ஒடிசாவில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் உயர்வு
ஒடிசா, ஜூலை 26_ தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ஒடிசா அரசு உயர்த்தியுள் ளது. இதன்மூலம் சுமார் 50 லட்சம் தொழிலாளர் கள் பலன் பெறுவர்.
ஒடிசா, ஜூலை 26_ தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ஒடிசா அரசு உயர்த்தியுள் ளது. இதன்மூலம் சுமார் 50 லட்சம் தொழிலாளர் கள் பலன் பெறுவர்.
இது தொடர்பான அறிவிக்கையை தொழி லாளர் மற்றும் இஎஸ்அய் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
நாளொன்றுக்கு...
திறன்பெறாத, பாதி திறன் பெற்ற, திறனுள்ள, மிகுந்த திறனுள்ள என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு முறையே நாளொன்றுக்கு ரூ.200, ரூ.220, ரூ.240, ரூ.260 என குறைந்தபட்ச ஊதி யம் நிர்ணயிக்கப்பட்டுள் ளதாக அறிவிக்கை சுட் டிக் காட்டியிருக்கிறது.
இந்த ஊதிய உயர்வின் மூலம் மாதந்தோறும் ரூ.1,500 அதிகமாகக் கிடைக்கும். இதற்கு முன் னர் மேற்கண்ட 4 பிரிவு களைச் சேர்ந்த தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நாளொன்றுக்கு ரூ.150, ரூ.170, ரூ.190, ரூ.205 என நிர்ணயிக்கப்பட் டிருந்தது.
இதே குறைந்தபட்ச ஊதியத்தை நாளொன் றுக்கு ரூ.137-இல் இருந்து ரூ.160-ஆக மத்திய அரசு முன்னதாக உயர்த்தியிருந் தது. தொழிலாளர் ஒருவர் நாள்தோறும் அரை மணி நேரம் ஓய்வு போக, 8 மணிநேரம் வேலை பார்ப் பார். இந்த ஊதிய உயர்வு மூலம் தனியார் நிறு வனங்களில் பணிபுரியும் சுமார் 50 லட்சம் தொழி லாளர்கள் பலன் பெறுவர் என்று ஒடிசா கட்டட மற்றும் பிற கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் சுபாஷ் சிங் தெரிவித்தார்.
மாநில அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 2 லட்சம் தாற்காலிகப் பணியாளர்களுக்கும் இந்த ஊதிய உயர்வு கிடைக்கும்.
-விடுதலை,26.7.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக