புதன், 8 ஜூன், 2016

ஏன், தூக்கில் தொங்கவிட வேண்டியதுதானே?


துப்புரவுத் தொழிலாளர்கள் மின் தூக்கியில் (லிப்ட்) பயணித்தால் தண்டனையாக அவரது சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று டில்லி பார்கவுன்சில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய பார் கவுன்சில் டில்லி அலுவலகத்தின் இணை செயலாளர் அசோக் குமார் பாண்டே அலுவலத்தில் கடை பிடிக்கவேண்டிய நடைமுறைகள்பற்றி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் பார் கவுன்சில் உயரதிகாரிகள் தவிர்த்து கடைநிலை ஊழியர்கள் (அலு வலக உதவியாளர், பியூன்) மின் தூக்கியை பயன்படுத்தக் கூடாது.
துப்புரவுத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மின் தூக்கியைப் பயன் படுத்தக் கூடாது.

துப்புரவுத் தொழிலாளர்கள் மின் தூக்கியைப் பயன்படுத்தினால் அதற்கு தண்டனையாக அவர்களது ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யவேண்டும்.

ஒப்பந்த தொழிலாளர்கள் பயணித்தால் உடனடியாக அவர்களிடமிருந்து ரூ.50 அபராதமாக வசூலிக்க வேண்டும். (ஏன் தூக்கில் தொங்கவிட வேண்டியதுதானே?!)
மின் தூக்கியை உயரதிகாரிகளும், முக்கிய விருந்தினர்களும் மட்டுமே பயன்படுத்தவேண்டும்  என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தனது உள் ளாடையை துவைக்க மறுத்த பெண் உதவியாளருக்கு விளக்கம் கேட்டு சத்திய மங்கல சார்பு நீதிபதியே எச்சரிக்கை கடிதம் எழுதியதும்,
இதுகுறித்து  பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு உதவியாளர் என்பது உள்ளாடைகளும் துவைக்கத் தானே தவிர, தூங்கிவிட்டுச் செல்ல அல்ல என்று ஆபாச அர்த்தத்துடன் பதிலளித்ததும் பத்திரிகைகளில் வந்தது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,8.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக