சனி, 14 ஜனவரி, 2023

ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம்!

 

முதலமைச்சர் அவர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) நன்றி! 

சென்னை, நவ.4 பத்திரிகைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இதற்கு அடையாளமாக சென்னை தலைமைச் செயலகத்தில் 31.10.2022 அன்று ஓய்வுபெற்ற 7 பத்திரிகையாளர்களுக்கு அவர்   ஆணை களை வழங்கினார். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் கடந்த  25 ஆண்டுகளில், ஒரே நேரத்தில்  அதிகப் படியானோருக்கு வழங்கப்படுவது இது தான் முதல் முறையாகும். இதற்காக சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ) சார்பாக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்

பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டத்தில் வரையறுக்கப் பட்டுள்ள பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு, வருமான உச்சவரம்பு ஏற்கெனவே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பத்திரிகையாளர்களின் ஓய்வூதிய விண்ணப் பங்களைப் பரிசீலிக்கும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதில் உள்ள முட்டுக்கட்டைகள் அகற்றப்படுவதுடன், ஓய்வுக் காலத்தில் பத்திரிகையாளர்களின் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்த முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஓய்வூ தியம் கோரி விண்ணப்பித்துள்ள பலருடைய விண்ணப் பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றையும்  தமிழ்நாடு அரசு பரிசீ லித்து தீர்வு காண வேண்டும் என சென்னை பத்திரிகை யாளர் யூனியன் கேட்டுக்கொள்கிறது என எல்.ஆர்.சங்கர் (தலைவர்), மணிமாறன் (பொதுச் செயலாளர்)  சென்னை பத்திரிகையாளர் யூனியன் (MUJ). தெரிவித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்

 

சென்னை, நவ.2- ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியத்துக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு  வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டில் முதல்முறையாக, உழைக்கும் பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மேலும்,பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று 2021-_2022-ஆம் ஆண்டுக்கான செய்தி, விளம்பரத் துறை மானியக் கோரிக் கையில் அறிவிக்கப்பட்டு, அதன்படி நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர் நலனில் அதிக அக்கறை கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, பணிக்காலத்தில் இயற்கை எய்தும் பத்திரிகையாளர் களின் குடும்பங்களுக்கு முதல மைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் குடும்ப நிதி உதவியை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியது. பத்தி ரிகையாளர் நல நிதியத்துக்கென தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.1 கோடி நிரந்தர நிதியாக வைப்பீடு செய்யப்பட்டது. இதில் இருந்து கிடைக்கும் வட் டியைக் கொண்டு, பத்திரிகையாள ருக்கு நிதியுதவி, கரோனா தடுப்பு நடவடிக்கையின்போது பணியாற் றிய பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வீதம் 5,782 பத்திரிகையாளர்களுக்கு மொத்தம் ரூ.2.89 கோடி சிறப்பு ஊக்கத்தொகை ஆகிய உதவிகள் வழங்கப்பட்டன.

கரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத் துக்கு முதலமைச்சர் பொது நிவா ரண நிதியில் இருந்து வழங்கப்படும் இழப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்ட துடன், 20 வாரிசுகளுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.2 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

பத்திரிகை துறையில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் குறைந்த வாடகையில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பத்திரிகை யாளர் நல நிதியத்தில் இருந்து வழங் கப்படும். மருத்துவ உதவித்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்துரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் அங்கீகார அட்டை பெற்றுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டை போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

பத்திரிகையாளர்கள் ஓய்வுக்கு பிறகு, எந்த இயலாமைக்கும் ஆளா காமல் இருக்க, அரசு சார்பில் மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன்படி, நாளி தழ்கள், பருவ இதழ்கள், செய்தி முகமைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 41 பத்திரிகையாளர்களுக்கு மாதம்ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கும் அடையாளமாக, இதற்கான உத்தரவுகளை 7 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மைச் செயலகத்தில் வழங்கினார்.

செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை பொறுப்பு செயலர் ம.சு.சண்முகம், செய்தி, மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கு 12 மாத மகப்பேறு விடுப்பு தமிழ்நாடு அரசு ஆணை

 

சென்னை, செப்.11  நியாய விலை கடையில் பணிபுரியும் பெண் விற்ப னையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு பெண் பணியாளர் களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கு அரசால் அவ்வப்போது அறிவிக்கப் படும் மகப் பேறு விடுப்பு குறித்த சலுகைகள் கூட்டுறவு நிறுவனங்களில் பணி புரியும் மகளிர் பணியா ளர்களுக்கு பொருந்தும் என கூட்டுறவு சங்கங் களின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கூட்டு றவு சங்கங்களின் பதி வாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி யுள்ளார். அதில், அரசு பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள் ளது. அரசு பணியாளர் களுக்கு அரசால் அவ்வப் போது அறிவிக்கப் படும் மகப்பேறு விடுப்பு குறித்த சலுகைகள் கூட்டுறவு நிறுவனங்களில் பணி புரியும் மகளிர் பணியா ளர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள் ளது. அதன்படி, நியாய விலை கடைகளில் பணி புரியும் பெண் பணியாளர் களுக்கும் 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு பொருந்தும்.

இதற்கென அனைத்து சங்கங்களிலும் தேவை யான சிறப்பு துணை விதி திருத்தம் மேற்கொள்ளப் பட்டு தகுதியுள்ள பெண் பணியாளர்களுக்கு இவ் விடுப்பினை அனுமதிக்க தங்கள் அளவில் தக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தங்கள் மண்ட லத்தில் செயல்படும் அனைத்து கூட்டுறவு சங் கங்களின் கட்டுப்பாட் டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர் கள் மற்றும் கட்டுநர் களுக்கு அரசாணையின் படி 12 மாதங்கள் மகப் பேறு விடுப்பு அனுமதிக்க தேவையான துணை விதி திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்டு தகுதியுள்ள அனைத்து பெண் பணி யாளர்களுக்கும் மகப் பேறு விடுப்பு அனுமதிக் கப்படுவதை தங்கள் அளவில் கண்காணித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அரசு பணியாளர் களுக்கு, அரசால் அவ்வப் போது அறிவிக்கப்படும் சலுகைகள் நியாய விலைக் கடை பணி யாளர்களுக்கும் பொருந் தும் என பதிவாளரால் தெரிவிக்கப்பட்ட இனங் களில் அரசு பணியாளர் களுக்கு அரசால் அறிவிக் கப்படும் சலுகைகள் தொடர்பாக உடனுக் குடன் சங்க துணை விதிகளில் உரிய திருத் தங்கள் மேற்கொள்ளப் பட்டு சம்பந்தப் பட்ட பணியாளர்களுக்கு அச்ச லுகைகள் கிடைக்க உட னுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், அவ்வாறு திருத்தங்கள் மேற்கொள் ளப்படாமல் இது போன்ற புகார்கள் பெறப் படுவதை தவிர்க்க வேண் டும். இவ்வாறு அந்த சுற் றறிக்கையில் கூறப்பட் டுள்ளது.


தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை அமைச்சர் தங்கம் தென்னரசு

 


    

கிருஷ்ணகிரி, நவ. 26 தமிழ்நாட்டில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதை இந்த அரசு உறுதி செய்யும் என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

டாடா எலெக்ட்ரானிக்ஸ் தொழிற் சாலையில் புலம்பெயர் தொழிலாளர் களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித் துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன் கனிக்கோட்டை தாலுகாவில் அமைந் துள்ள டாடா எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை அளித்த குற்றச்சாட்டு தொடர்பாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "டாடா எலெக்ட் ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமி டெட் நிறுவனம், மின்னணு பொருட் களை உற்பத்தி செய்வதற்காக தனது தொழிற்சாலையை கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ள நிவிஸி தொழிற்பூங்காவில், சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைத்து வருகிறது.

4684 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுவரும் இத்தொழிற் சாலையின் மூலம் ஏறத்தாழ 18 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத் தொழிற்சாலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாக பத்திரிகை செய்திகளும் புகார்களும் அரசிற்கு வந்துகொண்டிருக் கின்றன. இந்நிறுவனம் தற்போது வரை தமிழ்நாட்டைச் சார்ந்த ஏறத்தாழ 5500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. வணிக ரீதியிலான உற்பத்தியினைத் தொடங்கும்போது பணியாளர் தேவை யில் ஏறத்தாழ 80 விழுக்காடு பணியிடங்களுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த வர்களை நியமிக்க டாடா எலெக்ட் ரானிக்ஸ் நிறுவனம் பொறுப்புறுதி அளித்துள்ளது.பணிநியமனத்தில் தமிழ்நாட்டைச் சார்ந்த பணியாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படுவதை உறுதி செய்யும் பொருட்டு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு (மற்றும்) வர்த்தகத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோர் இந்நிறுவ னத்துடன் கலந்தாலோசனை மேற் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, இந்நிறு வனம் சார்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வாயிலாக நாமக்கல் (14.10.2022), தர்மபுரி (15.10.2022), கிருஷ்ணகிரி (15.10.2022, 16.10.2022, 29.10.2022) (ம) 6.11.2022 (ஓசூர்), விழுப்புரம் (15.10.2022), திருப்பத்தூர் (17.10.2022), சேலம் (19.10.2022), பெரம்பலூர் (20.10.2022), திருவண்ணாமலை (20.10.2022), இராம நாதபுரம் (20.10.2022), மயிலாடுதுறை (21.10.2022), கள்ளக்குறிச்சி (22.10.2022), புதுக்கோட்டை (28.10.2022), ஈரோடு (30.10.2022 (ம) 31.10.2022), சிவகங்கை (2.11.2022), வேலூர் (12.11.2022), மதுரை (15.11.2022), திருநெல்வேலி (17.11.2022), தேனி (17.11.2022), காஞ்சிபுரம் (18.11.2022), திண்டுக்கல் (18.11.2022), தூத்துக்குடி (19.11.2022), செங்கல்பட்டு (19.11.2022), இராணிப்பேட்டை (20.11.2022), விருதுநகர் (22.11.2022), தஞ்சாவூர் (22.11.2022), தென்காசி (23.11.2022), நாகப்பட்டினம் (23.11.2022), நாகர்கோவில் (24.11.2022), திருவள்ளூர் (24.11.2022) ஆகிய மாவட்டங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

மேற்காணும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களில் 7559 நபர்கள் கலந்து கொண்டனர். அவர்களில், 1993 நபர் களுக்கு தற்போது வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந் நிறுவனம் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 3 நாட்கள் நடந்த வேலைவாய்ப்பு முகாம் களில் 895 நபர்கள் கலந்துகொண்டதில், 355 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு நிறுவனத்தால் வேலைவாய்ப்பு வழங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அமைந்துள்ள பிற தொழில் நிறுவனங்களும் தமிழ்நாட்டைச் சார்ந்த நபர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கு வதை இந்த அரசு உறுதி செய்யும்" என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

 November 26, 2022 • Viduthalai

வியாழன், 8 டிசம்பர், 2022

வேளாண்மை சார்ந்த படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்

 

 பிளஸ்-2 முடித்த மாணவர்களின் இறுதிக் கட்ட விருப்பப் பட்டியல்களுள் சில பாடப்பிரிவுகள் உண்டு. அவற்றுள் வேளாண்மைத்துறை சார்ந்த பாடப்பிரிவுகளும் அடங்கும். மருத்துவ பிரிவில் இடம் கிடைக்காத சில மாணவர்கள் தேர்வு செய்வது, வேளாண் படிப்பினை தான். இந்நிலையில் வேளாண்மை சார்ந்த படிப்புகளின் மீது மாணவர்களிடம் தற்போது ஆர்வம் அதி கரித்துள்ளது. இந்திய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம் தான். 

மாணவர்கள் எதிர்காலத்தில் வளர்ச்சி நிலை யில் இருக்க, சில வேளாண் சார்ந்த படிப்புகளும், அவை வழங்கும் வேலைவாய்ப்புகள் விவ ரங்கள்:

வேளாண் பொறியியல்

இன்று விவசாயமும் தொழில்நுட்பம் ஆகி விட்டது. நாற்று நடுவது, களை பறிப்பது, அறு வடை போன்ற அனைத்திலும் அதற்கான இயந் திரங்கள் வந்துவிட்டன. அதனால் வேளாண் பொறியியல் முக்கியமான பட்டப் படிப்பாக விளங்குகிறது. இந்த வேளாண் பொறியியல் பட்டப் படிப்பு 4 வருட படிப்பாகும். மாணவர்கள் பிளஸ்-2 பொதுத் தேர்வில் எடுத்த மதிப் பெண்ணையும், அந்தந்த கல்வி நிறுவனங்கள் நடத்தும் தேர்வு மதிப்பெண்ணையும் அடிப் படையாக வைத்து இப்படிப்பிற்கான மாண வர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

பொறியியல் மாணவர் சேர்க்கை மூலம் இந்த படிப்பையும், நீங்கள் விரும்பும் கல்லூரியையும் தேர்வு செய்து கொள்ளலாம். விவசாயத்தில் பொறியியலையும், தொழில்நுட்பத்தையும் உப யோகப்படுத்தும் பணி வேளாண் பொறியாளர் களுடையது. வேளாண் பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு வேளாண் கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள், புட் பிராசசிங் நிறுவனங் கள், பாசனக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்ற வேளாண் தொழில்நுட்ப நிறுவனங் களில் வேலை கிடைக்கும். வங்கிகள், இன்சூ ரன்ஸ் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புக்கான சாத்தியங்கள் உண்டு. தமிழகத்தில் கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் இப் படிப்பை அளிக்கிறது. 

வேளாண் தகவல் தொழில்நுட்பம் 

அக்ரிகல்ச்சர் இன்பர்மேசன் டெக்னாலஜி படிப்பும், வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புதான். இந்த பட்டப்படிப்பானது 4 ஆண்டுகள் கொண்டது. வேளாண் துறையிலும் தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. விவசாய உற்பத்தி, உணவு, மக்கள் தொகை பெருக்கம் ஆகிய காரணங்களால் இந்த துறை மேலும் முக்கியத் துவத்தை பெறும். இந்தியாவில் உள்ள 65 சதவீதம் பேருக்கு விவசாயம் தான் தொழிலாக இருக்கிறது. கிராமங்களில் வசித்து கொண்டிருப் பவர் விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், கல்வி போன்ற விஷயங்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு தக வல்கள் சென்றடைவதற்கு தொழில்நுட்பம் உத வுகிறது. விவசாயத்திலும், கிராமப்புற முன்னேற் றத்திலும் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கினைப் பற்றியும், விவசாயம் சந்திக்கும் பிரச்சினை, அதை தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காண்பது பற்றியும் மாணவர்கள் இந்த படிப்பில் அறிந்துகொள்ளலாம். இந்த படிப்பில் அக்ரிகல்சர் இன்பர்மேஷன் சிஸ்டம், ஆப் ஜெக்ட் ஓரியன்டட் புரோகிராமிங், டெவலப் மென்டல் எக்னாமிக்ஸ், கம்ப்யூட்டர் நெட் வொர்க் அண்டு வில்லேஜ் ஏரியா நெட்வொர்க், பி.சி அண்டு அப்ளிகேஷன்ஸ் இன் ரூரல் ஏரியாஸ், ரிமோட் சென்சிங் அண்டு ஜி.அய்.எஸ்., மல்டிமீடியா டெக்னாலஜி, பார்ம் ஆட்டோ மேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம் அண்டு டேட்டா பேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்ற பாடங் களை கற்றுத்தருகின்றனர். கோவை, தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் அக்ரிகல்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி, பி.டெக்., படிப்பாக வழங்கப்படுகிறது.

வேளாண்துறையின் பல படிப்புகள்

வேளாண்துறையில் இது மட்டுமல்லாமல் அக்ரிகல்சுரல் மார்க்கெட்டிங், அக்ரி பைனான்ஸ், அக்ரிகல்சுரல் பாலிசி, அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட், அக்ரிகல்சுரல் ரிசர்ச் அண்ட் ஸ்டாட்டிஸ் டிக்ஸ், சாயில் சயின்ஸ், புட் சயின்ஸ் போன்ற பட்டப்படிப்புகளும் வேளாண் துறையில் முக்கி யத்துவம் வாய்ந்த பட்டப்படிப்புகளாக இருக் கின்றன. அக்ரிகல்சர் அண்ட் எக்ஸ்டென்சன் எஜூகேசன், அக்ரிகல்சரல் ரிசர்ச் அண்ட் அனலைசிஸ், அக்ரிகல்சர் எஜுகேசன் டெக் னிக்ஸ் போன்ற முதுநிலை படிப்புகளும் உள் ளன. பல்வேறு ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன. பல்வேறு படிப்புகள் டிப்ளமோ படிப்புகளாகவும் வழங்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் உள்ள ஏராளமான கல்வி நிறுவனத்தில் இந்த பட்டப் படிப்புகளை பெரும் பாலும் 3 முதல் 4 ஆண்டுகள் வரை படிக்கலாம். இந்த பிரிவினை தேர்வு செய்து படிப்பவர்களுக்கு நல்ல சிறப்பான எதிர்காலம் உள்ளது. 

வேலை

வேளாண் ஆராய்ச்சியாளர், வேளாண் தொழில்நுட்பவல்லுனர், கள ஆய்வாளர், பசுமை வீடு தொழில்நுட்பவல்லுனர், பண்ணை மேலாளர், வேளாண் விற்பனை பிரதிநிதி, வேளாண் உணவுப்பொருள் கிட்டங்கி அதிகாரி, வேளாண் கல்வியாளர், திட்ட வரைவாளர், மண்வள ஆய்வாளர், வேளாண் தொழில் வல்லுனர், வேளாண் நிர்வாக அதிகாரி என பலவிதமான பொறுப்புகளுக்குச் செல்லலாம். அரசு மற்றும் தனியார் வேளாண் நிறுவனங்கள், வேளாண் கருவி தயாரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் போன்றவற்றிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.


பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

 

சென்னை, டிச.8- பொறியியல் கல்லூரி களில் தமிழ்ப் பாடங்களை பயிற்றுவிக்க, தமிழ் இலக்கியப் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 510 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போதைய தொழில் நுட்பச் சூழலுக்கேற்ப பொறியியல் பாடத் திட்டம் மாற்றப்பட்டு, நடப்புக் கல்வியாண்டு (2022-2023) முதல் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, இளநிலை பொறியியல் படிப்புகளில் முதல் 2 பருவங்களில் (செமஸ்டர்) தமிழர் மரபு, தமிழரும்-தொழில்நுட்பமும் ஆகிய 2 கட்டாயப்பாடங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன. அதற்கான பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு, கல்லூரிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பாடங் களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி விவரங்களை அண்ணா பல் கலைக் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலை. பதிவாளர் ஜி.ரவிக்குமார், அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:

தமிழர் மரபு, தமிழரும்-தொழில்நுட் பமும் ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்க தமிழ் இலக்கியத்தில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் தகுதியானவர்கள். மேலும், பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி படித்த அறிவியல், பொறியியல், தொழில் நுட்பம் மற்றும் மனிதநேயப் பாடங்களின் பேரா சிரியர்களும் இந்தப் பாடங்களை பயிற்று விக்கலாம். இவ்வாறு சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை

கொழும்பு,டிச.8- இலங்கையின் வடக்கு யாழ்ப் பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன், நலிவடைந்த பொருளா தாரத்தை மீட்டெடுக்கவும் உதவி யாக இருக்கும். இலங்கைக்கு அந்நிய செலா வணியை ஈட்டித் தரும் முக்கிய ஆதாரமாக சுற்றுலாத்துறை விளங்குகிறது. எனினும், 2020 ஆம் ஆண்டில் கரோனா தொற்று பரவி, சுற்றுலாத் துறையை கடுமையாக முடக் கியது. அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக் கடிக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. தற்போது யாழ்ப்பாணத்தின் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமானங்கள் விரைவில் இயக்கப்படும், அநேகமாக டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விமான சேவை தொடங்கப் படும் என இலங்கை விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலா டி.சில்வா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலைப் படிப்பு / மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை

 

  


சென்னை,டிச.8- இந்தியாவில் முதல்முறையாக, 23 அரசு மருத் துவக் கல்லூரிகளில் அவசர மருத்து வத்துக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவசர மருத்துவம் தொடர்பான முதுநிலை மருத்துவப் படிப்பை (எம்டி) சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (7.12.2022) தொடங்கி வைத்தார். பின்னர், விஷ முறிவு மருத்துவ சிகிச்சை குறித்த கையேட்டை வெளியிட்டார். 

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறிய தாவது: இந்தியாவிலேயே முதல்முறையாக அவசர மருத்து வத்துக்கான பிரத்யேக துறை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட் டுள்ளது. அதன்படி அவசர மருத்துவத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு எனும் புதிய பாடப்பிரிவு தொடங்கப்படுகிறது. இதுவரை 85 இடங்களுக்கு ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்துள்ளது. இதில் ஒன்றிய, மாநில அரசுக்கு தலா 50 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 5 இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இந்த முதுகலை பட்டப்படிப்பு உருவாக்குவதற்கு பல்வேறு இணைத்துறைகளை மேம்படுத்துவது அவசிய மாக இருந்தது, அதனால்தான் 21 தலைக்காய சிறப்பு மருத்துவ நிபுணர்கள், 5 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், 6 வாஸ்குலார் அறுவை சிகிச்சை மருத்து வர்கள், 10 இதய அறுவைசிகிச்சை மருத்துவர்கள், 

49 மயக்கவியல் மருத்து வர்கள் பணியிடங்கள் புதியதாக உருவாக்கப்பட்டு நிரப்பப் பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இந்த முயற்சி ஒன்றிய அரசால், குறிப்பாக நிட்டி ஆயோக் நிர்வாகத்தால் பாராட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தியா முழுமைக்கும் இளங்கலை மருத்துவம் படிப்ப வர்களுக்கு இந்த பட்டப் படிப்பு அவசியம் என்று உணர்த்தப்பட்டு, கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 

ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை

அமைச்சர் சி.வெ.கணேசன் தகவல்

மதுரை,டிச.8- தமிழ்நாட்டில் 68 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியதன் மூலம், ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக தொழிலாளர் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார். 

மதுரையில் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் மருந்தகம் (இஎஸ்அய்) பழங்காநத்தம், மணி நகரத் தில் உள்ளது. இவற்றில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று (7.12.2022) ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கை கழுவும் இடம் மோசமாக இருந்தது. அதை அவரே சுத்தப்படுத்தினார். பின்னர் அவர் கூறுகை யில், கடந்த அதிமுக ஆட்சியில் அளவுக்கு அதிகமாக மருந்துகள் கொள்முதல் செய்து முறைகேடு செய்தவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.

ஒப்பந்த தொழிலாளர்களின் குறைவான ஊதியம் குறித்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் மொத்தம் 67 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்கிற சொல்லை போக்க வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய கனவு திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர் கூறியுள்ளார்.  இதுவரை தமிழ் நாட்டில் 68 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று அதன் மூலமாக ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 234 சட்டமன்றத் தொகு திகளிலும் வித்தியாசம் பாராமல் வேலைவாய்ப்பு முகாமை நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், என்றார்.