செவ்வாய், 7 நவம்பர், 2023

ஜாதி, இனம், நிறம், பிறப்பிடம், கலாச்சார அடையாளம் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது (பதவி உயர்வு வழக்கு ஆணை)


  

உயர் நீதிமன்றம் உத்தரவு

29

மதுரை, நவ. 4- நெல்லை யைச் சேர்ந்த காவலர் ஹாஜாஷெரீப், உயர் நீதி மன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நான் தமிழ்நாட்டில் கடந்த 2007-2008 ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணித் தேர்வில் வெற்றி பெற் றேன். என்னுடன் தேர் வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கிய நிலையில், நான் மனித நீதி பாசறை என்ற அமைப்பின் உறுப்பின ராக இருப்பதால் எனக் குப் பணி நியமன ஆணை வழங்க மறுத்துவிட்டனர். பணி நியமனம் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். எனக்கு பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட் டது. அதன்பிறகும் பணி வழங்காததால் மீண்டும் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கிலும் எனக் குப் பணி வழங்க உத்தர விட்டதால் 2013இல் மணிமுத்தாறு பட்டாலி யன் காவலராக நியமிக் கப்பட்டேன். 

பின்னர் எனக்கு 2007-2008 ஆண்டில் தேர்வானவர்களுடன் சேர்த்து பணி மூப்பு மற்றும் பதவி உயர்வு கோரி மனு அளித்தேன். என் கோரிக்கையை நிராகரித்து கமாண்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவை ரத்து செய்து எனக்கு பணி மூப்பு, பதவி உயர்வு, பணப்பலன் வழங்க உத்தரவிட வேண் டும்" என்று கூறப்பட்டி ருந்தது.

இம்மனுவை நீதிபதி பட்டு தேவானந்த் விசா ரித்தார். அரசு வழக்குரை ஞர் வாதிடுகையில், "பணி மூப்பு என்பது நிரந்தர பணியில் சேர்ந்த நாளை கணக்கிட்டு தான் வழங் கப்படும். முன்தேதியிட்டு பணி மூப்பு கோர முடியாது" என்றார். 

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "இந்த வழக்கில் அதிகாரி கள் சிறுபான்மையினரை சமூக விரோதிகளாக சித் தரித்து அவர்களின் உரி மைகள் மற்றும் வளர்ச் சியை தடுக்கும் உள்நோக் கத்துடன் செயல்படுவ தாக மனுதாரர் வழக்கு ரைஞர் கூறியதை புறக் கணிக்க முடியாது. மனு தாரரை போன்றவர்க ளின் வேதனையை போக் குவது நீதிமன்றத்தின் கடமை. மனிதர்களாக பிறக்கும் யாவருக்கும் தான் எந்த வாழ்க்கைப் பாதையில் பயணிக்க வேண்டும் என்பதை தீர் மானிக்கும் உரிமை உண்டு. பெற்றோர்கள், பிறக்கும் இடம், இனம், நிறம், மொழி, ஜாதியை தேர்வு செய்து பிறக்க முடியாது. 

இங்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் யாரும் இல்லை. அனைவருக்கும் சமவாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும். விருப்பு, வெறுப்பு இல்லாமல் திறனை வெளிக்கொண்டு வருவதற்கான வாய்ப்பு களை வழங்க வேண்டும். அப்படி செய்தால் தான் அனைவருக்கும் சமூகத் திற்காக பணிபுரியும் வாய்ப்புகள் கிடைக்கும். ஜாதி, இனம், நிறம், பிறக்கும் இடம், கலாச்சார அடையாளங்கள் அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டக் கூடாது. நாட்டின் நல னுக்கு எதிரானவர்கள், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்ப வர்கள் என மோசமான நடத்தை கொண்டவர் களை மட்டுமே தடுக்க வேண்டும். அப்படி எந்த தடையும் இல்லாத நிலை யில் ஒருவருக்கு பணி மற்றும் பதவி உயர்வு வழங்குவதை தடுக்கக் கூடாது. 

பொறுப்பான குடி மகன்களாக இருப்பவர்க ளுக்கு தடை விதிக்காமல், தேசப்பணியில் தங்களின் பங்களிப்பை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் வழங்க வேண்டும். இந்த 21ஆவது நூற்றாண்டில் அனைவரின் அணுகு முறையில் மாற்றம் வர வேண்டும். குறிப்பாக ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகளின் அணுகு முறையில் மாற்றம் வர வேண்டும். இல்லாவிட் டால் மனுதாரர்களை போன்றவர்கள் பாதிக்கப் படுவர்.

மனுதாரர் 5 ஆண்டு தாமதமாக பணியில் சேர்ந்ததற்கு மனுதாரர் காரணம் அல்ல. அதி காரிகள் தான் காரணம். எனவே, மனுதாரருக்கு 2007-2008 ஆண்டிலி ருந்து பணி மூப்பு வழங்க மறுத்து பிறப்பித்த உத்த ரவு ரத்து செய்யப்படுகி றது. 

மனுதாரருக்கு 2007--2008 ஆண்டில் பணியில் சேர்ந்தவர்களுடன் பணிமூப்பு வழங்க வேண்டும். பணி மூப்பை 4 வாரத்தில் நிர்ணயம் செய்ய வேண்டும்" என்று உத்தரவில் கூறப்பட்டுள் ளது.

இந்துசமய அறநிலையத்துறை பணி நியமன ஆணை அமைச்சர் பி.கே.சேகர் பாபு வழங்கினார்

  

 3


சென்னை, அக். 31-  சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவ லகத்தில் தமிழ்நாடு அர சுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டு இந்து சமய அறநிலையத்து றைக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ள 32 சுருக் கெழுத்துத் தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று (30.10.2023) வழங்கினார்.

பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தி யாளர்களிடம் கூறியதா வது: 

முதலமைச்சர் அரசுப் பணியாளர் தேர்வா ணையம் மூலம் பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 10,205 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி தொடங்கி வைத்தார். 

அதன் தொடர்ச்சி யாக இந்து சமய அற நிலையத்துறையில் செயல் அலுவலர் (நிலை -1) 25 நபர்களும், 81 இள நிலை உதவியாளர்கள், 100 தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணை களை வழங்கியதை தொடர்ந்து இன்றைய தினம் 32 சுருக்கெழுத்துத் தட்டச்சர்கள், செயல் அலுவலர் (நிலை -4) நிலையிலான 2 நபர்கள் என மொத்தம் 240 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 539 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப் பட்டுள்ளது. 

இத்துறையில் கருணை அடிப்படையில் 24 பணியாளர்களுக்கும், கோயில்களில் பணிபுரிந்து பணியின் போது இறந்த 100 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கும் பணி நிய மன ஆணைகள் வழங்கப் பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் 110 -விதியின் கீழ் 5 ஆண்டுகளுக்கு மேல் தற்காலிகமாக பணியாற்றிய 1,278 நபர் கள் பணி நிரந்தரம் செய் யப்பட்டுள்ளனர். 

மேலும், காலியாக உள்ள 151 பணியிடங் களை நிரப்புவதற்கு அர சுப் பணியாளர் தேர் வாணையத்திடமிருந்து பட்டியல் எதிர் நோக் கப்பட்டுள்ளது. ஆகவே காலிப்பணியிடங்களை நிரப்புவதும், துறையி னுடைய அன்றாட பணி கள் எந்த வகையிலும் தடைபடாமல் இருப் பதற்கும் பல்வேறு முயற் சிகளை துறையின் சார்பில் எடுத்து வரு கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் அதிகாரிகளுக்கு அமைச்சர் வலியுறுத்தல்

  

 1

சென்னை, அக். 31- தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழிற்சாலைகள் இயங்கு கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் அறி வுறுத்தி உள்ளார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாவட்ட வாரியாக நிலவும் சுற்றுச்சூழல் பிரச் சினைகள் தொடர்பாக மண்டல இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுட னான ஆலோசனைக் கூட்டம், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில், சுற்றுச்சூழல் துறை செயலர் சுப்ரியா சாஹூ முன்னிலையில் சென்னை கிண்டியில் உள்ள வாரிய அலுவல கத்தில் நேற்று (30.10.2023) நடை பெற்றது.

அப்போது, கேரளாவிலிருந்து சட்ட விரோதமாக திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதிகளில் கொட்டப்படும் மருத்துவக் கழிவு கள், அபாயகரக் கழிவுகளை கண் காணிக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண் டும். கேரளத்துக்கு செல்லும் வாக னங்களிலும் ஜிபிஎஸ் டிராக்கிங் சிஸ்டம் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டிலுள்ள சிப்காட், சிட்கோ வளாகங்களை தொடர் ஆய்வு செய்து அவ்வளாகத்தினுள் அமைந்திருக்கும் பெரிய வகை (சிவப்பு) தொழிற்சாலைகள் சுற் றுச்சூழலுக்கு உகந்த புதிய மாற்று தொழில் நுட்பங்களுடன் இயங்கு கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். தங்கள் மாவட் டங்களில் அமைந்துள்ள கிரா னைட் குவாரிகளை தொடர் ஆய்வுசெய்து கண்காணிக்க வேண்டும்.

நகராட்சி பகுதிகளிலிருந்து வெளியேறும் அன்றாட கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் அரு கில் உள்ள நீர்நிலைகளை மாசுபடுத்து வதை சுட்டிக்காட்டி அந்நகராட்சி களில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க அறிவுறுத்த வேண்டும். நகராட்சி திடக்கழிவுகள் குப்பை கிடங்குகளில் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும். பயோ மைனிங் மூலம் திடக்கழிவுகளை பிரித்து அறிவியல் முறையில் கையாள தக்க நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள காய்கறி சந்தையிலி ருந்து வெளியேறும் திடக்கழிவு களை அறிவியல்முறையில் கையாண்டு மின்சாரம் தயாரித்தல் மற்றும் கரிம உரமாகமாற்றுதல் போன்ற நடவ டிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

திங்கள், 6 நவம்பர், 2023

பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளருக்கு ரூ. 33 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

 

மும்பை, நவ. 5- பாட்டா நிறுவனத் தின் ஷோரூமில் வேலை செய்த ஊழியர்கள், வேலை நேரம் நீட்டிக் கப்பட்டதை எதிர்த்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந் நிலையில், அந்த ஊழியர்களுக்கு ரூ. 33 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

2007-ஆம் ஆண்டு நட்டத்தில் இயங்குவதாக கூறிய பாட்டா ஷூ, காலணி நிறுவனம், மும்பை, தானே மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள தனது விற்பனையகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வார விடுமுறையை ரத்து செய்தது. தினமும்  இரவு 9.30 மணி வரை வேலை பார்த்தாக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.  வாரத்தில் ஏழு நாள்களும், அதுவும் 8 மணி நேரத்திற்கு அதிகமாகவும் உழைக்க வேண்டிய நிலையில், பெரும்  இன்னலை எதிர்கொண்ட தொழிலாளர்கள், நிறுவனத்தின் உத்தரவுக்கு எதிர்ப்புக் குரல் எழுப் பினர். அவ்வாறு எதிர்ப்பு தெரி வித்த அனைவரையும் வேலையி லிருந்து நீக்கி பழிவாங்கியது பாட்டா நிறுவனம். 

இதனால், ஆவேசமடைந்த தொழிலாளர்கள், தொழிற்சங்கம் மூலமாக தொழிலாளர் நடைமுறை கள் சட்டம் 1971 (விஸிஜிஹி & றிஹிலிறி சட்டம்) பிரிவு 28(1)இன் கீழ் தொழி லாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சேல்ஸ்மேன்கள் தரப் பில் நியாயம் இருப்பதாக கூறி, பாதி ஊதியத்துடன் மீண்டும் பணியமர்த்த உத்தரவிட்டது.  எனி னும் உயர்நீதிமன்றம் தொழிலாளர் கள், தங்கள் தரப்பில் எந்தத் தவ றும் இல்லாத நிலையில், 100 சத விகிதம் ஊதியத்துடன் பணியமர்த் தப்பட வேண்டும் என்றும் வாதிட் டனர். மறுபுறத்தில் பாட்டா நிறு வனமோ, ‘சேல்ஸ்மேன்கள்' என்ப வர்கள் தொழிலாளர்கள் கிடை யாது. என்றும், எனவே தொழிலா ளர் நலச்சட்டங்கள் இவர்களுக்கு பொருந்தாது என கூறியது. பாதிச் சம்பளமும் கூட தர முடியாது என்று தெரிவித்தது. ஆனால், ‘சேல்ஸ்மேன்கள்' என்பவர்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர் களை நிறுவனத்தின் பொருட்களை வாங்க வைக்கப் பாடுபடுகிறார்கள். எனவே, அவர்களும் தொழிலா ளர்கள்தான். அவர்களுக்கு தொழி லாளர் நலச்சட்டம் பொருந்தும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது. 

அத்துடன், சம்பவம் நடை பெற்று 17 ஆண்டுகள் ஆகிவிட்ட தால் தற்போது வழக்கு தொடுத்த வர்கள் மீண்டும் அதே பணியை செய்யும் சூழ லில் இல்லை. எனவே கடந்த 17 ஆண்டுகளாக அவர் களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் 75 சத விகிதத்தை கொடுக்கவேண்டும் என  உத்தர விட்டிருக்கும் மும்பை உயர்நீதி மன்றம், தொழிலாளர்கள் கடைசி யாக வாங்கிய ஊதியத்தைக் கணக் கிட்டு இந்த தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கை மொத்தம் 7 பேர் தொடுத்திருந்த நிலையில், நீதி மன்ற உத்தரவால் இவர்களுக்கு ரூ. 19.5 லட்சம் முதல் ரூ. 33 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இழப் பீடை 4 மாதத்திற்குள் வழங்க வேண்டும்; பாட்டா நிறுவனம் அதற்கு தவறும் பட்சத்தில் 8 சத விகிதம் வரை வட்டி  விதிக்கப் படும் என்றும் மும்பை நீதி மன்றம் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

காசா தொழிலாளர்கள் கைதிகள் போல சித்திரவதை செய்து இஸ்ரேலிலிருந்து வெளியேற்றம்!

 

 டெல் அவிவ்,நவ.5- இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையில் உள்ள காசா பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீன தொழிலாளர்களை கடந்த 3 ஆம் தேதிமுதல் வெளியேற்றி வருகிறது இஸ்ரேல் ராணுவம்.  

அக்டோபர் 7 ஆம் தேதி, தெற்கு   காசா மீது இஸ்ரேல்  தாக்கு தலை துவங்கிய  பின்னர், இஸ்ரேலிய காவல்துறை   பாலஸ்தீன தொழிலாளர்களை  கைது செய்து அடைத்து வைத்து  கால்களில் எண்கள் பொறிக்கப்பட்ட பட்டையை கட்டி  மோசமாக சித்ர வதை செய்து குற்றவாளிகளைப்  போல நடத்தப்பட்டுள்ளனர்.

மேலும் மேற்கு கரையில் பல பாலஸ்தீன தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலரும்  காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் காசாவைச் சேர்ந்த பாலஸ்தீன  தொழிலா ளர்கள்,  இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ   எக்ஸ் ( ட்விட்டர்) தளத்தில் கடந்த 2 ஆம் தேதி இரவு தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து சுமார் 7000 தொழிலாளர்கள் நடந்தே வடக்கு காசா சென்றதாக பாலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  காசாவிற்கு சென்ற தொழிலாளர்கள்  “நாங்கள் அவர்களுக்கு சேவை செய்தோம்,வீடுகளில், உணவகங்களில் மற்றும் சந்தை களில்  அவர்களுக்காக வேலை செய்தோம்,அவர்கள் எங்களுக்கு குறைந்த சம்பளமே கொடுத்தார்கள், நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம்,” என தங்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

வேளாண் துறையில் 213 பேருக்கு பணி ஆணை

 

 18

சென்னை, நவ.5 வேளாண்மை துறைக்கு, டி.என்.பி.எஸ்.சி., வழியே, 30 சுருக்கெழுத்து தட்டச்சர், 183 தட்டசர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர் களுக்கு, 31.11.2023 அன்று வேளாண் ஆணையரகத்தில் பணி நியமன ஆணைகளை, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார். 

கடந்த, 2021 -_2022ஆம் ஆண்டு நிலக்கடலை, பருத்தி, கரும்பு, மக்காச்சோளம், சோளம், கம்பு, துவரை, பச்சைப்பயறு, உளுந்து பயர்களில், மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற, 18 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கினார். பூச்சிக் கொல்லி மருந்து உற்பத்தி ஆலைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்களுக்கு, எளிய முறையில் இணையதளம் வழியே உரிமம் பெறுவதற்காக, பூச்சிக்கொல்லி உற்பத்தி மற்றும் விற்பனை உரிமம் மேலாண்மை இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதை அமைச்சர் துவக்கி வைத்தார்.