செவ்வாய், 8 நவம்பர், 2022

வங்கி ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை சீரமைக்க வேண்டும் ஒன்றிய அரசுக்கு தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

 

திருச்சி, நவ. 8- வங்கி ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தைத் தாமதமின்றிச் சீர மைக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும் என இந்தியன் ஸ்டேட் வங்கியின் மேனாள் தொழிற்சங்கத் தலை வர்கள் கூட்டமைப் பின் (AFCCOM) நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டன.

திருச்சியில் 6.11.2022 அன்று நடைபெற்ற இக் கூட்டமைப்பின் நிர்வா கக் குழு கூட்டத் திற்கு இதன் தலைவர் எஸ்.பி. இராமன் தலைமை வகித் தார். துணைத் தலைவர் டி.வி.சந்திரசேகரன் முன் னிலை வகித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1986ஆம் ஆண்டு முதல் கடந்த 36 ஆண் டுகளாக குறைந்த ஓய்வூ தியத்தில் உடல் நலக் குறைவோடும், விண்ணை முட்டும் விலைவாசியோ டும் அய்ந்து லட்சத்துக்கு மேற்பட்ட வங்கி ஓய்வூதி யர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.  அவர்களில் ஓய்வூதிய தைத் தாமதமின்றி சீர மைத்து உயர்த்த இந்திய வங்கிகள் நிர்வாகத்துக் குத் தகுந்த வழிகாட்டு நெறிகளை ஒன்றிய அரசு வழங்க முன் வரவேண்டும்.

இந்திய ஸ்டேட் வங்கி ஓய்வூதியதாரர்கள் பெறும் தொகையை (Commutation Against Anticipatory Pension)  பத்து ஆண்டுகளுக்கு மட் டுமே பிடித்தம் செய்ய வேண்டும்.

கரோனா நோய் தடுப்பு காலத்தில் ரத்து செய்த மூத்த குடிமகக் களுக்கான ரயில் கட்டண பயண சலுகையை மீண் டும் தாமதமின்றி வழங்க ஒன்றிய அரசு முன் வர வேண்டும்.

நாற்பது ஆண்டு களாக தற்காலிகமாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட கிராமப்புற அஞ்சல் ஊழி யர்களை நிரந்தரமாக்கி பணி நிலைமைகளை வரை முறைப்படுத்திட ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

மரபணு மாற்றப்பட்ட கலப்பினக் கடுகுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் விதை உற்பத்திக்கும் வர்த் தக பயன்பாட்டுக்கும் அளித்த அனுமதியை ஒன்றிய அரசு திரும்பப் பெற்று நாட்டு நலனையும் விவசாயிகளையும் காப் பாற்ற முன் வரவேண் டும் என வலியுறுத்தி தீர் மானம் நிறை வேற்றப் பட்டுள்ளன.

இந்நிர்வாகக் குழு கூட்டத்தில் இச்சங்கத் தின் ஒருங்கிணைப்பாளர் எம்.கே.மூர்த்தி, மேனாள் பொதுச் செயலாளர் டி.சிங்காரவேலு, மதுரை எம்.முருகையா, திருச்சி என்.சுப்பிரமணியன், எம்.சந்திரா கில்பர்ட், வேலூர் ஆர்.லோகநா தன், கோயம்புத்தூர் எம். ரகுநாதன், திருவாரூர் என்.பாண்டுரங்கன், திருச்சி கே.வாசுதேவன், தஞ்சாவூர் வி.பூமிநாதன், மதுரை பரவை எஸ். பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஓய்வூதியர் வாழ்நாள் சான்றிதழ்: தமிழ்நாடு அரசாணை வெளியீடு

 

சென்னை, மே 25  ஓய்வூதியர்களுக் கான வாழ்நாள் சான்றிதழை, இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் பேங்க் மற்றும் இ-சேவா மய்யங்கள் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள் ளது. இதுதொடர்பான அர சாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா தொற்று பரவலை முன்னிட்டு, ஆண்டுதோறும் நடத் தப்படும் ஓய்வூதியர் தகவல் திரட்டும் பணிகளுக்கு 2020ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டு விலக்கு அளித்து உத்தர விடப்பட்டது. இந்நிலையில் தற் போது அது மீண்டும் அமலுக்கு வந்து, எளிமைப்படுத்தப்பட்டுள் ளது.அதன்படி, இனி பயோமெட்ரிக் சாதனத்தை பயன்படுத்தி ஜீவன் பிரமான் இணையதளம் மூலம் டி.எல்.சி. (எ) டிஜிட்டல் லைப் சான்றிதழ் (வாழ்நாள் சான்றிதழ்) பெறமுடியும். இந்திய அஞ்சல் வங்கியின் சேவைகளுடன் இந்த பயோமெட்ரிக் முறை வழியாக அப் டேட் செய்யும் வசதி இணைக்கப் பட்டுள்ளது. ஜீவன் பிரமான் இணையதளத்தில் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்நாள் சான்றிதழை பெற, தமிழ்நாடு வட்டத்தின் இந்திய அஞ்சல் ஜீவன் பிரமான் இணைய தளத்தில் போதுமான உள்கட்ட மைப்புகள் வசதிகள் செய்யப்பட் டுள்ளன.

இதை கூடுதலாக தகவல் திரட்டுவோரும் பெற முடியும். இவ்வசதிக்காக தமிழ்நாட்டில் 11,018 வங்கி அணுகல் புள்ளிகள் மற்றும் 14,723 வங்கி சேவை வழங்குநர்கள் உள்ளனர். சேவைகளை வழங்கு வதற்கு ஒரு டிஎல்சி-க்கு (வாழ்நாள் சான்றிதழ்) ரூ.70 வசூலிக்க முன்மொழிந்துள்ளனர்.ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியதாரர் ஓய்வூதியம் பெறுவோர் பெயர், ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் அய்.டி (பதிவு ஓய்வூதியம் வழங்கும் ஆணையத்துடன் ஆதார் எண்ணை ஏற்கனவே இணைத்திருக்க வேண் டும்), முகவரி, அலைபேசி எண் ஆகியவற்றின் விவரங்களை இந்திய அஞ்சல் கொடுப்பனவு வங்கியுடன் பகிரவும்.

நடப்பு ஆண்டு ஜூலை முதல், இவற்றை முறையாக திரட்டும் செயல்முறையை மேற்கொள்ளவும் அரசு அனுமதி அளிக்கிறது. தொடர்ந்து ஆகஸ்ட் மற்றும் செப் டம்பர் மாதம், ஓய்வூதியம் பெறு வோர் அவர்களின் வசதிக்கேற்ப சேவையை பெறலாம். ஜீவன் பிரமான் இணையதளம் மூலம் டிஜிட்டல் லைப் சான்றிதழ் பெற எண்ணுவோர், பின்வருபவனவற்றில் ஏதேனும் ஒன்றின் சேவை இடத்தை பயன்படுத்தி தங்களுக்கான சேவையை பெறலாம்.

அ) இந்திய அஞ்சல் கட்டண வங்கி கதவுடன் படி சேவை.

ஆ) இ-சேவா மய்யங்கள், பொது சேவை மையங்கள்.

இ) ஜீவன் பிரமான் போர்ட்ட லுடன் இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் சாதனம் கொண்ட ஓய்வூ தியர் சங்கங்களுடன் இணைக் கப்பட்ட இடங்கள் இப்படியாக இ-சேவா மய்யம், சிஎஸ்சி, ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் பயோ-மெட்ரிக் சாதனங்களை கொண்டிருப்பதால், வயதான ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதிய அலுவலகம், கருவூலங் களுக்கு நேரில் வந்து கூடுதல் சேவை களை செய்வதற்காக சிரமப்படுவதை தவிர்க்க முடியும்.

ஓய்வூதியர்களின் வாழ்நாள் சான்றிதழ் வீட்டுக்கே சென்று பெறும் திட்டம் அமல்

 

சென்னை, ஜூன் 1 அஞ்சல்துறை மூலம் ஓய்வூதியர்கள் இருப்பிடத்துக்கே சென்று வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் நிதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநில அரசின் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள், தங்கள் வாழ்நாள் சான்றிதழை ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் சமர்ப்பிக்கின்றனர். தற்போது ​​ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் விருப்ப அடிப்படையில், ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நேரடியாகச் சென்று பதிவு செய்தல், அஞ்சல் மூலம் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பித்தல் மற்றும் மின்னணு விரல் ரேகை சாதனத்தை பயன்படுத்தி ‘ஜீவன் பிரமான்’ இணையம் மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பித்தல் ஆகியவற்றில் ஏதேனும் ஒருமுறையில் வாழ்நாள் சான்றிதழை நேர்காணலில் சமர்ப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை நடக்கும் நேர்காணலில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் வயதை கருத்தில்கொண்டும், அவர்கள் நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

எனவே, இந்தியா போஸ்ட்பேமென்ட்ஸ் வங்கி மூலம் ஓய்வூதியர்களின் இருப்பிடத்துக்கே சென்று ‘ஜீவன் பிரமான்’ இணையத்தின் வழியாக மின்னணு வாழ்நாள் சான்றிதழை பெறுவதற்கான சேவையை உள்ளடக்கிய 5 முறைகளிலான வருடாந்திர நேர்காணலை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி, ஒரு மின்னணு வாழ்நாள் சான்றிதழுக்கு ரூ.70 என்ற கட்டணத்தில் ஓய்வூதியர்களின் இருப்பிடத்துக்கே சென்று சேவைகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் தமிழ்நாடு அரசு - இந்தியா போஸ்ட்பேமென்ட்ஸ் வங்கி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந் நிகழ்வில், நிதித்துறை செயலர் நா.முருகானந்தம், இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி நிறுவன தலைமை பொதுமேலாளர் குருசரண் ராய் பன்சால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


10 லட்சம் பேர்களுக்கு வேலை பயிர்க் கடன் தள்ளுபடி! குஜராத் வாக்காளர்களுக்கு ராகுல்காந்தி உறுதி

 

புதுடில்லி, நவ.7 பாஜக அரசின் வஞ்சகத்திலிருந்து குஜராத் மக்களை காங்கிரஸ் காப்பாற்றும் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேர வைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 1 மற்றும் 5ஆம் தேதிகளில், இரண்டு கட்டங் களாக வாக்குப்பதிவு நடை பெறவுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பாஜக அரசின் வஞ்சகத்திலிருந்து குஜராத் மக்களை காங்கிரஸ் காப் பாற்றும் என   ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "குஜராத் மக்களுக்கு, 500 ரூபாய்க்கு எல்பிஜி சிலிண்டர், இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள், 3 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. இந்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றுவோம். பாஜக அரசின் வஞ்சகத்திலிருந்து காங்கிரஸ் உங்களை காப்பாற்றும், மாநிலத்தில் மாற்றத்தின் திருவிழா கொண்டாடப்படும்" என்று தெரிவித்தார்.

ட்விட்டர் - இந்தியாவில் 90விழுக்காட்டினர் பணிநீக்கம்


புதுடில்லி,நவ.8 ட்விட்டர் நிறு வனத்தை எலான் மஸ்க் ரூ.3.75 லட்சம் கோடிக்கு கையகப்படுத்தியுள்ளார். அவர் செலவு குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக கணிசமான பணியாளர்களை அடுத்தடுத்து பணி நீக்கம் செய்து வருகிறார்.

இதுகுறித்து ட்விட்டர் நிறுவனத் தின் இந்திய பிரிவு வட்டாரங்கள் கூறியதாவது:

இந்தியாவில் 200 பேர் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த வாரம் 180-க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 10-க்கும் மேற்பட்ட சிலரே இன்னும் பணி யில் தொடர்ந்து வருகின்றனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர் களில் 70விழுக்காடு வரை தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் வேலை செய்து வந்தவர்கள்.

இவை தவிர, சந்தைப் படுத்துதல், பொதுக் கொள்கை, பெருநிறுவன தொடர்பு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளை சேர்ந்த பணியாளர்களும் ட்விட்டர் நடவடிக்கை யால் வேலை இழப்புக்கு ஆளாகி உள் ளனர். பன்னாட்டு அளவில் அந்நிறுவனத் தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப் பட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.