வியாழன், 12 மே, 2016

தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் தொழிலாளர்கள்தான்


தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள்
தொழிலாளர்கள்தான் : சென்னை தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவு


சென்னை, மே 11_ 
தகவல் தொழில்நுட்ப நிறு வனங்களில் பணியாற்றுப வர்கள் தொழிலாளர்கள் என்ற வரன்முறைக்குள் வருகிறார்கள் என்று சென் னை தொழிலாளர் தீர்ப் பாயம் உத்தரவிட்டுள்ளது.  அண்ணனூரைச் சேர்ந்த கே.ரமேஷா என்பவர் தொழிலாளர் தீர்ப்பாயத் தில் தாக்கல் செய்த மனு வில் கூறியிருப்பதாவது:
கடந்த 2009இல் துரைப் பாக்கத்தில் உள்ள எச்.சி. எல் நிறுவனத்தில் மூத்த சர்வீஸ் புரோக்கிராமர் என்ற பணியில் வேலைக்கு சேர்ந்தேன். பின்னர் 2010 பிப்ரவரி 26இல் பணி நிரந்தரம் செய்யப்பட்டேன். எனக்கு சம்பளம் உள் ளிட்ட பயன்கள் அதிகரிக் கப்பட்டன.
அதன் பிறகு 2011இல் எனக்கு சிறந்த பணி செய்வ தற்கான சான்றிதழும் நிறு வனம் வழங்கியது. இந் நிலையில், கடந்த 2013 ஜனவரி 22இல் என்னை பணி நீக்கம் செய்து நிறு வனம் உத்தரவிட்டது. எனது திறன் மேம்பாட்டில் திருப்தியில்லை என்ற காரணம் கூறி என்னை பணி நீக்கம் செய்துள்ளனர். பணி நீக்கத்திற்கு முன்பு எனக்கு விளக்க அறிவிக்கை அனுப்பவில்லை. மேலும், எந்த விசாரணையும் நடத் தப்படவில்லை. எனவே, என்னை பணி நீக்கம் செய் ததை ரத்து செய்து உத்தர விட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. வழக்கு முதலாவது தொழிலாளர் தீர்ப்பாயத்தில் நீதிபதி எஸ். நம்பிராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எச்.சி.எல் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வாதிடும் போது, மனுதாரர் தொழிலாளர் என்ற வரன் முறைக்குள் வரவில்லை. அதனால் தீர்ப்பாயத்தில் முறையிட முடியாது என்று வாதிடப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:  தொழிற்சாலைகளில் பணி யாற்றும் பயிற்சிபெற்றவர் கள், தொழில்நுட்ப பணி யாளர்கள்,
கிளார்க்குகள் உள்ளிட்டோர் தொழிலா ளர்கள் என்ற வரன்முறைக் குள் வருகிறார்கள். மனு தாரர் சூப்பர்வைசர் என்ப தால் அவர் இந்த பிரிவுக் குள் வரவில்லை என்று நிறுவனம் தரப்பில் கூறப் பட்டுள்ளது. திறன் பயிற்சி பெற்ற தகவல் தொழில் நுட்ப பணியாளர்களும் தொழிலாளி என்ற வரன் முறைக்குள்ளேயே வரு கிறார்கள். மனுதாரரும் திறன் பயிற்சி பெற்றவர் என்பதால் அவரும் தொழி லாளராகவே கருதப்படு வார்.
எனவே, உரிய விளக்கம் கேட்காமல் திறன் மேம் பாடு சரியில்லை என்ற கார ணத்தைக் கூறி மனுதாரரை பணி நீக்கம் செய்துள்ளது. அவரது நடத்தையில் திருப்தியில்லை என்று நிறு வனம் கூறவில்லை. எனவே, மனுதாரரை பணி நீக்கம் செய்த உத்தரவு ரத்து செய் யப்படுகிறது. அவரை மீண் டும் பணியில் சேர்க்க வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட்ட நாளிலிருந்து மீண்டும் பணியில் அவர் சேரும்வரைக்கான நிலுவை சம்பளத்தை அவருக்கு நிறு வனம் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தர வில் கூறியுள்ளார்.
-விடுதலை,11.5.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக