சனி, 18 ஜூன், 2016

தொழிலாளர்கள்- தந்தை பெரியார்


11-12-1932, குடிஅரசிலிருந்து...
தொழிலாளிகளை மோசம் செய்யும் முதலாளிகள் செயல்களை எல்லாம் தொழில் திறமையாகவும், நிர்வாகத்திறமையாகவும் கருதப் படுகிறது. முதலாளியைத் தொழிலாளி ஏமாற்றுவது நாணயக் குறை வானது, நம்பிக்கைத் துரோகமானது, திருட்டுக் குற்றத்தில் சேர்ந்தது என்பதாக ஆகிவிடுகின்றது. இதற்குக் காரணம் எல்லாம் முதலாளி மார்கள் ஆட்சி வலுத்திருக்கிறது.
அவர்களுக்கு சங்கம் இருக்கிறது. அதற்கு அரசாங்கத்தின் சலுகை இருக்கிறது, அவர்களது நன்மைக்கு என்றால் உலக முதலாளிகள் எல்லாம் ஒன்று கூடி விடுகிறார்கள். முதலாளிகள் நன்மையில் ஒவ்வொரு முதலாளிக்கும் கவலை இருக்கின்றது.
அரசாங்கமும் அவர்கள் கைவசமிருக்கிறது. சட்டசபை அவர்கள் கைவசமிருக்கிறது. சட்டசபையில் 100க்கு 90பேர் அவர்கள் இனத்தவர் களாகவே அவர் களைத் தழுவி ஆதரிப்பவர்களாகவே சேர்ந்து விடுகிறார்கள். ஆனால், தொழிலாளிகளுக்கோ உண்மையான சங்கம் என்பது இல்லை. ஒற்றுமை என்பது இல்லை. தக்க பிரதிநிதித்துவம் என்பதில்லை ஒன்று படக் கவலையுமில்லை மார்க்கமும் இல்லை. தொழிலாளிகளை முதலாளிகள் தங்கள் நன்மைக்கு உபயோகித்துக் கொள்ளுகிறார்கள். தொழிலாளிகளை ஆயுதங்களாகக் கொண்டுதான் முதலாளிகள் ஒருவரோ டொருவர் யுத்தம் செய்து கொள்ளுகிறார்கள். இரண்டு முதலாளிகள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள். இரண்டு முதலாளிகள் சண்டை போட்டுக் கொள்வதின் பயன் தொழிலாளிக்குத் தான் நஷ்டமாகவும் உயிர் பலியாகவும் முடிகின்றதே தவிர, முதலாளி களுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை சரீரத்தால் வேலை செய்யாத சோம்பேறி அன்னியர்கள் உழைப்பில் வாழ்கின்றவன் ஆகியவர் களுக்கே தொழிலாளிகள் ஓட்டுக் கொடுத்து தங்கள் பிரதிநிதியாக ஆக்கிக் கொள்ளுகிறார்கள். பிறகு இந்த சோம்பேறிகள் ஊரார் உழைப்பில் வாழ்கின்றவர்கள். தொழிலாளிகளின் பிரதிநிதிகளாய் ஆனவுடன் முதலாளிகளாகவே ஆகப் பார்க்கின் றார்கள் அனேகர் முதலாளிகளாகவே ஆகி விடு கிறார்கள். அனேகர் முதலாளிகளுக்கு உளவாளிகளா யிருந்து தொழிலாளிகள் நலத்தை விற்று தொழிலாளி களைக் காட்டிக் கொடுத்துத் தாங்கள் வாழ்கிறார்கள்.
சரீரத்தால் பாடுபடுகின்றவன் தவிர, வேறு யாரும் தொழிலாளி களுக்குப் பிரதிநிதியாக இருக்கக் கூடாது. எந்த சபையிலும் தொழில் செய் பவனே தொழிலாளர் பிரதிநிதியாக இருக்க வேண்டும். உலகின் சகல துறைகளைச் சேர்ந்த ஆட்சிகளும்  தொழிலாளர்கள் கைக் குள்ளாகவே வரவேண்டும். அப்படிப்பட்ட ஆட்சிதான் தகும், அப்படிப்பட்ட ஆட்சி தான் பொதுஜன ஆட்சியாகும், அப்படிப்பட்ட பொது ஜன ஆட்சி என்பது, உலகப் பொது ஜனங்கள் நன்மைகளை எல்லாம் கருதியதாக இருக்க வேண்டும். அப்படிக் கில்லாமல் ஒரு தேசத் தொழிலாளிகள் மாத்திரம் அந்த ஆட்சி பெற்றால் போதும் என்பது தற்கொலையேயாகும். அதனால் உலக தொழிலாளர் கஷ்டம்  நீங்காது. மற்ற தேசத் தொழிலாளர் கஷ்டம் அதிகரிக்கும். உலக தொழிலாளர் யாவருமே விடுதலை பெற்று ஆட்சிபெறும் மார்க்கந்தான் நிரந்தரமான  நன்மையை கொடுக்கும் இல்லாத வரை மற்ற தேச முதலாளிகள் ஒன்று சேர்ந்து தனித்தேச தொழிலாளர் ஆட்சியை அழிக்கப் பார்ப்பார்கள்.
உலகில் வேலை செய்பவர்களைத் தவிர, மற்றவர்களை இருக்கக் கூடாது. ஒருவர் சவுக்கியமாயிருக்க மற்றவன் கஷ்டப்படுவது, பட்டினி கிடப்பது ஜீவனத்திற்கு மார்க்க மில்லாமல் திண்டாடுவது என்கின்ற நிலைமை எங்கிருந்தாலும் அவைகள் ஒழிக்கப்பட வேண்டும். அவை களுக்குக் காரணமானவைகள் வேருடன் அழிக்கப்பட வேண்டும்.
-விடுதலை,18.6.16

புதன், 8 ஜூன், 2016

இந்தியாவில்தான் சம்பளம் குறைவு:


ஆய்வில் தகவல்
புதுடில்லி, ஜூன் 8- ஆசிய- பசிபிக் பிராந்திய நாடுகளில் இந்தியாவில் தான் பணியாளர்களின் ஆண்டுச் சராசரி சம்பளம் குறைவாக உள்ளது என ஆய்வறிக்கை ஒன்று தெரி விக்கிறது.
இதுதொடர்பாக இந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இயங்கி வரும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5,500 நிறுவனங்களின் பணியாளர்களிடம், “வில்லிஸ் டவர்ஸ் வாட்சன்’ எனும் நிறு வனம் ஆய்வு மேற்கொண்டது. அண்மையில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
இந்தியாவில் உள்ள நிறுவ னங்களில் பணிபுரிவோரின் ஆண்டு சராசரி ஊதியம் ரூ.66 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக (இந் திய மதிப்பில் ரூ.4.4 லட்சம்) உள்ளது. இது, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளில் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் சம்பளத்தை ஒப் பிடும்போது குறைவு என்பது டன்,
சீனாவில் பணியாளர்க ளுக்கு வழங்கப்படும் ஊதியத் தில் பாதியாகும். தொழில் நிறு வனங்களில் பல்வேறு நிலை களில் பணிபுரிவோருக்கு இந்தி யாவில் அளிக்கப்படும் ஊதியத் தைவிட சீனாவில் 64 முதல் 100 சதவீதம் அதிகமாக சம்பளம் வழங்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-விடுதலை,8.6.16

ஏன், தூக்கில் தொங்கவிட வேண்டியதுதானே?


துப்புரவுத் தொழிலாளர்கள் மின் தூக்கியில் (லிப்ட்) பயணித்தால் தண்டனையாக அவரது சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று டில்லி பார்கவுன்சில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய பார் கவுன்சில் டில்லி அலுவலகத்தின் இணை செயலாளர் அசோக் குமார் பாண்டே அலுவலத்தில் கடை பிடிக்கவேண்டிய நடைமுறைகள்பற்றி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் பார் கவுன்சில் உயரதிகாரிகள் தவிர்த்து கடைநிலை ஊழியர்கள் (அலு வலக உதவியாளர், பியூன்) மின் தூக்கியை பயன்படுத்தக் கூடாது.
துப்புரவுத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மின் தூக்கியைப் பயன் படுத்தக் கூடாது.

துப்புரவுத் தொழிலாளர்கள் மின் தூக்கியைப் பயன்படுத்தினால் அதற்கு தண்டனையாக அவர்களது ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்யவேண்டும்.

ஒப்பந்த தொழிலாளர்கள் பயணித்தால் உடனடியாக அவர்களிடமிருந்து ரூ.50 அபராதமாக வசூலிக்க வேண்டும். (ஏன் தூக்கில் தொங்கவிட வேண்டியதுதானே?!)
மின் தூக்கியை உயரதிகாரிகளும், முக்கிய விருந்தினர்களும் மட்டுமே பயன்படுத்தவேண்டும்  என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தனது உள் ளாடையை துவைக்க மறுத்த பெண் உதவியாளருக்கு விளக்கம் கேட்டு சத்திய மங்கல சார்பு நீதிபதியே எச்சரிக்கை கடிதம் எழுதியதும்,
இதுகுறித்து  பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு உதவியாளர் என்பது உள்ளாடைகளும் துவைக்கத் தானே தவிர, தூங்கிவிட்டுச் செல்ல அல்ல என்று ஆபாச அர்த்தத்துடன் பதிலளித்ததும் பத்திரிகைகளில் வந்தது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,8.6.16