ஞாயிறு, 13 மார்ச், 2022

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எப்) மீதான வட்டி விகிதம் 8.10% ஆக குறைப்பு! தொழிலாளர்கள் அதிர்ச்சி


புதுடில்லி, மார்ச் 13 கடந்த 40 ஆண்டுகளில் மிகவும் குறை வாக பி.எப் மீதான வட்டி விகிதம் 8.10% ஆக குறைக்கப் பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2021-_2022ஆம் நிதியாண்டிற்கான தொழிலாளர் வருங் கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50%-இல் இருந்து 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு நேற்று (12.3.2022) அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற 230ஆவது ஒன்றிய வாரிய குழு கூட் டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

1977_-1978 கால கட்டத்திற்கு பின் மிக குறைந்த வட்டி விகிதமாக இது பார்க் கப்படுகிறது. அப்போதைய வட்டி விகிதம் 8 சதவீதமாக இருந்ததே மிக குறைந்த வட்டி விகிதம் ஆகும். இந்த முடிவு 5 கோடிக்கும் அதிகமான பி.எப் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் முதல்முறையாக மிகவும் குறைவாக பி. எப் மீதான வட்டி விகிதம் 8.10% ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பி.எப் மீதான வட்டி விகிதத்தை 8.5 சதவீத மாக குறைத்து முடிவெடுக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

பாஜக அரசின் பரிசு  - காங்கிரஸ் விமர்சனம்

2021_-2022ஆம் நிதியாண்டிற்கான தொழிலாளர் வருங் கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 8.50%-இல் இருந்து 8.10% ஆக குறைக் கப்பட்டுள்ளது. இந்த முடிவு  அசாம் தலைநகர் கவுகாத் தியில் நடைபெற்ற 230-ஆவது ஒன்றிய வா ரிய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

 இந்த முடிவு 5 கோடிக்கும் அதிக மான பி.எப் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், 4 மாநில தேர்தல் வெற்றிக்கு பாஜக அரசின் பரிசே பி.எஃப் வட்டி விகிதம் குறைப்பு என காங்கிரஸ் சாடியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக