தானே, டிச.10_ அலு வலகப் பணியின்போது ஊழியர் கொலையுண் டால், பணியாளர் இழப்பீடு சட்டத்தின்கீழ், இறந்த ஊழியரின் குடும்பத்தினர், அவர் பணிபுரிந்த நிறுவனத் திடம் உரிய இழப்பீடு கோரலாம் என்று தானே நீதிமன்றம் அதிரடி உத் தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தைச் சேர்ந்த பிரமிளாதேவி ராம் அவதார் சிங் என்பவர், தாணே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: "எனது கணவர் ராம் அவதார் ஜெகதீஷ் சிங் (26), தானே பகுதியைச் சேர்ந்த டிசில்வா என்ற ஒரு தனியார் நிறுவன முதலாளி யிடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28-ஆம் தேதி, நாசிக்- புணே சாலையில் பணி நிமித்தமாக காரில் சென்றுக் கொண்டிருந்த போது, நபர்கள் அவரை கொலை செய்துவிட்டு காரை திருடிச் சென்று விட்டனர். எனது கணவர் பணியின்போது இறந்ததற்கு இழப் பீடாக, அவரது முதலாளி ரூ.8.61 லட்சம் எங்களுக்கு இழப்பீடு அளிக்க உத்தரவிட வேண்டும்' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்மனுதார ரான டிசில்வா தாக்கல் செய்த பதில் மனுவில், "திருடப்பட்ட காருக்கு காப்பீடு உள்ளதால், இறந்த பணியாளரின் குடும்பத் துக்கு இழப்பீடு வழங்கும் பொறுப்பு தன்னுடைய தல்ல' எனத் தெரிவித்தார். மற்றொரு எதிர்மனுதார ரான ரிலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனம் சார் பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "மனுதார ரின் கணவர் பணியின் போது இறந்துள்ளதால், அவரது குடும்பத்தினருக்கு தங்கள் நிறுவனம் இழப்பீடு அளிக்க முடியாது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.ஒய்.பகத் பிறப் பித்த உத்தரவில், "பணியின் போது இறந்த ராம் அவதார் ஜெகதீஷ் சிங்கின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கும் பொறுப்பு, அவரது முதலாளியான டிசில்வா மற்றும் ரிலை யன்ஸ் காப்பீட்டு நிறுவனத் துக்கு உள்ளது. எனவே, மனுதாரர் கோரியுள்ள இழப்பீட்டு தொகை ரூ.8.61 லட்சத்தை 12 சதவீத வட்டி யுடன், எதிர்மனுதாரர்கள் இரு வரும் இணைந்து தர வேண்டும்' என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.
-விடுதலை,10.12.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக