செவ்வாய், 29 செப்டம்பர், 2015

தொழில் உலகில் சிறந்த பெண்கள்


ஆண்கள் அதிக அளவில் பங்களிக்கும் வியாபார உலகில் அதிக திறமை வாய்ந்த பெண்களாகத் திகழும் மங்கையர் வரிசை இதோ...
Sheryl Sandberg
உலகம் முழுவதும் பல கோடி மக்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஃபேஸ்புக்கின் முதுகெலும்பு இவரே. சி.ஓ.ஓ. பதவியில் இருக்கும் 45 வயதான ஷெரில், 2013இல் அவர் எழுதிய புத்தகத்தின் மூலம் (Lean In) மேலும் புகழடைந்தவர். இவரது புத்தகமும் ஹாட் லிஸ்ட்டில் இடம் பெற்றிருக்கிறது. டெக்னாலஜி துறையில் இருக்கும் அதிக வருமானம் பெரும் சிலரில் ஒருவர் இவர்.
Abigail Johnson
அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான ஃபிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ் தலைவர் பதவியை அலங்கரிக்கும் அபிகெய்ல், 52 வயது ஆனவர். 2012 முதல் இப்பதவியில் இருக்கிறார். உலகின் டாப் 10 பணக்காரப் பெண்மணிகள் பட்டியலிலும் இவர் இடம் பெறுகிறார்.
Pat Woertz
61 வயதான பேட்வோர்ட்ஸ் ADM என்ற உணவுப் பதப்படுத்துதல் மற்றும் கமாடிட்டி நிறுவனத்தின் சி.இ.ஓ. மற்றும் சேர்மனும் கூட. 2006 முதல் இந் நிறுவனத்தை தலைமை ஏற்று நடத்துகிறார்.
Irene Rosenfeld
சேர்மன் மற்றும் சி.இ.ஓ. பதவியில் இருப்பவர் அய்ரின் ரோசன்ஃபெல்ட். உலகம் முழுதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களை கொண்ட மாடலீஜ் இன்டர் நேஷனல் உணவு நிறுவனத்தின் உயரிய தலைவர். 61 வயதான இவர் அடுத்த 4 ஆண்டுகளில் நிறுவனத்தின் மிகப்பெரிய மாறுதலுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
Meg Whitman
டெக்னாலஜி துறையில் முக்கிய நிறுவனமான ஹெச்.பி.யின் சேர்மன், சி.இ.ஓ. மற்றும் பிரசிடென்ட், 58 வயதான மெக் விட்மென். பி அண்ட் ஜி, வால்ட் டிஸ்னி, இபே போன்ற நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கியப் பணியாற்றி ஹெச்.பி.க்கு வந்திருப்பவர். 58 வயதான மெக், உலகின் சிறந்த வியாபார வல்லுநர்களில் ஒருவரும் கூட.
Ellen Kullman
டுபண்ட் என்னும் கெமிக்கல், பயோ அறிவியல் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் சி.இ.ஓ. பதவியில் இருக்கிறார், 58 வயதான எல்லன் குல்மென். தனது பதவி காலத்தில் நிறுவனத்தின் பங்கு மதிப்பை பன்மடங்கு உயர்த்திய பெருமைக்குரியவர்.
-விடுதலை,17.3.15

சனி, 5 செப்டம்பர், 2015

பெல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இ.எஸ்.அய். மருத்துவ வசதி அளிக்க வேண்டும்

திருச்சி, செப்.5- திருச்சி பெல் நிறுவனத்தில் கடந்த 37 ஆண்டுகளாக பெல் நிறுவன கட்டுப் பாட்டில் இயங்கி வரும் பெல் லேபர் காண்ட் ரக்டர் சொசைட்டி (ஒய்.டி11) நிறுவனத்தில் சுமார் 100க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர் களுக்குசமமாக அனைத்து பணிகளையும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். இந்த தொழி லாளர்களுக்கு பெல் நிருவாகம் இ.எஸ்.அய் மூலம் மருத்துவ வசதி செய்து கொடுக்க மறுத்து விட்டது.  இந்த கோரிக் கை சம்மந்தமாக பெல் நிருவாகத்திடம் கடந்த ஓராண்டு காலமாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் பெல் நிருவாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருகிறது. இதன் விளைவாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் மருத்துவ வசதி இல்லாத தால் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
பெல் துணை நிறுவன மான சென்னை ராணிப் பேட்டையில் அங்கு பணி புரியும் தொழிலாளர் களுக்கு பெல் மருத்துவ மனையிலே மருத்துவம் பார்க்க அனுமதிக்கப் படுகிறது. ஆனால் திருச்சி பெல் நிறுவனத்தில் ஒப் பந்தத் தொழிலாளர் களுக்கு பெல் மருத்துவ மனையில் மருத்துவம் பார்க்க பெல் நிருவாகம் அனுமதிக்கவில்லை. இதனால் 1100 ஒப்பந்தத் தொழிலாளர்களும் அவர் களது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டு வரு கின்றனர். மேற்கண்ட தொழி லாளர்கள் மற்றும் அவர் களது குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி செய்து தர கோரி, பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் மு.சேகர் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்  கே.எஸ். பழனிசாமியிடம் நேற்று (4.9.2015) மனு அளித்தார். அவருடன்  மாவட்ட தி.க செயலாளர் கணேசன், மாரியப்பன், காமராஜ், ஆண்டிராஜ், சண்முகம், திராவிடன் கார்த்திக்  உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
-விடுதலை,5.9.15

பணியின் போது இறக்கும் போக்குவரத்துக் கழக ஊழியரின் வாரிசுக்கு தகுதிக்கேற்ப பதவி

பணியின் போது இறக்கும் போக்குவரத்துக் கழக ஊழியரின் வாரிசுக்கு தகுதிக்கேற்ப பதவி: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, செப்.5_ பணியின் போது இறக்க நேரிடும் அரசுப் போக்கு வரத்துக் கழகத் தொழிலா ளர்களின் வாரிசுதாரர் களுக்கு கருணை அடிப் படையில் பணி வழங்கப் படும் என்று தமிழக அரசு அறிவித்தது. சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற போக்குவரத்துக் கழக மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பின்னர், போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்க மணி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: *பணியின்போது இறக்கும் தொழிலாளர் களின் வாரிசுதாரர்களுக்கு பதிவு மூப்பின் அடிப்படையில், கல்வித் தகுதிக்கேற்ப வேலை வழங்கப்படும். அது ஒரு போக்குவரத்துக் கழகத்துக்கு 100 பணியிடங்கள் வீதம் 8 போக்குவரத்துக் கழகங் களுக்கு 800 பணியிடங்கள் என, 2 ஆண்டுகள் பயிற்சி யளித்து நிரப்பப்படும். *பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் ஊழியர்களின் குழந்தை களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு போக் குவரத்துக் கழகத்திலும் முதல் 10 குழந்தைகளின் மேல் படிப்புக்கான கல்விக் கட்டணம் அரசால் திரும்ப வழங்கப்படும். *போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உரிமங்களைப் புதுப்பிக்கும் போது செலுத்தும் கட்ட ணம் அரசால் திரும்ப வழங் கப்படும். போக்குவரத்துக் கழகத்தில் ஓர் ஆண்டு விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வரும் ரொக்கப் பரிசு ரூ. 1,000 தொகை, ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இத்தொகை, அய்ந்து ஆண்டுகள் விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநருக்கு ரூ. 5,000 ஆகவும், 10 ஆண் டுகள் விபத்தின்றிப் பணி புரிந்த ஓட்டுநர்களுக்கு ரூ. 10,000 ஆகவும் நிகழாண்டு முதல் வழங்கப்படும். மேலும், 15 ஆண்டுகள் விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு வழங்கப் படும் ரூ. 10,000 ரொக்கப் பரிசு இனி ரூ. 15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். 20 ஆண்டுகள் விபத் தின்றிப் பணிபுரிந்த ஓட்டு நர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசு ரூ. 15,000 இனி ரூ. 20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். 25 ஆண்டுகள் விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசு ரூ. 20,000 இனி ரூ. 25,000 ஆக உயர்த்தி வழங் கப்படும் என்றார்.
- விடுதலை,சனி, 05 செப்டம்பர் 2015

வியாழன், 3 செப்டம்பர், 2015

பிஎஃப் கணக்கு இருப்புத் தொகையை செல்போனிலேயே அறிய வசதி

சென்னை, செப்.1_ பிஎஃப் கணக்கில் இருக் கும் இருப்புத் தொகை, கடைசியாக செலுத்திய மாத சந்தா விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்வதற்காக யுனிவர்சல் அக்கவுன்ட் எண் வழங்கப்பட்டு வரு கிறது என வருங்கால வைப்பு நிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
முதன்மை மண்டல ஆணையர்
இதுகுறித்து, தாம் பரத்தில் உள்ள வருங்கால வைப்பு நிதி முதலாவது முதன்மை மண்டல ஆணையர் மூ.மதியழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:
தொழிலாளர் வருங் கால வைப்பு நிதி அமைப் பானது தனது சந்தாதா ரர்கள் அனைவருக்கும் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர்  என்ற தனிப்பட்ட எண்ணை வழங்கி வரு கின்றது. இந்த எண்ணை செயலாக்கம் செய்வதன் மூலம் சந்தாதாரர்கள் தங் களுடைய பிஎஃப் கணக் கின் பாஸ் புக்,
யுஏஎண் கார்டு போன்றவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தங்கள் பிஎஃப் கணக்கில் இருக்கும் இருப்புத் தொகை, கடைசியாக செலுத்திய மாத சந்தா விவரங்களை செல்போன் மூலம் தங்களுடைய விருப் பமான மொழியில் பெற் றுக் கொள்ளலாம்.
இ-மெயில்
மூலமாகவும்...
யுஏஎண் என்ற எண்ணை செயலாக்கம் செய்ய அனைத்து நிறுவனங்களுக் கும் உதவி செய்வதற்காக தாம்பரம் பிஎப் அலுவல கத்தில் சிறப்பு உதவி மய்யம் தொடங்கப்பட் டுள்ளது. மேலும், 2226 2251 என்ற தொலைபேசி வாயிலாகவும்,  ro.tambaram@epfindia.gov.in என்ற இ-மெயில் மூலமா கவும் தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களுக்கு தீர்வு காணலாம்.
வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு யுஏ எண் வழங்குதல் மற்றும் செயலாக்குதல் 22.06.2015 முதல் கட்டாயமாக்கப்பட் டுள்ளது. இதனை செயல் படுத்தாத நிறுவனங்கள் மீது சட்ட விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பிஎஃப் பணம் திரும்பப் பெற விண்ணப் பிக்கும் படிவங்களில் இனி ஒரு ரூபாய் மதிப் புள்ள ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டவேண்டாம். இம் முறையானது மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் செட்டில் செய்யப் படும் படிவங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அனைத்து தொழிற் சாலை, நிறுவனங்கள் தங்களது இபிஎப் சந் தாக்களை இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும் என கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இருப்பினும் மாதம் ரூ.ஒரு லட்சத்துக் கும் குறைவாக சந்தா தொகை செலுத்தும் தொழிலதிபர்கள் வரும் டிசம்பர் 2015 வரை உள் ளூர் காசோலை, வரை யோலை மூலமாக தொகையைச் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-விடுதலை,1.9.15

போதிய தூக்கமின்மை மூக்கில் நீர்நோய்த் தொற்றை அதிகரிக்கும்


தூக்கத்தின் அளவு மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நிர்ணயிக்கவல்லது என்கிறது ஆய்வு.
ஒருநாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு மூக்கில் நீர் நோய் தொற்றை உண்டாக்கும் வைரஸின் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
இது குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில், 164 ஆரோக்கியமானவர்களின் தூங்கும் பழக்கம் கண்காணிக்கப் பட்டது. அதற்காக அவர்களின் கைகளின் மணிக்கட்டில் தொடுஉணர் கருவி பொருத்தப்பட்டது.
அதன்பிறகு அவர்களின் மூக்கில் மூக்கில் நீர் நோய் தொற்றை தோற்றுவிக்கும் ரினோவைரஸ் அடங்கிய திரவத்தின் சில சொட்டுக்கள் விடப்பட்டன.
இவர்கள் அனைவரும் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டு கூர்ந்து கண்காணிக்கப்பட்டனர். இவர்களில் எத்தனை பேருக்கு மூக்கில் நீர் நோய்  வந்தது என்று கண் காணிக்கப்பட்டது.
இந்த பரிசோதனையின் இறுதியில் கிடைத்த முடிவுகள் குறைவான தூக்கம் மனிதர்களின் நோய் எதிர்ப்புத்தன்மையின் வீரியத்தைக் குறைக்கிறது என்பதை உறுதி செய்திருக்கின்றன.
இந்தப் பரிசோதனையில் தூக்கத்தின் கால அளவு மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. தூக்கத்தின் தன்மை கணக்கில் எடுக்கப்படவில்லை. விட்டு விட்டு தூங்குவது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. மாறாக ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்கிறார் என்பது மட்டுமே கணக்கு என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
ஆய்வின் முடிவுகளின்படி, ஒரு நாளைக்கு ஏழு மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்குபவர்களோடு ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு மூக்கில் நீர் நோய் தொற்று பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
உறக்கத்துக்கும் உடலின் ஆரோக்கியத்துக்கும் நேரடித் தொடர்பு இருப்பதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
இந்த ஆய்வை மேற்கொண்ட முதன்மை ஆய்வாளரான கலிபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஏரிக் பிராதர் ஒருவருக்கு மூக்கில் நீர் நோய் தொற்று பிடிக்குமா பிடிக்காதா என்பதை நிர்ணயிக்கும் காரணிகளில் முக்கிய மானதாக போதுமான தூக்கமின்மை காணப்படுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
ஒருவரின் வயது, அவர்களுடைய மன அழுத்தத்தின் அளவு, அவர்களின் இனம், கல்வி, வருமானம், ஒருவரின் புகைக்கும் பழக்கம், இவை அனைத்தையும் விட ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்குகிறார் என்பதே அவருக்கு மூக்கில் நீர் நோய் தொற்று பிடிக்குமா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தூக்கம் குறைவதால் வேறுபல நோய்கள் ஏற்படும் என்றும் உடல் பருமனடையும் தன்மையும் அதிகரிக்கும் என்றும் ஏற்கனவே மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறாரகள்.
மேலும் தடுப்பு மருந்துகளின் பயன்பாட்டையே கூட தூக்கமின்மை மட்டுப்படுத்திவிடக்கூடும் என்று ஏற்கனவே மருத்துவர் எரிக் தெரிவித்திருந்தார். பொதுவாக மனிதர்களுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு எட்டுமணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம் என்றும், அப்படி தூங்கினால் தான் மனிதர்கள் ஆரோக்கியமாக செயற்பட முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
அதேசமயம் சிலருக்கு கூடுதல் தூக்கம் தேவைப்படும் என்றும், வேறு சிலரோ குறைவான தூக்கத்துடன் கூட ஆரோக்கியமாக இருக்க வல்லவர்கள் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-விடுதலை,3.9.15

ஜவஹர் சிறுவர் மன்ற பகுதிநேர ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு


சென்னை,  செப்.3_ சென்னையில் உள்ள ஜவஹர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதி நேர கலை ஆசிரியர்கள், திட்ட அலுவலர்களுக் கான தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையில் இது தொடர்பாக தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
சென்னையில் ஜவஹர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் பகுதிநேர கலை ஆசிரியர்கள், ஒருங் கிணைப்பாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் தொகுப்பூதியம் ரூ.2 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாவட்ட, விரிவாக்க மன்றங்களில் பணியாற்றும் கலை ஆசிரியர்கள், திட்ட அலுவலர்களுக்கான தொகுப் பூதியம் ரூ.1,500-லிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. ஊரக ஜவஹர் சிறுவர் மன்றங்களில் பணியாற்றும் கலை ஆசிரியர்கள், திட்ட அலுவலர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.1,000-_த்திலிருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த் தப்படுகிறது.
இதற்காக ஆண்டுக்கு தொடரும் செலவினமாக ரூ.39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
-விடுதலை,3.9.15

துப்புரவுப் பணியாளர்கள் தினக்கூலியை ரூ.225 ஆக உயர்த்த வேண்டும் திருமாவளவன் கோரிக்கை

துப்புரவுப் பணியாளர்கள் தினக்கூலியை ரூ.225 ஆக உயர்த்த வேண்டும்
திருமாவளவன் கோரிக்கை
சென்னை, செப்.3_ விடு தலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல்.திரு மாவளவன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
மதுரை மாநகராட் சியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் களான பாதாளச் சாக் கடைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், மயானப் பணியாளர்கள் உள்பட 4000_-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலி யுறுத்தி மூன்றாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின் றனர்.
வேலூர் மாநகராட்சி யிலும் திடக் கழிவுகளை அப்புறப்படுத்தாததால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டு வரு கிறது.
அங்கு திடக் கழிவு களை அப்புறப்படுத்த புதிய பராமரிப்பு நடவடிக் கைகளை வலியுறுத்தியும், ஒட்டு மொத்தத் துப்புர வுப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தியும் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் செப்டம்பர் ஏழாம் தேதி வரை தொடர் பட்டினிப் போராட்டம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வேலூரில் நடைபெறவுள்ளது.
இவ்வாறு மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் துப்புரவுப் பணியாளர் களின் கோரிக்கைகள் குவிந்து கிடக்கின்றன. அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களின் நலன் களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக அரசை விடு தலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
மதுரை மாநகராட்சி யில் 2006 ஆம் ஆண்டு முதல் தினக்கூலி அடிப் படையில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும். தற்போது வழங்கப் படும் ரூ. 115 தினக்கூலியை அரசு நிர்ணயித்த தொகை யான ரூ. 225 என உயர்த்த வேண்டும். ஒப்பந்தத் தொழிலாளர் முறையை அறவே ரத்து செய்ய வேண்டும்.
2000_க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். துப்புரவுப் பணியாளர்களின் நலன் களுக்காக மய்ய அரசு அறிவித்த திட்டங்களை முழுமையாக நடை முறைப்படுத்தவேண்டும் போன்ற கோரிக்கைகளை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு கண்டு தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட் டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
-விடுதலை,3.9.15