செவ்வாய், 27 மே, 2025

தொழில் நிறுவன வேலை (நிலை ஆணைகள்) சட்டம் -1946 (standing order)

 

தொழில் நிறுவன வேலை (நிலை ஆணைகள்) சட்டம் -1946 (standing order)

தொழிலாளர் நலச் சட்டங்கள் - 4

• கே.ஜி. சுப்பிரமணியன்

தொழில் நிறுவன வேலை (நிலை ஆணைகள்) சட்டம் -1946

ஒரு தொழிற் துவக்கிய பிறகு முறையாகத் தொழிற்சங்கப் பதிவாளரிடம் பதிவு செய்யப்பட்ட பின் அந்தத் தொழிற்சங்கமானது அதல் தொழில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிலையாணைகள் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்குமிடையே பலப் பிரச்சினைகள், குறிப்பாக வேலை நிபந்தனைகள் பற்றி அடிக்கடி இருதரப்பிலும் தொழில் தகராறுகள் ஏற்படும். அப்படிப்பட்ட தகராறுகளைத் தீர்ப்பதற்கு ஆணை சட்டம் பெரிதும் பயன்படுகிறது. பம்பாய் தொழிற் தகராறுகள் சட்டம் 1938-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. பின்னர் 1943, 1944, 1945-ஆம் ஆண்டுகளில் முத்தரப்பு அமைப்பாகிய இந்தியத் தொழிலாளார் மாநாடுகளில் விவாதித்து தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் 1946-ஆம் ஆண்டு நிலையானைகள் சட்டம் இயற்றப்பட்டது.

சட்டத்தின் நோக்கங்கள்

தொழிற்சாலை நிறுவனங்களில் தொழிலாளர்களை வேலைக்கு எடுத் துக் கொள்வதற்குரிய நிபந்தனைக ளைத் தெளிவுபடுத்துவதற்கும் ஏற்க னவே அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கும் மேற்கண்ட நிபந்தனைகளைத் தெரி யப்படுத்துவதும் இச்சட்டத்தின் நோக்கமாகும்.

2. வேலை நீக்கம், தொழிலாளர்கள் செய்யும் தவறான செயல்கள், ஒழுங்கு நடவடிக்கைகள் இவைகள் பற்றிய விளக்கம்.

3.நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் எல்வா தொழிலாளர்களுக்கும் ஒரு மாதிரி வேலை நிலைகளை உருவாக் குதல்

4. நிர்வாகம் தொழியாளர்கள் இருவர்களின் உரிமைகளையும் பொறுப்புக்களையும் விளக்குதல்,

தொழில் நிறுவனம்

1. 1948-ஆம் ஆண்டின் தொழிற் சட்டத்தின் பிரிவு (ளம்) குறிப்பிட்டுள்ள தொழிற் சாலைகள்,

2. 1800-ஆம் ஆண்டு இந்திய இரயில்வே சட்டப் பிரிவு 2(4)கீழ் வருகிற இரயில்வே நிறுவனங்கள்

3. பொது மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள்.

4 சரங்கங்கள், பாலங்கள், எண்ணெய்க் கிணறுகள்.

5. உள்துறை நீர்வழிப் போக்கு ரத்துக் கழகங்கள்.

6. துறைமுகங்கள், கப்பல் துறைகள், கப்பல் தங்குமிடங்கள்.

7. மலைத் தோட்டங்கள்.

8. கால்வாய்கள், மற்றும் கட்டிடம் கட்டும் நிறுவனங்கள்.

9. மின் உற்பத்தி மற்றும் அதைப் பங்கீடு செய்யும் நிறுவனங்கள்.

10. தொழில் நிறுவன உரிமையாள ரிடம் நிறுவனத்தின் வேலையை முடிப்பதற்குத் தேவையாக வேலை யாட்களை வேலைக்குச் சேர்ந்துக் கொள்ளும் ஒப்பந்தக்காரரின் நிறுவனங்கள்.

11. 1955-ஆம் ஆண்டு சட்டத்தின் பத்திரிகை நிருபர்கள் (லேவை அமைப்பு, நிபந்தனைகள் மற்றும் பல தரப்பட்ட அமைப்புகள்) சட்டம் செயல்படுத்தப்படும் பத்திரிகை நிறு வனங்கள்.

12: 50 பணியாட்களுக்கும் அதற்கு மேலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ள பீடி மற்றும் சுருட்டுத்தொழில் நிறுவனங்களையம் குறிக்கும்

"வேலையளிப்பவர்"  ஒரு தொழிற்சாலையில் உரிமையாளரா கவோ அல்லது முதலாளியாகவோ இருக்கின்றவரையும் அல்லது அரசு நிறுவனங்களைப் பொருத்தவரையில் அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரையோ அல்லது அப்படி அலுவலர் இல்லாத இடத்தில் அந்தத்துறையின் தொழில் நிறுவனத்தில் உரிமையாளரின் மேற்பார்வைப் பொறுப்பேற்றுள்ள யரையும் குறிக்கும்.

வேலையாள்: 1. ஒரு தொழில் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மேற் பார்வையாளர், எழுத்தர், தொழில் நுட்ப பணியாளர்களும் இச்சட்டத்தின் படி வேவையால் எனப்படுவர் 

2. மாதச் சம்பளம் ரூ.500/- மேல் பெறும் மேற்பார்வையாளர்களும் நிர்வாகிகளும் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களும், சிவில் சட்ட விதிகளுக்கு உட்பட்ட அரசு இலாக்காக்களிலும் துறைகளிலும் பாதுகாப்புத் துறைகளிலும் இரயில்வே சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டவர்களும் தொழிலாளாகளாக கருதப்படமாட்டார்கள்.

நிலையாணைகள்: தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணி நிபந்தனைகள் பற்றிய விதிகள் தான் நிலையாணைகள் ஆகும். பணி நிபந்தனைகளின் தன்மை கீழ்க்கணடவாறு தெளிவாக்கப்பட்டுள்ளது.

1. தொழிலாளர்களின் வகைகள் நிரந்தரம், தற்காலிகம், வேலை கற்பவர், மாற்றாள் முதலியன

2. வேலைக்காலம் விடுமுறைகள் ஊதிய விகிதங்கள், ஊதியும் வழங்கும் நாட்கள்

3. ஷிட்டு வேலைமுறை

4.வேலைக்கு வருதல், தாமதமாக வருதல்

5. விடுப்பு எடுப்பது நிபந்தனைகள், முறைகள்,

6. ஆலையின் நுழை வாயிலில் வேலைக்குச் செல்லும்போதும் ஆலையிலிருந்து வேலை முடித்து வரும் வழியில் சோதனைகள் செய் தல்,

7. சில பகுதிகளை தற்காலிகமாக நிறுத்துதல், திறத்தல், இவைகள் 'சம்பந்தமாக எழுகின்ற பிரச்சினைகள்.

8. வேலை நீக்கம் - வேலையை விட்டுச் செல்லுதல்

9. தவறான செயல்களுக்கு காரணமான சூழ்நிலை, அதற்கான தண்டனைகள்,

10.தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தின் ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்குப் பரிகாரம்,

11.அரசால் குறிப்பிடக் கூடிய இதர விசயங்கள்.

தொழிலாளர்கள் எண்ணிக்கை பற்றிய விவரங்கள், அங்கு தொழிற்சங்கம் செயல்பட்டால் அதன் பெயரையும் தெரிவித்து இச்சட்டம் செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து 6 மாதங்களுக்குள்ளாக நிர்வாகம் தனது நிறுவனத்திற்கான நிலையாணைகளை தயாரித்து 5 நகல்களை சான்று அளிக்கும் அதிகாரிக்கு அனுப்பவேண்டும்.

சான்று அளிக்கும் முறை

நிர்வாகத்தினரிடமிருந்து பெற்ற 5 நகல்களில் ஒன்றை, அங்கு தொழிற் சங்கம் செயல்பட்டால் அதற்கு அனுப்பி வைப்பார். சங்கம் இல்லையெனில் தொழிலாளர்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நகல் ஒன்றை சான்றளிக்கும் அதிகாரி அனுப்பிவைப்பார். 15 நாட்களுக்குள் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும். ஏதாவது ஆட்சேபம் இருந்தால் சான்று அளிக்கும் அதிகாரி இருதரப்பினரது கருத்துக்களையும் அறிந்த பின்னர் மாதிரி நிலையாணைகளின் அடிப்படையில் உள்ளதா என அறிந்த பின்னர் தேவையான மாற்றங்களை செய்து நேர்மையான நிபந்தனைகளா மற்றும் நியாயமானதா என்று சீர்தூக்கிப் பார்த்து சான்று அளிப்பார். நிலையாணைகள் சான்றளித்த 7 நாட்களுக்குள் அதன் நகல்களை நிர்வாகம், மற்றும் தொழிற்சங் கங்களுக்கு அனுப்பிவிட வேண்டும்.

மேல் முறையீடு:

இத்தகைய சான்று அளித்ததினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் 30 நாட்க ளுக்குள் மேல்முறையீடு அதிகாரியிடம் மேல்முறையீடு செய்யலாம். மேல் முறையீடு அதிகாரி சம்பந்தப்பட்ட அரசுகளினால் நியமிக்கப்படலாம். மேல் முறையீடு அதிகாரியின் முடிவு இறுதியானது. அவர் சான்றளிக்கும் அதிகாரியின் உத்தரவை உறு திப்படுத்தியோ அல்லது மாற்றங்கள் செய்தோ உத்தரவு இடுவார். இந்த உத்தரவு செய்த 7 நாட்களுக்குள் சான்று வழங்கும் அதிகாரிக்கும் நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கத்திற்கும் மேல் முறையீடு அதிகாரி அனுப்பி வைப்பார்.

மேல் முறையீடு செய்யப்படாவிடில் சான்று அளிக்கும் அதிகாரிகள் உத்தரவு கிடைத்த 30 நாட்கள் முடிவடைந்த பிறகு சான்றளிக்கப்பட்ட நிலையாணைகள் செயல்படத் தொடங்கும். மேல் முறையீட்டு அதிகாரியின் உத்தரவு கிடைத்த 7 நாட்களுக்குப் பிறகு அல்லது உத்தரவின் படி செயல்படத் தொடங்கும்.

சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளின் நகலை யாரும் நகல் பெறுவதற்கான கட்டணத்தைச் செலுத்திவிட்டு அதிகாரியிடமிருந்து பெறலாம்.

நிலையாணைகளில் மாற்றம் செய்வதற்கான நீதிமன்ற நடவடிக்கை

சான்று அளிக்கும் அலுவலர் சான்ற ளித்த நாளிலிருந்து 6 மாதங்களுக்குப் பின் நிறுவனமோ அல்லது தொழிற் சங்கமோ அல்லது ஒரு தொழிலாளியோ மேற்கண்ட சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளில் மாற்றம் செய்ய விரும்பினால், சான்றளிக்கும் அலுவலருக்கு விண்ணப்பிக்க உரிமை உண்டு. சான்றளிக்கும் அலுவலர் ஏற்கனவே முறையாக என்னென்ன நடைமுறைகளை கடைப்பிடித்தாரோ அதே முறைகளைக் கடைப்பிடித்து நிலையாணைகளை மாறுதல் செய்யும் நடவடிக்கையில் செயல்படுவார். சான்றளிக்கப்பட்ட நிலையாணைகள் செயல்படத் தொடங்கிய நாளிலிருந்து ஆறு மாதங்களுக்கு எவ்வித மாற்றமும் செய்ய முடியாது.

நிலையாணைகளை நடைமுறைப் படுத்துவதில் நிறுவனத்தினருக்கோ அல்லது தொழிலாளருக்கோ சந்தேகம் ஏற்பட்டால் தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் கோரலாம். நீதிமன்றம் இரு தரப்பினரையும் விசாரித்து தீர்ப்பு வழங்கும். இந்தத் தீர்ப்பு இருதரப்பினரையும் கட்டுப்படுத்தும்.

நிர்வாகத்தின் கடமை: நிலையா ணைகளை ஆங்கிலத்திலும் பெரும் பாலான தொழிலாளர்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியிலும் நன்கு தெரியும்படி விளம்பரப் பலகையில் எழுதி அனைத்துத் தொழிலாளர்களும் நுழையும் இடத்தில் நிறுவனத்தினுள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

சான்றளிக்கும் அலுவலர்கள்: சென் னையில் தொழிலாளர் நலத் துணை ஆணையர்கள் 1ஆவது வட்டம் மற்றும் 2-ஆவது வட்டமும், தொழிலாளர் நல துணை ஆணையாளர் திருச்சி, மதுரை, கோவை, சேலம் ஆகிய மண்டலங்களில் பணிபுரிபவர்கள் தொழிற்சங்கப் பதிவாளராகவும் சான்றளிப்பவர்களாகவும் இயங்கி வருகின்றனர்.

தண்டனைகள்: ஒரு நிறுவனமானது' நிலை ஆணைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றளிக்கும் அதிகாரிக்கு அனுப்பி சான்றினைப் பெறாவிட்டாலும், சான்று பெற்ற நிலையாணைகளை குறிப்பிட்டபடி விளம்பரப்படுத்தாமல் இருந்தாலும், சான்றளிக்கப்பட்ட நிலையாணைகளின் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டாலும் அதிகபட்ச தண்டனையாக ரூ.5000/- அய்யாயிரம் வரை அபராதமாக நிர்வாகத்தினர் மேல் விதிக்கலாம்.

உண்மை இதழ் 16-30-6-1998

சனி, 24 மே, 2025

மாற்றுத் திறனாளிகள் சட்டம் தற்காலிக பணியாளர்களுக்கும் பொருந்தும் உயர்நீதிமன்றம் உத்தரவு


விடுதலை நாளேடு
தமிழ்நாடு

 மதுரை, டிச. 13- தற்காலிக பணியாளர் களுக்கும் மாற்றுத் திறனாளிகள் சட்டம் பொருந்தும் என உயர் நீதிமன்ற அமர்வு தெரி வித்துள்ளது.

திருச்சியில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் 2000இல் தற்காலிக ஓட்டுநராக பணியில் சேர்ந்தவர் முருகூரைச் சேர்ந்த ராஜேந்திரன். இவர் கடந்த 2002இல் தேவகோட்டை – திருச்சி பேருந்தை ஓட்டிச்செல்லும் போது காரைக்குடி பர்மா காலனி அருகே பேருந்து மீது சிலர் கல்வீசினர். இதில் பேருந்து கண்ணாடி உடைந்து சிதறியதில் ராஜேந்திரனின் கண் பார்வை பாதிக்கப்பட்டது.

மருத்துவச் சான்றிதழ்

அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 2005இல் பணி நிரந்தரம் செய்யப்பட்ட போது மருத்துவ சான்றிதழ் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதன்படி மருத்துவக் குழு முன்பு ஆஜரானபோது கண் பார்வையில் பாதிப்பு இருப்பதால் ராஜேந்திரன் ஓட்டுநர் பணிக்கு தகுதியற்றவர் என சான்றிதழ் அளிக்கப்பட்டது. இதையடுத்து ராஜேந்திரன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பணி நீக்கத்தை ரத்து செய்யவும், மாற்றுத் திறனாளிகள் சட்டத்தின் கீழ் தனக்கு மாற்றுப் பணி வழங்கக் கோரியும் ராஜேந்திரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை தனி நீதிபதி விசாரித்து, தற்காலிக பணியாளர்களுக்கும் மாற்றுத் திறனாளிகள் சட்டம் (சம வாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் முழு பங்களிப்பு) 1995 பொருந்தும். அதன்படி மனுதாரரை மீண்டும் பணியி்ல் சேர்த்து மாற்றுப் பணி வழங்க வேண்டும் என 6.10.2023இல் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர், திருச்சி கிளை மேலாளர் ஆகியோர் மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியாகவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில், மனுதாரர் தற்காலிக பணியாளர் தான். தற்காலிக பணியாளர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் சட்டம் பொருந்தாது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் தாமதமாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.

மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிடுகையில், மாற்றுத் திறனாளிகள் சட்டம் 1995இன் பிரிவு 47இல் பணியிலிருக்கும் போது மாற்றுத் திறனாளியாகும் பணியாளர்களுக்கு மாற்றுப்பணி மற்றும் ஊதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்தச் சட்டப்படி மனுதாரரரை மீண்டும் பணியில் சேர்த்து மாற்றுப்பணி வழங்க வேண்டும் என்றார்.
பின்னர் நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பணியாளர்கள் என்பது தற்காலிக பணியாளர்களையும் உள்ளடக்கியது தான் என உயர் நீதிமன்ற அமர்வு 2017இல் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட எந்தக்காரணமும் இல்லை. எனவே மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.

வியாழன், 15 மே, 2025

நீண்ட போராட்டத்திற்கு பின் 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு ரூ.2999 கோடி அறிவிப்பு


விடுதலை நாளேடு


 சென்னை, மே.2- நீண்ட போராட் டத்திற்கு பின் 100 நாள் வேலை திட்டத்துக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.2,999 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. ஒன்றிய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

100 நாள் வேலை திட்டம்

கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை அளிப்பதை உறுதி செய்யும் திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் எனப்படும் 100 நாள் வேலை திட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த வும், வறுமையை ஒழிக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. ஒரு குடும்ப அட்டைக்கு, ஒரு தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அட்டை வழங்கப் படும். இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 740 மாவட்டங்களில் 13.42 கோடி பேர் பயன் அடைந்து வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ள நிலையில் 91 லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

ரூ.336 கூலி

இந்த வேலைக்கு ஒரு நாள் கூலியாக ரூ.50-இல் தொடங்கி தற்போது ரூ.374 வரை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏற்றவாறு இந்த தொகை மாறுபடுகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் ஒரு நாள் கூலியாக ரூ.319 வழங்கப் பட்டு வந்த நிலையில் ரூ.17 உயர்த்தப்பட்டு கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ரூ.336 ஆக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் பணியாற்றும் பெண்களுக்கு வழங்கப்படும் ஊதியத் துக்கான நிதியை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது.

முதலமைச்சர் கடிதம்

இந்த திட்டத்துக்கான நிதி ஒன்றிய அரசால் முறையாக ஒதுக்கப்படுவது இல்லை என தமிழ்நாடு அரசு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் குற்றம் சாட்டின.

இந்த திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய 4 ஆயிரத்து 34 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் இருந் தது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.இதுதவிர அமைச்சர் தங்கம் தென்னரசு, கனி மொழி எம்.பி. ஆகியோர் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தும் பேசி னார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எம்.பி.,

100 நாள் வேலை திட்டம் தொடர் பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். அதேபோன்று தி.மு.க. எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதே கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தினர்.

ரூ.2,999 கோடி விடுவிப்பு

ஒன்றிய அரசு நிதி வழங்காத காரணத்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பல மாநிலங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட தாகவும், இதனால் இந்த திட்டத்தில் பயன்பெற்று வந்தவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்த நிதியை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இந்தநிலையில் தமிழ்நாட்டுக்கு 100 நாள் வேலை திட்டத்துக்கான நிதி ரூ.2 ஆயிரத்து 999 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

ஒன்றிய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.