Published May 17, 2024,விடுதலை நாளேடு
மதுரை, மே 17- அரசு ஊழி யரை ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய் வது சட்டவிரோதம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அண் மையில் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டத் தைச் சேர்ந்த சரவணன் கடந்த 2022- ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனு:
சிவகங்கை மாவட்ட பள்ளி கல்வித்துறையில் நான் பணிபுரிந்தேன். கடந்த 31.10. 2022 அன்று ஓய்வு பெறும் நாளில் என்னை பணியிடை நீக் கம் செய்ததுடன், குற்ற குறிப்பாணையும் வழங் கினர். இதனால், எனக்கு கடும் மன உளைச்சல் ஏற்பட்டது. எனவே, பள் ளிக் கல்வித்துறை சார் பில் எனக்கு வழங்கப்பட்ட பணியிடை நீக்கத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார்.இந்த மனு உயர்நீதி மன்ற நீதிபதி ஆர்.என். மஞ்சுளா முன் அண்மை யில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞர் முன் வைத்த வாதம்:
அரசுப் பணியிலிருந்த தந்தை உயிரிழந்ததை யடுத்து, கருணை அடிப் படையிலான வேலைக்கு மனுதாரர் விண்ணப் பித்து அரசுப் பணியில் சேர்ந்தார். அப்போது அவர், தனது தாய் அரசு வேலையில் பணிபுரிவதை மறைத்து கருணை அடிப் படையில் அரசுப் பணியை பெற்றார். இதனடிப் படையில் அவரைப் பணியிடை நீக்கம் செய்தது டன் குற்ற குறிப்பாணை யும் வழங்கப்பட்டது என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
எந்த அரசு ஊழியர் மீதும் ஓய்வு பெறும் காலகட்டத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என ஏற்கெனவே நீதிமன்றம் பல்வேறு உத் தரவுகளைப் பிறப்பித்து உள்ளது.
இதேபோல கடந்த 2007-ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசின் அரசாணை யில் ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியரை பணியிடை நீக்கம் செய்யக் கூடாது எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த வழி காட்டுதலையும் மீறி மனு தாரரை பணியிடைநீக் கம் செய்துள்ளனர். இந்த உத்தரவு சட்டவிரோத மானது.
அரசுப் பணியில் சேர்ந்து 25 ஆண்டுகளுக் குப் பிறகு ஒருவரை பணியிடை நீக்கம் செய்தது டன், குற்ற குறிப்பாணை யும் வழங்கியது ஏற்பு டையதல்ல.இதுபோன்ற செயல்கள் அரசு ஊழியர் களை காயப்படுத்துவதாக அமைவதுடன், மன உளைச்சலையும் ஏற்படுத்தும்.
எனவே, மனுதாரரை பணியிடை நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தர வும், அவருக்கு வழங்கப் பட்ட குற்ற குறிப்பாணை யும் ரத்து செய்யப்படு கிறது. மனுதாரர், 31.10. 2022 அன்று முறையாக ஓய்வு பெற்றதாகச் சான் றளித்து, உரிய பணப் பலன்களை 6 வாரங் க ளுக்குள் பள்ளிக் கல்வித் துறை வழங்க வேண்டும் என்றார் நீதிபதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக