பாரிஸ், நவ. 5-_ பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், சுழற்சி முறையில் பணிபுரியும்
நபர்களின் ஞாபக சக்தி மற்றும் மூளை திறன் மங்குவதாக தெரியவந்துள்ளது.
பிரான்சில் 3000 பேர் பங்கேற்ற இந்த ஆய்வின் முடிவில், சுழற்சி முறையில்
பணிபுரிபவர்களின் மூளை திறனை விட தினமும் ஒரே முறையான நேரத் தில் பணிபுரியும்
நபர்களின் ஞாபக சக்தி மற்றும் மூளை செயல்திறன் அதிக மாக உள்ளதாக தெரிவிக்
கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில் பணி புரிபவர்களின் உடல்நிலை யில் உண்ணும், உறங்கும் நேரங்கள்
மாற்றமடைவதால் அவர்களுக்கு இதயம், மூளை சார்ந்த பாதிப்பு கள் ஏற்படும் எனவும், சில
சமயங்களில் புற்றுநோய் பாதிப்பு கூட ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. ஆய்வின்
ஒரு பகுதியாக, சுழற்சி முறை யில் பணிபுரிபவர்களுக்கு நடத்தப்பட்ட அறிவாற் றல் வேகம்
சார்ந்த சோதனையில் பலர் தேர்ச்சி அடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டவு லோசி மற்றும் ஸ்வான்ஸி பல்கலைக்கழக ஆய்வா ளர்கள் தெரிவிக்கையில்,
'முறையற்ற ஷிப்டுகளில் 10 ஆண்டுகாலமாக பணிபுரி பவர்களின் அறிவாற்றல் திறன் ஆறரை
ஆண்டுகள் பின்தங்கியதாக உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளனர்.
காலை, மதியம், இரவு நேர சுழற்சி முறை சுழற்சி முறைகளில் பணிபுரியும் நபர்களுக்கு
எவ்வாறு அறிவாற்றல் திறன் குறை கிறது என்பது குறித்த முழுமையான புரிதல் இல்லாத
நிலையில், அவர்களின் உடல்நிலை யில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கு காரணமாக இருக்
கலாம் என கருதப்படு கிறது.
Read more: http://www.viduthalai.in/page1/90591.html#ixzz3IGDRZQ52
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக