திருவனந்தபுரம், மார்ச் 9- அர சுத்துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு கால விடுப்பு அளிக்கப்படுவ தைப்போல், இந்தியாவி லேயே முதல்முறையாக தனி யார் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு ஊதியத்துடன் ஆறு மாத மகப்பேறு விடுப்பு கேரள மாநிலத்தில் நடை முறைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.
அரசு அலுவலகங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பணி புரியும் பெண்களுக்கு மகப் பேறு விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் பணி புரியும் ஆசிரியைகள் உட்பட யாருக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் சிகிச்சை உதவித் தொகை வழங்கப்படுவ தில்லை.இந்த நிலையில் தனி யார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கும் சம்பளத்துடன் கூடிய மகப் பேறு விடுப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதை பரிசீலித்த கேரள அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.
தனியார் கல்வி நிறுவனங் கள் மற்றும் அரசு உதவிபெ றாத கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும் பெண் ஊழியர்களுக்கு 6 மாதங்கள் சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அனுமதித்து கேரள அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதன்படி 6 மாத சம்பளத்து டன் விடுமுறை மற்றும் சிகிச் சைக்காக ரூ.3,500ஆம் சம்பந் தப்பட்ட கல்வி நிறுவனம் வழங்க வேண்டும். நாட்டி லேயே கேரளாவில்தான் முதன் முதலாக தனியார் கல்வி நிறு வன ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்படுவது என் பது குறிப்பிடத் தக்கது.
- விடுதலை நாளேடு, 9.3.20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக