வெள்ளி, 31 மார்ச், 2023

தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் : வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

 

8

தஞ்சாவூர், மார்ச் 29- தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட்டு நாட்டு நலனை மேம்படுத்த முன்வர வேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கி மேனாள் தொழிற்சங்க தலைவர் களின் கூட்டமைப்பு (AFCCOM) வலி யுறுத்தியுள்ளது.

26.3.2023 அன்று தஞ்சாவூர் AIIEA மாளிகையில் சரோஜ் நினை வகத்தில் இக்கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பி.இராமன் தலை மையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் டி.வி.சந்திரசேக ரன், ஸ்டேட் வங்கி ஊழியர் சங் கத்தின் மேனாள் பொதுச்செய லாளர் டி.சிங்காரவேலு, மூத்த தலைவர்கள் மதுரை எம்.முரு கையா, என்.சுப்பிரமணியன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

நிர்வாகக் குழுவில் விவாதிக்கப் பட்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள்  - பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டவை வருமாறு:-

ஒன்றிய அரசும் இந்திய வங்கி கள் நிர்வாகமும் (IBA) வங்கி ஓய் வூதியர்களின் ஓய்வூதியத்தை தாம தமின்றி மறு சீரமைப்பு  செய்ய முன் வரவேண்டும்.

இந்திய ஸ்டேட் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூ தியர்களுக்கு சுகாதார காப்பீட்டு பிரிமியத்தை வங்கியே செலுத்த முன்வர வேண்டும்.

காப்பீடு பிரிமியத்துக்கு ஜி.எஸ்.டி. பிடித்தம் செய்யும் தவறான முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மருந்தகங்களை நிறுவ இந்திய ஸ்டேட் வங்கி முன் வரவேண்டும்.

வாழ்வாதாரம் இன்றி வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மூத்த குடிமக்களுக்கு மாவட்டம்தோறும் அரசு இல்லங்களை அமைக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் துணையாக இருக்கும் L.I.C., ONGC, BHEL, BSNL  ஆகிய பொதுத்துறை நிறுவனங் களை திட்டமிட்டு பலவீனப்படுத்தி தனியாருக்கு தாரை வார்க்கும் நாட்டு நலனுக்கு எதிரான முயற் சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.

நாட்டின் நடைமுறையில் இருந்த 44 தொழிலாளர் நல சட்டங்களை ஒன்றிணைத்து நான்கே தொழிலாளர் சட்டங் களாக மாற்றி நடைமுறைப்படுத்த எண்ணும் ஒன்றிய அரசின் போக்கு தொழிலாளர் நலனுக்கும் முன்னேற்றத்துக்கும் எதிரானது. எனவே, ஒன்றிய அரசு அதை கைவிட்டு நாட்டு நலனை மேம் படுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இப்பொதுக்குழு கூட்டத்தில் எம்.சந்திரா கில்பர்ட், எம்.ரகுநா தன், என்.பாண்டுரங்கன், வீ.பூமி நாதன், ஆர்.லோகநாதன், எஸ். கருணாகரன், எஸ்.பாலசுப் பிர மணியன், அகமது உசைன், எம்.எம்.செல்வராஜ், எம். ராஜ கோபால், இக்கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் எம்.கே.மூர்த்தி உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயது இனி 58

 

சென்னை,மார்ச்30- சட்டப்பேரவையில் போக்குவரத்துதுறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (29.3.2023) நடந்தது. விவாதத்தின் நிறைவில், துறை அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து பேசியதாவது: சென்னையில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பலர், பல மணி நேரம் தொடர்ந்து பணியாற்றுவதால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற பல்வேறு தொற்றாநோய்களால் பாதிக்கப்பட்டு, அவதிப்படுவதாகவும், 58 வயதிலேயே பணி ஓய்வு அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். இதைத்தான் உறுப்பினர் சதன் திருமலைக்குமாரும் அவையில் பேசினார். முதலமைச்சருடன் கலந்து பேசி, போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து கழகங்கள் மீது அதிமுக உறுப்பினர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இக்கழகங்கள் சீரழிந்ததற்கு அதிமுக ஆட்சிதான் காரணம். 2006-_11 திமுக ஆட்சியில் 48,898 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 38,399 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் 2016-_2021 வரையிலான 5 ஆண்டு ஆட்சியில் ஒரு நியமனம் கூட நடைபெறவில்லை. பணி ஓய்வையும் 60 வயதாக உயர்த்தினார்கள். அதனால் ஏற்படும் நிதி சுமை குறித்து கவலைப்படவில்லை.   இவ்வாறு அவர் கூறினார்.


தமிழ்நாட்டில் 75,321 வெளி மாநிலத் தொழிலாளர்கள் பதிவு: அரசு தகவல்

 

சென்னை, மார்ச் 30 தமிழ்நாட்டில் 75 ஆயிரம் வெளி மாநிலத் தொழிலாலர்கள் பதிவு செய்து உள்ளதாக தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

வட மாநிலத் தொழிலாளர்கள் மீது தமிழ்நாட்டில் தாக்குதல் நடைபெறுவதாக சில நாட்களுக்கு முன்பு வதந்தி பரப்பப் பட்டது. இதையடுத்து பீகார், ஜார்கண்ட் மாநிலத்தின் சார்பில் செயலர், ஆட்சியர் உள்ளிட்ட பிரதிநிதிகள் அடங்கிய குழு தமிழகம் வந்து தொழிலாளர்களை நேரில் சந்தித்து, களத்தில் இருந்த உண்மைத் தன்மையை காட்சிப்பதிவாக பதிவு செய் தனர். தொழிலாளர்கள் யாரும் தாக்கப்பட வில்லை என்பது உறுதியான நிலையில், வதந்தி செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 75,321 வெளி மாநில தொழிலாளர்கள் பதிவு செய்து உள்ளதாக தொழிலாளர் நலத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொழி லாளர் நலத்துறையின் வெளி மாநில தொழிலாளர்களுக்கான<https://labour.tn.gov.in/ism/>  என்ற இணையதளத்தில் 75,321 பேர் பதிவு செய்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

 

புதுடில்லிநவ.27 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டு பட்ஜெட் டில் ரூ.73 ஆயிரம்கோடி ஒதுக் கப்பட்டதுஇந்த நிதி ஏற்கெனவே விடுவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து இந்த திட்டத்துக்கு கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடியை இந்த மாத தொடக்கத்தில் ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது.

இந்ததிட்டத் துக்கான ஊதியம் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு நிதியை விடுவிக்க ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளதாக அமைச்சகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

இந்த திட்டத்துக்காக எப்போதெல்லாம் கூடுதல் நிதி தேவைப்படுகிறதோஅப் போதெல்லாம் ஒன்றிய நிதிய மைச்சகத்தின் மூலம் தேவை யான நிதி பெறப்பட்டு வழங் கப்பட்டு வருவதாகவும் அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

முன்னதாக கடந்த 2020-2021ஆம் நிதியாண்டிலும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு ரூ.61,500 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிலையில்பின் னர் ரூ.1,11 லட்சம் கோடியாக இந்த நிதி மாற்றியமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிக்கும் நாடுகளின்

எண்ணிக்கை 22 ஆக உயர்வு

சென்னைநவ.27 இந்திய தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை போட்டுக்கொண்டு சான்றிதழ் பெற்றவர்கள் தங்கள் நாடுகளுக்கு வரலாம் என பல நாடுகள் பச்சைக்கொடி காட்டி உள்ளனஇதுதொடர்பாக இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.

இந்த நிலையில் மேலும் 15 நாடுகள் இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழை அங்கீகரித்துஇந்திய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

இந்த நாடுகள் ஆஸ்திரேலியாவங்காளதேசம்பெலாரஸ்ஜார்ஜியாஈரான்கஜகஸ்தான்லெபனான்நேபாளம்நிகரகுவாபிலிப்பைன்ஸ்சான்மெரினோசிங்கப்பூர்சுவிட்சர்லாந்துதுருக்கி மற்றும் உக்ரைன் ஆகும்இந்திய தடுப்பூசி சான்றிதழுடன் இந்த நாடுகளுக்கு இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள முடியும்.

இதன் மூலம் இந்திய தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதுஇந்த 22 நாடுகளின் தடுப்பூசி சான்றிதழ்களை இந்தியாவும் அங்கீகரித்துள்ளது.

இந்த தகவல்களை ஒன்றிய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

100 நாள் வேலைத் திட்டம் : ஒன்றிய அரசு நிதியைக் குறைத்த நிலையிலும் - பேரூராட்சிகளிலும் விரிவுபடுத்தியவர் முதலமைச்சர்! - அமைச்சர் இ.பெரியசாமி

 

12

சென்னை, மார்ச். 25- சட்டப்பேரவையில் நேற்று, நிதிநிலை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் பங்கேற்றுப் பேசியபோது, குறுக்கிட்டு விளக்கமளித்த ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, "ஒன்றிய அரசு நிதியைக் குறைத்த போதிலும், பேரூராட்சிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்தியவர் முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்டத்தை தி.மு.கழக அரசு திறமையாகச் செயல்படுத்தும்!” என்று குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் அமைச்சர் இ.பெரியசாமி குறிப்பிட்டதாவது:- 

ஒன்றிய அரசு, மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டத்தில், வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்ற அடிப் படையில் ஒதுக்கீடு செய்வதைக் குறைத்து, 24 கோடி மனிதத்திறன்வேலை நாட்களை தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியிருக்கிறது. இது வளர்ச்சியடைந்த மாநிலம். பிற்படுத்தப்பட்ட மாநிலங்களுக்கு கொஞ்சம் கூடுதலாக ஒதுக்குகிறோம் என்பதை அடிப்படையாக வைத்து, நம்முடைய மாநிலத்திற்கு கடந்த முறை, 24 இலட்சம், 25 இலட்சத்தைத் தாண்டவில்லை. இப்போது நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற தற்குப் பிறகு, இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டுமென்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக, கிட்டத்தட்ட வேலை நாட்களைப் பார்த்தீர்களென்றால் பல இடங்களிலெல்லாம் 20 நாட்கள் தாண்டாமல் இருந்தது. 20 நாட்கள், 30 நாட்கள் இருந்தது.கடந்த 4 மாதங்களில் எடுத்த நடவடிக்கைகளில் வேலை நாட்கள், தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் 60, 70 நாட்களைத் தாண்டி, வேலை நாட்கள் ரூ.32 கோடியை இன்றைக்கு workers budget அய் 25 கோடி என்று மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு ஒதுக் கியிருந்தாலும், நாங்கள் அதையெல்லாம் எதிர்பார்க் காமல், 32 கோடி அளவிற்கு மனித திறன் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த அவைக்கு பெருமையோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். வருகிற ஆண்டுகளில் அந்த கோடி என்பதை 35 கோடி என்று, நீங்கள் நிதிநிலை அறிக்கையை படித்துப் பாருங்கள். மனித வேலை நாட்களை 35 கோடிக்கு உயர்த்துவோம் என்று சொல்லியிருக்கிறோம். வேலைத்திறன் நாட்களை 25 கோடியிலிருந்து 35 கோடி ஆக்குவோம் என்று சொல்லியிருக்கிறோம். இதுவே 35 கோடி நாட்கள் என்று சொன்னோமென்றால், 35 கோடியைத் தாண்டி, 40 கோடிக்கு மேலும் உயரும் என்று நிச்சயமாகச் சொல் கிறேன், இன்னும் சொல்லப் போனால், எல்லா கிராமங் களுக்கும் இந்த வேலைத் திட்டம் போய்ச் சேர வேண்டும். Cluster என்று பார்த்தால், கடந்த ஆட்சிக் காலத்தில் 20,000 clusters தான் இருந்தது. ஆனால், தற்போது கிராமங்களை இணைக்கக் கூடிய இந்த வேலைத்திறன் clusters, கடந்த இரண்டாண்டு காலத்தில் சுமார் 3,000 clusters  கூடுதலாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. வருகிற காலத்தில் அதை 30,000 ஆக உயர்த்தி, வேலைத் திறன் நாட்களை உயர்த்தி, ஊதியத்தையும் அவர்களுக்குக் குறைவில்லாமல் கொடுப்பதற்கு எங்களுடைய இந்த அரசு முதலமைச்சர் அவர் களுடைய வழிகாட்டுதலில் நிச்சயம் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றும். 

 பேரவைத் தலைவர் அவர்களே, 100 நாள் வேலைத் திட்டம், அதாவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் பொறுத்தளவில், அதற்கான நிதியை 100 சதவிகித நிதியை முழுமையாக ஒன்றிய அரசு வழங்க வேண்டும். ஆனால், எங்கள் முதல்வர் தளபதியார் அவர்கள், பேரூராட்சிக்கும் அதை விரிவுபடுத்துவேன் என்று சொல்லி, கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் Pilot Scheme போன்று ஒவ்வொரு மாவட்டத் திலும் ஒரு பேரூராட்சியைத் தேர்ந்தெடுத்து அந்தத் திட்டத்தை பேரூராட்சிகளி லும் செயல்படுத்திய அரசு எங்களுடைய அரசு என்பதை   உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.  இவ்வாறு அமைச்சர் இ. பெரியசாமி குறிப்பிட்டார்.

100 நாள் வேலைத்திட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிப்பதா? ஒன்றிய பாஜக அரசுக்கு இரா.முத்தரசன் கண்டனம்

 

6

சென்னை, மார்ச் 29- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச்  செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு:- 

ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை  திருத்தி அறிவித்துள்ளது. மார்ச் 25 அன்று வெளியான அரசிதழ் அறிவிப்புப்படி தமிழ்நாட்டில் வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாள் ஒன்றுக்கு ரூ.294  ஊதியம் வழங்க வேண்டும்.

"வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வேலை அட்டை  பெற்ற தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை என்பதை 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும். தொழிலாளர் களின் குறைந்தபட்ச ஊதியமாக தினசரி ரூ.600 வழங்க வேண்டும்" என விவசாயத் தொழிலாளர்களும், தொழிற்சங்க அமைப்புகளும் வலியுறுத்தி வரும் நிலையில் ஒன்றிய அரசின் ஊதிய அறிவிப்பு பெருந்த ஏமாற்றமளிக்கிறது. பாஜக ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதியளிப்புத் திட்டத்தை முடக்கி, அழித் தொழிக்கும் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.  திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளர்க ளுக்கு தலா 100 நாள் வேலை வழங்க ஆண்டுக்கு ரூ. 2.74  லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொருளாதார  வல்லுநர்கள் கூறிவரும் நிலையில், ஆண்டுக்காண்டு நிதி ஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்து வந்த பாஜக ஒன்றிய அரசு வரும் 2023-24 ஆம் ஆண்டிற்கு வெறும் ரூபாய் 60 ஆயிரம் கோடியாக சுருக்கிக் குறைத்து விட்டது.

இந்த நிலையில் குறைந்தபட்ச ஊதியத்தை நியாயமான அளவில் உயர்த்தாமல், விவசாயத் தொழிலாளர்கள் உள் ளிட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்களை வஞ்சித்து வரும் பாஜக ஒன்றிய அரசை கண்டிப்பதுடன் ஒன்றிய அரசு குறைந்தபட்ச ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.600 என நிர் ணயித்து வழங்க வேண்டும். -இவ்வாறு அவர் தெரிவித் திருக்கிறார்.

புதன், 22 மார்ச், 2023

அரசு வேலைக்கான வயது உச்சவரம்பு 32 ஆக உயர்வு அரசாணை வெளியீடு

 அரசு வேலைக்கான வயது உச்சவரம்பு 32 ஆக உயர்வு அரசாணை வெளியீடு. சென்னை, தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக சட்டசபையில் கடந்த 13-ந் தேதியன்று மனிதவள மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு ஒன்றை அமைச்சர் வெளியிட்டார். அவர், கொரோனா தொற்று காரணமாக பணியாளர் தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அரசுப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தாமதம் ஏற்பட்டால், நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அரசுப்பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பு தற்போது 30 ஆக உள்ளது. அது 32 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த அளவிற்கும் குறைவான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள பதவிகளுக்கும் தற்போது உயர்த்தப்பட்டுள்ள வயது உச்சவரம்பின் அளவு பொருந்தும்.

பட்டியலினத்தவர், பட்டியலின அருந்ததியர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் அனைத்து வகுப்பினர்களிலும் உள்ள ஆதரவற்ற விதவைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் (பணி நிபந்தனைகள்) சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள வயது உச்சவரம்பு நீட்டிப்பு அல்லது தளர்வுகள் தொடரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

https://www.dailythanthi.com/News/State/2021/09/17033641/Government-raises-the-age-limit-for-government-employment.vpf