வியாழன், 8 டிசம்பர், 2022

இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலைப் படிப்பு / மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை

 

  


சென்னை,டிச.8- இந்தியாவில் முதல்முறையாக, 23 அரசு மருத் துவக் கல்லூரிகளில் அவசர மருத்து வத்துக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவசர மருத்துவம் தொடர்பான முதுநிலை மருத்துவப் படிப்பை (எம்டி) சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (7.12.2022) தொடங்கி வைத்தார். பின்னர், விஷ முறிவு மருத்துவ சிகிச்சை குறித்த கையேட்டை வெளியிட்டார். 

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறிய தாவது: இந்தியாவிலேயே முதல்முறையாக அவசர மருத்து வத்துக்கான பிரத்யேக துறை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட் டுள்ளது. அதன்படி அவசர மருத்துவத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு எனும் புதிய பாடப்பிரிவு தொடங்கப்படுகிறது. இதுவரை 85 இடங்களுக்கு ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்துள்ளது. இதில் ஒன்றிய, மாநில அரசுக்கு தலா 50 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 5 இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இந்த முதுகலை பட்டப்படிப்பு உருவாக்குவதற்கு பல்வேறு இணைத்துறைகளை மேம்படுத்துவது அவசிய மாக இருந்தது, அதனால்தான் 21 தலைக்காய சிறப்பு மருத்துவ நிபுணர்கள், 5 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், 6 வாஸ்குலார் அறுவை சிகிச்சை மருத்து வர்கள், 10 இதய அறுவைசிகிச்சை மருத்துவர்கள், 

49 மயக்கவியல் மருத்து வர்கள் பணியிடங்கள் புதியதாக உருவாக்கப்பட்டு நிரப்பப் பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இந்த முயற்சி ஒன்றிய அரசால், குறிப்பாக நிட்டி ஆயோக் நிர்வாகத்தால் பாராட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தியா முழுமைக்கும் இளங்கலை மருத்துவம் படிப்ப வர்களுக்கு இந்த பட்டப் படிப்பு அவசியம் என்று உணர்த்தப்பட்டு, கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 

ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை

அமைச்சர் சி.வெ.கணேசன் தகவல்

மதுரை,டிச.8- தமிழ்நாட்டில் 68 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியதன் மூலம், ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக தொழிலாளர் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார். 

மதுரையில் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் மருந்தகம் (இஎஸ்அய்) பழங்காநத்தம், மணி நகரத் தில் உள்ளது. இவற்றில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று (7.12.2022) ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கை கழுவும் இடம் மோசமாக இருந்தது. அதை அவரே சுத்தப்படுத்தினார். பின்னர் அவர் கூறுகை யில், கடந்த அதிமுக ஆட்சியில் அளவுக்கு அதிகமாக மருந்துகள் கொள்முதல் செய்து முறைகேடு செய்தவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.

ஒப்பந்த தொழிலாளர்களின் குறைவான ஊதியம் குறித்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் மொத்தம் 67 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்கிற சொல்லை போக்க வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய கனவு திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர் கூறியுள்ளார்.  இதுவரை தமிழ் நாட்டில் 68 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று அதன் மூலமாக ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 234 சட்டமன்றத் தொகு திகளிலும் வித்தியாசம் பாராமல் வேலைவாய்ப்பு முகாமை நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக