நெய்வேலி, ஜூலை 17 பணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழி லாளர்கள் நெய்வேலியில் ஆர்ப் பாட்டம் நடத்தினர். ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி குடும்பத்துடன் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் அறிவித்தனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒப்பந்த தொழிலாளர்களை என்.எல்.சி. நிர்வாகம் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், இந்த கோரிக்கையை நிறை வேற்ற மத்திய, மாநில அரசு கள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலியில் உள்ள அம் பேத்கர் சிலை முன்பு அரை நிர்வாண போராட்டம் நடத்தப் போவதாக என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.
அதன்படி போராட்டம் நடத் துவதற்காக நேற்று (16.7.2016) ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் அம்பேத்கர் சிலை முன்பு கூடினர். இது பற்றி தகவல் அறிந்ததும் நெய்வேலி காவல் துறையினர் விரைந்து சென்று, ஜீவா ஒப்பந்த தொழிலாளர் களிடம் அரை நிர்வாண போராட் டத்துக்கு அனுமதி கிடையாது என்றனர்.
இதையடுத்து கோரிக்கை களை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தினர். இதற்கு சங்க சிறப்பு தலைவர் ராம மூர்த்தி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சிறப்பு செயலாளர் சேகர் கூறு கையில், என்.எல்.சி. நிறுவனத் தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாகவே பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்தும் கூட, என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வில்லை. கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றால், காவல் துறை தடுக்கிறது.
எனவே ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு ஆதரவாக தமிழக அரசும், மத்திய அரசும் விரைந்து தலையிட்டு ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந் தரம் செய்ய வேண்டும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வருகிற செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடக்க உள்ளது. இந்த போராட்டத்தில் என்.எல்.சி.யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களும், நிரந்தர தொழிலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15ஆம் தேதி நெய் வேலியில் என்.எல்.சி. சார்பில் நடைபெறும் சுதந்திர தின விழாவை புறக்கணித்து ஒப் பந்த தொழிலாளர்கள் குடும்பத் துடன் ரயில் மறியல் போராட் டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
-விடுதலை,17.7.16