வியாழன், 8 நவம்பர், 2018

BHELஇல் பணிபுரியும் வடநாட்டாரின் விரோத போக்கு!

BHEL  நிறுவனத்தில் மேற் பார்வையாளராக பணி புரியும் வட இந்தியாவைச் சேர்ந்த வருண் குமார் சர்மா என்பவர், மேற்பார்வையா ளர்  வாட்ஸ்ஆப் குழுவில்  "தமிழன்கள்  ஏதும் அறியாத வர்கள்   என்றும், அத்தோடு நாய்க்கு எலும்பு கிடைத்தால் சந்தோஷம் அடைவதும் போன்று  தமிழன் இருப்பான்" எனத் தமிழினத் தொழிலாளர்களைக் கீழ்த்தரமாக பேசியதோடு அதனையே வாட்ஸ்ஆப் (கீலீணீ கிஜீஜீ) பொதுத்தளத்தில்  பதிவிட்டிருப்பது மானமுள்ள தமிழினத் தோழர்களை மனவேதனை அடைந்திடச் செய்துள்ளது. பல தமிழக மேற்பார்வைத் தோழர்கள் வருத்தம் தெரிவித்து பதிவிடக் கேட்டுக்கொண்டும் வருண்குமார் சர்மா முதலில் மறுத்து பின்பு  மூன்று நாட்கள் கழித்துப் பதிவிட்டார்.

தமிழர்களின் சுயமரியாதைக் காவல் அரணான திராவிடர் கழகத்தின் தொழிலாளர் இயக்கமான பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பில் பாய்லர் பிளாண்ட் காவல் நிலையத்தில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்து நடவடிக்கை வேண்டும் எனக் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் அவர்கள் வருண்குமார் சர்மாவை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். தமிழர்களின் சுயமரியாதையைக்  கொச்சைப்படுத்திய வடநாட்டு வருண் குமார் சர்மா மீது   கண்டிப்பாக காவல் துறை வழக்கு பதிந்திட வேண்டும் என பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக  கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

தகவல்: ஞா. ஆரோக்கியராஜ்

தலைவர், மாவட்ட திராவிடர் கழகம்

- விடுதலை நாளேடு, 5.11.18

புதன், 7 நவம்பர், 2018

கூட்டுறவு கடன் சங்கங்கள் - வங்கிப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

சென்னை, நவ.4 கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கி களில் பணியாற்றும் பணியாளர் களுக்கு ஊதிய உயர்வு அறிவிக் கப்பட்டுள்ளது. இதனால் 22 ஆயிரத்து 48 பணியாளர்கள் பயன்பெறுவதுடன், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.143.72 கோடி செலவு ஏற்படும்.
தமிழகத்தில் 113 ஆண்டுகளாக பாரம்பரியமிக்க கூட்டுறவு நிறுவனங்கள் சிறப்பாகச் செயல் பட்டு வருகின்றன. அகில இந்திய அளவில் பல விருது களையும் பெற்று சாதனை புரிந் துள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கூட்டுறவு கடன் நிறுவ னங்களில் பணியாற்றும் பணி யாளர்களின்  ஊதிய விகிதத்தை திருத்தியமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அவர் களது கோரிக்கையை ஏற்று புதிய ஊதிய விகிதங்களை பரிந்துரை செய்ய ஏதுவாக கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தக் குழுக்கள் இப்போது  பரிந்துரைகளை வழங்கியுள்ளன. மேலும், மாநில தலைமை கூட் டுறவு வங்கி மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிர்வாக இயக்குநர்களும், தங்களது வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்துள்ளனர்.
ஊதிய உயர்வு ஆய்வுக் குழுவும், வங்கி அதிகாரிகளும் அளித்த பரிந்துரைகளை ஏற்று புதிய ஊதிய உயர்வு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதிய உயர்வு ரூ.988-ம், அதிகபட்ச ஊதிய உயர்வு ரூ.4,613 வரையும் அளிக்கப்படும். இந்த ஊதிய உயர்வு கடந்த ஏப்ரல் மாதம் முதல் முன் தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் நடை முறைப் படுத்தப்படும்.
மத்திய கூட்டுறவு வங்கி களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ரூ.1,114 முதல் அதிகபட்சமாக ரூ.16,963 வரையில் ஊதிய உயர்வு அளிக்கப்படும். இது கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் அளிக்கப்படும். நகர கூட்டுறவு வங்கிப் பணியா ளர்களுக்கு ரூ.455 முதல் அதிக பட்சமாக ரூ.16,485 வரையில் ஊதிய உயர்வு அளிக்கப்படும். இது, கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப் படும்.
பணியாளர் கூட்டுறவு கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங் களைச் சேர்ந்த பணியாளர்களுக்கு ரூ.3,200 முதல் ரூ.12,500 வரை ஊதிய உயர்வு அளிக்கப்படும். இந்த ஊதிய உயர்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் கணக்கிடப் பட்டு நிலுவைத் தொகையுடன் அளிக்கப்படும்.
இதே போன்று, நகரக் கூட்டுறவு, தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, தமிழ்நாடு மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கிகளைச் சேர்ந்த பணியா ளர்களுக்கு ரூ.1,180 முதல் ரூ.28,000 வரையில் நிலைகளுக்கு ஏற்ப ஊதிய உயர்வு அளிக்கப் படும். இந்த ஊதிய உயர்வால் கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் 22 ஆயிரத்து 48 பணியாளர்கள் பயன் பெறுவர். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.143.72 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று முதல்வர் எடப் பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
- விடுதலை நாளேடு, 4.11.18

அரசு ஊழியர் இறந்தால் 1 ஆண்டில் கருணைப்பணி வழங்க அரசாணை பிறப்பிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, நவ.6  அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து, ஓராண் டிற்குள் வாரிசுக்கு கருணைப் பணி நியமனம் வழங்க அர சாணை பிறப்பிக்க வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
இது தொடர்பான, ஒரு வழக் கில் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறிய தாவது:
கருணைப் பணி நியமனம் தொடர்பாக, கீழ்க்கண்ட வழி முறைகளை பின்பற்ற, 2019 ஜன.,1 முதல் அமல்படுத்தும் வகையில், உடனடியாக தமிழக அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும்.அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து, ஓராண்டிற்குள், சட்டப் பூர்வ வாரிசுக்கு கருணைப் பணி நியமனம் வழங்க வேண்டும்.
நான்காம் நிலை ஊழியர் களைப் பொறுத்தவரை, கரு ணைப் பணியில் சில விதி களைக்கூறி, புறக்கணிக்கக்கூடாது. விதிவிலக்கு அளிக்க வேண்டும். உதாரணமாக, துப்புரவுப் பணி யாளர் நியமனத்திற்கு போதிய தகுதிகள் அவசியம் இல்லை. எழுதப், படிக்க மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டத் தெரிந்தால் போதும்.ஒரு ஊழியர் திடீரென இறக்கும்போது, அப்போது மனைவியின் வயிற்றிலுள்ள குழந்தைக்கு, 18 வயது பூர்த்தி யாகும் வரை, கருணைப் பணிக்கு ஒரு இடத்தை காலியாக வைத் திருக்க வேண்டியதில்லை.பணிக்கு விண்ணப்பித்தபின், மூன்று மாதங்களில் சம்பந்தப் பட்ட அதிகாரி முடிவெடுக்க வேண்டும்.
தவறினால், அவரை முக்கியத்துவம் இல்லாத பணிக்கு மாற்ற வேண்டும்.இறந்தவரின் மனைவியைத் தவிர, மகன் அல்லது மகளுக்கு பணி வழங்கினால், அவர்களின் சம்பளத்தில், 25 சதவீதத்தை பிடித்தம் செய்ய வேண்டும். ஏனெனில் வேலை கிடைத்ததும், தாயை கைவிடுகின்றனர். இதைத் தவிர்க்க, தாயை பாது காக்க, வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.
-விடுதலை நாளேடு,6.11.18

செவ்வாய், 6 நவம்பர், 2018

விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு தொழிலாளர்களின் ஊதியத்தை ஏன் உயர்த்தக் கூடாது?

மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை, நவ.5 விலைவாசி உயர் வுக்கு ஏற்ப, தொழிலாளர்களின் ஊதி யத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஏன் உயர்த் தக்கூடாது? என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப் பியதுடன் இதுகுறித்து பதில் தருமாறும் உத்தரவிட்டுள்ளது.  குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள பசிபிகா சென்னை திட்ட உட் கட்டமைப்பு நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றிய விக்னேஷ் என்ற தொழிலாளி கடந்த 2015 ஆகஸ்ட் 8ஆம் தேதி இரும்பு கம்பிகளை இழுத்தபோது 7ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து பலியானார்.
இதையடுத்து, இழப்பீடு கோரி விக்னேஷின் தந்தை ராஜரத்தினம், தாய் சரசுவதி ஆகியோர் சென்னையிலுள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் முறையிட்டனர். கோரிக்கையை பரிசீலித்த துணை ஆணையர் 8 லட்சத்து 95 ஆயிரத்து 840 இழப்பீடாக 30 நாட்களுக்குள் வழங்க வேண்டுமென்றும், தவறினால் 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார். இந்நிலையில், இழப்பீடு தொகையை அதிகரிக்க கோரி விக்னேஷின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், வெல்டர் பணிகளுக்கு மாதம் 16,704 குறைந்தபட்ச ஊதியம் நிர் ணயித்து 2014இல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில், உயிரிழந்த விக்னேஷின் குடும்பத்திற்கான இழப்பீட்டை 18 லட்சத்து 60 ஆயிரத்து 73 ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டார். இத்தொகைக்கு விபத்து நடந்த நாளிலி ருந்து 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.  மேலும், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய மாக 8 ஆயிரம் என்று கடந்த 2010ஆம் ஆண்டு மத்திய அரசு நிர்ணயித்தது. 8 ஆண்டுகள் கடந்த நிலையில், விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு இந்த தொகையை உயர்த்த அடுத்தடுத்து வந்த அரசுகள் தவறிவிட்டன.
தொழிலாளர்களின் பாதுகாவலர்கள் என சொல்லிக்கொள்ளும் தொழிற்சங் கங்கள் சிறு விஷயங்களில் மட்டுமே கவ னம் செலுத்துகின்றன. நாட்டின் தொழில் வளர்ச்சியை பாதிக்கும் வகையிலும் இந்த செயல் உள்ளது. தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஏன் உயர்த்தக்கூடாது, தொழிலா ளர்களின் இழப்பீட்டு தொகையை ஏன் அதிகரிக்க கூடாது என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு மத்திய அரசு வரும் டிசம் பர் 2ஆம் தேதிக்குள் பதில் தர வேண்டும் என்று உத்தரவிட்டார்.
- விடுதலை நாளேடு, 6.11.18

பாலியல் புகார் தெரிவிக்க குழு அமைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

மகளிர் ஆணையத்துக்கு தகவல் ஆணையம் வலியுறுத்தல்
புதுடில்லி, நவ.6  பாலியல் புகார் தெரிவிக்க குழு அமைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணை யத்துக்கு மத்திய தகவல் ஆணை யம் வலியுறுத்தியுள்ளது. மேலும், பாலியல் புகாருக் கும், அது தொடர்பான விசார ணைக்கும் இடையே நிலவும் இடைவெளி அதிகரித்து வருவது, பாலியல் புகார் அளிக்க முனை யும் பெண்களின் நம்பிக்கையைக் குலைக்கும் என்றும் தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தாமோதர் பள்ளத் தாக்கு கழகத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஒருவர், உயரதி காரிகளால் தான் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட தாக, தேசிய மகளிர் ஆணை யத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் குறித்து, ஆணையம் சரியாக விசாரணை நடத்தாததால், தனது புகாரின் நிலை குறித்து அறிய மத்திய தகவல் ஆணையத்திடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்திருந்தார். அந்த மனு வின் மீது விசாரணை நடத்திய மத்திய தகவல் ஆணையர் சிறீதர் ஆச்சார்யலு கூறியதாவது:
குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராகப் பெண்கள் அளிக்கும் பாலியல் புகார்களை விசாரித்து, அந்தப் பெண்கள் நீதி பெற வழிவகை செய்வது தேசிய மகளிர் ஆணையம், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகிய வற்றின் கடமையாகும். அவை தங்களின் அரசியலமைப்புக் கட மைகளை ஆற்றாமல் தட்டிக் கழிக்கக் கூடாது.
மனுதாரரின் புகாரை முறை யாக விசாரிக்காமல், தேசிய மகளிர் ஆணையம் அதனை தாமோதர் பள்ளத்தாக்கு கழகத் துக்கு அனுப்பியுள்ளது. அந்தக் கழகமும், இந்தப் புகார் குறித்த விளக்கத்தை மனுதாரருக்கு அளிக்கவில்லை. எனவே, அந்தக் கழகத்தின் பொதுத் தகவல் ஆணையர் அன் சூமன் மண்டலுக்கு, அதிகபட்ச அபராதமான ரூ.25,000 விதிக்கப் படுகிறது. மேலும், அந்தப் பெண் ணுக்குச் சரியான தகவல் அளிக் காதது, அவரை மன ரீதியாகத் துன்புறுத்தியது, அவரை அடிக்கடி பணியிடமாற்றம் செய்தது, அவரது வேலை செய்யும் உரிமையைப் பாதித்தது ஆகிய குற்றங்களுக்காக தாமோதர் பள்ளத்தாக்கு கழகம், அந்தப் பெண்ணுக்கு ரூ.1 லட்சத்தை இழப்பீடாக அளிக்க வேண்டும்.
ஊடகத்துறை, திரைப்படத் துறை, பத்திரிகையாளர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில், பாலியல் புகார் அளிப்பதற்கான குழுக்கள் இன்ன மும் அமைக்கப் படவில்லை. அத்தகைய நிறுவனங்கள் மீது தேசிய மகளிர் ஆணையம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பாலியல் புகார் அளிப்பதற் கும் அதனை விசாரிப்பதற்கும் இடையே மிகப் பெரிய இடை வெளி உருவாகி வருகிறது. இந்த இடைவெளியைக் குறைக்காவிட்டால், மகளிர் ஆணையம் மற்றும் பெண்கள் அமைச்சகத்தின் மீதுள்ள பெண் களின் நம்பிக்கை முற்றிலும் குலைந்து போகும். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினாலும், புகார் அளிக்க முன்வர மாட்டார்கள்.
எழுத்துப்பூர்வமாக அளிக்கப் படும் பாலியல் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் போனால், பெண்கள் அனை வரும் சமூக ஊடகங்கள் வழியாகப் புகார் அளிக்கும் நிலையே ஏற்படும். தேசிய மகளிர் ஆணையம் தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி, சமூக ஊடகங்கள் வழியாகத் தெரிவிக்கப்படும் பாலியல் புகார்களையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
- விடுதலை நாளேடு, 6.11.18

உழைப்பாளர் தினமான மே 1 விடுமுறை ரத்து: திரிபுரா மாநில பா.ஜ.க. அரசுக்குக் கண்டனம்

அகர்தலா,  நவ.6  உழைப்பாளர் தினமான மே ஒன்றாம் தேதி விடுமுறையை ரத்து செய்து திரிபுரா மாநில பாஜக அரசு வெளியிட்டுள்ள அறி விப்புக்கு, கண்டனங்கள் அதி கரித்து வருகின்றன.  2019-ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை தினங்களை திரிபுரா மாநில பாஜக அரசு சனிக்கிழமையன்று வெளியிட்டது. அதில் உழைப்பாளர் தினமான மே ஒன்றாம் தேதி பொது விடுமுறை என்பது ரத்து செய்யப்பட்டு அது 'கட்டுப்படுத்தப்பட்ட  விடுமுறை' என்ற வகையின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.
மாநில பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது   இதுதொடர்பாக திரிபுரா மாநில சிஅய்டியு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், திரிபுரா மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச தொழிலாளர் ஆணை யத்திடம் சிஅய்டியு சார்பில் புகார் செய்ய உள்ளதாக தெரி விக்கிறது.
அதுபோல் திரிபுரா கம் யூனிஸ்ட் கட்சி மாநில செய லாளரும், நாடாளுமன்ற உறுப் பினருமான சங்கர் பிரசாத் தத்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திரிபுராவின் முதல் இடது முன்னணி அரசானது 1978-ஆம் ஆண்டில் மே ஒன்றாம் தேதியை சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவித்தது. ஆனால், தற் போதுள்ள பாஜக அரசானது எந்த காரணமும் இல்லாமல் அதை ரத்து செய்துள்ளது. மே தினம் தொடர்பாக எந்த நிகழ்வுகளும் அன்று நடைபெறுவதை தடுக்கும் விதமாக இந்த அரசு எடுத்துள்ள முயற்சிக்கு எதிராக, சிஅய்டியு சார்பில் சர்வதேச தொழிலாளர் ஆணையத்திடம் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-  விடுதலை நாளேடு,6.11.18

வெள்ளி, 2 நவம்பர், 2018

2019ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாள்கள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, அக்.31 அடுத்த ஆண்டின் (2019) பொது விடுமுறை நாள்கள் அடங்கிய பட்டியலை தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. இதில் 22 நாள்கள் இடம்பெற்றுள்ளன. அதன் விவரம்:-

- viduthalai, 31.10.18