ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராடத் தடை


லக்னோ, ஏப். 2 உத்தரப்பிரதேசத்தில் மாநில பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்களும், ஊழியர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அம்மாநில பாஜக அரசு தடை விதித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்கள் 18 உள்ளன. அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உள்ளன. இந்நிலையில், மாநிலப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிபவர்களை, எஸ்மா எனப்படும் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் ஆதித்யநாத் அரசு கொண்டுவந்துள்ளது.
இதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களோ, ஊழியர்களோ வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தடை செய்யப் பட்டுள்ளது. மேலும், இதனை மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், வாரண்ட் இல்லாமல் அவர்களை கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
 -விடுதலை,2.4.17

109 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் வழங்கினார்



சென்னை,ஏப்.2 அம்பத்தூர் எஸ்.ஆர்.எம். மேல் நிலைப் பள்ளியில் விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான நியமன ஆணை வழங்குதல், பல்வேறு கல்வித் திட்டங்கள் தொடக்க விழா நேற்று (1.4.2017) நடந்தது. இதில் பங்கேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 109 பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 13 மாவட்டங்களில் ரூ. 36 கோடியே 14 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 36 கூடுதல் பள்ளிக் கட்டடங்கள்; கரூர் மாவட்டத்தில் ரூ. 3 கோடியே 25 லட்சத்து 54 ஆயிரம் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் பள்ளிக் கட்டடங்கள். அனைவருக்கும் இடை நிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 21 மாவட்டங்களில் 236 கோடியே 92 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 140 பள்ளிக் கட்டடங்கள்.
286 பள்ளிகளில் 6 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப் பட்டுள்ள மெய்நிகர் வகுப்பறைகள் என 284 கோடியே 9 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப் பீட்டிலான பள்ளிக் கல்வித் துறை கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர், பெரம்பலூர், தருமபுரி ஆகிய மூன்று மாவட்டங்களில் தொடங்கப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி,பயிற்சி நிறுவனங்களுக்கு ரூ. 10 கோடியே 5 லட்சம் செலவில் கட்டடங்கள் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
 -விடுதலை,2.4.17

போராட்டங்களில் சங்கங்கள் ஒன்றிணையக் கூடாதாம்!



 தொழிலாளர்களை அச்சுறுத்தும் மத்திய அரசு நிறுவனம்
டில்லி, ஏப்.3- இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவன மான பிஎஸ்என்எல் நிறுவனத் தின் வெவ்வேறு  தொழிற்சங் கத்தினர் ஒன்றிணைந்து போராடக் கூடாது என்று மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கு நிர்வாகத் தின் சார்பில் அளித்துள்ள அறி விக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
கடந்த ஓராண்டாக பணி புரிந்து வருகின்ற  சங்கங்களின் அங்கீகாரம்குறித்த சரிபார்ப்புப் பணிகள் முடிந்துள்ளன. அதன் படி, நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் நிர்வாகம் சாராத பணியாளர்கள் சங்கத் துக்கு அங்கீகாரம் அளிக்கப் பட்டுள்ளது.
இதன்பிறகு, நிர்வாக அலு வலர்கள் சங்கத்தைச் சேர்ந்த வர்களும், பணியாளர்கள் சங் கத்தைச் சேர்ந்தவர்களும் அவர வர்களுக்குரிய விதிமுறை களைக் கொண்டு தனித்தனியே இயங்கிடவேண்டும்.
அண்மைக்காலமாக இரு அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு  செயல்பட்டுவருவது தெரிய வந்துள்ளது. ஆகவே, பின்கூறப்பட்டுள்ளவற்றை கவனத்தில் கொள்ள வேண் டும்.
பிஎஸ்என்எல்லில் பணி யாற்றுவோர் பிரதிநிதிகளுக் கான விதிமுறைகளின்படி,  பிஎஸ்என்எல் நிர்வாகம் சாராத பணியாளர்கள் சங்கம் என்றும், பிஎஸ்என்எல் நிர்வாக அலு வலர்கள் சங்கம் என்றும் 2014ஆம் ஆண்டு விதிகளின் கீழ் உள்ளவர்கள் ஆவர்.
நிர்வாக அலுவலர்கள் சங் கத்தின்கீழ் உள்ளவர்கள்  பணி யில் தங்கள் சங்க உறுப்பினர் களிடம் சேவை ஆர்வத்தை முன்னெடுப்பவர்களாக இருக்க வேண்டும்.
நிர்வாக அலுவலர்கள் சங்கம், நிர்வாகம் சாராத பணி யாளர்கள் சங்கத்துடன் சங்கப் பணிகளிலும், பிரச்சினைகளி லும் கைகோர்க்கக் கூடாது. இரு அமைப்புகளும் எந்தப் பிரச்சினைகளிலும் ஒன்றி ணைந்து போராட்டத்தை முன் னெடுக்கக் கூடாது.
இரு சங்கங்களும் தங்கள் பணியாளர்களின் பிரச்சினை களை தனித்தனியே கையாண்டு கொள்ள வேண்டும் என அறி வுறுத்தப்படுகிறார்கள். இன் னும் சொல்லப்போனால், நிர் வாக அலுவலர்களுக்கான பிரச் சினைகளில் பணியாளர்கள் சங்கத்தினர் தலையிடக்கூடாது. பணியாளர்களுக்கான பிரச்சி னைகளில்  நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் தலையிடக்கூடாது.
நிர்வாக அலுவலர்கள் தரப்பும், நிர்வாகம் சாராத பணியாளர்கள் தரப்பும் என ஒருவர் பிரச்சினையில் மற்றவர் தலையிடாமல் விலகியே இருக்கவேண்டும்.
இவ்வாறு தென்னக பிராந் தியத்துக்கான துணை பொது மேலாளர் ஏ.கே.சின்கா குறிப் பிட்டுள்ளதாக அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில காலமாகவே தொழிலா ளர்கள், அலுவலர்கள் சங்கத் தினரை பிரித்தாளும் சூழ்ச்சி யுடன் மத்திய அரசு  அச்சுறுத் தும் வகையில் உள்ள பி.எஸ்.என்.எல் நிர்வாகத்தின் போக்கினை இருசங்கத்தினரும் கடுமையாக கண்டித்துள்ளனர்.
-விடுதலை,3.4.17

ரூ.2 கோடியில் ரயில்வே தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள்


ஜோலார்பேட்டை, ஏப்.3 ஜோலார்பேட்டையில் ரயில்வே தொழிலாளர்களுக்கு ரூ.2 கோடியில் கட்டப்பட்ட குடியிருப்பை தெற்கு ரயில்வே பொது மேலாளர் வஷிஸ்டா ஜோரி அண்மையில் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு ஜோலார் பேட்டை ரயில்வே உதவி கோட்டப் பொறியாளர் முகமது அஸ்லம் தலைமை வகித்தார். முதுநிலை பகுதி பொறியாளர் பி.கணேசன் முன்னிலை வகித் தார். ரயில் நிலைய மேலாளர் பி.பழனிசாமி வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப் பாளராக தெற்கு ரயில்வே பொது மேலாளர் வஷிஸ்டா ஜோரி கலந்து கொண்டு, குடியி ருப்புக் கட்டடத்தையும், கால் பந்து விளையாட்டு மைதானத் தையும் திறந்து வைத்தார். விழாவில், சென்னை கோட்ட மேலாளர் அனுபம் சர்மா, உள்பட ரயில்வே அதிகாரிகள் ஏராளமா னோர் கலந்து கொண்டனர். ரயில் நிலைய உதவி மேலாளர் லியோ டால்ஸ்டாய் நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் வஷிஸ்டா ஜோரி கூறுகையில், 'மங்களூரு, திருப்பதி விரைவு ரயில்கள் ஜோலார்பேட்டையில் நின்று செல்லவும், இந்த ரயில் நிலை யத்தில் பயணிகளுக்கு பொதுக் கழிப்பறை கட்டித்தரவும் நட வடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
-விடுதலை,3.4.17

.