சனி, 7 ஆகஸ்ட், 2021

ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் எப்போது..? அமைச்சர் விளக்கம்..!

 


 | 

சென்னை கிண்டியில் உள்ள கிங் கொரோனா மருத்துவமனைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் தனியார் அமைப்பு இணைந்து 16 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கொரோனா நோய்த்தடுப்பு உபகரணங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் வழங்கினர்.

அப்போது, மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நாராயணசாமி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொருளாளர் வி.கோவிந்தராஜலு ஆகியோர் உடனிருந்தனர்.

இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: “கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பது யூகம் என்று ஒரு சில மருத்துவ வல்லுநர்களும், வேறு சிலரோ, குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் இரு வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

ஆனாலும், மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குழந்தைகள் தீவிர சிகிச்சை வார்டு திறக்கப்பட்டு உள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை.

30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த களப்பணியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாகவே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்வது என்பது சாத்தியமில்லாதது.

கொரோனா பேரிடர் முழுவதும் முடிந்த பிறகு, ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு காலி பணியிடங்கள் இருக்கின்றன என்பதை கண்டறிந்து, அந்த காலிப்பணியிடங்களுக்கு ஏற்கெனவே ஒப்பந்தப் பணியில் இருக்கும் தகுதியானவர்களைக் கண்டறிந்து, அவர்களை பணியமர்த்த சட்டத்தில் இடம் இருக்கிறதா என்பதை எல்லாம் ஆராய்ந்த பிறகுதான் பணி நிரந்தரம் தொடர்பான முடிவு செய்யப்படும்” என்றார்.

தொழிலாளர் பணிக்கொடை பெறும் விதிமுறைகள்

 




இந்து தமிழ் திசை நாளேடு இணையம்

Published : 07 Sep 2014 10:51 am

Updated : 07 Sep 2014 10:51 am

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை, அதைப் பெறுவதற்கான தகுதிகள், அதிகபட்சமாக வழங்கப்படும் பணிக்கொடை, பணிக்கொடை வழங்காத நிறுவனத்தினர் மீது தொழிலாளர் துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ஆர். மாதேஸ்வரன் விளக்குகிறார்.

தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என்ன விதமான பணிப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது?

பணிக்கொடை, தொழிலாளர் காப்பீட்டுக் கழகம் மூலம் மருத்துவ வசதி போன்ற பணிப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பணிக்கொடையை பொறுத்தவரை பயிற்சி தொழிலாளர் நீங்கலாக பிற தொழிலாளர்கள் தகுதியுடையவர்களாவர். சம்மந்தப்பட்ட தொழிலாளர் பெறும் மாத ஊதியத்தை அடிப்படையாக கொண்டு, ஆண்டுக்கு 15 நாள் ஊதியத்தை பணிபுரியும் நிறுவனம் வழங்க வேண்டும். ஒரு நிறுவனத்தில் ஐந்தாண்டு தொடர்ச்சியாக பணிபுரியும் தொழிலாளர்கள் பணிக்கொடை பெற தகுதியுடையவர்களாவர்.

தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணிக்கொடை எவ்வளவு ?

பணிக்கொடையை பொறுத்தவரை ஆண்டுக்கு 15 நாள் ஊதியம் வீதம் அதிகபட்சமாக ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வரை மட்டுமே நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும். ஊழியர்களுக்கான பணிக்கொடையை காப்பீட்டு நிறுவனங்களில் செலுத்த வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர் துறை உதவி ஆணையர் நிலையில் நிறுவனங்களில் ஆய்வு செய்யப்படும். பணிக்கொடை தொழிலாளர்களுக்கு வழங்காதது கண்டறியப்பட்டால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அபராதத் தொகையை நிறுவனத்தினர் செலுத்தாதபட்சத்தில் தொழிலாளிக்கு பணிக்கொடையை பெற்றுத்தர என்னவிதமான நடவடிக்கை எடுக்கப்படும்?

தொழிலாளர் துறை உதவி ஆணையர் நிலையில் ஆய்வின்போது ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்காதது கண்டறியப்பட்டால் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத்தொகையை செலுத்த குறிப்பிட்ட கால அளவு உள்ளது. அந்த கால கெடுவுக்குள் அபராதம் செலுத்தாதபட்சத்தில், நாளொன்று ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐ) பயன் என்ன?

அனைத்து விதமான தொழில் நிறுவனங்களுக்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழக விதிமுறை பொருந்தும். அதன்படி தொழிலாளர் மாத ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். அதனுடன் நிறுவன உரிமையாளர் குறிப்பிட்ட தொகை செலுத்துவர். அந்த தொகையை தொழிலாளர் மற்றும் அவரைச் சார்ந்த தொழிலாளர் குடும்பத்தினர் பெற தகுதியுடையவர்களாவர். தொழிலாளர்கள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுதல், பெண் தொழிலாளர் மகப்பேறு காலம் போன்றவற்றுக்கு அந்தந்த நிறுவனத்தின் மூலம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை வழங்கப்படும்.

-

கேரளாவில் 24 மணி நேர வர்த்தக நிறுவனங்கள்


திருவனந்தபுரம்,பிப்.21 மும் பையை தொடர்ந்து, திருவனந்த புரம் நகரின் குறிப்பிட்ட பகுதி களில் ,24 மணி நேரமும் வர்த்தக நிறுவனங்கள் செயல்படும் சிறப் புப் பகுதிகள் அமைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அரசு தரப்பில் வெளியான அறிக்கை: திருவனந்த புரத்தில், சுற்றுலாத் துறை, காவல்துறை, தொழிலாளர் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட நிரந்தர குழு உருவாக்கப் பட்டு, அந்த குழுவின் கண் காணிப்பில், 24 மணி நேர வர்த்தக நிறுவனங்கள் செயல்படும் சிறப் புப் பகுதிகள் அமைக்கப்படும்.

இத்திட்டம், தலைநகரைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அனைத்து பெரு நகரங்களுக்கும், வரும், ஏப்ரலுக்குள் விரிவுபடுத்தப் படும்.

இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாநகராட்சிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

-விடுதலை நாளேடு 21.2. 20

வருங்கால வைப்பு நிதி வட்டி 8.5 சதவீதமாக குறைப்பு

 


புதுடில்லி, மார்ச் 6- நடப்பு நிதியாண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டியை 0.15 சதவீதம் குறைத்து, 8.5 சத வீதமாக நிர்ணயிக்கப்பட்டுள் ளது என, மத்திய தொழிலா ளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க்வார் தெரிவித் துள்ளார்.

வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் களின் வருங்கால வைப்பு நிதி பணத்துக்கு ஆண்டுதோறும் வட்டி விகிதத்தை நிர்ணயித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் 8.65 சதவீதம் வட்டி நிர்ணயிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டுக்கான வட்டியை நிர்ணயிக்க, வருங் கால வைப்பு நிதி வாரிய அறக் கட்டளை கூட்டம், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்க் வார் தலைமையில் நேற்று நடந்தது.  இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கங்க்வார் கூறுகையில்,

‘‘நடப்பு 2019-20 நிதியாண் டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டியை முடிவு செய்ய வருங்கால வைப்பு நிதி வாரிய அறக்கட்டளை கூட்டம் நேற்று நடந்தது. இதில் வட்டி விகிதம் 8.5 சதவீதமாக நிர்ண யிக்கப்பட்டது. இதனால், கூடுதலாக ரூ.700 கோடி செல வாகும்’’ என்றார்.

வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது முதலீட்டு தொகையில் 85 சதவீதத்தை கடன் சந்தையிலும், 15 சதவீ தத்தை பங்குகளில் இடிஎப் பண்டுகள் வாயிலாக முதலீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதிப்படி, பங்குகளில் ரூ.74,324 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 14.74 சதவீத லாபம் கிடைத்துள்ளது.  எதிர் பார்த்த அளவுக்கு வருவாய் இல்லை.

ஏற்கெனவே நிதிப் பற்றாக் குறையில் அரசு தவித்து வரும் நிலையில், நடப்பு நிதியாண் டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி, தற்போது உள்ள 8.65 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதம் குறைத்து 8.5 சதவீத மாக நிர்ணயிக்கப்பட வாய்ப் புகள் உள்ளன என தகவல்கள் வெளியாகின. இதற்கேற்ப வட்டி விகிதம் தற்போது குறைக்கப் பட்டுள்ளது. இது 7 ஆண்டு களில் இல்லாத குறைவாகும்.

- விடுதலை நாளேடு, 6.3. 20

தனியார் கல்வி நிறுவனங்களிலும் ஆறு மாத கால மகப்பேறு விடுப்பு: முதன்முறையாக கேரளாவில் அமல்

 

திருவனந்தபுரம், மார்ச் 9- அர சுத்துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு கால விடுப்பு அளிக்கப்படுவ தைப்போல், இந்தியாவி லேயே முதல்முறையாக தனி யார் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு ஊதியத்துடன் ஆறு மாத மகப்பேறு விடுப்பு கேரள மாநிலத்தில் நடை முறைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.

அரசு  அலுவலகங்கள், அரசு கல்வி  நிறுவனங்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி  நிறுவனங்களில் பணி புரியும் பெண்களுக்கு மகப் பேறு விடுப்பு  வழங்கப்பட்டு   வருகிறது. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் பணி புரியும் ஆசிரியைகள் உட்பட   யாருக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் சிகிச்சை உதவித் தொகை  வழங்கப்படுவ தில்லை.இந்த நிலையில் தனி யார் கல்வி நிறுவனங்களில்  பணிபுரியும் பெண்களுக்கும்  சம்பளத்துடன் கூடிய மகப் பேறு விடுப்பு வழங்க  கோரிக்கை  விடுக்கப்பட்டு வந்தது. இதை பரிசீலித்த கேரள அரசு, தனியார் கல்வி  நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது.

தனியார்   கல்வி நிறுவனங் கள் மற்றும் அரசு உதவிபெ றாத கல்வி நிறுவனங்களில்  பணிபுரியும் ஆசிரியைகள் மற்றும் பெண்  ஊழியர்களுக்கு 6 மாதங்கள்  சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு அனுமதித்து கேரள அரசு நேற்று  உத்தரவிட்டுள்ளது. இதன்படி 6 மாத சம்பளத்து டன்  விடுமுறை  மற்றும் சிகிச் சைக்காக ரூ.3,500ஆம் சம்பந் தப்பட்ட கல்வி நிறுவனம் வழங்க  வேண்டும். நாட்டி லேயே கேரளாவில்தான்  முதன் முதலாக தனியார் கல்வி நிறு வன ஊழியர்களுக்கு பேறுகால  விடுப்பு  வழங்கப்படுவது என் பது குறிப்பிடத் தக்கது.

- விடுதலை நாளேடு, 9.3.20

வருங்கால வைப்பு நிதி: வட்டித்தொகை இம்மாத இறுதிக்குள் கணக்கில் சேரும்

 

        July 22, 2021 • Viduthalai

சென்னைஜூலை 22 ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு (இபிஎப்ஓ) 2020-2021ஆம் நிதி ஆண்டுக்கான 8.5 சதவீத வட்டித்தொகை இம்மாத றுதிக்குள் ஊழியர்களின் கணக்கில் சேரும் எனத் தெரிகிறதுபிஎஃப் முதலீட்டுக்கான வட்டித் தொகையை செலுத்த உள்ளதால் 6 கோடி தொழிலாளர்கள் பயனடைவர்.

2020-2021ஆம் நிதி ஆண்டுக்கான ட்டி விகிதத்தில் (8.5%) எவ்விதமாறுதலும் செய்யப்படவில்லைகரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலானவர்கள் தங்களது பிஎஃப் சேமிப்பிலிருந்து பணத்தை எடுத்துள்ளனர்மிக அதிக அளவிலானோர் தங்களது சேமிப்பை எடுத்துவிட்டதால் வட்டி விகிதத்தை மாற்றம் செய்ய வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதுகரோனா வைரஸ் பரவல் காரணமாக 2019-2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வட்டி விகிதம் 8.50 ஆகக் குறைக்கப்பட்டது.

இது முந்தைய 7 ஆண்டுகளில் வழங்கப்பட்ட வட்டிவிகிதத்தை விட குறைவாகும்கரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க தொழிலாளர்கள் தங்கள் சேமிப்புத் தொகையிலிருந்து திரும்ப செலுத்த வேண்டியிராத தொகையை முன்பணமாக பெற அனுமதி அளிக்கப்பட்டது.

இதன்படி தங்களது சேமிப்பில் 75 சதவீதஅளவுக்கு பணத்தை எடுக்க அனுமதிக்கப்பட்டதுஇபிஎஃப்ஓ-வில்பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 7.56 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.