வியாழன், 30 ஜூலை, 2015

இரவு நேர பணிச்சுமை காரணங்களால் குறைபாடு

இரவு நேர பணிச்சுமை காரணங்களால்
90 சதவீதத்தினருக்கு விட்டமின் டி குறைபாடு
சென்னை, ஜூலை 30_ இந்தியாவில் இரவு நேர வேலை, பணிச்சுமை போன்ற காரணங்களால் மக்கள் தொகையில் 80 _ 90 சதவீதத்தினருக்கு விட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது என ஆய்வில் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கிறது.
இதனால் எலும்பு வியாதிகள் மட்டுமின்றி, மாரடைப்பு, உடல் சம்பந்தமான கோளாறு, நீரிழிவு, புற்றுநோய் போன்ற பெரிய பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது என ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது.
எனவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்திய மருத்துவர்கள் சங்கம், விழித்தெழு மற்றும் ஒளிர்ந்திடு (RISE AND SHINE) பிரச்சாரத்தை நடத்துகிறது. இதன் ஓர் அங்கமாக, சென்னையில் தொடர் மருத்துவ கல்வி முகாம் (CME) நிகழ்வை இந்திய மருத்துவர்கள் சங்கம் நடத்தியது. 70க்கும் மேற்பட்ட பிரபலமான டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மேக்னா (MAGNA CODE) உடல் பருமன் நீரிழிவு மற்றும் சுரப்பியல் நிபுணர் டாக்டர் ஜி.சண்முக சுந்தர் பேசுகையில்:- விட்டமின் டி குறைபாடு ஒரு புதிய நோய் அல்ல. இது அனைத்து வயதினரிடமும் குறிப்பாக கருவுற்றுள்ள பெண்கள், பாலூட்டும் பெண்கள், 6 மாதம் முதல் அய்ந்து வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களிடம் காணப் படுகிறது.
சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தாமல், விட்டமின் டி-_யை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்தால் தேவையற்ற பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித் துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் விட்டமின் டி குறைபாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் எழுச்சி பிரச்சாரத்தை தீவிரப்படுத்த இந்திய மருத்துவ சங்கம் (IMA) திட்டமிட் டுள்ளது என இதன் தலைவர் டாக்டர் ஏ.மார்த் தாண்ட பிள்ளை மற்றும் கவுரவ பொதுச் செயலாளர் டாக்டர் கே.கே-.அகர்வால் ஆகியோர் தெரிவித்துள்ளனர். வைட்டமின் டி குறைபாடு உலகிலேயே தெற்கு ஆசிய பிராந்தியத்தில் தான் அதிகம் காணப் படுகிறது என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன என டாக்டர் அம்பிரிஷ் டாக்டர் சி.ஆறுமுகம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
- விடுதலை,30.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக