புதுடில்லி, மார்ச் 6- நடப்பு நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டியை 0.15 சதவீதம் குறைத்து, 8.5 சத வீதமாக நிர்ணயிக்கப்பட்டுள் ளது என, மத்திய தொழிலா ளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தெரிவித் துள்ளார்.
வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் களின் வருங்கால வைப்பு நிதி பணத்துக்கு ஆண்டுதோறும் வட்டி விகிதத்தை நிர்ணயித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் 8.65 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டுக்கான வட்டியை நிர்ணயிக்க, வருங் கால வைப்பு நிதி வாரிய அறக் கட்டளை கூட்டம், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க் வார் தலைமையில் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கங்க்வார் கூறுகையில்,
‘‘நடப்பு 2019-20 நிதியாண் டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டியை முடிவு செய்ய வருங்கால வைப்பு நிதி வாரிய அறக்கட்டளை கூட்டம் நேற்று நடந்தது. இதில் வட்டி விகிதம் 8.5 சதவீதமாக நிர்ண யிக்கப்பட்டது. இதனால், கூடுதலாக ரூ.700 கோடி செல வாகும்’’ என்றார்.
வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது முதலீட்டு தொகையில் 85 சதவீதத்தை கடன் சந்தையிலும், 15 சதவீ தத்தை பங்குகளில் இடிஎப் பண்டுகள் வாயிலாக முதலீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதிப்படி, பங்குகளில் ரூ.74,324 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 14.74 சதவீத லாபம் கிடைத்துள்ளது. எதிர் பார்த்த அளவுக்கு வருவாய் இல்லை.
ஏற்கெனவே நிதிப் பற்றாக் குறையில் அரசு தவித்து வரும் நிலையில், நடப்பு நிதியாண் டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி, தற்போது உள்ள 8.65 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதம் குறைத்து 8.5 சதவீத மாக நிர்ணயிக்கப்பட வாய்ப் புகள் உள்ளன என தகவல்கள் வெளியாகின. இதற்கேற்ப வட்டி விகிதம் தற்போது குறைக்கப் பட்டுள்ளது. இது 7 ஆண்டு களில் இல்லாத குறைவாகும்.
- விடுதலை நாளேடு, 6.3. 20
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக