சனி, 17 பிப்ரவரி, 2024

தொடக்கப் பள்ளிகளில் 1500 ஆசிரியர்கள் நேரடி நியமனம்

 



சென்னை, ஜன.5 தமிழ்நாடு தொடக்க கல்வி துறையின்கீழ் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடியாக நியமனம் செய்ய அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி துறையின்கீழ் 31,214 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 35 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின் றனர். இதற்கிடையே, கரோனா பரவலுக்கு பிறகு, அரசுப் பள்ளி களில் சுமார் 5 லட்சம் மாண வர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அதில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மட்டும் 2.8 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கை பெற்றனர்.

ஆனால், 2013_20-14ஆ-ம் கல்வி ஆண்டுக்கு பிறகு, தமிழ் நாடு அரசால் இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் மேற் கொள்ளப்படவில்லை. இத னால், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், தற்போது தொடக்க, நடுநிலைப் பள்ளி களில் மட்டும் 8,643 இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன.இவற்றை சமாளிக்க தொகுப்பு ஊதியத்தில் பட்ட தாரிகள் நியமனம் செய்யப்பட்டு, மாணவர்களுக்கு கற்றல், கற்பித் தல் பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இதுதவிர பெரும்பாலான பள்ளிகளில் ஒரு ஆசிரியர், இரு ஆசிரியர்களை கொண்டு இயங் கும் நிலை உள்ளதால் மாணவர் களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன. மேலும், வரும் ஆண்டுகளில் ஓய்வு பெறும் இடைநிலை ஆசிரி யர்கள் எண்ணிக்கையும் அதிக மாக இருப்பதால் காலிப் பணியிடங்களை துரிதமாக நிரப்ப வேண்டும் என ஆசிரியர் சங் கங்கள், கல்வியாளர்கள் தரப் பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.
அதை ஏற்று, முதல்கட்டமாக 1,000 இடைநிலை ஆசிரியர் களை ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நியமனம் செய்து கொள்ள தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு உத்தர விட்டது.

தொடர்ந்து, தற்போது கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடக்க கல்வி இயக்கு நரகத்தின்கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் நேரடி நிய மனம் மூலம் நிரப்ப வேண்டிய இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பற்றிய விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட் டது. அதன் அடிப்படையில், தொடக்க கல்வி இயக்குநரின் கருத்துருவை நன்கு பரிசீலனை செய்தபிறகு, 2023_20-24ஆம் கல்வி ஆண்டில் கண்டறியப் பட்ட 8,643 எண்ணிக்கையிலான காலி இடங்களில் 1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள ஏற்கெனவே அனுமதி வழங்கப் பட்டது. தற்போது அந்த பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அனுமதி அளிக்கப்படுகிறது.

அதற்கு முன்பாக, ஒருங் கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அளவை விட உபரியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, அதிககாலி இடங்கள் உள்ள மாவட்டங் களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு நிரவல் செய்யவேண்டும்.

5 ஆண்டு பணிபுரிய நிபந் தனை: தற்போது அனுமதிக்கப் பட்டுள்ள 1,500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுவோரை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகம் காலியாக உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அந்த மாவட்டங் களில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நிய மிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், கடந்த ஆகஸ்ட் மாதமே இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் மேற் கொள்ள அரசு அனுமதி வழங்கி விட்ட நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் அதற்கான அறிவிப்பாணையை கூட வெளியிடவில்லை. வாரி யத்தின் இந்த மெத்தனத்தால் தேர் வர்கள் அதிருப்தியில் உள்ளனர். எனினும், இடை நிலை ஆசிரியர் பணிநியமன போட்டி தேர்வு குறித்த அறிவிப்பாணை விரைவில் வெளி யாகும் என்று துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது. ‘டெட்’ முதல் தாள் தேர்ச்சி பெற்ற சுமார் 48 ஆயிரம் பட்ட தாரிகள் இந்த பணிக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓபிசி சான்றிதழ் குறித்து திருத்தப்பட்ட ஆணை வெளியீடு

 



தமிழ்நாடு முதலமைச்சரின் உடனடி உத்தரவு!

பொதுத்துறை நிறுவன ஓபிசி பணியாளர்களுக்கு தமிழ்நாட்டில் ஓபிசி சான்றிதழ் மறுக்கப்படுவது குறித்து நமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் என்.எல்.சி. நிறுவன ஓபிசி அமைப்பின் சார்பில் 10.8.2022 தேதியிட்ட கடிதம் பெறப்பட்ட நிலையில், அ.இ.பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் கூட்ட மைப்பின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு 4.9.2022 தேதியிட்ட கடிதம் அனுப்பப்பட்டது.

நமது கூட்டமைப்பின் கடிதத்தில்,‘‘தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் 24.8.2021 தேதியிட்ட ஆணையில், ஓபிசி பிரிவினரில் முன்னேறிய பிரிவினரை (கிரிமிலேயர்) நீக்கம் செய்திட குறிப்பிட்டுள்ள பணியாளர் வகைப்பாட்டில் (service category), (பத்தி 2- வீவீ)” பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர்” என பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றும் அனைத்து நிலை ஓபிசி பணியாளர்கள் பிள்ளைகளுக்கு ‘ஓபிசி சான்றிதழ்’ பெறுவதில் பெரும் சிக்கலும் தடையும் ஏற்பட்டுள்ளது.

இதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை 24.8.2021 இல் குறிப்பிட்டுள்ள ஒன்றிய அரசின் இரு ஆணைகளிலும், (இந்திய அரசின் அலுவலக குறிப் பாணை எண்: 361012/22/93-Estt.SCT, நாள்: 8.9.1993 மற்றும் இந்திய அரசின் அலுவலக குறிப்பாணை எண்:36033/1/2013-Estt-(Res), நாள் 13.9.2017) பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஓபிசி பிரிவினர் குறித்து பொத்தாம் பொதுவாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் 24.8.2021 தேதியிட்ட ஆணையையும், அதே போன்று அந்த ஆணையை வழி மொழிந்து அனைத்து மாவட்ட ஆட்சியர் களுக்கும் பிறப்பித்த வருவாய் நிருவாக ஆணையரகத்தின் 24.9.2021 தேதியிட்ட ஆணையையும் திரும்பப் பெற வேண்டும்.

ஒன்றிய அரசின் அரசுத் துறை மற்றும் பொதுத்துறை நிறுவன பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு மிகக் குறைவாக இருப்பதையும், தற்போதைய 24.8.2021 தேதியிட்ட ஆணை, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங் களில் பணியாற்றும் தமிழ்நாடு ஓபிசி பிரிவினர் வாய்ப்பை மேலும் குறைத்திடும் என்பதையும் கருத்தில் கொண்டு, மிகவும் முக்கியம் வாய்ந்த இந்தப் பிரச்சினையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு, ஆவன செய்திட தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” என கடிதம் எழுதப்பட்டது. கடிதத் தின் நகல் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் அவர் களுக்கும் அளிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்ட கடிதத்தின் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் ‘சமூக நீதி கண்காணிப்புக் குழு’ 11.10.2022 தேதியிட்ட கடிதத்தில் வலியுறுத்தப்பட்ட நிலையிலும், நமது கூட்ட மைப்பின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சம்பந்தப் பட்ட அதிகாரிகளை நேரில் சந்தித்துத் தொடர்ந்து வலியுறுத் தப்பட்டது.

நமது கூட்டமைப்பின் தொடர் முயற்சியின் காரணமாக, தற்போது தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் துறையின் சார்பில் 30.3.2023 தேதியிட்ட கடிதத்தின் மூலம், நாம் கோரிய கோரிக்கை, அதாவது, தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் ஆணை (24.8.2021), வருவாய் துறையின் ஆணை (24.9.2021) திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

தமிழ்நாடு அரசின் 30.3.2023 தேதியிட்ட கடிதத்தின் பார்வை 7 இல் நமது கூட்டமைப்பின் 4.9.2022 தேதியிட்ட கடிதம் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டுகிறோம்.

தமிழ்நாடு அரசின் தற்போதைய 30.3.2023 தேதியிட்ட கடிதம் காரணமாக, ‘பொதுத் துறை நிறுவன ஊழியர்கள்’ அனைவருக்கும் கிரிமிலேயர் என்ற நிலை நீக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் அல்லாத பதவிகளில் உள்ள ஓபிசி பிரிவினர் ஒன்றிய அரசின் குரூப் சி-க்கு இணையான பதவிகள் என்பதாலும், குரூப் சி பதவிகளுக்கு ‘கிரிமிலேயர்’ முறை பொருந்தாது என்பதாலும், ஒன்றிய அரசு, மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களில் அலுவலர்கள், கடைநிலை ஊழியர்கள் பதவிகளில் உள்ள அனைத்து பிற்படுத்தப்பட் டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரது பிள்ளை களுக்கு ஓபிசி சான்றிதழ் பெறுவதில் எந்த சிக்கலும் இருக்காது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது பிற்படுத்தப்பட்டோர் துறையின் 30.3.2023 தேதியிட்ட கடிதத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் வருவாய் துறை, அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் ஓபிசி சான்றிதழ் வழங்கிடும் துறைகளுக்கும் விரைவில் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருவாய் துறை கூடுதல் முதன்மை செயலாளர் /ஆணையருக்கு கூட்டமைப்பின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் ஆணை (24.8.2021), வருவாய் துறையின் ஆணை (24.9.2021) குறித்த சிக்கலை நமது கவனத்திற்கு கொண்டு வந்த என்.எல்.சி. நிறுவன ஓபிசி அமைப்பிற்கும் அதன் அனைத்து நிர்வாகிகளுக்கும் நமது நன்றி. பாராட்டுகள்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பி வருவாய் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் அருமைத் தம்பி மருத்துவர் நா.எழிலன் அவர்களுக்கு நன்றி! 

 நமது அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் கூட்டமைப்பு கடிதத்தின் அடிப்படையில் உரிய தீர்வினை மேற்கொண்டு, ஓபிசி பிரிவினருக்கு சான்றிதழ் கிடைத்திட வழிவகை செய்த தமிழ்நாடு முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது கூட்டமைப்பின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள் கிறோம். மேலும் பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கும், சமூக நீதி கண்காணிப்புக் குழு அரசு செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோருக்கும் நமது உளமார்ந்த நன்றிகள்!

– கோ.கருணாநிதி

பொதுச்செயலாளர்

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் கூட்டமைப்பு

ஒன்றிய அரசின் புதிய ஆணை அரசு பெண் ஊழியர் மரணம் அடைந்தால் கணவருக்கு பதிலாக குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம்

 



புதுடில்லி,ஜன.4- திருமண விவகாரம் சர்ச் சையில் இருந்தால், அரசு பெண் ஊழியர் தனது மரணத்துக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவ ருக்கு பதிலாக தனது குழந்தையை நியமிக் கலாம் என்று ஒன்றிய அரசு விதி முறை திருத்தம் கொண்டு வரப் பட்டுள்ளது.

மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதியம்) விதிமுறைகள், 2021-இன் 50ஆவது விதி முறைப்படி, ஓர் அரசு ஊழியரோ அல்லது ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற அரசு ஊழியரோ மரணம் அடைந்தால், அவரது வாழ்க்கை துணைக்கு (கணவன் அல்லது மனைவி) ஓய்வூதியம் வழங்கப்படு கிறது.
ஒருவேளை அந்த வாழ்க்கை துணைக்கு தகுதி இல்லாவிட்டாலோ அல்லது அவரது மரணத்துக்கு பிறகோ அவர்களின் குழந்தைகள், வரிசை அடிப்படையில் குடும்ப ஓய்வூ தியம் பெற தகுதி பெறுவார்கள்.

இந்நிலையில், அரசு பெண் ஊழியர், தனது கணவருக்கு பதிலாக தனது குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்க செய்யலாம் என்று ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை திருத்தம் செய்துள்ளது.

இதுகுறித்து அத்துறை வெளியிட் டுள்ள ஆணையில் கூறப்பட்டிருப்ப தாவது, கணவருக்கு எதிராக விவா கரத்து வழக்கு தாக்கல் செய்த பெண் ஊழி யர்கள்,
தங்கள் கணவருக்கு பதிலாக தங்கள் குழந்தையை குடும்ப ஓய்வூ தியம் பெற நியமிப்பதற்கு அனுமதிக் கலாமா என்று கேட்டு பல்வேறு அமைச்சகங்களிடம் இருந்து எங்களுக்கு கடிதங்கள் வந்தன.

அதன் அடிப்படையில் இந்த திருத்தத்தை கொண்டு வந்துள்ளோம்.

அதன்படி, கணவருக்கு எதிராக பெண் ஊழியர் தொடர்ந்த விவா கரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவை யில் இருந்தாலோ. குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின்கீழ் கணவருக்கு எதிராக அவர் புகார் அளித்திருந் தாலோ, அத்தகைய பெண் ஊழியர்கள் தங்கள் மரணத்துக்கு பிறகு கணவருக்கு பதிலாக தங்கள் குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்குமாறு தங்கள் துறை தலைவரிடம் எழுத்துப் பூர்வமாக எழுதி கொடுக்கலாம்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இரண்டாண்டுகளில் 50 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள்!

 



முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, பிப்.17 இரண்டாண்டுகளில் 50 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (16.02.2024) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் 1598 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை வருமாறு:
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ முத்திரை பதிக்கக்கூடிய திட்டங்களை நாங்கள் தீட்டியிருக்கிறோம். அதில் குறிப்பிட்டு சொல்லக் கூடிய வகையில்,
க மகளிருக்கான விடியல் பயணம்
* புதுமைப் பெண் திட்டம்
* முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
* கலைஞர் மகளிர் உரிமை திட்டம்
* இல்லம் தேடிக் கல்வி
* மக்களைத் தேடி மருத்துவம்
* ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல்
* நான் முதல்வன்
* உங்கள் தொகுதியில் முதலமைச்சர்
* முதல்வரின் முகவரி
* கள ஆய்வில் முதலமைச்சர்
– இப்படி நான் சொல்லிக் கொண்டே போகமுடியும். இந்த திட்டங்கள் எல்லாம் கோடிக்கணக்கான மக்களை மகிழ் வித்துக் கொண்டிருக்கின்ற திட்டங்களாக அமைந்திருக் கின்றன.
இந்த வரிசையில் இந்த ‘திராவிட மாடல்’ அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் ‘‘மக்களுடன் முதல்வர்” என்கிற இந்த மகத்தான திட்டம்!
இந்தத் திட்டத்தின் பயனாளிகளுக்கு அரசு சேவைகளை வழங்குகிற இனிய நிகழ்ச்சியில் பங்கு பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
“மக்களிடம் செல் – மக்களோடு வாழ் – மக்களுக்காக வாழ்” என்பதுதான் எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண் ணாவும் – தமிழினத் தலைவர் கலைஞரும் காட்டிய பாதை என்பதை நாங்கள் மறந்துவிட மாட்டோம்.
ஆட்சியில் இல்லாதபோது மக்களுக்காகப் போராடுவோம், வாதாடுவோம். ஆட்சியில் இருக்கின்ற நேரத்தில், மக்களுக் காக திட்டங்களை தீட்டுவோம், நன்மைகளை வழங்கிக் கொண்டே இருப்போம். அத்தகைய நன்மைகளை நேரடியாக ஒவ்வொரு மனிதருக்கும் வழங்குகிற மாபெரும் திட்டம்தான் ‘‘மக்களுடன் முதல்வர்” என்கின்ற இந்தத் திட்டம்.

கடைக்கோடி மனிதருக்கும்…
அரசுத் திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி மனிதருக் கும் போய்ச் சேருகிறதா என்று ஆய்வு செய்கின்ற நேரத்தில், ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தை தொடங்கி நான் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்றேன். நான் மட்டுமல்ல, பல அமைச்சர்களும் சென்றார்கள். அப்போது, அரசின் சேவைகளை விரைவாக பெறுவதில், சில மாவட்டங்களில் சுணக்கம் இருந்தது எங்களுக்கு தெரிந்தது. மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் இருந்தார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். அதை முழுமை யாக போக்கவேண்டும் என்பதற்காகதான், அவர்களுக்கு உதவக்கூடிய வகையில்தான் ஒரு புதிய திட்டமாக “மக்களு டன் முதல்வர்” என்கின்ற திட்டம் தீட்டப்பட்டது. 18-12-2023 அன்று கோவையில் ‘‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன்.

விரைவாக தீர்வு கிடைக்க…
அரசு அலுவலகங்களுக்கு மக்கள் சென்று, சேவைகளைப் பெறும் அந்த நிலையை மாற்றி, அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் சேர்க்க, எல்லா பொதுமக்களுக்கும் அதை எளிதில் கிடைக்கச் செய்வதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது. சேவைகளை பெற அலையத் தேவையில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கினோம். விண்ணப்பித்தால் விரைவாக தீர்வு கிடைக்க ஏற்பாடுகளை செய்தோம்.
தேவையற்ற தாமதங்களை தவிர்த்தோம். அவசியமில்லாத கேள்விகளை குறைத்தோம். இதனால்தான், சேவைகளை விரைவாகவும், எளிதாகவும் பெற முடிகின்றது என்று இன்றைக்கு மக்கள் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள், முதியோர் போன் றோருக்கான சேவைகள முதலிலேயே கண்டறிந்து, தீர்த்து வைப்பதில் இந்தத் திட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கிறது.

கிராம ஊராட்சிகளில்…
முதற்கட்டமாக, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப் புகள், நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில்
2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, எல்லா மாவட்டங்களிலும் இருக் கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டிருக் கிறது. பெறப்பட்ட மனுக்களை முதலில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். அதன்பிறகு தொடர்புடைய துறைக்கு அனுப்புகிறார்கள். முப்பதே நாட்களில் இந்த நட வடிக்கைகள் மூலமாக, நான் பெருமையோடு சொல்கிறேன், 3 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட இருக்கிறது. இது மிகப்பெரிய எண்ணிக்கை.
இது தொடர்பாக, மேலும் சில புள்ளிவிவரங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

பட்டா மாறுதல்களும்…
* வருவாய்த் துறையில் 42 ஆயிரத்து 962 பட்டா மாறுதல்களும், 18 ஆயிரத்து 236 நபர்களுக்குப் பல்வேறு வகையான சான்றிதழ்களும் தரப்பட்டிருக்கிறது.
* மின்சார வாரியத்தில் 26 ஆயிரத்து 383 நபர்களுக்கு புதிய மின் இணைப்புகள்/ பெயர் மாற்றங்கள் செய்யப் பட்டிருக்கிறது.
* நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக, 37 ஆயிரத்து 705 நபர்களுக்கு வரிவிதிப்பு /குடிநீர்/ கழிவுநீர் இணைப்பு/ கட்டட அனுமதி/ பிறப்பு, இறப்பு பதிவுகள் போன்றவை செய்து தரப்பட்டிருக்கிறது.
* குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை மூலம் ஆயிரத்து 190 நபர்களுக்கு 60 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில் தொழில் கடன் உதவி செய்து தரப்பட்டிருக்கிறது.
* மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஆயிரத்து 659 நபர்களுக்கு 3 சக்கர வாகனம்/ கடன் உதவிகள்/ கருவிகள்/அடையாள அட்டைகள் தரப்பட்டிருக்கிறது.
* கூட்டுறவுத்துறை மூலமாக, 6 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 766 நபர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப் பட்டிருக்கிறது.

இலட்சகணக்கான குடும்பங்கள் பயன்…
இப்படி, முப்பதே நாட்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு இங்கே பதிவு செய்ய விரும்புறேன். இதைவிட பெரிய வெற்றி இருக்க முடியுமா? இத்தனை இலட்சம் குடும்பங்கள் இதனால் பயனடைந்து இருக்கிறார்கள்.
எல்லா மாவட்டங்களிலும், மேற்படி முகாம்களில் அளித்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டு, அந்த பயனாளிகளுக்கு அவ்வப்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைக்கும், எல்லா மாவட்டங்களிலும், நடைபெற்று வரும் இந்த நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சிகளில் காணொலி வாயிலாக நானும் பங்கேற்றிருக்கிறேன்.
பல ஆண்டுகளாக, நிலுவையில் இருந்த கோரிக்கைகள் இந்தச் சிறப்பு முகாம்கள் மூலமாக முடிவுற்றதை பத்திரிகைகள், செய்தி ஊடகங்கள் பாராட்டிக் கொண்டிருக்கின்றன.

விடிவு காண்பதே நோக்கம்
மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவுக்கும் முடிவு காண்பதே முக்கியம் என்று நினைக்காமல், விடிவு காண்பதே நோக்கம் என்று செயல்பட்டால் தான் அரசு மேல் ஏழைகள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை வலுவடையும். அத்தகைய நம்பிக்கையை விதைக்கின்ற திட்டமாக ‘‘மக்களுடன் முதல்வர்” திட்டம் அமைந்திருக்கிறது. இதற்கு காரணமான அமைச்சர் களையும், அனைத்து அரசு அதிகாரிகளையும் நான் நன்றியுணர்வோடு பாராட்டுறேன், வாழ்த்துகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் மற்றுமொரு சிறப்பு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்குப் பணி ஆணை வழங்கியிருக்கிறோம். கழகம் ஆட்சிக்கு வந்தது முதலாவே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டு வருகி றோம். முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக, பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

அரசுப் பணி நியமனங்கள்
இது வரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27 ஆயிரத்து 858 பணி யிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருக் கிறார்கள்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் பணி யிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகதான், இன்றைக்கு 1,598 பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. பணி நியமனம் பெற்றுள்ள வர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பணி நியமன ஆணைகளை பெற்றுள்ள இளைஞர்கள், உங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு, அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு அவர்களின் குறைகளை களைய முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணி யாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டு, விடை பெறுகிறேன்.
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர்களுக்கு 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை

 Published October 26, 2023, விடுதலை நாளேடு,

சென்னை, அக். 26 – அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல் முன் தேதியிட்டு 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப் படும் என தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர் வால், சுமார் 16 லட்சம் அரசு அலு வலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதிய தாரர்கள் மற்றும் குடும்ப ஓய் வூதியதாரர்கள் பயன்பெறுவார் கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற் றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக் கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதி களைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல் பட்டு வருகின்றது.

அவ்வகையில், அரசு அலுவலர் கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, ஒன்றிய அரசு பணியாளர்க ளுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உட னுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அக விலைப்படி உயர்வை செயல்படுத் தப்படும் என்று ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற் போது 42 சதவீதமாக உள்ள அக விலைப்படியை 01.07.2023 முதல் முன் தேதியிட்டு 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட உத்தரவிட் டுள்ளார்.

இந்த அகவிலைப்படி உயர் வால், சுமார் 16 லட்சம் அரசு அலு வலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதிய தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதி யதாரர்கள் பயன்பெறுவார்கள். 

இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.