்களை மரியாதை செய் யும் விதமாக நிதி மற்றும் மனி தவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கருவூல கணக்குத்துறை ஆணை யர் க.விஜயேந்திர பாண்டியன், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) ரஞ்சித் சிங், ஓய்வூதியர் வசித்து வரும் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து ஓய்வூதியர்களுக்கான ஆண்டு நேர்காணலை மேற் கொண்டதுடன் நேர்காணல் சான்றிதழை அளித்து சிறப்பித் தார்கள்.
மேலும் தமிழ்நாடு முழுவதும் 100 வயது நிறைவு செய்துள்ள அய்ம்பதுக்கும் மேற்பட்ட ஓய் வூதியதாரர்களை கவுரவிக்கும் விதமாக அனைத்து மாவட்ட கருவூல அலுவலர்களும் ஓய்வூ தியர்களின் இருப்பிடத்திற்கு சென்று ஆண்டு நேர்காணல் செய்து கௌரவிக்க கருவூல கணக்குத்துறை ஆணையர் அவர்களால் உத்தரவிடப்பட் டுள்ளது.
ரயில்வேத் துறையில் 2.63 லட்சம் எண்ணிக்கையில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள்
ஒன்றிய பா.ஜ.க. அரசின் சாதனை இதுதானா?
Viduthalai August 05, 2023 இந்தியா,
ரயில்வேத் துறையில் 2.63 லட்சம் எண்ணிக்கையில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்கள்
புதுடில்லி, ஆக.5- ஒன்றிய பா.ஜ.க. அரசின் பிரதமர் வேட் பாளராக 2014 தேர்தலில் நிறுத் தப்பட்ட மோடி தேர்தல் வாக் குறுதியாக ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங் கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதன்பின்னர் தேர்தல் வாக் குறுதிகள் எல்லாம் ‘ஜூம்லா’ (ஏமாற்று) என்று பாஜகவினரே வெளிப்படையாக கூறியதும் நடந்தது. அதேநேரத்தில் வேலைவாய்ப்புக்கான படித்த பட்டதாரிகள் எல்லாரும் பக்கோடா விற்கலாம் என்று பிரதமரான பின்னர் மோடி கூறியதும் இளைஞர்களை கொதிப்படையச் செய்தது.
ரயில்வேத்துறை தனி நிதிநிலை அறிக்கையுடன் தனித் துவமாக இயங்கிவந்த நிலையில், அதனையும் பொது நிதிநிலை அறிக்கையுடன் சேர்த்துவிட்ட ஒன்றிய பாஜக அரசு ரயில் விபத்துகள், உயிரிழப்புகள் என பெரிய அளவில் தொடர்ச்சியாக நடந்துவருகின்ற போதிலும் அதற்கு பொறுபபேற்று பதவி விலக எவரும் முன்வரவில்லை.
அதிலும் விபத்துகளுக்கு முதன்மையான காரணமாக சொல்லப்படுவது ரயில்வேத் துறையில் நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களை தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பாமல் இருப்பதுதான் என்று சொல்லப்படுகிறது.
ரயில்வேத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
ரயில்வேத் துறையில் 2,680 கெஜடட் பதிவு பெற்றவர்களுக் கான பணியிடங்களும், 2 லட்சத்து 61 ஆயிரத்து 233 கெஜட் அல்லாதவர்கள் பணியிடங்களும் காலியாக இருப் பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றுக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் பதிலளித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பி.ஆர்.நடராஜன், ரயில்வேத் துறையில் 18 மண்டலங்களிலும் காலியாகவுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை எவ்வளவு என்றும், அவற்றை நிரப்பிட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக் கின்றன என்றும் கேட்டிருந்தார். மேலும், காலிப்பணியிடங்களை நிரப்ப இயலாதது, பணியாளர் கள் அதிக நேரம், அதாவது 16 மணி நேரம் வரையிலும் ஓய்வும், உணவும் இன்றி நீடித்து பணி செய்யும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதா என்றும், அப்படியெனில், அதன் விவரங் கள் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும் ஒப்பந்த ஊழியர்கள் நியமனங்கள் குறித்த விவரங் களும் கேட்டிருந்தார்.
இவற்றுக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்து மூலம் அளித்த பதில்கள் வருமாறு:
“ரயில்வேத்துறையில் மொத் தம் உள்ள 18 மண்டலங்களிலும் 2023 ஜூலை 1 தேதியில், கெஜட் பதிவு பெற்ற அதிகாரிகளின் பணியிடங்கள் 2,680, கெஜட் பதிவு பெறாத ஊழியர்களின் பணியிடங்கள் 2,61,233 பணியிடங்களும் காலியாக இருக் கின்றன என்று குறிப்பிட்டார். (இதில் தென்னக ரயில்வேயில் கெஜட் பதிவு பெற்ற அதிகாரிகள் பணியிடங்கள் 121-ம், கெஜட் பதிவுபெற ஊழியர்கள் பணியிடங்கள் 15,240 ஆகும்.). மேலும், செயல்பாட்டு பாதுகாப் புப்பிரிவில் 53,178 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இதன் அளவு, இடம் சார்ந்த விநியோகம் மற்றும் செயல் பாட்டின் விமர்சனம் போன்ற வைகளை கருத்தில் கொண்டு நிகழ்வு மற்றும் காலிப்பணியிடம் பூர்த்தி செய்தல் என்பது இந்திய இரயில்வேத் துறையின் ஒரு தொடர்ந்த நடைமுறை யாகும். காலிப்பணியிடம் நிரப் புதல் செயல்பாட்டின் தேவை களின்படி நியமன ஏஜென்சி களுடன் சேர்ந்து வேலை வாய்ப்பு கோரிக்கைகளை முதன் மையாக கொண்டு இரயில்வேத் துறையால் செய்யப்படுகிறது.
ஏறத்தாழ 2.37 கோடி தேர்வாளர்களுக்கு, கணினி அடிப்படையிலான சோதனை நடத்தப்பட்டு 1,39,050 தேர்வா ளர்களை பட்டியலிடப்படு வதற்காக ஒரு மிகச் சிறந்த ஆட்சேர்ப்பு முகாம் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் நுட்பம் அல்லாத பிரிவு ஊழியர் களுக்காக, 2019 ஜனவரிக்கான மய்யப்படுத்தப்பட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி, கணினி அடிப்படையிலான சோதனை 1.26 கோடி தேர்வா ளர்களுக்கு, 133 ஷிஃப்ட்களில், 68 நாட்களில், 211 நகரங்களில் 726 மய்யங்களில் 15 மொழிகளில் நடத்தப்பட்டது.
இது போலவே (லெவல் 1)க்கான கணினி அடிப்படையிலான சோதனை 1.1 கோடி தேர்வர்களுக்கு, 99 ஷிஃப்ட் களில், 33 நாட்களில், 191 நகரங் களில், 551 மய்யங்களில், 15 மொழிகளில் நடத்தப்பட்டது.
லெவல் 1 உட்பட, பல்வேறு குரூப் ‘சி’ பணியிடங்களுக்கான 1,36,773 தேர்வர்கள் 01-04-2022 லிருந்து 30-06-2023 வரையிலான காலத்தில் பட்டியலிடப்பட் டுள்ளார்கள். இதில் 1,11,728 பாதுகாப்புப் பிரிவு பணியிடங் களும் அடங்கும். திருவனந்தபுரம் கோட்டம் மற்றும் எர்ணா குளத்தில் அமைந்துள்ள யூனிட் டுகள்/அலுவலகங்கள் உள் ளிட்ட தெற்கு ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அனைத்து முயற்சி களும் எடுக்கப்படுகின்றன.
தெற்கு ரயில்வேயில் உள்ள குரூப் ‘சி’ பிரிவுக்கான (லெவல் 1 நீங்கலாக) 3,361 தேர்வர்கள் நியமனம் செய்யப்படுவதற்காக பட்டியலிடப் பட்டுள்ளார்கள். தெற்கு ரயில்வேயில் உள்ள லெவல் 1 பணிக்கு 8,514 தேர்வர் கள் நியமனத்திற்காக பட்டிய லிடப்பட்டுள்ளார்கள்.
ஓய்வின்றி உழைப்பது கவனத்திற்கு வரவில்லையாம். பதவி உயர்வு அல்லது நேரடி நியமனம் மூலம் காலிப்பணியிடங்கள் ஒழுங்கான முறையில் பூர்த்தி செய்யப்படுகின்றன. பணியாளர்கள் 16 மணி நேரம் வரையிலும் இடைவெளியின்றி ஓய்வு மற்றும் உணவு இல்லாமல் பணியாற்றுகிறார்கள் என்ற நிகழ்வு கவனத்திற்கு வரவில்லை.
அடுத்து, கடந்த அய்ந்து ஆண்டுகளில் ரயில்வே துறை யில் பணியமர்த்தப்பட்ட ஒப் பந்த தொழிலாளர்களின் எண் ணிக்கை கீழ்க்கண்டவாறு:
(இந்தப் பட்டியலில் 18 மண் டலங்களுக்கும் 2018, 2019, 2020 ஆம் ஆண்டுக்கான பட்டியலை அமைச்சர் அளித்துள்ளார். இதில் தென்னக ரயில்வேயில் 2018ஆம் ஆண்டில் 160 பேர், 2019ஆம் ஆண்டில் 328 பேர், 2020ஆம் ஆண்டில் 521 பேர் எனக் குறிப்பிடப்பட்டிருக் கிறது.)
இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.



