செவ்வாய், 9 ஜூலை, 2024

பழங்குடியின இளைஞர்களை தொழில் முகவர்களாக உயர்த்துவதில் தனி கவனம் -தமிழ்நாடு அரசு தகவல்

 


விடுதலை நளேடு

சென்னை, ஜூன் 11- தமிழக பழங்குடியின இளைஞர்கள் தொழில் முகவர்களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
“தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலினின் திரா விட மாடல் அரசு 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு புத்தொழில் நிறுவனங்களுக்கு அளித்துவரும் ஊக்கம் காரணமாகத் தமிழ்நாட்டில் 6,384 புத்தொழில் நிறுவ னங்கள் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப் படையில் முதலமைச்சரால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் உருவாகியுள்ளதோடு பலருக்கு வேலைவாய்ப்பு களும் கிடைத்துள்ளன.

திராவிட மாடல் அர சால் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 20.9.2023இல் முதலமைச்சரால் வெளியிடப்பட்டது.

2021ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அந்நிறுவனங்களின் எண்ணிக்கை 2,032. இன் றைய நிலவரப்படி இது 4 மடங்கிற்கும் மேல் அதிகரித்து 8,416-அய் எட்டியுள்ளது.

மகளிர் ஸ்டார்ட் அப்க ளின் எண்ணிக்கை 2021ஆம் ஆண்டில் 966 ஆக இருந்தது தற்போது மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்து 3,163 ஆக உயர்ந்துள்ளதே இந்த அரசின் செயல்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும்.

ஸ்டார்ட் அப் நிறுவ னங்களுக்கு உகந்த சூழ லைக் கட்டமைத்துச் செயல்படும் மாநிலங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டது. இதில் தமிழ்நாடு முதல் நிலையை பிடித்திருப்பதிலிருந்தே இந்த அரசின் சாதனை யைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

முதலமைச்சரின் திராவிட மாடல் அரசு அனைத்துச் சமூகத்தி னரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் மிகுந்த அக்கறை செலுத்தி தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரால் நிறுவப் படும் புத்தொழில் நிறுவ னங்களை ஊக்குவித்து ரூ.80 கோடி சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

38 நிறுவனங்களுக்கு ரூ.55.20 கோடி பங்கு முதலீடுகள் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் அனைவரை யும் உள்ளடக்கிய புதுயுகத் தொழில் முனைவு வளர்ச் சியினை அடையும் நோக் கத்தில் தமிழ்நாடு அரசால் தாழ்த்தப்பட்டோர் பழங் குடியினர் புத்தொழில் நிதித் திட்டமானது 2022- 2023ஆம் நிதி ஆண்டில் கொண்டுவரப்பட்டது.

கடந்த இரண்டு நிதி ஆண்டுகளில், நாட்டின் முன்மாதிரியாக விளங் கும் இத்திட்டத்தின் வாயிலாக 38 புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.55.2 கோடி பங்கு முதலீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மட்டு மல்லாது சேலம், கன்னி யாகுமரி, மதுரை, திருச்சி, கோயமுத்தூர், ஈரோடு, நீலகிரி ஆகிய பல்வேறு மாவட்டத்தினை சேர்ந்தோர் இதன் வாயிலாக பயன்பெற்றுள்ளனர்.

ஸ்டார்ட்அப் திருவிழா

புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்காக கோவையில் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் நடத்திய தமிழ்நாடு புத்தொழில் திருவிழா 2023 மாபெரும் வெற்றி கண்டது.

21 ஆயிரம் பார்வை யாளர்களோடு, 450 புத்தொழில் நிறுவனங் கள் பங்கேற்ற கண் காட்சி அரங்கமும் இத் திருவிழாவில் இடம்பெற்றது.

இந்த விழாவில் 3 கோடியே 64 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு வணிகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு முயற்சிகளை முனைப்புடன் மேற் கொண்டு வருவதன் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் புத்தாக்கத் தொழில்கள் வளர்ச்சியில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் இன இளை ஞர்களுக்கு ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தி, அவர்களை தொழில் முகவர்களாக உயர்த்துவதில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார். இதனை தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் பாராட்டி வரவேற்கிறார்கள்.
– இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தொழிலாளர் கூட்டத்தில் பெரியார் முழக்கம்!

 

அந்நாள் – இந்நாள் : 

விடுதலை நாளேடு

தொழிலாளர் கூட்டம் ஒன்று மேக்ஸ்ப்ரேதா (பான்சிலே) லேக்பார்க்கில் 20.6.1932ஆம் தேதி கூடியது. கூட்டத்தில் சுமார் 20, 30 ஆயிரம் பேர்கள் இருந்தார்கள். பக்கத்தில் பிரிட்டிஷ் தொழில் கமிட்டி தலைவர் தோழர் லான்ஸ்பரி அவர்கள் பேசினார். அதற்கு பதில் என்கின்ற முறையில் தோழர் ஈ.வெ.ராமசாமியால் இந்த உபன்யாசம் செய்யப்பட்டதாகும்.

தோழர்களே!
இந்தியர்களாகிய எங்களை நீங்கள் ஒரு பரிகசிக்கத் தகுந்த சமூகமாகக் கருதலாம். ஆனால் நாங்கள் பிரிட்டிஷ் தொழில் கட்சியை மிக மிகப் பரிகசிக்கத்தக்க விஷயமாய் கருதுகிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஏனெனில், தொழில் கட்சித் தலைவராகியத் தோழர் லான்ஸ்பரி அவர்கள் சிப்பாய்கள் சுடுவதையும், கொல்லுவதையும் தாம் சிறிதும் விரும்புவதில்லை என்று பெருமை பேசிக் கொள்ளுகிறார். ஆனால் எங்கள் கார்வாத் (Gharwath) சேனைகள் நிராயுதபாணி களான மக்களைச் சுடுவதற்கு மறுத்தற்காகத் தோழர். லான்ஸ்பரியின் தொழிற்கட்சி கவர்ன்மெண்டானது அந்தச் சிப்பாய்களுக்கு 15 வருஷ கடின காவல் தண்டனை விதித்திருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.

2. தொழிலாளர் சங்கமாகிய டிரேட் யூனியனை ஆதரிப்பதாகவும், அதில் சேர்ந்து உழைப்பதாகவும் பறை சாற்றுகிறீர்கள். ஆனால், எங்கள் ஏழை இந்திய சுரங்க வேலைக்காரர்களும் மற்ற தொழிலாளர்களும் சேர்ந்து ஒரு ட்ரேட் யூனியன் சங்கம் ஸ்தாபித்ததற்காக அதன் அதிகாரிகளையும், அதற்கு உதவி செய்த பிரிட்டிஷ் தோழர்களையும் வெளியில் இருக்க விடாமல் உங்கள் தொழில் கட்சி அரசாங்கமானது மீரத்து சிறையில் அடைத்துப் போட்டு விட்டது.

3. தோழர் லான்ஸ்பரி அவர்கள் இந்தியர்கள் விஷயத்தில் மிக்க அனுதாப மிருப்பதாகவும், இந்தியர்கள் சுடப்படுவதையும் அடிக்கப்படுவதையும், சிறையில் அடைக்கப்படுவதையும், தாம் விரும்புவதில்லை என்றும் சொல்லிக் கொள்வதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் தோழர் லான்ஸ்பரியுடைய தொழில் கட்சி அரசாங்க கேபினட்டானது சுமார் 80,000 பேர் வரை இந்திய ஆண் பெண்களை ஜெயிலில் அடைத்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறது.
ஆப்ரிக்கன் கிராமங்களின்மீது ஆயிரக்கணக்கான தடவை ஆகாயப்படை மூலம் கொடுமை செய்யப்பட்டிருக்கிறது.
நூற்றுக்கணக்கான பர்மியர்களையும் கிராமத் தாரையும் சுட்டுக் கொன்று இருக்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்?

4. இந்திய சுரங்கங்களில் 10 மணி நேர வேலைக்கு 8 அணா கூலிக்கு இந்தியர்களிடம் வேலை வாங்கப் படுகின்றது. சுமார் 40 ஆயிரம் பெண்கள் தினம் அய்ந்தணா கூலிக்கு பூமிக்குள் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த கொடுமையையும், ஆபாசத்தையும் நிறுத்த தொழில் கட்சி அரசாங்கம் என்ன செய்தது?

5. தோழர் லான்ஸ்பரி அவர்கள் இங்கிலாந்தில் தொழிலாளிகளை ஆதரிக்க வேண்டும் என்று பேசுகிறார். ஆனால் இந்திய விஷயத்தில் தோழர் காந்தியையும், இர்வின் பிரபுவையும் கொடுமையான வட்ட மேஜை மகாநாட்டையும் ஆதரிக்கிறார். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் இந்தியாவானது இந்திய அரசர்களும், ஜமீன்தார்களும், முதலாளிமார்களும், அய்ரோப்பிய வியாபரிகளுமே ஆதிக்கம் வகிக்கும் படியானதும் தொழிலாளிகளுக்கும் குடித்தனக்காரர்களுக்கும் பாத்தியமும் – பொறுப்பும், இல்லாததுமான ஒரு அரசியல் சபை மூலம் இந்திய நிர்வாகம் நடக்கும் படியான காரியத்திற்கு உதவி செய்கிறார். இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்?

6. தோழர் லான்ஸ்பரி அவர்கள் யுத்தத்தையும். யுத்த மூஸ்தீபையும் வெறுக்கிறதாக சொல்லுகிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் துருப்புகளையும், பிரிட்டிஷ் வைசிராயையும் திருப்பி அழைத்துக் கொள்ள மறுக்கிறார்.

7. கடைசியாக இருந்த தொழிற் கட்சி அரசாங்கமானது இரண்டு வருஷகாலத்தில் அனுப்பிய ஆகாய சண்டைக் கப்பல்களையும், வெடிகுண்டுகளையும், மோட்டார் பீரங்கி வண்டிகளையும் கவசார் செய்த மோட்டார் வண்டிகளையும், யந்திரத் துப்பாக்கிகளையும், பிரிட்டிஷ் பட்டாளங்களையும் கணக்கு பார்த்தால் பால்ட்வின் அரசாங்கமானது தனது 5 வருஷம் ஆட்சியில் அனுப்பப்பட்டதை விட அதிகமாகவே இருக்கிறது. தோழர்களே!! இவற்றிலிருந்து பிரிட்டிஷ் தொழிலாளர் பார்ட்டி என்று சொல்லப்படும் சமதர்ம பார்ட்டி யின் யோக்கியதையை அறிந்து கொள்வது என்பது எங்களுக்கு மிக கஷ்டமாகவே இருக்கிறது.
ஆதலால் யாக்ஷையார் தொழிலாளிகளே! நீங்கள் இந்தப் போலி கட்சிகளையும், கொள்கைகளையும், நம்பாமல் மனித சமூக விடுதலைக்கும், சுதந்திரத்துக்கும் சமத்துவத்திற்கும் உண்மையாகவே போராட உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை எதிர் நோக்கிக் கொண்டிருங்கள்.
(20.6.1932)

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் விடுப்பு

 


புதுடில்லி ஜூன் 25 வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு 180 நாள்கள் மகப்பேறு விடுப்பு வழங்கி ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக 50 ஆண்டுகால விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஒன்றிய சிவில் சர்வீஸ் (விடுப்பு) விதிகள் 1972 சட்டம் திருத்தப்பட்டு இந்த 6 மாத விடுப்பு விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி, வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் தாய்க்கு 180 நாள்கள் (6 மாதங்கள்) மகப்பேறு விடுப்பும், குழந்தையின் தந்தைக்கு 15 நாட்கள் விடுப்பும் அளிக்கப்படும் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.

இந்த முறையில், வாடகைத் தாய் மற்றும் அவர் மூலம் குழந்தையைப் பெறும் தாய், இருவரில் ஒருவர் அல்லது இருவருமே அரசு ஊழியர்களாக இருந்து, 2 குழந்தைகளுக்கும் குறைவாக இருப்பவர்களுக்கு மகப்பேறு விடுப்பு 180 நாள்கள் வழங்கப்படும் என்றும் ஒன்றிய அரசு பணியாளர் நலன் அமைச்சகத்தால் அறிவிக்கப் பட்டுள்ளது. வாடகைத் தாய் மூலம் குழந்தையைப் பெறும் தந்தை அரசு ஊழியராகவும், 2 குழந்தைகளுக்கு குறைவாகப் பெற்றவராகவும் இருந்தால், குழந்தை பிறந்த 6 மாத காலத்துக்குள் அவர்15 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள புதிய விதிகளில் அனுமதி தரப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வாடகை தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ளும் தாய்க்கு 2 குழந்தைகளுக்குக் குறைவாக இருந்தால் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு எடுக்க ஒன்றிய சிவில் சர்வீஸ் (விடுப்பு) புதிய விதிகள் 2024-ன்படி அனுமதி வழங்கப்படுகிறது.
தற்போதுள்ள விதிகளின்படி, பெண் அரசு ஊழியர் மற்றும் தனி பெற்றோராக இருக்கும் ஆண் அரசு ஊழியருக்கு குழந்தைகள் பராமரிப்பு விடுப்பாக, இரண்டு குழந்தைகளின் கல்வி, உடல்நலம் மற்றும் இதரத் தேவைகளுக்கு என அவர்களுடைய மொத்தப் பணிக் காலத்தில் 730 நாள்கள் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.