ஞாயிறு, 22 மார்ச், 2015

மறைமலை நகர் 123வது திராவிடர் விழிப்புணர்வு மாநாடு


 கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்க பொதுச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி அவர்களுக்கு மாநாட்டு குழுவினர் சார்பில் திருக்குறள் ம. வெங்கடேசன் அவர்கள் பாராட்டி ஆடை ஆணிவித்தார்.(22.3.15)
  கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தலைவர் த.ரமேஷ், பொதுச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி , துணைச்செயலாளர் ம.கருணாநிதி ஆகியோர் மாநாட்டிற்கு நிதியளித்தனர்.(22.3.15)
  கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் தலைவர் த.ரமேஷ், அவர்கள் மாநாட்டின் சிறப்புப்பேச்சாளர் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவற்களுக்கு பயனாடை அணிவித்தார். உடன் சங்க பொதுச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி , துணைச்செயலாளர் ம.கருணாநிதி ஆகியோர் உள்ளனர். சங்க செயற்குழு உறுப்பினர் வ.வசந்தி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மாநாட்டின் சிறப்புப்பேச்சாளர் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.(22.3.15,மாலை 6.00மணி,மறைமலை நகர்,பாவேந்தர் சாலை)

வியாழன், 19 மார்ச், 2015

எல்அய்சி தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


Image result for lic policy
புதுடில்லி, மார்ச் 19_  இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (எல்அய்சி) 1985, மே 20 முதல் 2001, ஜூன் 18-ஆம் தேதி வரை பணிபுரிந்து, பணி நீக்கம் செய்யப்பட்ட முழு நேரத் தற்காலிக ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதுதொடர்பாக "எல்அய்சி முழுநேரத் தற்காலிக ஊழியர்கள் சங்கம்' உள்பட பல்வேறு சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று, இரு தரப்பு வாதங்களும் கடந்த செப்டம்பரில் நிறைவடைந்தன. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி. கோபால் கவுடா, சி. நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை அளித்த தீர்ப்பின் விவரம்:
மத்திய தொழிலாளர் ஆணையம் 18-_06-_2011-இல் அளித்த உத்தரவை (அவார்டு) நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த உத்தரவு வெளியான தேதியிலிருந்து இன்றையத் தேதி வரையிலான பணப் பலன்களை (மானிட்டரி பெனிஃபிட்) பாதிக்கப்பட்ட ஊழியர் களுக்கு வழங்க வேண்டும். பணிக் காலத்தில் இறந்த ஊழியர் களுக்கும் பணப் பலன்கள் வழங்கப்பட வேண்டும். இந்த உத்தரவை 8 வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்ப்பு குறித்து எல்அய்சி முழுநேரத் தாற்காலிக ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் பி. வாசு கூறுகையில், "உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பின் மூலம் தமிழகத்தில் மட்டும் சுமார் 1,500 பேர் பலனடைவார்கள்' என்றார்.
பின்னணி: எல்அய்சியில் பணிபுரிந்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் உள்பட நாடு முழுவதும் 10 ஆயிரம் மூன்றாம் நிலை, நான்காம் நிலைப் பிரிவு முழுநேரத் தாற்காலிக ஊழியர்களை எல்அய்சி 1992, ஜூலை 28-ஆம் தேதி பணிநீக்கம் செய்தது. இதை எதிர்த்து மத்திய தொழிலாளர் தீர்ப்பாயம், சென்னை உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய தொழிலாளர் தீர்ப்பாயத்தை அணுகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பான மனுக்களை விசாரித்த மத்திய தொழிலாளர் தீர்ப்பாயம், எல்அய்சி முழுநேரத் தற்காலிக ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று 2001, ஜூன் 18-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து எல்அய்சி நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த  உத்தரவையும் எல்அய்சி நிர்வாகம் நடைமுறைப் படுத்தாததால் உச்ச நீதிமன்றத்தில் 2008-இல் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது மேற்கண்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.
-விடுதலை19.3.15