புதன், 22 மார்ச், 2023

ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைப்பு! ஏழைகள் பாடு திண்டாட்டம்

 

புதுடில்லி, பிப்.2 ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேற்று (1.2.2023) தாக்கல் செய்த பொது நிதி நிலை அறிக்கையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு  30% குறைந் துள் ளதற்கு இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

கிராமப்புற ஏழை மக்களும்  பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தர வாத திட்டம்  என்றறியப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம்   எனும் இந்தியச் சட்ட மானது 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 அன்று இயற்றப் பட்டது. இது இந்திய அரச மைப்புச் சட்டத்தில் உள்ள அரசு நெறிமுறைக் கொள்கைகளின் 41ஆவது சரத்தின் கீழ் வரும்  வேலைக்கான உரிமையை ஆதாரமாகக் கொண்டது.

இச்சட்டமானது கிராமப்புற குடும்பங்களில் உள்ள திறன் சாரா உடல் உழைப்பில் ஈடுபட விருப்பமுள்ள அனைத்து வயது வந்த உறுப்பினர்களுக்கும் ஆண்டிற்கு அதிகபட்சமாக 100 நாட்கள் ஊதிய வேலை வாய்ப் பிற்கு உத்தரவாதம் அளிக்கின் றது. இந்திய அரசின் ஊரக மேம்பாட்டு அமைச்சகமானது மாநில அரசுகளுடன் இணைந்து இச்சட்டத்தின் செயல்பாடு களை கண்காணித்து வருகின் றது. உலக வங்கியானது அதன் 2014 ஆம் ஆண்டிற்கான “உலக மேம்பாட்டு அறிக்கையில்” இத்திட்டத்தினை “கிராமப்புற வளர்ச்சியின் மிகச்சிறந்த உதாரணம்” எனக் குறிப்பிட்டுள்ளது.ஆனால், இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடை பெற்று வருகின்றன. முறையாக பணிகள் செய்யப்படுவது இல்லை என்றும், அதற்கான ஊதியமும் முறையாக கொடுப் பதில் முறைகேடுகள் நடை பெறுவதாகவும் குற்றச்சாட் டுக்கள் உள்ளன. இதுதொடர் பான வழக்குகளும் உள்ளன. ஆனால், கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்துக்கு 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்' பேருதவியாக இருந்து வருகிறது. இதனால் பல கோடி பேர் தங்களின் வாழ்க்கை கழித்து வருகின்றனர்.

ஆனால், ஒன்றிய பாஜக அரசு ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் வகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மேலும் 30சதவிகிதம் நிதியை குறைத்துள்ளது. இது அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திட்டத்துக்கு கடந்த  2021_20-22ஜிம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 98,468 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 2022-_2023 பட்ஜெட்டில், அது 73000 கோடியாக குறைக்கப்பட்டது. இது கடுமை யான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த ஆண்டு (2022-_2023) பட் ஜெட்டில், இதற்கான நிதி ஒன்றியஅரசு உயர்த்தியது. அதன்படி, 89,400 கோடியாக அறிவித்தது. இந்த நிலையில், தற்போது அதற்கான நிதியை 30 சதவிகிதம் அளவுக்கு குறைத்துள்ளது. அதாவது, 60ஆயிரம் கோடி மட்டுமே அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட, 29,400 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாட்டில் 787 பேருக்கு பணி நியமன ஆணை - முதலமைச்சர் வழங்கினார்

 

சென்னை, பிப். 4- தமிழ்நாட்டில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந் தர ஆணை மற்றும் இருட்டறை உதவியாளர்கள், ஆய்வக நுட்புநர்கள் உள்ளிட்ட 217 பேருக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை மருத்துவப் பணியாளர் தேர்வாணை யத்தால் ஒப்பந்த அடிப்படையில் 15,409 செவிலியர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர்.

இவர்களது ஒப்பந்தப் பணி குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முடிந்த பிறகு, நிரந்தர காலி பணியிடத்தில் வரிசைப் படி நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, தற்போது மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு கலந்தாய்வு முடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகளை வழங்கும் அடையாளமாக, 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதுதவிர, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத் தால் மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்துக்கு 92 பேர், மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு 85 பேர் என 177 இருட்டறை (Dark Room) உதவியா ளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் அடையாளமாக, 5 பேருக்கு ஆணைகளை வழங்கினார்.

மேலும், உணவு பாதுகாப்பு துறை யின் கட்டுப்பாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் உணவு பகுப்பாய்வகங்கள் செயல்படு கின்றன. இங்கு காலியாக உள்ள 19 ஆய்வக நுட்புநர் நிலை-மிமி பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட் டுள்ளவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாள மாக, 3 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வழங்கினார். இதுதவிர, 21 இளநிலை உதவியாளர் பணியிடங்க ளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கும் அடையாள மாக 4 பேருக்கு ஆணைகளை முதல மைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலர் செந்தில்குமார், மருத்துவ தேர்வு வாரி யத் தலைவர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் 

டி.எஸ்.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், மருத்துவம், ஊரக நலப் பணிகள் இயக்குநர் ஹரி சுந்தரி, உணவு பாதுகாப்பு கூடுதல் ஆணையர் தேவ பார்த்தசாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

ஞாயிறு, 19 மார்ச், 2023

வணிகவரித்துறையில் 1,000 பேருக்கு பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு

 

சென்னை, மார்ச் 12- ஒரே அரசாணையின் மூலம் வணிகவரித்துறையில் 1,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வணிகவரித்துறை மறு கட்டமைப்பு செய்யப்பட்டு கூடுத லான மனித வளங்களை களப் பணிக்கு அளிக்கவும், புலனாய்வு மற்றும் தணிக்கை பிரிவுகளை வலுவாக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என்று கடந்த 2021_-2022ஆம் ஆண்டின் தமிழ் நாடு அரசின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டது.

அதன் அடிப்படையில், ஆயிரம் உதவி அலுவலர் பணியிடங்களை மேம்படுத்த கொள்கை அளவில் 19.11.2021 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த ஆணையை செயல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு வணிக வரிகள் ஆணையர் முன்மொழிவை அனுப்பியுள்ளார். அதில், தமிழ் நாடு ஜி.எஸ்.டி. விதிகளின் கீழ், குறைவான நிலை அலுவலர்களை துணை வணிகவரி அதிகாரிகள் நியமித்து உள்ளனர். உதவி நிலையில் உள்ள அந்த அலுவலர் களை துணை வணிகவரி அதிகாரி கள் நிலைக்கு உயர்த்தினால், கண்காணிப்பு, வரி தாக்கல், கட்டணத்தை திருப்பி செலுத்து தல், ஆய்வு, தணிக்கை செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு போதிய அதிகாரிகள் கிடைப்பார்கள்.

மனிதவள குறைபாடு இருப்ப தால், ரோந்துப்பணி படைகளுக்கு வேறு பிரிவில் இருந்து ஆட்கள் சுழற்சி முறையில் பயன்படுத்தப்படு கிறார்கள். ஜி.எஸ்.டி. புதிய சட்டமாக இருப்பதால் அதை கையாள நவீன தொழில்நுட் பங்களை பயன்படுத்த வேண்டி யுள்ளது.

வரி ஏய்ப்பை தடுப்பதற்கு தக்கபடி அதிகாரிகளின் திறன் மேம்படுத்தப்பட வேண்டும். எனவே, பட்ஜெட்டில் அறிவித்தபடி ரோந்துப் படையின் எண்ணிக்கையை 100-ஆக அதிக ரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வணிக வரி அதிகாரிகள், ரோந்துப் படைகளுக்கு தலைமை தாங்கு கின்றனர். அதன் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தும் நிலையில் வணிக வரி அதிகாரிகளின் எண்ணிக்கையும் அதற்கேற்றபடி உயர்த்தப்பட வேண்டும். புல னாய்வு பிரிவை வலுப்படுத்தும் நோக்கத்தில் சுற்றும் படை எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரி செலுத்தாமல் கொண்டு செல்லப் படும் சரக்குகளை கண்டறிய இது அவசியமாக உள்ளது.

மேலும், ஒவ்வொரு எல்லைப் பகுதியிலும் தணிக்கை பிரிவுகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இது, மாநிலத்திற்கு அதிக வரி வருவாயை வசூலித்து அளிக்க உதவிகரமாக இருக்கும். அதன்படி, 60 பிரிவுகள் ஏற்படுத்தப் பட உள்ளன. எனவே ஆயிரம் உதவி அலுவலர்களை (மொத்த எண்ணிக்கை 2,138), 840 துணை வணிகவரி அதிகாரிகள் மற்றும் 160 வணிகவரி அதிகாரிகள் என்ற அளவில் நிலை உயர்வு செய்ய வேண்டும் என்று தனது முன் மொழிவில் வணிகவரிகள் ஆணை யர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வரி நிர்வாகம் மேம்படுத்தப்படுவதோடு அரசுக்கு வரும் வரி வருவாயின் அளவு உயரும். அவர்களை ரோந்துப் படை, புலனாய்வுப் பிரிவு மற்றும் தணிக்கைப் பிரிவில் தேவைக்கு ஏற்ப நியமனம் செய்ய முடியும். 

இதை நேரடி மற்றும் பணியிடமாற்றம் மூலம் மேற்கொள்ள முடியும். துறை ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்தாமல் இந்த நியமனங்களை மேற்கொள்ள லாம் என்றும் அவர் கூறியுள்ளார். 

அவரது முன்மொழிவை அரசு கவனமுடன் பரிசீலித்து உதவி அலுவலர்கள் ஆயிரம் பேரில், 840 பேரை துணை வணிக அதிகாரி களாகவும், 160 பேரை வணிகவரி அதிகாரிகளாகவும் பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வியாழன், 9 மார்ச், 2023

தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் அவ்வப்போது உட்கார்ந்து பணியாற்ற நடவடிக்கை அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை

 

சென்னை, ஏப்.2 - தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் அவ்வப்போது உட்கார்ந்து பணியாற்ற போதிய வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்க நட வடிக்கை எடுக்குமாறு அதிகாரி களுக்கு தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுரை வழங்கினார்.

தமிழ்நாடு தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் தொழி லக பாதுகாப்பு, சுகாதார இயக்க கத்தின் திறனாய்வு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு பயிற்சித் துறை இயக்குநர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (1.4.2022) நடைபெற்றது.

அப்போது அதிகாரிகளுக்கு பல் வேறு அறிவுறுத்தல்களை அமைச்சர் வழங்கினார். அவர் கூறியதாவது: ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பல் வேறு தொழிலாளர் நலச் சட்டங் களின் கீழ் கூறப்பட்ட அனைத்து வசதிகளையும் கிடைக்கச் செய்ய வேண்டும். 

நீண்ட காலமாக பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தொழிற்சாலைகளில் தொழிலா ளர்கள் நீண்ட நேரமாக நின்று கொண்டு பணியாற்ற நேரிடுகிறது. அத்தகைய சூழலில் அவர்கள் அவ்வப்போது உட்கார்ந்து பணி செய்ய போதிய வசதிகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

ஆய்வுகளின் போது அதிகாரிகள் இதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இத்திறனாய்வு கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலர் கிர்லோஷ் குமார், தொழிலக பாது காப்பு மற்றும் சுகாதார இயக்குநர் கா.ஜெகதீசன், கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இயக்குநருக்கு நினைவுப் பரிசு

வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை யால் மேற்கொள்ளப்படும் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் பங்கு மிக சிறப்பாக இருப்பதை பாராட்டி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநருக்கு வேலை வாய்ப்பு, பயிற்சித்துறை இயக்குநர் கொ.வீரராகவ ராவ், நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார்.

தொழிலாளர் நலனுக்கான புதிய சட்டவிதிகள் உருவாக்கம் : ஆலோசனைக் கூட்டம்

 

சென்னை,அக்.28- மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களில் மாற்றங்கள் மேற்கொள்வது, தொழிலாளர் நல னுக்கான புதிய சட்ட விதிகள் உருவாக்குவது குறித்து அமைச்சர் சி.வி. கணேசன் தலைமையில் நடைபெற்ற தொழிலாளர் ஆலோசனை வாரிய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில், 60ஆவது மாநில தொழிலாளர் வாரிய ஆலோ சனை கூட்டம்,தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.

இதில், தொழிலாளர் நலத்துறை செயலர் முகமது நசிமுதீன், மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர், கைத்தறித்துறை இயக்குநர், துணிநூல் துறை இயக்குநர், தொழி லாளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் எம்.வி. செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், தென்னிந்திய வேலையளிப் போர் கூட்டமைப்பு, தமிழ்நாடு தோட்டத் தொழிலாளர்கள் சங்கம், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், தமிழ்நாடு சிறு மற்றும்குறுந்தொழில்கள் சங்கம், அனைத்திந்திய உற்பத்தியாளர் அமைப்பு, அம்பத்தூர் தொழிற் பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், தொமுச பேரவை (எல்பிஎப்), தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ், இந்திய தொழிற்சங்கங்களின் மத்திய அமைப்பு (சிஅய்டியு), இந்து மஸ் தூர்சபா, விசிக ஆகிய தொழிற்சங் கங்களின் பிரதிநிதிகள்,சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம்,க.செல்வராஜ், சபா.ராஜேந்திரன்,தமிழரசி ஆகியோரும் தொழிலாளர் துறையின் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.

வேலையளிப்போர் மற்றும் தொழி லாளர்களால் எதிர்கொள்ளப்படும் சிக்கல்கள், பல்வேறு நிறுவனங்கள், தொழில்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டில் எழும் பிரச்சினைகள், தற்போது மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களில் மாற்றம் செய்தல், தொழி லாளர் நலன் மற்றும் தொழில்அமைதி காக்க புதிய சட்ட விதிகள்உருவாக்குதல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இணையதள வசதி

தொழிலாளர் துறை வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறையின்கீழ், 18 அமைப்புசாரா தொழி லாளர் நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. அமைப்புசாரா தொழி லாளர்கள் பதிவு செய்யும் முறையை எளிமைப்படுத்தவும், நலத்திட்ட உதவி களை விரைவாக பெறவும் இணையதள வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள குறை தீர்வு வசதியை அமைச்சர் சி.வி.கணேசன் நேற்று (27.10.2022) தொடங்கி வைத்தார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பின், இணையதளம் வாயிலாக 10 லட்சத்து 81,137 அமைப்புசாரா தொழிலாளர்கள், 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ளனர். இதில் 6 லட்சத்து 71,355 பயனாளிகளுக்கு ரூ.524.99 கோடி நலத்திட்ட உதவியாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 18 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்களில் இதுவரை 40 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இணையதள குறைதீர் வசதி மூலம்,தொழிலாளர்கள் பதிவு, புதுப்பித்தல், உதவித்தொகை கோரும் விண்ணப்பங்களின் மீதான நிலையை தெரிந்து கொள்ளவும், குறுஞ்செய்தி மூலம் குறைதீர் நிலையை அறிந்து கொள்ளவும் வசதி செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

கட்டுமான தொழிலாளர்கள் வீடு கட்ட, குடியிருப்பு பெற நிதியுதவி: தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு


சென்னைசெப்.5 கட்டுமானத் தொழிலாளர்கள் வீடு கட்டவும்குடியிருப்பில் ஒதுக்கீடு பெறவும் நிதி உதவி அளிக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் சி.விகணேசன் அறிவித்துள்ளார்.

பேரவையில் நேற்று (4.9.2021) தொழிலாளர் நலன்திறன் மேம் பாட்டுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் சி.வி.கணேசன் கூறிய தாவது:

கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த வீடு இல்லாத தொழிலாளர்கள் சொந்த வீட்டு மனை வைத்திருந்தால்அவர்கள் வீடு கட்டிக் கொள்வது அல்லதுதமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கெனவே கட்டப் பட்டுள்ள குடியிருப்பில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

கட்டுமானம்அமைப்புசாரா ஓட்டுநர்உடல் உழைப்பு தொழி லாளர் சமூக பாதுகாப்பு நலவாரியம் மற்றும் 15 நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு சமூக நலத் திட்ட உதவியாக ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும். 10-ம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் தேர்ச்சிபெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் தற்போது வழங் கும்  கல்வி உதவித் தொகை ரூ.1,000இல் இருந்து ரூ.2.400 ஆக உயர்த்தப்படும்.

கட்டுமானத் தொழிலாளர்களின் 11ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை ரூ.1,000 மற்றும், 12ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் தேர்ச்சி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித் தொகை ரூ.1,500 ஆகியவை ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.

கட்டுமானத் தொழிலாளர்கள்அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரிய தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பட்டப்படிப்புக்கான ரூ.1,500 மற்றும் விடுதியில் தங்கி படிப்பதற்கான ரூ.1,750 ஆகியவை ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும்.

கட்டுமான தொழிலாளர் நல வாரிய தொழிலாளர்கள்அமைப்பு சாரா ஓட்டுநர் நலவாரிய தொழி லாளர்கள் இயற்கை மரணம் அடைந் தால் அவர்களது குடும்பத்துக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரிய உறுப்பினர்கள் விபத்து மரணம் அடைந்தால் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியத்தில் பதிவுசெய்த 85 ஆயிரம் ஓட்டுநர்களுக்கு ரூ.1,500 மதிப்பிலான முதலுதவி பெட்டிசீருடைகாலணி அடங்கிய பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும்.

தமிழ்நாடு உடல் உழைப்பு தொழி லாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் 15 நலவாரியங்களின் தொழிலாளர்கள் விபத்து மரணம் அடைந்தால்குடும் பத்துக்கு வழங்கும் உதவித் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்படும்இயற்கை மரணத்துக்கான உதவித் தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்படும்.

சமையல் தொழிலாளர் நல வாரியம் என்பது சமையல் மற்றும் உணவகத் தொழிலாளர்கள் நல வாரியம் என்றும்அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம் என்பது அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர் நலவாரியம் என்றும் பெயர் மாற்றப் படும்நல வாரியங்களில் பதிவு செய்தவர்களில் 1 லட்சம் பேருக்கு பணித்திறன்அனுபவத்தை அங்கீ கரித்து திறன் மதிப்பீடு செய்து சான்றிதழ் வழங்கப்படும் என்பது உட்பட 34 அறிவிப்புகளை அமைச்சர் கணேசன் வெளியிட்டார்.

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சி: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

 

சென்னை, ஆக. 27- கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்டம்தோறும் பயிற்சி மய்யங்கள் அமைக்கப் படும் என்று தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலை மையில் தமிழ்நாடு கட்டுமானக் கழகத்தின் 3ஆவது ஆட்சிமன்றக் குழு கூட்டம் சென்னை தலை மைச் செயலகத்தில் 25.8.2022 அன்று நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

இதுகுறித்து அமைச்சர் சி.வி. கணேசன் உரையில் குறிப்பிட்ட தாவது,

தமிழ்நாடு கட்டுமானக் கழகம் சீரமைக்கப்படும். அதன் செயல்பாடுகள் சிறப்பாக அமைய, செங்கல்பட்டு மாவட்டம் தையூ ரில் பயிற்சி நிலையம் அமைப் பதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்படும். கட்டுமா னத் தொழிலாளர் நல வாரியத் தில் பதிவு செய்த தொழிலாளர் களுக்கு மறு பயிற்சி அளித்தல், குறுகிய கால பயிற்சி வழங்குதல், பயிற்சி வடிவமைப்பு, சான்றிதழ் வழங்குதல், வேலைவாய்ப்பு குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.

கட்டுமானக் கழகத்தை சரி யான முறையில் நடத்த, தொழி லாளர் துறையில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் உடனடி யாக தொழிலாளர்களை சென் றடையும் வகையில் விளம்பரம் செய்யப்பட வேண்டும். கட்டு மானத் தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி வழங்க  கட்டுமானக் கழகம் மூலம் மாவட்டம்தோறும் பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப் படும்.

குறிப்பிட்ட தொழிலில் மட் டுமின்றி, பல்வேறு தொழில்க ளில் பயிற்சி அளித்து, அவர்களது தொழில் திறன் மேம்படுத்தப் படும். குறைந்த கால பயிற்சியாக இல்லாமல், 90 நாட்களுக்கு மிகாமல் பயிற்சி அளித்து, செய் முறைத் தேர்வு வைத்து, அதன் பிறகு சான்றிதழ் வழங்கப்படும். கட்டுமானக் கழகம் மூலம் பயிற்சி பெறும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, அவர்க ளது வாழ்வாதாரம் பாதிக்கப் படாத வகையில் தகுந்த ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.

-இவ்வாறு அவர் கூறினார்.