சனி, 9 மார்ச், 2024

ஓய்வு பெற்ற இஎஸ்அய் காப்பீடுதாரர்களுக்கும் மருத்துவப் பலன்கள் நீட்டிப்பு

 


விடுதலை நாளேடு

இஎஸ்அய் கார்ப்பரேஷனின் 193ஆவது கூட்டம் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் மருத்துவ உதவிகளை மீட்பது குறித்து விவாதித்தது.

இஎஸ்அய் காப்பீடுதாரராகவே ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு இப்போது மருத்துவ உதவி வழங்கப்பட்டு வருகிறது. மாதம் 21 ஆயிரம் ரூபாய்வரை ஊதியம் பெறுபவர் மட்டுமே இஎஸ்அய் காப்பீடுதாரராக இருக்க முடியும்.
அந்த உச்சவரம்பைத் தாண்டி ஊதியம் உயர்ந்ததால், திட்டத்திலிருந்து விடுபட்டு, அதன் பிறகு ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் பொருந்தும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே மருத்துவத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
1.4.2012க்குப் பிறகு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஎஸ்அய் காப்பீடு உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
1.4.2017 அன்று அல்லது அதற்குப் பிறகு ஓய்வு – விருப்ப ஓய்வு பெற்று இருக்க வேண்டும்.
ஓய்வு பெறும் போது ரூபாய் 30 ஆயிரத்துக்கு மேற்படாமல் ஊதியம் பெற்றிருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக