திருச்சி, செப்.5- திருச்சி பெல் நிறுவனத்தில் கடந்த 37 ஆண்டுகளாக பெல் நிறுவன கட்டுப் பாட்டில் இயங்கி வரும் பெல் லேபர் காண்ட் ரக்டர் சொசைட்டி (ஒய்.டி11) நிறுவனத்தில் சுமார் 100க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர் களுக்குசமமாக அனைத்து பணிகளையும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். இந்த தொழி லாளர்களுக்கு பெல் நிருவாகம் இ.எஸ்.அய் மூலம் மருத்துவ வசதி செய்து கொடுக்க மறுத்து விட்டது. இந்த கோரிக் கை சம்மந்தமாக பெல் நிருவாகத்திடம் கடந்த ஓராண்டு காலமாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் பெல் நிருவாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருகிறது. இதன் விளைவாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவ வசதி இல்லாத தால் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
பெல் துணை நிறுவன மான சென்னை ராணிப் பேட்டையில் அங்கு பணி புரியும் தொழிலாளர் களுக்கு பெல் மருத்துவ மனையிலே மருத்துவம் பார்க்க அனுமதிக்கப் படுகிறது. ஆனால் திருச்சி பெல் நிறுவனத்தில் ஒப் பந்தத் தொழிலாளர் களுக்கு பெல் மருத்துவ மனையில் மருத்துவம் பார்க்க பெல் நிருவாகம் அனுமதிக்கவில்லை. இதனால் 1100 ஒப்பந்தத் தொழிலாளர்களும் அவர் களது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு வரு கின்றனர். மேற்கண்ட தொழி லாளர்கள் மற்றும் அவர் களது குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி செய்து தர கோரி, பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் மு.சேகர் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ். பழனிசாமியிடம் நேற்று (4.9.2015) மனு அளித்தார். அவருடன் மாவட்ட தி.க செயலாளர் கணேசன், மாரியப்பன், காமராஜ், ஆண்டிராஜ், சண்முகம், திராவிடன் கார்த்திக் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
-விடுதலை,5.9.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக