ஞாயிறு, 5 ஜூலை, 2015

மத்திய அரசு வேலையில் சேர மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு சலுகை: புதிய அறிவிப்பு

      
புதுடில்லி, ஜூன் 30_-        மத்திய அரசு வேலையில் (ஏ மற்றும் பி குரூப்) சேரு வதற்கான வயது வரம்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இப்போது 5 ஆண்டுகள் சலுகை அளிக்கப்படுகி றது. அவர்கள் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியி னராக இருந்தால் 10 ஆண்டுகளும், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 8 ஆண்டுகளும் சலுகை அளிக்கப்படுகிறது.
சி மற்றும் டி குரூப்பில் வேலைவாய்ப்பு அலு வலகம் மூலம் தேர்வு செய்யும்போது 10 ஆண்டு சலுகை அளிக்கப்படுகிறது.        இப்போது இதுதொடர் பாக மத்திய அரசு கூடுதல் சலுகைகளை அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சி துறை வெளியிட்டுள்ள உத்தர வில் கூறியிருப்பதாவது:-        கண் பார்வையற்ற வர்கள் அல்லது பார்வை குறைபாடு உள்ளவர்கள், கேட்கும் திறன் குறைபாடு உள்ளவர்கள், தானே இயங்குவதில் குறைபாடு உள்ளவர்கள் மத்திய அரசின் வேலைக்கு நேர டியாக தேர்வு செய்யப்ப டும்போது உச்சவயதுக் கான வரம்பில் 10 ஆண்டு சலுகை அளிக்கப்படுகி றது. அவர்களில் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடி யினராக இருந்தால் 15 ஆண்டுகளும், இதர பிற் பட்ட வகுப்பினராக இருந் தால் 13 வருடங்களும் சலுகை அளிக்கப்படும். மத்திய அரசின் அனைத்து வேலைகளுக்கும் குறிப்பிட்ட மாற்றுத்திற னாளிகளின் குறைபாடுக ளுக்கு ஏற்ப அவர்களுக்கு பொருத்தமான பணி களாக அடையாளம் கூறப்பட்ட பணிகளுக்கு இது பொருந்தும்.        ஆனால் இது மத்திய அரசின் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு பொருந்தாது. எத்தகைய மாற்றுத்திறன் உள்ளவர் களுக்கு என்னென்ன பணி கள் பொருத்தமானது என்ற பட்டியல் குறித்து தனியாக அறிவிப்பு வெளி யிடப்படும்.
மாற்றுத்திறனாளிகள் 40 சதவீத குறைபாடு உள்ளவர்களுக்கு மட் டுமே இந்த சலுகை பொருந் தும். வயது வரம்பில் சலுகை அளிக்கப்பட்டா லும், வேலைக்கு விண் ணப்பிப்பவர்களின் அதிக பட்ச வயதாக 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண் டும். இவ்வாறு அந்த அறி விப்பில் கூறப்பட்டுள்ளது.

-விடுதலை,30.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக