திங்கள், 20 பிப்ரவரி, 2023

தமிழ்நாடு அரசு அறிவித்த குறைந்த அளவு ஊதியம்- 01.04.2022 (Minimum wage data for Tamil Nadu as of 1-Apr-2022 )

 

Minimum wage data for Tamil Nadu as of 1-Apr-2022

SHOPS AND COMMERCIAL ESTABLISHMENTS w.e.f. 1-Apr-2022

notification   2.7mb dated 16-Mar-2022    Notes    Category Classification
 Zone AZone BZone C
CATEGORYBasicDADailyMonthlyPriorIncrBasicDADailyMonthlyPriorIncrBasicDADailyMonthlyPriorIncr

GENERAL CATEGORY 1

59604698409.921065810334324 (3.1%)591046984081060810284324 (3.2%)585846984061055610232324 (3.2%)

GENERAL CATEGORY 2

55484698394.08102469922324 (3.3%)54964698392.08101949870324 (3.3%)54464698390.15101449820324 (3.3%)

GENERAL CATEGORY 3

55074698392.5102059881324 (3.3%)54464698390.15101449820324 (3.3%)53874698387.88100859761324 (3.3%)

GENERAL CATEGORY 4

54574698390.58101559831324 (3.3%)53964698388.23100949770324 (3.3%)53384698386100369712324 (3.3%)

GENERAL CATEGORY 5

53964698388.23100949770324 (3.3%)53384698386100369712324 (3.3%)52754698383.5899739649324 (3.4%)

SECURITY GUARDS w.e.f. 1-Apr-2022

notification   2.7mb dated 16-Mar-2022    Notes    Category Classification
 Zone AZone BZone C
CATEGORYBasicDADailyMonthlyPriorIncrBasicDADailyMonthlyPriorIncrBasicDADailyMonthlyPriorIncr

MANAGER

140556554792.6520609174373172 (18.2%)129876554751.5819541165752966 (17.9%)112036554682.9617757151372620 (17.3%)

ASST MANAGER

129876554751.5819541165752966 (17.9%)122746554724.1518828159702858 (17.9%)104906554655.5417044145622482 (17%)

SUPERVISOR

104906554655.5417044145622482 (17%)97776554628.1216331139872344 (16.8%)87096554587.0415263131252138 (16.3%)

HELPER

87096554587.0415263131252138 (16.3%)83516554573.2714905128372068 (16.1%)76386554545.8514192122621930 (15.7%)

SENIOR SECURITY INSPECTOR/SECURITY OFFICER

129876554751.5819541165752966 (17.9%)122746554724.1518828159702858 (17.9%)104906554655.5417044145622482 (17%)

CORPORAL/SEARGENT/ ASSISTANT SECURITY OFFICER

115616554696.7318115154252690 (17.4%)108496554669.3517403148502553 (17.2%)101356554641.8816689142752414 (16.9%)

CHIEF WATCHMAN/SENIOR WATCHMAN

101356554641.8816689142752414 (16.9%)94226554614.4615976137002276 (16.6%)87096554587.0415263131252138 (16.3%)

SECURITY GUARD (MALE/FEMALE)

79966554559.621455014098452 (3.2%)76386554545.8514192122621930 (15.7%)72836554532.1913837119751862 (15.5%)

100 நாள் வேலைத் திட்டத்திற்கும் ஆபத்து! ஆண்டுதோறும் நிதியைக் குறைக்கும் ஒன்றிய அரசே! ஏழைகள் வயிற்றில் அடிக்காதே! அடிக்காதே!!

 ஒன்றிய அரசுக்குத் தமிழர் தலைவர் எச்சரிக்கை!

 100 நாள் வேலைத் திட்டத்திற்கும் ஆபத்து!

ஆண்டுதோறும் நிதியைக் குறைக்கும் ஒன்றிய அரசே!

ஏழைகள் வயிற்றில் அடிக்காதே! அடிக்காதே!!

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதியைக் குறைத்து வருகிறது ஒன்றிய பி.ஜே.பி. அரசு. இது கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் கொடுமை என்று குறிப்பிட்டு, கொடுங்கோல் ஆட்சி காரணமாக துன்புற்றுத் துடிக்கும் ஏழை மக்களின் கண்ணீர் என்பது கொடுங்கோல் ஆட்சியாளனின் செல்வத்தை அழிக்கும் படை என்று திருவள்ளுவர் கூறியதை எடுத்துக் காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அறிக்கை வருமாறு:

2023-2024 நிதியாண்டின் ஒன்றிய அரசால், மகாத்மா காந்தி  100 நாள் வேலை திட்டத்துக்கு ரூ. 60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, ரூ.73,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 21.6% குறைவாக ஒதுக்கப் பட்டுள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை

100 நாள் வேலைத் திட்டம் என்பது, கிராமப்புறங்களில் உள்ள குடும்பம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 100 நாள்கள் கூலி வேலைக் கான உத்தரவாதத்தை வழங்குகிறது. மேலும், இந்தத் திட்டம் என்பது தேவைக்கேற்ற திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ்,  ஊரக வேலை உறுதித்திட்ட அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அந்த நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தை இந்தத் திட்டம் அளிக்கிறது. 100 நாள்கள் வேலை தர அரசு (பஞ்சாயத்து அமைப்புகள்) தவறினால், பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாள்களுக்கு ஊதியத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக அரசு தர வேண்டும்.

100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ், 2022-2023 நிதியாண்டில் வேலை கேட்போரின் எண்ணிக்கை கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மீண்டும் செல்லத் தொடங்கியுள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நிதியைக் குறைக்கும் கொடூரம்!

100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியின வகுப்பினர், அனைத்துப் பிரிவுகளையும் சார்ந்த    பெண்களே அதிகளவு பயனடைந்து வருகின்றனர். எடுத்துக் காட்டாக, தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளில், கிட்டத்தட்ட 85-90% பேர் பெண்களாக உள்ளனர். அதே போன்று, தேசிய அளவில், உருவாக்கப்பட்ட வேலை நாள்களில், சுமார் 57.19% வேலைகள் பெண்களுக்குத் தரப்பட்டுள்ளன. எனவே, இந்த நிதியாண்டில்  100 நாள் வேலைத் திட்டத்தை  முறையாக செயல்படுத்த, ஊதியம் மற்றும் பொருள்கள் வழங்குவதற்கான நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில்,  100 நாள் வேலை திட்டத்துக்கு 21.6% குறைவாக நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது. 

கழுதை தேய்ந்து கட்டெறும்பா?

2021 - 2022 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அந்தத் திட்டத்திற்கு 98,467.85 கோடி ஒதுக்கப்பட்டது, 2022-2023 ஆம் ஆண்டு   ரூ.73 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டது. சமீபத்திய நிதிநிலை அறிக்கையில், அதற்கான நிதியை ரூ.60 ஆயிரம் கோடி யாகக் குறைத்திருக்கிறார்கள். இதில் இன்னும் கொடுமை என்ன வென்றால், மாநில அரசும் குறிப்பிட்ட அளவு நிதி அளிக்கவேண்டும் என்று ஒன்றிய அரசு கூறியிருப்பதுதான். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை!

காங்கிரஸ் தலைவர் கருத்து

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், 

‘ஒன்றிய பட்ஜெட்டில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு நிதி 33 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ‘‘இந்தத் திட்டம் வேலைவாய்ப்பு வழங்குவதற்கானது அல்ல'' என்று ஒன்றிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.  

இந்தத் திட்டத்தின் கீழ், 100 சதவிகிதம் ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்படும் பணிக்கு 40 சதவிகித நிதியை மாநிலங்கள் வழங்க வேண்டுமாம். இந்தத் திட்டத்தின் மீது ஒன்றிய அரசு கோடரியை பயன்படுத்துகிறது’ என்று கடுமையாக விமர்சிர்த் துள்ளார் காங்கிரஸ் தலைவர் கார்கே.

100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம், ஒருதேவை- உந்துதல் திட்டம் மற்றும் குறிப்பாக ஏழை மாநிலங்களில் முக்கியமானது மற்றும் தனிப்பட்ட மாநிலங்கள் மீது பொறுப்பை சுமத்துவதற்கு பதிலாக அதன் வலுவான நிதியை உறுதி செய்வது  ஒன்றிய அரசின் கடமையாகும். ஏழைகளின் வேலை செய்யும் உரிமையை வழங்குவதில் அதன் திறனை உணர்ந்து, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் மீதான அணுகுமுறையை அரசாங்கம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்கிறது ஹிந்து தலையங்க செய்தி!

100 நாள் வேலை திட்டம் என்று அது அழைக்கப்பட்டாலும் மிகக் குறைவாக நிதி ஒதுக்கப்படுவதால் இதில் பதிவு செய்துகொண்டு வேலை செய்யும் குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக ஆண்டுக்கு 20 நாள்கள் தான் வேலை கிடைக்கிறது. மேலும் நிதி குறைக்கப்பட்டு இருப்பதால் 10 நாள்களுக்குக் கூட வேலை கொடுக்க முடியாது.

கிராமப்புற ஏழை மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மோடி அரசு  அழித்துக்  கொண்டிருக்கிறது இந்த அரசு. கிராமப்புற ஏழைகளின் வயிற்றில் அடிப்பதாகும்.

பலதரப்பிலும் கண்டனக் குரல்!

இது குறித்து கேரளாவின் நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் கூறுகையில், "நாடு மிக மோசமான வேலைவாய்ப்புத் திண்டாட் டத்தை சந்திக்கும் இவ்வேளையில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த ஆண்டைப்போலவே வஞ்சித்துள்ளது. இந்தப் பற்றாக்குறை நிதியை வைத்துக் கொண்டு ஏற்கெனவே தொடங்கிய பணிகளைக் கூட முடிக்க இயலாது" என்று கூறினார்.

திருவள்ளுவரின் எச்சரிக்கை!

100 நாள் வேலைத்திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்காததால் ஏழைகள் வஞ்சிக்கப்படுவதாக தற்போது பரவலாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனக் குரல் எழுந்து வருகிறது.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை (குறள் 555)

கொடுங்கோல் ஆட்சியால் துன்புற்று வடிக்கும் மக்களின் கண்ணீர், ஆட்சியாளனின் செல்வத்தை அழிக்கும் படையாகும் என்கிறார் திருவள்ளுவர் - எச்சரிக்கை!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

18.2.2023

திங்கள், 6 பிப்ரவரி, 2023

தமிழ்நாட்டில் 17,000 புதிய தொழில் முனைவோர்கள் உருவாக்கம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

 

சென்னை, டிச. 17 தொழில் வணிக ஆணையரகத்தில்  தொழில் வணிக துறையின் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம்  15.12.2022 அன்று குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச் சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெற்றது.

அமைச்சர்  ஆய்வுக் கூட்டத்தில் பேசும் போது, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் ழிணிணிஞிஷி, ஹிசீணிநிறி, றிவிணிநிறி ஆகிய 3 சுயதொழில் திட்டங்களின் மூலம் 17,000 புதிய தொழில் முனைவோர்கள் உருவாக் கப்பட்டுள்ளனர். சிறப்பாக செயல் பட்ட பொது மேலாளர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள் கிறேன். இருப்பினும், மகளிர், மாற்றுத் திறனாளிகள், சிறுபான்மையினர்,  தாழ்த்தப்பட்ட இனத்தவர்களிலிருந்து 2,741 பேருக்கு தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, நிர்ண யிக்கப்பட்ட இலக்கினை இந்த நிதி ஆண்டிற்குள் எய்த வேண்டும். மேலும், கிராமப்புற மகளிர் பயன்பெறும் வகை யில் ரூ.502 கோடியில் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ள உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான திட்டத்தினை ஊராட்சிகள் தோறும் செயல்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழில் வணிகத் துறையின் கீழ் செயல்படுத்தப் படும் 10 வகையான மானிய திட்டங் களின் கீழ் நடப்பு ஆண்டு 1618 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கு ரூ.85 கோடி மானியம் வழங்கப் பட்டுள்ளது. 

நிலுவையில் உள்ள மானியங்களை இந்த நிதி ஆண்டிற்குள் வழங்கிட வேண்டும். தொழில் வளர்ச் சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களின் சமச்சீர் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட கூடுதல் முதலீட்டு மானியத்தினை முழுமையாக பயன்படுத்தி, புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க துரிதமாக நடவடிவக்கை மேற்கொள்ள வேண்டும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைத்து அனுமதிகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில், செயல்படுத்தப்படும் ஒற்றைச் சாளர தகவு திட்டத்தின் கீழ் இதுவரை 18,916 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மீத முள்ள விண்ணப்பங்களுக்கு விரைவில் ஒப்புதல் வழங்கி தொழில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குறுங்குழும திட்டத்தின் கீழ் கடலூர், முந்திரி பதப்படுத்துதல் குழுமம்,  கோயம்புத்தூர் பொள்ளாச்சி கயிறு குழுமம், திருப்பூர் உடுமலைப்பேட்டை கயிறு குழுமம், மதுரை, விளாச்சேரி பொம்மை குழுமம், தூத்துக்குடி ஆகாயத் தாமரை குழுமம், காஞ்சிபுரம் நரிக்குறவர் பாசி மணி குழுமம், திருப்பத்தூர் அகர்பத்தி குழுமம், தஞ்சாவூர் பேராவூரணி கயிறு குழுமம், சேலம் நுண்ணுட்ட சத்து குழுமம், கரூர் அமராவதி பேப்பர் போர்டு குழுமம், இராமநாதபுரம் நகை உற்பத்தியாளர் கூட்டமைப்பு குழுமம், இராஜ பாளையம் மகளிர் நெசவாளர் குழுமம், கோயம்புத்தூர் அலுமினியம் அச்சு வார்ப்பு குழுமம் ஆகிய 10 குழுமங்களுக்கு ரூ.58.38 கோடி மானியத்துடன் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இக்குழுமங் களுக்கான நிலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவாக கட்டடங்களை கட்டி, தேவைப்படும் இயந்திரங்களை கொள்முதல் செய்து இந்த நிதியாண் டிற்குள் குழுமங்கள் முழுமையாக செயல்பட நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும். ரூ.34.21 கோடி அரசு மானியத்துடன் ரூ.40.37 கோடி திட்ட மதிப்பீட்டில் முதலமைச்சர்  தொடங்கப்பட்ட 5 கயிறு குழுமத் திட் டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தின் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடித்து தென்னை சாகுபடி விவசாயிகளுக்கும், தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிக் கும் நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக அமையும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

 இக்கூட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, அரசு செயலாளர், அருண்ராய், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்யன், தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்ரிண்டிக்கி பச்சாவ், சேகோசர்வ் மேலாண்மை இயக்குநர் பூங்கொடி, தொழில் வணிக கூடுதல் இயக்குநர் ஏகாம்பரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொழிலாளர் நலத்துறை சார்பில் அய்டிஅய், விடுதிக் கட்டடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்

 

சென்னை,டிச.17- தொழிலாளர் நலத் துறை சார்பில் ரூ.18.80 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு அய்டிஅய் கட்டடங்கள், விடுதிகள், மண்டல இணை இயக்குநர் அலுவலகம் ஆகிய வற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறு வதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும், தங்களது சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளவும் இயலும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் (அய்டிஅய்) தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால், நடத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட புதிய அய்டிஅய்க்களை தொடங்குதல், அவற் றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல் படுத்தி வருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் ரூ.7.06 கோடியிலும், திருவாரூர் மாவட்டம், கோட்டூரில் ரூ.7.46 கோடியிலும் புதிய அய்டிஅய் கட்டடங்கள் கட்டப்பட் டுள்ளன. அதேபோல், தருமபுரியில் ரூ.3.20 கோடியில் அய்டிஅய்யில் மகளிர் விடுதிக் கட்டடம், சென்னை, அம்பத்தூரில் ரூ.1.07 கோடியில் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான சென்னை மண்டல இணை இயக்குநர் (பயிற்சி) அலுவலகத்துக்கு புதிய கட்ட டம் ஆகியவையும் கட்டப்பட் டுள்ளன. மொத்தம் ரூ.18.80 கோடியில் கட்டப் பட்டுள்ள கட்டடங்களை முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.12.2022) காணொலியில் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, தொழிலாளர் துறை செயலர் முகமது நசிமுத்தின், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கொ.வீரராகவராவ் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.


திராவிடர் தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் (30.01.2023)

 


 

தருமபுரி மாவட்டம்

பெ.கோவிந்தராஜ் - மாவட்டத்தலைவர்

இரா.சேட்டு - மாவட்ட செயலாளர்

மு.சிசுபாலன் - மாவட்ட துணைத் தலைவர் 

அரங்க - கோவிந்தராஜ் - மாவட்ட துணை செயலாளர்

தே.சத்தியராஜ் - மாவட்ட அமைப்பாளர்

ஓசூர் மாவட்டம்

பாலகிருஷ்ணன் - மாவட்ட தலைவர்

பா.வெற்றிச்செல்வன் - மாவட்ட செயலாளர் 

மு.கோவிந்தன் -  மாவட்ட அமைப்பாளர்

கிருஷ்ணகிரி மாவட்டம்

சிவ.மனோகர் - மாவட்ட தலைவர்

சின்ராசு - மாவட்ட செயலாளர்

செ.ப.மூர்த்தி - மாவட்ட அமைப்பாளர்

சிவகங்கை மாவட்டம்

கே.வி.ஜெயராமன் - மாவட்ட தலைவர் 

தமிழ்வாணன் - மாவட்ட செயலாளர்

சேலம் மாவட்டம்

கே.எம்..கணேசன் - மாவட்ட தலைவர் 

ஜெ.கருணாகரன் - மாவட்ட செயலாளர்

பி.கதிர்வேல் - மாவட்ட அமைப்பாளர்

ஆத்தூர் மாவட்டம்

மு.மோகன்ராசு - மாவட்ட தலைவர்

மு.சங்கர் - மாவட்ட பொருளாளர்

பெ.ராசா - மாவட்ட அமைப்பாளர்

பெ.கூத்தம் - மாவட்ட செயலாளர்

தஞ்சாவூர் மாவட்டம்

செ.ஏகாம்பரம் - மாவட்டதலைவர்

த.சந்துரு - மாவட்ட செயலாளர்

எம்.முருகேசன் - மாவட்ட துணைத்தலைவர்

ஆர்.ராதாகிருஷ்ணன் - மாவட்ட துணைச்செயலாளர்

மு.சுரேசு - மாவட்ட அமைப்பாளர்

போட்டோ மூர்த்தி - மாவட்ட பொருளாளர்

திண்டுக்கல் மாவட்டம்

பெ.மகேந்திரன் - மாவட்ட தலைவர்

ஆனந்தமுனிராசன் - மாவட்ட செயலாளர்

சி.ராதாகிருஷ்ணன் - மாவட்ட துணைத்தலைவர்

கருப்பசாமி - மாவட்ட துணைச்செயலாளர்

தாராபுரம் மாவட்டம்

அ.அழகப்பன் - மாவட்ட தலைவர்

மல்லிகா செல்வரசு - மாவட்ட செயலாளர் 

திருப்பத்தூர் மாவட்டம்

எம்.ஆனந்தன் - மாவட்ட தலைவர்

ஆர்.பன்னீர்செல்வம் - மாவட்ட செயலாளர் 

கே.மோகன் - மாவட்ட அமைப்பாளர்

காஞ்சிபுரம் மாவட்டம்

ஆ.வெ. முரளி - மாவட்ட தலைவர் 

ச.வேலாயுதம் - மாவட்ட செயலாளர் 

கி.இளையவேள் - மாவட்ட பொருளாளர்

ராணிப்பேட்டை மாவட்டம்

எ.ஞானப்பிரகாசனம் - மாவட்ட தலைளர் 

ந.ரமேஷ் - மாவட்ட செயலாளர் 

இ.ஆறுமுகம் - மாவட்ட பொருளாளர்

ஈரோடு மாவட்டம்

பி.பி, கணேசன் - மாவட்ட தலைவர் 

செ.காமராசு - மாவட்ட செயலாளர் 

க.மணிகண்டன் - மாவட்ட பொருளாளர் 

இரா.பார்த்திபன் - மாவட்ட துணைத்தலைவர் 

வீ.தேவராஜ் - மாவட்ட துணைத்தலைவர் 

இரா.பாஸ்கர் - மாவட்ட துணைச்செயலாளர்

கோபிசெட்டிபாளைம் மாவட்டம்

பி.காசிவிஸ்வநாதன் - மாவட்ட தலைவர் 

எம். நந்தகுமார் - மாவட்ட செயலாளர்

புதுக்கோட்டை மாவட்டம்

சாமி.இளங்கோவன் - மாவட்ட தலைவர் 

அ.பத்மாநாபன் - மாவட்ட செயலாளர்

வேலூர் மாவட்டம்

பெ.தயாளன் - மாவட்ட தலைவர்

அறந்தாங்கி மாவட்டம்

சித்ரவேல் - மாவட்ட தலைவர்

கோவை மாவட்டம்

எஸ்.ஆனந்தசாமி - மாவட்ட தலைவர்

ஆர். வெங்கடாசலம் - மாவட்ட செயலாளர் 

முத்துமாலையப்பன் - மாவட்ட பொருளாளர்

திருச்சி மாவட்டம்

எம்.தமிழ்மணி - மாவட்ட தலைவர் 

பிரிட்டோமேரி - மாவட்ட செயலாளர் 

நேதாஜி - மாவட்ட துணைத்தலைவர் 

மணிவேல் - மாவட்ட துணைச்செயலாளர்

தேனி மாவட்டம்

சுருளி  - மாவட்ட தலைவர் 

செந்தில் - மாவட்ட செயலாளர்

மணப்பாறை மாவட்டம்

சி.எம்.எஸ்.ரமேஷ் - மாவட்ட தலைவர்

பாலமுருகன் - மாவட்ட செயலாளர் பொய்கைப்பட்டி

வடசென்னை மாவட்டம்

துரை.ராவணன் - மாவட்ட தலைவர்

மு.முருகன் - மாவட்ட செயலாளர்

சுமதிகணேசன் - மாவட்ட பொருளாளர் 

தென்சென்னை மாவட்டம்

ச.மாரியப்பன் - மாவட்ட தலைவர் 

ந.ராமச்சந்திரன் - மாவட்ட செயலாளர்

ர. அன்சர் - மாவட்ட அமைப்பாளர்

கி.சரவணன் - மாவட்ட துணைச்செயலாளர்

அ.திருமலை - மாவட்ட துணைத்தலைவர்

தாம்பரம் மாவட்டம்

ம.குணசேகரன் - மாவட்ட தலைவர் 

சண்.சரவணன் - மாவட்ட செயலாளர்

மணிகண்டன் - மாவட்ட அமைப்பாளர்

திருவள்ளூர் மாவட்டம்

கி.ஏழுமலை - மாவட்ட தலைவர்

இரா.அசோக்குமார் - மாவட்ட செயலாளர் 

ஜெகத். விஜயகுமார் - மாவட்ட பொருளாளர்

த.ஸ்டீபன் மாவட்ட அமைப்பாளர்

திருச்சி மண்டலம்

முபரக்அலி - மண்டல தலைவர் 

பாச்சூர் அசோகன்- மண்டல செயலாளர்

கரூர் மாவட்டம்

ராஜாமணி - மாவட்ட அமைப்பாளர் 

அரியலூர் மாவட்டம்

மதியழகன் - மாவட்ட தலைவர்

இளவரசன் - மாவட்ட செயலாளர்

டி.கருப்புசாமி - மாவட்ட அமைப்பாளர்

கன்னியாகுமரி மாவட்டம்

ச.கருணாநிதி - மாவட்ட அமைப்பாளர்

யுவானீஸ்-செயலாளர், அமைப்பு சாரா தொழிலாளரணி

மதுரை மாவட்டம்

செல்வம் - மாவட்ட அமைப்பாளர் 

போக்குவரத்துக்கழகம் - தலைவர் - மகேஷ்

பொதுச் செயலாளர் - ரகுராமன்

பொருளாளர் - முத்துக்கருப்பன்

காரைக்குடி மாவட்டம்:

சேகர் - எஸ்இடிசி செயலாளர்

தலைவர் - சூரியமூர்த்தி

இராமநாதபுரம் மாவட்டம்

க.விஜயகுமார் - மாவட்ட அமைப்பாளர்

புதுச்சேரி மாவட்டம்

வீர.இளங்கோவன் - மாநில தலைவர் 

கே. குமார் - மாநில செயலாளர்

கடலூர் மாவட்டம்

க.சேகர் - மாவட்ட தலைவர்

தமிழரசன் - மாவட்ட அமைப்பாளர்

த.மோகன் - மாவட்ட செயலாளர்

சிதம்பரம் மாவட்டம்

பி.ஆறுமுகம் - மாவட்ட அமைப்பாளர்

விருத்தாச்சலம் மாவட்டம்

பழனிச்சாமி (வேப்பூர்) - மாவட்ட அமைப்பாளர்

கும்பகோணம் மாவட்டம்

சோழபுரம் த.ஜில்ராஜ் - மாவட்ட தலைவர்

வலங்கைமான் தி.க.தினேஷ்குமார் ச.தலைவர்

உமையாள்புரம் கண்ணன் - செயலாளர் 

குமாரமங்கலம் த.சங்கர் - துணை செயலாளர்

திருநாகேஸ்வரம் சிவகுமார்- அமைப்பாளர்