புதிய வேலை வாய்ப்புகளை குறிப்பாக உற்பத்தித் துறையில் உரு வாக்காமல், கோடிக்கணக்கான திறன் மிக்கவர்களை கொண்டுவருவது என்பது தீர்வாகாது என்று டில்லி அய்.அய்.டியைச் சேர்ந்த ஜயன் ஜோஸ் தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.
அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களையே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீண்டும் கையாள்கிறது. விரிவாக அறிவிப்பு வெளியாகிறது. ஆனால், திட்டத்தின் நோக்கம் குறைந்துள்ளது. புதிய இலக்கின்படி, 2022 ஆண்டுக் குள்ளாக 40 கோடி (400 மில்லியன்) அளவில் திறமையாளர்கள் உருவாக் கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள் ளது.
திறமைமிக்கவர்களுக்கான இடை வெளியைக் குறைப்பதற்கு இந்த இலக்கு போதுமானதாக இருக்கும் என்று அரசு கருதுகிறது. அதோடு கூடுதலானவர்கள் பணிவாய்ப்பைப் பெறுவதிலும் வாய்ப் பாக இருக்கும் என்றும் கருதுகிறது. ஆனால், கோடிக்கணக்கிலான திறமை யானவர்களுக்கு பணிவாய்ப்பை உறுதிப் படுத்தி உள்ளதா? ஆனால், இதுவரை அதை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படவில்லை.
அய்.டி.அய். போன்ற தொழிற்பயிற்சி நிறுவனங்களில் அல்லது திறன் மேம் பாட்டு மய்யங்களில் வழமையான பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டுள் ளது. மத்திய அரசின் தொழிலாளர் பணியகத்தின் சார்பில் 2014ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டு இந்த ஆண்டு வெளியான புள்ளிவிவரங்களின்படி, வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் விழுக்காடு ஒட்டு மொத்தமாக 14.5 ஆகும். அதில் 2.6 விழுக்காட்டளவில் திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்படாமல் உள்ளனர்.
அப்படித் திறமையுள்ளவர்கள் குறைந்துவருவது என்பது வேலை வாய்ப்பின்மைக்கு காரணமாக அமைந்து விடுகிறது எனும்போது, கைவேலைகளாக உள்ள தோல்தொழில், கட்டடங்களில் தண்ணீர்க்குழாய் அமைத்தல், சுற்றுலா அல்லது போக் குவரத்துகளில் வாகனங்கள் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திறன்களை வெளிப்படுததக்கூடிய பணிகள் அனைத்திலும் வேலைவாய்ப்பின்மை இருந்துவருகிறது.
அதிலும் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால், நான்கில் ஒரு பங்கினராக பொறியியல் பட்டயம் பெற்றவர்களில் கட்டடவியல் மற்றும் கணினி தொடர்பான கல்வி முடித் துள்ளவர்கள் வேலைவாய்ப்புகளின்றி இருக்கின்றனர். ஆடை உற்பத்தித் துறைகளில் பயிற்சி பெற்றவர்கள் 17 விழுக்காட்டளவிலும், எந்திரங்களை இயக்குவதில் தேர்ச்சி பெற்ற திறன் மிக்கவர்களில் 14 விழுக்காட்டளவிலும் பணிவாய்ப்பு ஏதுமின்றி உள்ளனர்.
டில்லியில் உள்ள அய்.அய்.டி. நிறுவனத்தைச் சேர்ந்த ஜயன் ஜோஸ் தாமஸ் கூறுகையில், இந்தியாவில் உள்ள வேலைவாய்ப்பு சூழ்நிலைகுறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளார். தற் பொழுது இருக்கின்ற தொழில்களில் திறமையானவர்களிடையே இடைவெளி உள்ளது.
தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் கூறுவது என்ன வெனில், திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு அளித்திட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். ஆகவே, திறமைன வர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதன்மூலம் தொழில்துறைக்கு உதவியதாக இருக்கும். அதேபோல், தொழில் வளர்ச்சிக் கொள் கையில் அரசு முன்னுரிமை வழங்க வேண்டும். அதன்மூலமே கோடிக்கணக் கானவர்களுக்கு உரிய அளவில் பணிவாய்ப்பு உருவாகும் என்றார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் தொழில்துறைகளில் 1.2 கோடி பேர் இணைந்து வருகிறார்கள் என்று கூறப் படுகிறது. ஆனால், இருபதாண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சிகுறித்து தேசிய மாதிரி புள்ளிவிவர நிறுவனத் தின் ஆய்வு மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் 55 இலட்சம்பேர் மட்டுமே புதிதாக பணிகளில் சேர்ந்து வருகின்றனர் என்று தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர் பணியகம் அளித் துள்ள தகவல்களின்படி, உயர்கல்வி பெற்றவர்களிடையே வேலைவாய்ப் பின்மை அதிகரித்துக்கொண்டு வரு கிறது. ஒட்டு மொத்தமான வேலை வாய்ப்பின்மையில் 15 வயதுக்கு மேற் பட்டவர்களில் 2.6 விழுக்காடாகவும், முதுநிலை பட்டதாரிகளில் 8.9 விழுக் காடாகவும், பட்டதாரிகளில் 8.7 விழுக் காடாகவும், பட்டயம் அல்லது சான் றிதழ் கல்வி பெற்றவர்களில் 7.4 விழுக் காடாகவும் இருக்கிறது.
படித்தவர்கள் நல்ல ஊதியத்தை எதிர்பார்க்கிறார்கள், அதனாலேயே நல்ல ஊதியத்துடன் கூடிய வேலையைத் தேடிக்கொண்டு நீண்டகாலமாக வேலையில்லாமல் இருந்துவருகிறார்கள்.
தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களாக தேர்வு செய்யப்படும்போது போதிய பயிற்சி இல்லாதவர்களாகவும், போதுமான அனுபவம் இல்லாதவர்களாகவும் இருப்பவர்கள் பணியில் அமர்த்தப் படுகிறார்கள். அய்.டி.அய். படித்தவர் களில் கூட ஊதியப் பிரச்சினைகளால் பணிகளில் அமர்த்தப்படுவதில்லை.
திறமையானவர்கள்குறித்து கலி போர்னிய பல்கலைக்கழகத்திலிருந்து சாந்தா பார்பராஸ் ஆஷிஷ் மேத்தா திறமை இடைவெளிப் பிரச்சினை குறித்து ஆய்வு செய்துள்ளார். அவரு டைய ஆய்வு முடிவின்படி, திறமை குறித்த அளவீடு என்பதே திறமையைப் பொருத்ததாக இல்லாமல் வணிகமாகி விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மாதிரி புள்ளிவிவர நிறு வனத்தின் ஆய்வு அறிக்கையின்படி, சராசரியாக நகர்ப்புறங்களில் பட்டயக் கல்வி பெற்றவர்களில் ஆண்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.524 ஊதியமும், பெண்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.391 ஊதியமும் வழங்கப்பட்டுவருகிறது. பள்ளிக்கல்வி பயின்றவர்களில் 45 விழுக் காட்டினருக்கு மேல் ஆண்களாகவும், 28 விழுக்காட்டினருக்கு மேல் பெண்களாகவும் இருக்கிறார்கள்.
பட்டதாரிகளுடன் பட்டயக்கல்வி பெற்றவர்களை ஒப்பிடுகையில் 56 விழுக்காடு ஆண்கள் குறைவாகவும், 54 விழுக்காடு பெண்கள் குறைவாகவும் உள்ளனர்.
இந்த புள்ளிவிவரத்தகவல்கள் பணி வாய்ப்பு அளிப்பவர்களாக இருப்ப வர்கள் தங்களின் பணியாளர்களை எப்படித் தேர்வு செய்கிறார்கள் என் பதை உணர்த்துபவையாக இருக் கின்றன. மேலும், கல்வித்துறையில் எதைத் தேர்வு செய்வது என்பதில் குடும்பத்தினருக்கு வழிகாட்டுபவை யாகவும் இருக்கின்றன.
_ டைம்ஸ் ஆப் இந்தியா, 20.7.2015
-விடுதலை ஞா.ம.25.7.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக