• Viduthalai
சென்னை, டிச. 17 தொழில் வணிக ஆணையரகத்தில் தொழில் வணிக துறையின் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் 15.12.2022 அன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச் சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர் ஆய்வுக் கூட்டத்தில் பேசும் போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் ழிணிணிஞிஷி, ஹிசீணிநிறி, றிவிணிநிறி ஆகிய 3 சுயதொழில் திட்டங்களின் மூலம் 17,000 புதிய தொழில் முனைவோர்கள் உருவாக் கப்பட்டுள்ளனர். சிறப்பாக செயல் பட்ட பொது மேலாளர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள் கிறேன். இருப்பினும், மகளிர், மாற்றுத் திறனாளிகள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட இனத்தவர்களிலிருந்து 2,741 பேருக்கு தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, நிர்ண யிக்கப்பட்ட இலக்கினை இந்த நிதி ஆண்டிற்குள் எய்த வேண்டும். மேலும், கிராமப்புற மகளிர் பயன்பெறும் வகை யில் ரூ.502 கோடியில் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ள உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டத்தினை ஊராட்சிகள் தோறும் செயல்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழில் வணிகத் துறையின் கீழ் செயல்படுத்தப் படும் 10 வகையான மானிய திட்டங் களின் கீழ் நடப்பு ஆண்டு 1618 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கு ரூ.85 கோடி மானியம் வழங்கப் பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள மானியங்களை இந்த நிதி ஆண்டிற்குள் வழங்கிட வேண்டும். தொழில் வளர்ச் சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களின் சமச்சீர் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட கூடுதல் முதலீட்டு மானியத்தினை முழுமையாக பயன்படுத்தி, புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க துரிதமாக நடவடிவக்கை மேற்கொள்ள வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில், செயல்படுத்தப்படும் ஒற்றைச் சாளர தகவு திட்டத்தின் கீழ் இதுவரை 18,916 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மீத முள்ள விண்ணப்பங்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கி தொழில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறுங்குழும திட்டத்தின் கீழ் கடலூர், முந்திரி பதப்படுத்துதல் குழுமம், கோயம்புத்தூர் பொள்ளாச்சி கயிறு குழுமம், திருப்பூர் உடுமலைப்பேட்டை கயிறு குழுமம், மதுரை, விளாச்சேரி பொம்மை குழுமம், தூத்துக்குடி ஆகாயத் தாமரை குழுமம், காஞ்சிபுரம் நரிக்குறவர் பாசி மணி குழுமம், திருப்பத்தூர் அகர்பத்தி குழுமம், தஞ்சாவூர் பேராவூரணி கயிறு குழுமம், சேலம் நுண்ணுட்ட சத்து குழுமம், கரூர் அமராவதி பேப்பர் போர்டு குழுமம், இராமநாதபுரம் நகை உற்பத்தியாளர் கூட்டமைப்பு குழுமம், இராஜ பாளையம் மகளிர் நெசவாளர் குழுமம், கோயம்புத்தூர் அலுமினியம் அச்சு வார்ப்பு குழுமம் ஆகிய 10 குழுமங்களுக்கு ரூ.58.38 கோடி மானியத்துடன் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இக்குழுமங் களுக்கான நிலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவாக கட்டடங்களை கட்டி, தேவைப்படும் இயந்திரங்களை கொள்முதல் செய்து இந்த நிதியாண் டிற்குள் குழுமங்கள் முழுமையாக செயல்பட நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும். ரூ.34.21 கோடி அரசு மானியத்துடன் ரூ.40.37 கோடி திட்ட மதிப்பீட்டில் முதலமைச்சர் தொடங்கப்பட்ட 5 கயிறு குழுமத் திட் டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தின் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்து தென்னை சாகுபடி விவசாயிகளுக்கும், தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிக் கும் நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, அரசு செயலாளர், அருண்ராய், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிண்டிக்கி பச்சாவ், சேகோசர்வ் மேலாண்மை இயக்குநர் பூங்கொடி, தொழில் வணிக கூடுதல் இயக்குநர் ஏகாம்பரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக