புதன், 4 மே, 2016

(100நாள் வேலை)உயர்த்தப்பட்ட கூலி 5 ரூபாயை பிரதமருக்கு அனுப்பிய கிராம மக்கள்


ராஞ்சி, மே 4
_ மகாத்மா காந்தி ஊரக தேசிய வேலை யுறுதி திட்டத்தில், தினக் கூலியாக 162 ரூபாய் வழங் கப்பட்டு வந்தது.
பிரதமர் மோடி தலை மையிலான தேசிய ஜன நாயக கூட்டணி ஆட்சி யில் இந்த கூலியில் அய்ந்து ரூபாய் உயர்த்தப் பட்டு தற்போது 167 ரூபாய் தினக்கூலியாக வழங்கப்பட்டு வருகிறது.
தற்போதைய விலை வாசி நிலவரத்தை கருத் தில் கொள்ளாமல் மகாத்மா காந்தி வேலையுறுதி திட் டத்தின்கீழ் பணியாற்றும் ஏழை மக்களுக்கு வெறும் அய்ந்து ரூபாய் கூலி உயர்வை அறிவித்துள்ள மத்திய அரசின் முடிவு அடித்தட்டு மக்களின் மனங்களில் பெரும் ஏமாற் றத்தை விதைத்துள்ளது.
இந்த ஏமாற்றத்தை எதிர்ப்பாக மத்திய அர சுக்கு தெரிவிக்க ஜார் கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, இங்குள்ள லட்டேஹர் மாவட்டம், மனிக்கா பகுதியைச் சேர்ந்த கிராம சுயராஜ்ஜிய தொழிலாளர் சங்கத் தைச் சேர்ந்தவர்கள் ஒரு நூதனமுறையை தொழி லாளர்கள் தினமான நேற்று முன்தினம் கையாண்ட னர்.
மத்திய அரசின் இந்த சொற்ப கூலி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேர ணியாக சென்ற தொழிலா ளர்கள் தங்களது கூலி உயர்வுத் தொகையான அய்ந்து ரூபாயை ஒரு உறையில் இட்டு, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன் றையும் எழுதி அனுப்பியுள் ளனர்.
மத்திய அரசின் செல வினங்கள் அதிகமாக இருப் பதால், அரசு நிதி நெருக் கடியில் இருப்பதாக இந்த கூலி உயர்வின்மூலம் நாங் கள் அறிய வருகிறோம். இல்லாவிட்டால் எங்க ளுக்கு 50 ரூபாய் கூலி உயர்வு அளித்து தினக் கூலியாக 212 ரூபாயை மத்திய அரசு அறிவித்து இருக்கும்.
மத்திய அரசின் இந்த நிதி நெருக்கடியை கருத் தில் கொண்டு, எங்களால் இயன்ற பங்களிப்பாக இந்த அரசால் உயர்த்தி வழங்கப்பட்ட தினக் கூலியான அய்ந்து ரூபாயை உங்களுக்கு (பிரதமர்) திருப்பியனுப்பி வைத்துள் ளோம்.
இதன்மூலம் இந் தப் பணத்தை கொண்டு உங்களது நிறுவனங்கள், நண்பர்கள் மற்றும் பணி யாளர்களை நீங்கள் சந் தோஷப்படுத்துவீர்கள் என நம்புகிறோம். -இப் படிக்கு தொழிலாளர்கள், என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே வாசகங்களுடன் இந்த தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த நூற் றுக்கணக்கான ஆண்க ளும், பெண்களும் பிர தமர் மோடிக்கு எழுதப் பட்ட கடிதத்தை ஒரு உறையிலிட்டு, கூடவே அய்ந்து ரூபாயையும் இணைத்து டில்லியில் உள்ள பிரதமரின் அலுவ லகத்துக்கு அனுப்பி வைத் துள்ளனர்.

-விடுதலை,4.5.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக