திங்கள், 6 நவம்பர், 2023

காசா தொழிலாளர்கள் கைதிகள் போல சித்திரவதை செய்து இஸ்ரேலிலிருந்து வெளியேற்றம்!

 

 டெல் அவிவ்,நவ.5- இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையில் உள்ள காசா பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீன தொழிலாளர்களை கடந்த 3 ஆம் தேதிமுதல் வெளியேற்றி வருகிறது இஸ்ரேல் ராணுவம்.  

அக்டோபர் 7 ஆம் தேதி, தெற்கு   காசா மீது இஸ்ரேல்  தாக்கு தலை துவங்கிய  பின்னர், இஸ்ரேலிய காவல்துறை   பாலஸ்தீன தொழிலாளர்களை  கைது செய்து அடைத்து வைத்து  கால்களில் எண்கள் பொறிக்கப்பட்ட பட்டையை கட்டி  மோசமாக சித்ர வதை செய்து குற்றவாளிகளைப்  போல நடத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மேற்கு கரையில் பல பாலஸ்தீன தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலரும்  காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் காசாவைச் சேர்ந்த பாலஸ்தீன  தொழிலா ளர்கள்,  இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ   எக்ஸ் ( ட்விட்டர்) தளத்தில் கடந்த 2 ஆம் தேதி இரவு தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து சுமார் 7000 தொழிலாளர்கள் நடந்தே வடக்கு காசா சென்றதாக பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  காசாவிற்கு சென்ற தொழிலாளர்கள்  “நாங்கள் அவர்களுக்கு சேவை செய்தோம்,வீடுகளில், உணவகங்களில் மற்றும் சந்தை களில்  அவர்களுக்காக வேலை செய்தோம்,அவர்கள் எங்களுக்கு குறைந்த சம்பளமே கொடுத்தார்கள், நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம்,” என தங்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக