பின்னலாடை தொழிலாளர்களுக்கு வசதிகள்
பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு திட்டம்
திருப்பூர், அக்.12 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பிரதிநிதிகள், திருப்பூரில் நேற்று ஆய்வு நடத்தி, தொழில் அமைப்பு, தொழிற் சங்கத்தினருடன் கலந்துரையாடினர்.திருப்பூரில், உள் நாட்டு, ஏற்றுமதி ஆடை தயாரிப்பு; ஜாப் ஒர்க் நிறுவனங்கள் ஏராளம் உள்ளன.
பின்னலாடை துறை சார்ந்து, குறு, சிறு தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.ஆடை உற்பத்தி சார்ந்த குறுந் தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச சம்பளம், பணி பாதுகாப்பு உட்பட அனைத்து அம்சங்களும் கிடைக்க செய்ய, சர்வதேச தொழிலாளர் அமைப்பு (அய்.எல்.ஓ.,) திட்டம் வகுத்துள்ளது.
இந்நிலையில், பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு பிரதிநிதிகள் பல்லவி மான்சிங், பாரதி பிர்லா இருவரும் நேற்று திருப்பூர் வந்தனர். ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் மற்றும் ஏ.அய்.டி.யு.சி., பனியன் சங்க நிர்வாகிகளை சந்தித்து, தொழில் நிலை, தொழிலாளர் நிலைகள் குறித்து கலந்துரையாடினர்.
பின்னலாடை துறை குறுந்தொழிலாளர்களை சந்தித்து, பணிச்சூழல், உரிய சம்பளம் கிடைக் கிறதா, பணி பாதுகாப்பு, பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர்.
இது குறித்து, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:ஆடை உற்பத்தி துறை சார்ந்து, ஏராளமான குறு, சிறு தொழிலாளர்கள் உள்ளனர். இந்த தொழிலாளர்களை அடுத்த நிலைக்கு உயர செய்வது, விதிகள்படி, தொழிலாளர்களுக்கு அனைத்து அம்சங்களும் கிடைக்க செய்யவதற்காக, அய்.எல்.ஓ., திட்டம் வகுத்துள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தற்போது அந்த அமைப்பு பிரதிநிதிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.தொழிலாளர், தொழில்முனைவோருக்கு, ஒன்பது மாதங்கள், குறுந்தொழிலாளர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும் திட்ட மிட்டுள்ளனர்.
இதற்காக, ஏற்றுமதியாளர் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளவும் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அனைத்து தொழில் அமைப்புகள், தொழிற்சங்கத்தினரையும் இதில் ஈடுபடுத்த உள்ளனர்.
ஆடை உற்பத்தி துறையினர், தற்போது, தொழிலாளர் நலன், பாதுகாப்பு சார்ந்த பல்வேறு சான்றுகள் பெறவேண்டியுள்ளது. எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, ஒரே சான்று பெறும் நடை முறையை உருவாக்கவும், அய்.எல்.ஓ., பிரதிநிதிகளிடம் கருத்து தெரிவித்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
- விடுதலை நாளேடு, 12.10.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக