வியாழன், 8 டிசம்பர், 2022

வேளாண்மை சார்ந்த படிப்புகளும், வேலைவாய்ப்புகளும்

 

 பிளஸ்-2 முடித்த மாணவர்களின் இறுதிக் கட்ட விருப்பப் பட்டியல்களுள் சில பாடப்பிரிவுகள் உண்டு. அவற்றுள் வேளாண்மைத்துறை சார்ந்த பாடப்பிரிவுகளும் அடங்கும். மருத்துவ பிரிவில் இடம் கிடைக்காத சில மாணவர்கள் தேர்வு செய்வது, வேளாண் படிப்பினை தான். இந்நிலையில் வேளாண்மை சார்ந்த படிப்புகளின் மீது மாணவர்களிடம் தற்போது ஆர்வம் அதி கரித்துள்ளது. இந்திய நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம் தான். 

மாணவர்கள் எதிர்காலத்தில் வளர்ச்சி நிலை யில் இருக்க, சில வேளாண் சார்ந்த படிப்புகளும், அவை வழங்கும் வேலைவாய்ப்புகள் விவ ரங்கள்:

வேளாண் பொறியியல்

இன்று விவசாயமும் தொழில்நுட்பம் ஆகி விட்டது. நாற்று நடுவது, களை பறிப்பது, அறு வடை போன்ற அனைத்திலும் அதற்கான இயந் திரங்கள் வந்துவிட்டன. அதனால் வேளாண் பொறியியல் முக்கியமான பட்டப் படிப்பாக விளங்குகிறது. இந்த வேளாண் பொறியியல் பட்டப் படிப்பு 4 வருட படிப்பாகும். மாணவர்கள் பிளஸ்-2 பொதுத் தேர்வில் எடுத்த மதிப் பெண்ணையும், அந்தந்த கல்வி நிறுவனங்கள் நடத்தும் தேர்வு மதிப்பெண்ணையும் அடிப் படையாக வைத்து இப்படிப்பிற்கான மாண வர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

பொறியியல் மாணவர் சேர்க்கை மூலம் இந்த படிப்பையும், நீங்கள் விரும்பும் கல்லூரியையும் தேர்வு செய்து கொள்ளலாம். விவசாயத்தில் பொறியியலையும், தொழில்நுட்பத்தையும் உப யோகப்படுத்தும் பணி வேளாண் பொறியாளர் களுடையது. வேளாண் பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு வேளாண் கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள், புட் பிராசசிங் நிறுவனங் கள், பாசனக் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்ற வேளாண் தொழில்நுட்ப நிறுவனங் களில் வேலை கிடைக்கும். வங்கிகள், இன்சூ ரன்ஸ் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்புக்கான சாத்தியங்கள் உண்டு. தமிழகத்தில் கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் இப் படிப்பை அளிக்கிறது. 

வேளாண் தகவல் தொழில்நுட்பம் 

அக்ரிகல்ச்சர் இன்பர்மேசன் டெக்னாலஜி படிப்பும், வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புதான். இந்த பட்டப்படிப்பானது 4 ஆண்டுகள் கொண்டது. வேளாண் துறையிலும் தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. விவசாய உற்பத்தி, உணவு, மக்கள் தொகை பெருக்கம் ஆகிய காரணங்களால் இந்த துறை மேலும் முக்கியத் துவத்தை பெறும். இந்தியாவில் உள்ள 65 சதவீதம் பேருக்கு விவசாயம் தான் தொழிலாக இருக்கிறது. கிராமங்களில் வசித்து கொண்டிருப் பவர் விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், கல்வி போன்ற விஷயங்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு தக வல்கள் சென்றடைவதற்கு தொழில்நுட்பம் உத வுகிறது. விவசாயத்திலும், கிராமப்புற முன்னேற் றத்திலும் தகவல் தொழில்நுட்பத்தின் பங்கினைப் பற்றியும், விவசாயம் சந்திக்கும் பிரச்சினை, அதை தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காண்பது பற்றியும் மாணவர்கள் இந்த படிப்பில் அறிந்துகொள்ளலாம். இந்த படிப்பில் அக்ரிகல்சர் இன்பர்மேஷன் சிஸ்டம், ஆப் ஜெக்ட் ஓரியன்டட் புரோகிராமிங், டெவலப் மென்டல் எக்னாமிக்ஸ், கம்ப்யூட்டர் நெட் வொர்க் அண்டு வில்லேஜ் ஏரியா நெட்வொர்க், பி.சி அண்டு அப்ளிகேஷன்ஸ் இன் ரூரல் ஏரியாஸ், ரிமோட் சென்சிங் அண்டு ஜி.அய்.எஸ்., மல்டிமீடியா டெக்னாலஜி, பார்ம் ஆட்டோ மேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம் அண்டு டேட்டா பேஸ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் போன்ற பாடங் களை கற்றுத்தருகின்றனர். கோவை, தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் அக்ரிகல்சர் இன்பர்மேஷன் டெக்னாலஜி, பி.டெக்., படிப்பாக வழங்கப்படுகிறது.

வேளாண்துறையின் பல படிப்புகள்

வேளாண்துறையில் இது மட்டுமல்லாமல் அக்ரிகல்சுரல் மார்க்கெட்டிங், அக்ரி பைனான்ஸ், அக்ரிகல்சுரல் பாலிசி, அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட், அக்ரிகல்சுரல் ரிசர்ச் அண்ட் ஸ்டாட்டிஸ் டிக்ஸ், சாயில் சயின்ஸ், புட் சயின்ஸ் போன்ற பட்டப்படிப்புகளும் வேளாண் துறையில் முக்கி யத்துவம் வாய்ந்த பட்டப்படிப்புகளாக இருக் கின்றன. அக்ரிகல்சர் அண்ட் எக்ஸ்டென்சன் எஜூகேசன், அக்ரிகல்சரல் ரிசர்ச் அண்ட் அனலைசிஸ், அக்ரிகல்சர் எஜுகேசன் டெக் னிக்ஸ் போன்ற முதுநிலை படிப்புகளும் உள் ளன. பல்வேறு ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன. பல்வேறு படிப்புகள் டிப்ளமோ படிப்புகளாகவும் வழங்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் உள்ள ஏராளமான கல்வி நிறுவனத்தில் இந்த பட்டப் படிப்புகளை பெரும் பாலும் 3 முதல் 4 ஆண்டுகள் வரை படிக்கலாம். இந்த பிரிவினை தேர்வு செய்து படிப்பவர்களுக்கு நல்ல சிறப்பான எதிர்காலம் உள்ளது. 

வேலை

வேளாண் ஆராய்ச்சியாளர், வேளாண் தொழில்நுட்பவல்லுனர், கள ஆய்வாளர், பசுமை வீடு தொழில்நுட்பவல்லுனர், பண்ணை மேலாளர், வேளாண் விற்பனை பிரதிநிதி, வேளாண் உணவுப்பொருள் கிட்டங்கி அதிகாரி, வேளாண் கல்வியாளர், திட்ட வரைவாளர், மண்வள ஆய்வாளர், வேளாண் தொழில் வல்லுனர், வேளாண் நிர்வாக அதிகாரி என பலவிதமான பொறுப்புகளுக்குச் செல்லலாம். அரசு மற்றும் தனியார் வேளாண் நிறுவனங்கள், வேளாண் கருவி தயாரிப்பு நிறுவனங்கள், உர நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் போன்றவற்றிலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.


பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

 

சென்னை, டிச.8- பொறியியல் கல்லூரி களில் தமிழ்ப் பாடங்களை பயிற்றுவிக்க, தமிழ் இலக்கியப் பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 510 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போதைய தொழில் நுட்பச் சூழலுக்கேற்ப பொறியியல் பாடத் திட்டம் மாற்றப்பட்டு, நடப்புக் கல்வியாண்டு (2022-2023) முதல் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, இளநிலை பொறியியல் படிப்புகளில் முதல் 2 பருவங்களில் (செமஸ்டர்) தமிழர் மரபு, தமிழரும்-தொழில்நுட்பமும் ஆகிய 2 கட்டாயப்பாடங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன. அதற்கான பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டு, கல்லூரிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பாடங் களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி விவரங்களை அண்ணா பல் கலைக் கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலை. பதிவாளர் ஜி.ரவிக்குமார், அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது:

தமிழர் மரபு, தமிழரும்-தொழில்நுட் பமும் ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்க தமிழ் இலக்கியத்தில் பட்டப் படிப்பை முடித்தவர்கள் தகுதியானவர்கள். மேலும், பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி படித்த அறிவியல், பொறியியல், தொழில் நுட்பம் மற்றும் மனிதநேயப் பாடங்களின் பேரா சிரியர்களும் இந்தப் பாடங்களை பயிற்று விக்கலாம். இவ்வாறு சுற்றறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை

கொழும்பு,டிச.8- இலங்கையின் வடக்கு யாழ்ப் பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சி பெறுவதுடன், நலிவடைந்த பொருளா தாரத்தை மீட்டெடுக்கவும் உதவி யாக இருக்கும். இலங்கைக்கு அந்நிய செலா வணியை ஈட்டித் தரும் முக்கிய ஆதாரமாக சுற்றுலாத்துறை விளங்குகிறது. எனினும், 2020 ஆம் ஆண்டில் கரோனா தொற்று பரவி, சுற்றுலாத் துறையை கடுமையாக முடக் கியது. அத்துடன், இலங்கையின் பொருளாதார நெருக் கடிக்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. தற்போது யாழ்ப்பாணத்தின் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமானங்கள் விரைவில் இயக்கப்படும், அநேகமாக டிசம்பர் 12ஆம் தேதிக்குள் விமான சேவை தொடங்கப் படும் என இலங்கை விமான போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபாலா டி.சில்வா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலைப் படிப்பு / மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை

 

  


சென்னை,டிச.8- இந்தியாவில் முதல்முறையாக, 23 அரசு மருத் துவக் கல்லூரிகளில் அவசர மருத்து வத்துக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவசர மருத்துவம் தொடர்பான முதுநிலை மருத்துவப் படிப்பை (எம்டி) சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (7.12.2022) தொடங்கி வைத்தார். பின்னர், விஷ முறிவு மருத்துவ சிகிச்சை குறித்த கையேட்டை வெளியிட்டார். 

அப்போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறிய தாவது: இந்தியாவிலேயே முதல்முறையாக அவசர மருத்து வத்துக்கான பிரத்யேக துறை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட் டுள்ளது. அதன்படி அவசர மருத்துவத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு எனும் புதிய பாடப்பிரிவு தொடங்கப்படுகிறது. இதுவரை 85 இடங்களுக்கு ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்துள்ளது. இதில் ஒன்றிய, மாநில அரசுக்கு தலா 50 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 5 இடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இந்த முதுகலை பட்டப்படிப்பு உருவாக்குவதற்கு பல்வேறு இணைத்துறைகளை மேம்படுத்துவது அவசிய மாக இருந்தது, அதனால்தான் 21 தலைக்காய சிறப்பு மருத்துவ நிபுணர்கள், 5 பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், 6 வாஸ்குலார் அறுவை சிகிச்சை மருத்து வர்கள், 10 இதய அறுவைசிகிச்சை மருத்துவர்கள், 

49 மயக்கவியல் மருத்து வர்கள் பணியிடங்கள் புதியதாக உருவாக்கப்பட்டு நிரப்பப் பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இந்த முயற்சி ஒன்றிய அரசால், குறிப்பாக நிட்டி ஆயோக் நிர்வாகத்தால் பாராட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்தியா முழுமைக்கும் இளங்கலை மருத்துவம் படிப்ப வர்களுக்கு இந்த பட்டப் படிப்பு அவசியம் என்று உணர்த்தப்பட்டு, கட்டாயமாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மெகா வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 

ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை

அமைச்சர் சி.வெ.கணேசன் தகவல்

மதுரை,டிச.8- தமிழ்நாட்டில் 68 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியதன் மூலம், ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக தொழிலாளர் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார். 

மதுரையில் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் மருந்தகம் (இஎஸ்அய்) பழங்காநத்தம், மணி நகரத் தில் உள்ளது. இவற்றில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று (7.12.2022) ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கை கழுவும் இடம் மோசமாக இருந்தது. அதை அவரே சுத்தப்படுத்தினார். பின்னர் அவர் கூறுகை யில், கடந்த அதிமுக ஆட்சியில் அளவுக்கு அதிகமாக மருந்துகள் கொள்முதல் செய்து முறைகேடு செய்தவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்கும்.

ஒப்பந்த தொழிலாளர்களின் குறைவான ஊதியம் குறித்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் மொத்தம் 67 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்கிற சொல்லை போக்க வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய கனவு திட்டத்தை நிறைவேற்ற முதலமைச்சர் கூறியுள்ளார்.  இதுவரை தமிழ் நாட்டில் 68 இடங்களில் மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று அதன் மூலமாக ஒரு லட்சத்து 11 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. 234 சட்டமன்றத் தொகு திகளிலும் வித்தியாசம் பாராமல் வேலைவாய்ப்பு முகாமை நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார், என்றார்.