சனி, 2 ஜூலை, 2016

பெல்’ தேர்தல்: ஆறு சங்கங்களுக்கு அங்கீகாரம்


திருச்சிராப்பள்ளி, ஜூன் 30 -திருச்சி திருவெறும்பூரில் உள்ள பாரத் ஹெவி எலெக்ட் ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவன தொழிற்சங்க அங்கீ காரத் தேர்தலில் சிஅய்டியு உள்ளிட்ட 6 சங்கங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பெல் நிறுவனத்தில் அங் கீகரிக்கப்பட்ட தொழிற்சங் கங்களை தேர்வு செய்ய 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். அதன் படி, இங்கு கடந்த திங்களன்று தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. சிஅய் டியு, ஏஅய்டியுசி, அய்என்டி யுசி, தொமுச, அண்ணா தொழிற்சங்கம்,
அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன், பிஎம்எஸ், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், பிஎன் எஸ்யு, பிபியு ஆகிய 10 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. தேர்தலில் மொத்தம் 5594 வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவு முடிந்ததும், அன்றிரவே வாக்குகள் எண் ணும் பணி துவங்கியது.
இதில், தொமுச 891 வாக் குகளும், அம்பேத்கர் எம்ப்ளாயிஸ் யூனியன் 814 வாக்கு களும், அண்ணா தொழிற் சங்கம் 730 வாக்குகளும் பெற் றன. சிஅய்டியு 655 வாக்கு களும், பிஎம்எஸ் 634 வாக்கு களும், ஏஅய்டியுசி 559 வாக்கு கள் பெற்றன. 10 சதவிகித வாக்குகளைப் பெறும் தொழிற்சங்கங்கள் அங்கீகாரம் பெறும் என்ற அடிப்படையில்,
மேற்கண்ட 6 தொழிற்சங் கங்களும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களாக அறிவிக் கப்பட்டன. இதன்மூலம் தொழிலாளர்கள் தரப்பில், இந்த 6 சங்கங்கள் மட்டுமே பெல் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ள முடியும்.
-விடுதலை,30.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக