வெள்ளி, 11 ஜனவரி, 2019
துபாயில் 2019 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்பு இரண்டு மடங்கு தேசியமயமாக்கப்படும் ஆட்சியாளர்கள் அறிவிப்பு
வியாழன், 10 ஜனவரி, 2019
பொது சேமநலநிதி கணக்கை புதுப்பிப்பது எப்படி?
ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும் சத்துணவு ஊழியர் சங்கம் கோரிக்கை
சனி, 5 ஜனவரி, 2019
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து ஜனவரி 8,9 பொது வேலை நிறுத்தம்: தொழிலாளர்கள் தேசிய மாநாடு அறிக்கை
சென்னை, டிச.30 மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத,தேச விரோதக் கொள்கைகளைக் கண்டித்து 2019 ஜனவரி8,9 ஆகிய இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம் செய்ய இந்தியத் தொழிலாளர்களின் தேசிய மாநாடு அறை கூவல் விடுத்தது.
அனைத்துத் தொழிலாளர் களுக்கும் மாதம் ரூ.18,000 க்கு குறையாத சம்பளம், 58 வயதான அனைவருக்கும் 6ஆயிரம் ரூபாய்க்கு குறையாத மாத ஓய்வூதியம், காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் முறைகளை ஒழித்தல், தொழிலாளர்சட்டங்களை முத லாளிகளுக்கு சாதகமாக திருத்துவதை கைவிடுதல், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், பணிக்கொடையை அதிகரித்தல், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனி யாருக்கு விற்பதைநிறுத்துதல் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறு கிறது.வேலைநிறுத்தத்திற்கு தொழிலாளர் களை ஆயத்தப்படுத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டாக கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன.
சென்னையில் டிசம்பர் 14ஆம் தேதியும், மதுரையில் டிசம்பர்18ஆம் தேதியும் பெரும் திரளான மாநில மாநாடுகளும் நடந்தன.
வேலைநிறுத்தத் கோரிக்கைகளை விளக்கி ஆலைவாயில் கூட்டங்கள், சங்கப் பேரவைகள், தெருமுனைக் கூட்டங்கள், பரப்புரைப் பயணங்களும் இரண்டு மாதங் களாக நடந்து வருகின்றன. தொழிற் சாலைகளுக்கு வேலைநிறுத்த முன்னறிவிப்புகள் முறையாகத் தரப்பட் டுள்ளன. பலலட்சக்கணக்கான துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், பதாகைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்கண்ட பணிகளை நிறைவேற்றிய, பங்கெடுத்த தொழிற்சங்கத் தலைவர்கள், தொழிலாளர்களைப் பாராட்டி வாழ்த்து கிறோம். 2019 ஜனவரி 8,9 தேதிகளில் தமிழகத்திலுள்ள பஞ்சாலைகள், பின்ன லாடை நிறுவனங்கள், போக்குவரத்துக் கழகங்கள், ஆட்டோ, வேன், டாக்ஸி, லாரி, பீடி, சிமெண்ட், சர்க்கரை, இஞ்சினியரிங், சிவில் சப்ளை, மின்சாரம், டாஸ்மாக், காகிதத் தொழிற்சாலைகள், வங்கிகள், காப்பீட்டுநிறுவனங்கள், உள் ளாட்சிகள், மத்திய, மாநில அரசுப்பணிகள் தொலைத் தொடர்பு உள்ளிட்ட அனைத்துத் தொழில்களிலும் முழுமையான வேலை நிறுத்தம் நடைபெறும்.இதே நாட்களில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளர்களும், உடலுழைப்புத் தொழி லாளர்களும் வேலைநிறுத்தம் செய்கின் றனர்.
அவர்களின்பங்கெடுப்பை வெளிக் காட்டுவதற்காக ஜனவரி 9ஆம்தேதி மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தொழில் மய்யங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். மறியல் நடைபெறும் நேரம் மற்றும் இடங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொழிற்சங்க கூட்டுக்குழு முடிவுசெய்யும்.
இந்த மறியலில் அமைப்பு சார்ந்த தொழிலாளர்களும் பங்கேற்பார்கள்.உள்நாட்டு, வெளிநாட்டுகார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்கு முகவர்களாகி, இந்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை அழித்து, தொழிலாளர்களையும் விவசாயி களையும் சீரழிக்கிற மத்திய, மாநில அரசு களைக் கண்டித்து நடைபெறும் பொது வேலை நிறுத்தம், மறியல் போராட்டங்கள் வெற்றிபெற அனைத்துப் பொது மக்களும், வெகு மக்கள் அமைப்புகளும் ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள் கிறோம்.
- விடுதலை நாளேடு, 30.12.18