தொழிலாளர் நலச் சட்டங்கள்-7
- கே.ஜி.சுப்பிரமணியன்தொழிற்சாலைகள் சட்டம் - 1948.
1948 ஆம் ஆண்டிற்கு முன்னரும் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளருக்காக சட்டங்கள் இருந்தன. 1949 முதல் இந்தச் சட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. தொழிற்சாலை என்றால் கட்டடம் இருக்கவேண்டும் அதற்குள் வேலை செய்யவேண்டும் என்பதில்லை. திறந்தவெளியில் வேலை நடந்தாலும் அது தொழிற்சாலை ஆகும். உதாரணமாக உப்பளத்தில் 20-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்தால் அது தொழிற்சாலை ஆகும்; தொழிற்சாலை சட்டம் பொருந்தும். அதே போல் வயலில் கரும்பு வளர்ச்சிக்கு, திட்டங்களை வகுத்துக் கொடுத்தும், மேற்பார்வையிட்டும், அவற்றை கரும்பாலைக்கு வழங்கவும் ஈடுபட் டுள்ள பணியாளர்கள், தொழிலாளர்கள் அல்ல, அது தொழிற்சாலை வளாகம் அல்ல எனவே தொழிற்சாலை சட்டம் அவர்களுக்குப் பொருந்தாது. இவ்வாறாக தொழிற்சாலையில் பல் வேறு பிரிவுகள் இருக்கின்றன. இவை இடத்திற்குத் தகுந்தவாறும் தொழிலின் தன்மைக்குத் தகுந்தவாறும் அவ்வப்போது பொருந்தும், மாறுபடும். எனவே தொழிலாளர்களுக்குத் தேவையான சில பகுதிகளைப் பார்ப் போம்.
சட்டத்தின் நோக்கம்:
தொழில் மற்றும் தொழிற்சாலை பணி சம்பந்தப்பட்ட ஆபத்துக்களிலி ருந்து தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக தொழிற்சாலைகள் சட்டம் 1948-இல் இயற்றப்பட்டது. தொழிற் சாலைகளில், வேலை நிலைகளை ஒழுங்குபடுத்துவதும், தொழிலாளர்க ளுக்குப் போதுமான் சுகாதார வசதிகள், வேலை நேரக் கட்டுப்பாடு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு, நலப்பணிகள், வாராந்திர விடுமுறை, ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்வதும் இச்சட் டத்தின் நோக்கமாகும். 1,4,1949- முதல் இந்தச்சட்டம் நடை முறைக்கு வந்தது. கடைசியாக இந்தச் சட்டம் 1987-ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.
பொருத்தம்: தொழிற்சாலைகள் சட் டம் ஒரு மத்திய அரசுச் சட்டமாகும். இந்தியா முழுவதற்கும் பொருந்தும் இச்சட்டம் மாநில அரசால் அமலாக்கப்படுகிறது.
உரிமையாளர்: தொழிற் சாலையின் நடவடிக்கையில் இறுதியான கட் டுப்பாடு யாருக்கு இருக்கிறதோ அவர் உரிமையாளர் ஆவார்.
1. ஒரு நிறுவனத்தை பொருத்த மட்டில் அதனுடைய ஒரு பங்குதாரர் உரிமையாளராகக் கருதப்படுவார்.
2. தனிப்பட்டவர்கள் சேர்ந்த ஒரு சங்கத்தை பொருத்தமட்டில் அதனுடைய அங்கத்தினர்கள் உரிமையாளராகக் கருதப்படுவார்,
3. ஒரு நிறுவனத்தைப் பொருத்த மட்டில் அதனுடைய இயக்குளர்களில் ஒருவர் உரிமையாளராகக் கருதப்படுவார்.
4. மத்திய அரசு அல்லது மாநில அரசின் அல்லது உள்ளாட்சித் துறையின் சொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தொழிற்சாலையைப் பொருத்தமட்டில் அதனுடைய நடவடிக்கைகளை நிர்வகிக்க நியமிக்கப்படுபவர் உரிமையாளராகக் கருதப்படுவார்.
தொழிலாளி: வேலையளிப்பவரால் நேரடியாகவோ அல்லது அவருக்குத் தெரிந்தோ, தெரியாமலோ. ஒரு பிரதிநிதி அல்லது ஒப்பந்தக்காரர் மூலமாகவோ ஊதியத்துடனோ ஊதியம் அல்லாமலோ ஒரு உற்பத்தி பணியில் ஈடுபடுத்தப்படுபவர் இச் சட்டப்படி தொழிலாளி ஆகிறார். உற்பத்தி சம்பந்தப்பட்ட இயந்திரங்களை அல்லது வேலையிடங்களை துப்புரவு செய்பவரும், உற்பத்தி சம்பந்தமான வேறு வேலை செய்யும். நபரும் தொழிலாளிதான். ஆயினும் இதே தொழிலில் ஈடுபடும் இந்திய அரசின் முப்படையைச் சேர்ந்தவர்கள் தொழிலாளிகள் என்று கருதப்பட மாட்டார்கள்.
ஆபத்து நிறைந்த செய்முறை: ஆபத்து நிறைந்த செய்முறை என்பது அதில் ஈடுபட்டுள்ள அல்லது அதனுடன் தொடர்புள்ள நபர்களுடைய உடல் நலத்திற்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் செயல் முறையை அல்லது பொதுவான சுற்றுப்புற சூழ்நிலைகளை மாசுபடுத்தக் கூடிய செய்முறையைக் குறிப்பதாகும்.
வாராந்திர வேலை நேரம் : 18 வயதான தொழிலாழியை வாரத்திற்கு 48 மணி நேரத்துக்கு மேல் பணி செய்ய அனுமதிக்கவோ அல்லது பணி செய்யுமாறு கோரவோ கூடாது.
வாராந்திர விடுமுறை; ஒவ்வொரு தொழிலாளிக்கும் அந்தப் பகுதிக்கான வாரத்தின் முதல் நாளை வாராந்திர விடுமுறையாகக் கொள்ள உரி மையுண்டு. விதி விலக்கினால் அவ்வாறு வாராந்திர விடுமுறை அளிக்கப் பட வில்லையெனில் அந்த மாதத்திலோ அல்லது உடனடியாக அதை அடுத்து வரும் இரண்டு மாதத்திற்குள்ளோ இழந்த நாட்களுக்கு சமமான நாட்களை ஈட்டு விடுமுறையாக அளிக்கப்படவேண்டும்.
நாளொன்றுக்கு 9 மணிக்கு மேல் ஒரு வளர்ச்சியடைந்த தொழிலாளியை வேலை செய்ய அனுமதிக்கலாகாது. ஆனால் தலைமை ஆய்வாளர் முன் அனுமதியுடன் ஷிப்ட் மாற்றங்க ளுக்காக உயர்ந்தளவு நாள் வேலை நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்யக் கோரப்படலாம்.
ஓய்வு இடை வேலை; ஒரு வளர்ச்சியடைந்த தொழிலாளி ஒரு நாளில் அய்ந்து மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யலாகாது அரை மணி நேரம் ஓய்வு இடை வேளையின்றி தொடர்ச்சியாக 5 மணி நேரத்திற்கு மேல் ஒரு தொழிலாளியை வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது.
மிகை நேரப்பணி ஓய்வு இடை வேளை உட்பட ஒரு வளர்ச்சிய டைந்த தொழிலாளியின் மொத்த பணிக்காலம் ஒரு நாளில் 10½ மணிக்கு மேல் நீடிக்கக் கூடாது. தலைமை ஆய்வாளர் எழுத்து மூலம் அனுமதித்தால் சிறப்பு நிலைகளில் 12 மணி வரை நீடிக்கலாம்.
இரவு நேர ஷிப்ட்: தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு தொழிலாளியின் ஷிப்ட் நடு இரவினை தாண்டுவதாக அமைவது. ஒரு நாள் விடுமுறை என்பது ஷிப்ட் பணி முடிந்த தொடர்ச்சியான 24 மணி நேரத்தைக் குறிக்கும்.
நடு இரவுக்குப் பின்னர் பணி செய்த கால அளவை முந்தைய தினக் கணக்கில் சேர்க்கவேண்டும்.
மிகை நேர வேலைக்கு கூடுதல் ஊதியம்: இச்சட்டத்தின் படி ஒரு தொழிலாளி ஒரு நாளுக்கு 9 மணி நேரத்திற்கு மேல் அல்லது ஒரு வாரத்தில் 48 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் அவருக்கு கூடுதல் நேரத்திற்கு சாதாரண ஊதிய விகிதத் தைப் போல் இரு மடங்கு தொகை ஊதியமாக அளிக்கப்பட வேண்டும்.
வேலை அடிப்படையில் ஊதியம் வழங்கும் தொழிலாளியாக இருந்தால் கடந்த மாதத்தில் அதே மாதிரி வேலைக்கு வாங்கிய சராசரி முழு நேர ஊதியம் கால அடிப்படை ஊதியமாக கருதப்பட்டு அந்த அடிப்படையில் கூடுதல் நேர ஊதியம் கணக்கிடப்படும்.
கடந்த மாதத்தில் அதே மாதிரி வேலை செய்யாதவராக இருந்தால் மிகை நேர வேலை செய்யும் வாரத்தில் அவரது சராசரி ஊதியம் எவ்வ ளவோ அதை அடிப்படையாகக் கொள்ளவேண்டும்.
சாதாரண ஊதிய விகிதம்: இச்சட் டத்தின் படி சாதாரண ஊதிய விகிதம் என்பது அடிப்படை சம்பளம், படி கள், மற்றும் தள்ளுபடியுடன் அளிக் கப்படும் உணவு தானியங்கள் பொருள்கள் ஆகியவற்றின் மதிப்பும் அடங்கும். போளசும் மிகை தேர ஊதியமும் இந்த விளக்கத்தில் அடங்காது
மிகை நேர வேலைக்குக் கட்டுபாடுகள்: மிகை நேர வேலை உட்பட ஒரு வாரத்தில் ஒரு தொழிலாளி 60 மணிக்கு மேல் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது. மேலும் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு மேல் மிகை நேர வேலை அனுமதிக்கப்படக்கூடாது. தலைமை ஆய்வாளர் அனுமதி பெற்றால் மூன்று மாத காலத்தில் 75 மணிக்கு மேற்படாமல் மிகை நேர வேலை அளிக்கப்படலாம்.
இரட்டிப்பு வேலைக்குக் கட்டுப்பாடு: ஏற்கெனவே ஒரு தொழிற்சாலையில் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு வளர்ச்சி பெற்ற தொழிலாளி வேலை செய்திருந்தால், அதே நாளில் மற்றொரு தொழிற்சாலையில் அவர். வேலை செய்ய அனுமதிக்கப்படக் கூடாது.
வளர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை நேரத்தைப் பற்றிய முன் அறிவிப்பு: வளர்ச்சி பெற்ற தொழிலாளிகளைப் பற்றிய பதிவேட்டினை ஒவ்வொரு தொழிற்சாலையின் மேலாளர் வைத்திருக்க வேண்டும். ஆய்வாளர் வேலை நேரத்தின் எந்தக் காலத்திலும் இதைப் பார்வையிட வசதியாக இருக்கவேண்டும்
1. வளர்ச்சியடைந்த தொழிலாளியின் பெயர்
2. அவருடைய பணியின் தன்மை
3. அவர் சார்ந்துள்ள குழு ஏதேனும் இருந்தால் குழுவைப் பற்றிய விபரம்
4. அவருடைய குழுவுக்கு ஒதுக்கி வைக்கப்பட்ட ஷிப்ட் ஏற்பாடுகள்
5. தேவைப்படும் வேறு விவரங்கள் எந்த ஒரு தொழிற்சாலையிலும் பதிவேட்டில் பெயர் குறிக்கப்படாத தொழிவாளி வேலை செய்யவோ அல்லது அனுமதிக்கப்படவோ கூடாது.
பெண்களுடைய வேலைக்கு மேலும் கட்டுப்பாடு; பெண் தொழிவாளர்கள் இரவு 7 மணியிலிருந்து காலை 6 மணி வரை வேலை செய்ய அனுமதிக்கப்படக் கூடாது.
மாநில அரசு மேற்கண்ட நேர கட் டுப்பாடுகளை அரசிதழ் அறிக்கையின் மூலம் மாற்றலாம். ஆயினும் எக்காரணத்தைக் கொண்டும் பெண் களை இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை வேலைக்கு அனுமதிக்கக் கூடாது.
கடைசி மாற்றம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்குப் பின்போ அல்லது வாராந்திர விடுமுறைக்குப் பின்போ தான் ஷிப்ட் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.
கச்சாப் பொருள்களுக்குச் சேதம் ஏற்படலாம் என்ற காரணத்தால் மீன் பதப்படுத்தப்படும் அல்லது மீன்களை டப்பாக்களில் அடைக்கும் சம்பந்தமான தொழிற்சாலைகளில் பணி புரியும் பெண்கள் விஷயத்தில் அரசு மேற்கண்ட விதியிலிருந்து விலக்கு அளிக்கலாம்.
எந்த தொழிற் கூடத்திற்குள்ளாவது ஆய்வுப் பணியாளர்கள் தொழிலா ளர்களின் உடல் நலத்திற்கும், பாது காப்பிற்கும் ஆபத்து விளைவித்ததாக அல்லது விளைவிக்கக் கூடியதாகக் கருதும் எந்த பொருளையோ, அல்லது ரசாயணப் பொருளையோ கண்டு விட்டால் அவர்கள் அதனை அகற்றுவதற்கோ அல்லது அதனை எந்த நடைமுறை அல்லது பரிசோதனைக்கும் உட்படுத்துமாறு பொறுப்பாளர்களுக்கு உத்திரவிடலாம். பரிசோதனைக்காக அத்தகைய பொருளை அல்லது ரசாயணப் பொருளை கையகப்படுத்திக் கொள்ளலாம்.
இளம் தொழிலாளர்களுக்கு வேலையளித்தல்: இளம் தொழிலா எர்களின் சுரண்டலை தவிர்ப்பதும் அவர்களின் பாதுகாப்பிற்கு வகை செய்வதும் சம்பந்தப்பட்ட விதிகளின் நோக்கமாகும்.
இளம் தொழிலாளர் வேலைக்குத் தடை: 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை எந்த ஒரு தொழிற்சாலையிலும் வேலைக்கு அமர்த்துவதை இச்சட்டம் தடை செய்கிறது.
ஒவ்வொரு சிறுவனும் இளம் தொழிலாளியும் வேலை செய்யத் தகுதி உள்ளவர் என்ற மருத்துவச் சான்றிதழ் பெற்று அதைக் குறிக்கும்.அடையாள அட்டையை வைத்திருக் கவேண்டும், சான்றிதழ் வழங்குவதற்கு முன் சிறுவனுக்கு 14 வயது முழுமை அடைந்து விட்டதா என்பதையும் வேலை செய்வதற்குரிய உடற்தகுதி உண்டா என்பதையும் உறுதி செய்துக் கொள்ளவேண்டும். அதேபோன்று இளந்தொழிலாளராக இருந்தால் 15 வயது முழுமையடைந்து விட்டதா என்பதையும் ஒரு முழு நாள் வேலை செய்வதற்குறிய தகுதி உண்டா என்பதையும் உறுதி செய்து கொண்டு மருத்துவர் சான்றிதழ் வழங்கவேண்டும்.
ஒரு முறை வழங்கப்பட்ட அல்லது புதுப்பிக்கப்பட்ட சான்றிதழ் 12 மாத காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
பதினேழு வயது அடையாத எந்த ஆண் அல்லது பெண் இளந்தொழிலாளி வயது வந்தவர் என்ற முறையில் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்வதற்கான தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால் எந்தத் தொழிற் சாலையிலும் காலை 6 மணிக்கும் மாலை 7 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டும் வேலை செய்யுமாறு அனுமதிக்கப்படலாம். அந்த நேரத்திலாவது மற்ற நேரத்தில் அவர்களை வேலை செய்யக் கோரவோ அனுமதிக்கவோ கூடாது.
எந்தத் தொழிற்சாலை அல்லது தொழிற்சாலைத் தொகுப்பு அல்லது
குறிப்பிட்ட பிரிவுத் தொழிற்சாலைக ளைப் பொறுத்த வரையில் மேற் சொன்ன வரை மாற்றியமைக்க மாநில அரசுகளுக்கு இந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது. தேசிய. நலன் கருதி ஆபத்தான நெருக்கடி நிலை ஏற்பட்டாலொழிய சாதாரண காலங்களில் எந்த பெண் இளந்தொழி லாளியையும் மாலை 10 மணிக்கு காலை 5 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் எந்த நிலையிலும் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது.
சிறுவர்களின் வேலை நேரம் எந்த, ஒரு தொழிற்சாலையிலும் நாளொன்றுக்கு 41 /2 மணி நேரத்திற்கு மேல் இருத்தலாகாது. இரவு நேரத்தில் அவர்களை வேலையிலமர்த்தலாகாது. இரண்டு ஷிப்டுகளில் மட்டும்
அதுவும் ஒன்றோடொன்று இடையூ டாதவற்றில் அல்லது ஒவ்வொன்றும் 5 மணி நேரத்திற்கு மேல் பரவலாகாத வகையிலும் உள்ள ஷிப்டுகளில் தான் சிறுவர்கள் வேலையிலமர்த்தப்பட வேண்டும்.
வாராந்திர விடுமுறை பற்றிய சிறுவர்களுக்கும் பொருந்தும். இந்த விதியிலிருந்து எந்த ஒரு சிறுவனுக்கும் விலக்கு அளிக்கப்பட மாட்டாது.
ஒரு நாளில் ஒரு சிறுவன் ஒரு தொழிற்சாலையில் ஏற்கெனவே வேலை செய்து கொண்டிருக்கும் போது இன்னொரு தொழிற்சாலை' யில் வேலை செய்யுமாறு கோருவதோ அல்லது வேலை செய்ய அனு மதிப்பதோ கூடாது.
எந்த தொழிற்சாலையிலும் எந்த பெண் குழந்தைத் தொழிலாளியையும் காலை 8 மணிக்கும் மாலை 7 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் மட்டுமே வேலை செய்யக் கோரலாம் அல்லது அனுமதிக்கப்படலாம்.
சிறுவர்கள் ஒவ்வொரு நாளிலும் வேலை செய்யக் கோரப்படும் அல்லது அனுமதிக்கப்படும் வேலை நேரத்தைப் பற்றிய அறிக்கை பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கவும், அது ஒவ்வொரு தொழிற்சாலையிலும் சரி வர பராமரிக்கப்படவும் சட்டத்தில் விதி செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்கள் பற்றிய பதிவேடு: சிறு வர்கள் பற்றிய பதிவேடு ஒன்றை தொழிற்சாலை மேலாளர் வைத்திருக் கவேண்டும். வேலை நேரத்தின் எந்தக் காலத்திலும் ஆய்வாளர் பார்வைக்கு கிடைக்கும் படி அத்தகைய பதிவேடு வைக்கப்பட்டிருக்கவேண்டும். பதிவேட்டில் பின்வரும் தகவல்கள் இடம் பெற்றிருக்கவேண்டும்.
1. தொழிற்சாலையில் பணிபுரியும் ஒவ்வொரு குழுந்தைத் தொழிலாளியின் பெயர்
2 அவருடைய வேலையின் தன்மை
3. அவர் சார்ந்துள்ள குழு
4. அந்தக் குழு ஷிப்ட் வேலையிலி ருந்தால் அவருடைய குழுவுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வேலை நேரம்.
5. மருத்துவ தகுதிச் சான்றிதழின் எண்
குழந்தைத் தொழிலாளருடைய பதி வேட்டில் பெயர் மற்றும் இதர விவ ரங்கள் இடம் பெற்றிருந்தாலொழிய எந்த ஒரு குழந்தைத் தொழிலாளியும் எந்த ஒரு தொழிற்சாலையிலும் வேலை செய்ய கோருவதோ அல்லது அனுமதிப்பதோ கூடாது.
இளம் வயதினரை வேலைக்கு அமர்த்துவதற்கான மேற்கண்ட விதிகள் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தல் சட்டம் 1938-இல் காணப்படும். விதிகளுக்குக் கூடுதலானவையே தவிர அவற்றை நீக்கும் அல்லது மாற்றும் முறையில் அமைக்கப்பட்டவை அல்ல.
- உண்மை இதழ், 01-15.08.1998
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக