ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

ஜாதியையும், மதத்தையும் அழிக்காமல் தொழிலாளி - முதலாளி தன்மையை மாற்ற முடியுமா? - தந்தை பெரியார்

    

 5


 

தோழர்களே! மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்.

மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப்படுவதனாலும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண் டாடப்படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெயினில் கொண்டாடப்படுவது போல் பிரெஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது.

அதுபோலவே தான் மேல் நாடுகளில் அய்ரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத் தக்க நிலைமை இல்லை.

ஏனெனில், ஒவ்வொரு தேசத்தின் நிலைமையும் வெவ்வேறான தன்மையில் இருந்து வருகிறது. எல்லா தேசமும் ஒரே விதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை.

ஆரம்ப திசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று கருதுவதும் புத்திசாலித்தனமாகாது.

இன்று ரஷ்யாவில் மே தினத்தைக் கொண்டாடுவதின் முக்கிய நோக்கம் பெரிதும் தங்கள் தேசத்தை மற்ற தேசங்கள் பின்பற்ற வேண்டும் என்கின்ற ஆசையைப் பொறுத்ததாகும்.

இங்கிலாந்து, பிரஞ்சு முதலிய தேசங்களில் கொண்டாடு வதின் நோக்கம் ரஷ்யாவைப் பல விஷயங்களில் பின்பற்ற வேண்டும் என்கின்ற கருத்தைக் கொண்டு அதற்கு பக்குவம் செய்வதற்கு ஆசைப்படுவதாகும்.

எப்படி இருந்தாலும் அடிப்படையான நோக்கத்தில் ஒன்றும் பிரமாத வித்தியாசம் இருக்காது. அனேக துறைகளில் சிறப்பாக சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்டு தாழ்த்தப் பட்டு, இம்சைப்படுத்தப்பட்ட அடிமை மக்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் அடைய வேண்டும் என்கின்ற உணர்ச்சியே மே தினக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாகும்.

அந்த உணர்ச்சி எல்லா மக்களுக்கும் ஏற்பட்டால் பிறகு அந்தந்த நாட்டு நிலை மைக்குத் தக்கபடி முயற்சியும் கிளர்ச்சியும் தானாகவே வந்துவிடும்.

ஒடுக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்ட அடிமை மக்கள் என்பவர்கள்கூட ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகவே இருக்கிறார்கள்.

மேல் நாடுகளில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பவர்கள் தொழிலாளிகள் என்கின்ற பெயரால் அவர்களது தொழில் நிலையையும் செல்வ நிலையையும் பொறுத்து இருக்கிறார்கள்.

அதனாலேயே இந்தக் கிளர்ச்சிக்கு தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியென்றும் வகுப்புப் போர் என்றும் சொல்லப்படுகின்றது.

இந்தியாவில்

ஆனால் இந்தியாவில் ஒடுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் என்பது தொழில் நிலையையும், செல்வ நிலையையும் முக்கியமாய் கொள்ளாமல், மக்களின் பிறவி நிலையையே பிரதானமாய்க் கொண்டு பெரும்பான்மையான மக்கள் ஒடுக்கப்பட்டும் தாழ்த்தப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் தொழில் நிலைமையையும், செல்வ நிலைமையையும் நேரே நோக்கிக் கிளர்ச்சியோ, புரட்சியோ செய்வது முக்கியமானதாய் இல்லாமல் பிறவி பேதத்தையே மாற்றக் கிளர்ச்சியும், புரட்சியும் செய்ய வேண்டியது முக்கியமாய் இருக்கின்றது. ஆதலால் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும்.

ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது.

நாலாவது வருணத்தான் அல்லது கீழான ஜாதியான் அல்லது சூத்திரன் என்று சொல்லப்படும் பிரிவே தொழி லாளி. அதாவது சரீரத்தால் உழைத்து வேலை செய்பவரின் மூலம் மற்ற ஜாதியாருக்கு வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற நிபந்தனைக்குக் கட்டுப் பட்டதாகும்.

அய்ந்தாவது ஜாதியான பஞ்சமன் அல்லது சண்டாளன் என்று சொல்லப்பட்ட ஜாதியான் என்பவன் வாழ்நாள் முடிய மற்ற ஜாதியாருக்கு அடிமையாய் இருந்து தொண் டாற்ற வேண்டும் என்ற நிபந்தனைக்குக் கட்டுப்பட்டவன்.

இந்த இரு கூட்டத்தாரிடமும் கூலி கொடுக்காமலே வேலை வாங்கும் உரிமை மேல் ஜாதியானுக்கு உண்டு. அதுவும் மத சாஸ்திர பூர்வமாகவே உண்டு.

இது இன்றைய தினம் நிர்ப்பந்தத்தில் இல்லை என்று சிலர் சொல்லக் கூடுமானாலும், ஒரு சிறு மாறுதலோடு அனுபவத்தில் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது.

பஞ்சம வகுப்பைச் சேர்ந்த மக்களாகிய சுமார் 6, 7 கோடி மக்களில் 100-க்கு 99 விழுக்காடு பேர்கள் இன்று அடிமையாக, இழி மக்களாக நடத்தப்படவில்லை என்று யாராவது சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே பார்ப்பனரல்லாதார் என்கின்ற இந்து மக்கள் ஆண், பெண் அடங்கலும் சூத்திரர்கள் - அதாவது சரீர வேலை செய்யும் வேலை ஆட்கள் என்ற கருத்தோடு அழைக்கப் படுவது மாத்திரமல்லாமல், ஆதாரங்களில் குறிக்கப்படுவதோடு அந்தச் சூத்திரர்கள் என்கின்ற வகுப்பார்களே தான் இன்று சரீரப் பிரயாசைக்காரர்களாகவும், கூலிகளாகவும், உழைப்பாளிகளாகவும், ஏவலாளர்களாக வும், தொழிலாளர்களாகவும் இருந்து வருகின் றார்களா இல்லையா என்று பாருங்கள்.

மற்றும் ஜாதி காரணமாகவே, தொழிலாளிகளாகவோ, சரீர பிரயாசைப்படும் உழைப்பாளிகளாகவோ இல்லாமலும், சரீரப் பாடுபடுவதைப் பாவமாகவும் கருதும்படியான நிலையில் சில ஜாதியார்கள் இருக்கிறார்களா இல்லையா? என்றும் பாருங்கள்.

இந்தியாவில் தொழிலாளி, முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டி ருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், (சூத்திரன்) பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாடவேண்டியதாகும்.

இந்தியாவில் வகுப்புப் போர் என்பதற்குப் பதிலாக வேறு ஏதாவது சொல்ல வேண்டுமானால் ஜாதிப் போர் ஏற்பட வேண்டும் என்பதாகத்தான் சொல்ல வேண்டும்.

இந்தியாவில் ஒரு ஜாதியார் 100-க்கு 99 பேர்கள் நிரந்தரமாக தொழிலாளிகளாகவும், அடிமைகளாகவும், ஏழைகளாகவும், மற்றவர்களுக்கே உழைத்துப் போடுகின்ற வர்களாகவும் இருப்பதற்குக் காரணம் பிறவியில் வகுக்கப் பட்ட ஜாதிப் பிரிவே அல்லாமல் வேறு என்ன? இதை அடியோடு அழிக்காமல் வேறு விதமான கிளர்ச்சிகள் எது செய்தாலும் தொழிலாளி, முதலாளி நிலை என்பது அனுபவத்தில் இருந்துதான் தீரும்.

இன்று முதலாளி தொழிலாளி என்பதற்கு நாம் என்ன வியாக்கியானம் செய்கிறோம்? பாடுபடாமல் ஊரான் உழைப்பில் பதவி, அந்தஸ்துடன் வாழ்வதையும் பாடுபடு கின்றவன் ஏழையாய், இழிமக்களாய் இருப்பதையும் தான் முறையே சொல்லுகின்றோம்.

ஆகவே, ஜாதியையும் அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும்  அழிக்காமல், வேறு எந்த வழியிலாவது முதலாளி, தொழிலாளி தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையாய் அணுகவோ நம்மால் முடியுமா என்று பாருங்கள்.

இந்தியாவில் ஏழை மக்களுக்காக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடுகின் றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும், மதத் தன்மையையும் ஒழிக்க சம்மதிக்க இல்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர்களில் எவரும் இதற்குச் சம்மதிப்பதில்லை.

ஏதாவது ஒரு தொழிற்சாலையில் நித்திய கூலிக்கோ, மாதச் சம்பளத்துக்கோ பாடுபடு கின்ற நான்கு தொழிலாளிகளைக் கூட்டி வைத்து பேசிவிடுவதனாலேயே அல்லது அத் தொழி லாளிகள் விஷயமாய் பேசி விடுவதனா லேயே அல்லது அவர்களுக்குத் தலைமை வகிக்கும் பெருமையைச் சம் பாதித்துக் கொண்டதினாலேயே எவரையும் உண்மையான தொழிலாளிகளுக்குப் பாடு பட்டவர்களாக கருதிவிடக் கூடாது. அவர்க ளெல்லாம் அரசியல், தேசியம் ஆகியவற்றின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் செய்வது போல் தொழிலாளிகளின் பேரால் வயிற்றுப் பிழைப்பு வியாபாரம் நடத்து கின்றவர்களாகவே பாவிக்கப்பட வேண்டிய வர்களாவார்கள்.

ஹிந்து மக்களின் மதமும் அவர்களது ஜாதிப் பிரிவும் தொழிலாளி முதலாளி தன்மையின் தத்துவத்தை நிலைநிறுத்தவே ஏற்படுத்தப்பட்டதாகும். இந்தக் காரணத்தாலேயேதான் மற்ற நாட்டு மே தினக் கொண்டாட்டத்திற்கும், இந்நாட்டு மே தினக்கொண்டாட்டத் திற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கின்றது என்று சொல்லுகிறேன்.

இந்த முதலாளி, தொழிலாளி நிலைமைக்கு வெள் ளையர், கருப்பர்கள் என்கின்ற நிற வித்தியாசத்தைக் காரணமாகச் சொல்லிவிட முடியாது. ஏனெனில், தொழிலாளி முதலாளி வித்தியாசம் ஒழிக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்தை இந்தியர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்த வர்களே வெள் ளையர்களாகும். அந்த முறை மாற்றப்படக் கூடாது என்பதை மதமாகக் கொண்டிருக்கிறவர்களே கருப்பர்களாகும்.

ஆகையால், இதில் வெள்ளையர், கருப்பர் என்கின்ற கருத்துக்கு இடமில்லை. ஆனால் பார்ப்பனர், பார்ப்பன ரல்லாதார் என்பதைத்தான் முக்கியமாய் வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.

இந்திய தேசியம் என்பதுகூட ஜாதியையும், மதத்தையும் காப்பாற்றுவதையே முக்கியமாய்க் கொண்டிருக்கிறதினால் தான் அப்படிப்பட்ட தேசியம் ஒருநாளும் தொழிலாளி, முதலாளி நிலைமைகளை ஒழிக்க முடியாது என்பது மாத்திரமல்லாமல் இந்தத் தேசியம் தொழிலாளி, முதலாளி தன்மை என்றும் நிலைத்திருக்கவே பந்தோபஸ்து செய்து வருகிறது என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். 

இன்று நம் நாட்டிலுள்ள பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கின்ற கிளர்ச்சி பெரிதும் தொழிலாளி, முதலாளி கிளர்ச்சியேயாகும். இந்தக் கிளர்ச்சியின் பயனாகவே வருண தருமங்கள் என்பது அதாவது பிறவியிலேயே தொழிலாளி முதலாளி வகுக்கப்பட்டிருப்பது ஒரு அளவு மாறி வருகின்றது.

இந்தக் காரணத்தினால் தான் முதலாளி வர்க்கம் அதாவது பாடுபடாமல் ஊராரின் உழைப்பில் பலன் பெற்று வயிறு வளர்க்கும் ஜாதியாகிய பார்ப்பன ஜாதி அடியோடு அனேகமாய் எல்லோருமே இந்த பார்ப்பனரல்லாதார் கிளர்ச்சிக்கு பரம எதிரிகளாய் இருந்து கொண்டு துன்பமும் தொல்லையும் விளைவித்து வருகிறார்கள்.

இக்கிளர்ச்சியை வகுப்புத்துவேஷம் என்றுகூட சொல்லு கிறார்கள். பார்ப்பனர்கள், பார்ப்பனரல்லாதார்கள் என்கின்ற இரு ஜாதியார் களுக்கும் பார்ப்பனர்கள் ஏற்படுத்தி வைத் திருக்கிற நிபந்தனை களைப் பார்த்தால் வகுப்புத் துவேஷம், வகுப்புக் கொடுமை என்பவைகள் யாரால் செய்யப்பட்டு இருக்கிறது, செய்யப்பட்டும் வருகிறது என்பது நன்றாய் விளங்கும்.

நிற்க, தோழர் நீலாவதி அம்மையார் சொன்னதுபோல் முதலாளி தொழிலாளிக் கொடுமை ஒழிய வேண்டும் என்பதில் ஆண், பெண் கொடுமையும் ஒழிய வேண்டியது அவ சியமாகும். ஆண்கள் முதலாளிகளாகவும், பெண்கள் தொழிலாளி களாகவும், அடிமைகளாகவும்தான் நடத்தப் பட்டு வருகிறார்கள். இதுவும் வெறும் பிறவி காரணமாகவே ஒழிய மற்றபடி இதில் வேறு காரணம் ஒன்றுமே இல்லை. ஆண், பெண் என்பதற்கு பிறவி காரணமாய்க் கற்பிக்கப் பட்டிருக்கிற பேதங்கள், நிபந்தனைகள் அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

இதற்கும் பெண் மக்கள் பெரியதொரு புரட்சிக்குக் கிளர்ச்சி செய்யவேண்டும். ஆண் மக்களோடு தைரியமாய்ப் போர் தொடுக்க வேண்டும். பெண்கள் போர் தொடுக்க ஆரம்பித்தால் ஆண் மக்கள் சரணாகதி அடைந்தே தீருவார்கள்.

நிற்க. இந்த மே தினத்தை நாம் ஒரு பெரிய பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஏனெனில், நமது பண்டி கைகளில் அநேகம் இம்மாதிரி வெற்றிகளை ஞாபகப் படுத்துவதேயாகும். தீபாவளி, சிறீராம நவமி முதலிய பண்டிகைகள் எல்லாம் இந்நாட்டில் ஆரியர்கள் திராவிட மக்களை வென்ற நாள்களையும், வென்ற தன்மை களையும் கொண்டாடுவதைத் தவிர வேறொன்றுமே முக்கியமாய் இல்லை. இதெல்லாம் தெரிந்த பலர்கூட இப்பண்டிகைகளைக் கொண்டாடுவது இன்னாட்டில் மக்கள் உற்சாகத்திற்கு வேறு மார்க்கம் இல்லாததே ஒழிய மற்றபடி மதம், பக்தி, சுயமரியாதை அற்ற தன்மை என்பவைகளே அல்ல.

பெண்களையும், வேலை ஆள்களையும் சிறிதுகூட ஓய்வில்லாமல் அடிமை போல் நடத்துகிறோம். அவர் களுக்கு பண்டிகை, உற்சவம் ஆகியவைகள் தான் சிறிது ஓய்வும் சந்தோஷமும் கொடுக்கின்றன.

தண்டவாளப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைப்பது போல் பெண் ஜாதிகளைப் பூட்டி வைக்கும் சிப்பாய் களெல்லாம் உற்சவம், பண்டிகை என்றால் சிறிதாவது தாரா ளமாய் வெளியில் விட சம்மதிக்கிறார்கள். உற்சவங்களில் அவர்கள் நிலை எப்படி ஆனாலும் கவலைப்படுவதில்லை. கண்ணெதிரிலேயே நசுக்கப்படுவதையும், கசக்கப்படு வதையும் பார்த்துக்கூட சகிக்கிறார்கள். ஆதலால் நம் பெண்களுக்கும், தொழிலாளிகளுக்கும் எவ்வளவுதான் நாம் பகுத்தறிவையும், சுயமரியாதைக் கொள்கைகளையும் போதித்தாலும் உற்சவமும், பண்டிகையும் அவர்களை விட்டு விலகவே முடியாது. எனவே நாம் இப்படிப்பட்ட மே தினம் போன்ற சிலதை கொண்டாட ஏற்பாடு செய்தோமேயானால் மத சம்பந்தமான பண்டிகை, உற்சவம் ஆகியவைகளை மக்கள் கைவிடுவதற்கு அனுகூலமா யிருக்கும்.

ஆகவே தோழர்களே, இதுவரை நாங்கள் சொன்ன ஒவ்வொன்றையும் சிந்தித்துப் பார்த்து, தங்களுக்கு சரியென்று தோன்றியபடி நடக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொண்டு, இக்கூட்டத்தை முடித்து விடுகிறேன்.

(காரைக்குடியில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டத்தில்  தலைவர் ஈ.வெ.ராமசாமி ஆற்றிய முடிவுரை) குடிஅரசு -  சொற்பொழிவு - 12.05.1935 


இந்தியாவில் தொழிலாளி, முதலாளி அல்லது எஜமான், அடிமை என்பது பிரதானமாக பிறவி ஜாதியை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் இந்தியாவில் மே தினக் கொண்டாட்டம் என்பது பார்ப்பான், (சூத்திரன்) பஞ்சமன் அல்லது சண்டாளன் என்கின்ற ஜாதிப் பிரிவுகள் அழிக்கப்பட வேண்டும் என்கின்ற நிலையில்தான் பெரியதொரு கிளர்ச்சியும், புரட்சியும் ஏற்பட வேண்டும் என்கின்ற கருத்தோடு இன்று கொண்டாடவேண்டியதாகும்.


கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தமிழாக்கம் - பெரியாரின் பங்களிப்பு

 

  

26

1931 அக்டோபர் மாதத்தில்  கம்யூனிஸ்ட் கட்சி  அறிக் கையின் முதல் தமிழாக்கம் வெளிவந்தது. தந்தை பெரியாரின் சுய மரியாதை இயக்க வார ஏடான குடிஅரசு 1931 அக்டோபர் 4 முதல் தொடர்ச்சியாக அய்ந்து இதழ்களில் ‘சமதர்ம அறிக்கை’ என்னும் தலைப்பில் அறிக்கையின் முதல் பிரிவின் (பூர்ஷ் வாக்களும் கம்யூனிஸ்டுகளும்) தமிழாக்கத்தை வெளியிட்டது.

மொழி பெயர்ப்பாளரின் பெயர் குறிப்பிடப்பட வில்லை. ஆயினும் முதல் பகுதி தந்தை  பெரியாரின் அறிமுகவுரையுடன் வெளியிடப்பட்டது.

இன்றும் பொருத்தப்பாடுடைய அந்த அறிமுக உரையில் பெரியார் எழுதினார் : “உலக அரசாங்கங்களி லெல்லாம் ரஷ்ய ஜார் அரசாங்கமே மிக்க கொடுங் கோன்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது. அதனா லேயே அங்கு சமதர்ம முறையை அனுபவத்திற்குக் கொண்டுவர வேண்டியதாயிற்று. இந்த நியாயப்படி பார்த்தால்,  அவ்வித சமதர்ம  உணர்ச்சி உலகில் ரஷ்யாவை விட இந்தியா விற்கே முதன்முதலாக ஏற்பட்டிருக்க வேண்டியதாகும், இங்கு அனேகவித சூழ்ச்சிகள் நடைபெற்று வந்திருப்ப தாலும் சூழ்ச்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகுஜாக்கிரதையாகவே கல்வி அறிவு, உலக ஞானம், சுய மரியாதை உணர்ச்சி முதலியவைகள் பெறுவதற்கு மார்க்கம் அல்லாமல், காட்டுமிராண்டித்தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது, அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோட்ச சாதனமென்றும் புகட்டி வந்ததாலும், உலகில் சமதர்ம உணர்ச்சி முதன்முதலில் இந்தியாவிலேயே ஏற் பட்டி ருக்க வேண்டியது மாறி, ரஷ்யா வுக்கு முதல் ஸ்தானம் ஏற்பட வேண்டி யதாயிற்று.

“........... ஆனால் உலகில் சமதர்ம உணர்ச் சிக்கு விரோதமான தன்மையில் மற்ற தேசத்துக்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்ன வென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயந்தான் முக்கியமாய்க் கருதப் படுகின்றது. அதாவது முதலாளி (பணக் காரன்) வேலையாள் (ஏழை) என்பதுவே யாகும். ஆனால் இந்தியாவிலோ மேல்ஜாதியார் - கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன்-ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறது” (குடிஅரசு 4.10.1931). கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதல் பிரிவின் தமிழாக்கத்தின் கடைசிப் பகுதியை வெளியிட்ட குடிஅரசு 1.11.1931ஆம் நாளைய இதழ், அறிக்கையின்பிற பிரிவுகளின் மொழியாக்கமும் வெளிவரும் என்று அறிவித்தது. ஆனால் 1931 டிசம்பர் 13ஆம் நாளன்று பெரியார் வெளிநாட்டுப் பயணத்தை மேற் கொண்டு பல மாதங்களுக்குப் பிறகே திரும்பி வந்ததால், பிற பிரிவுகளின் மொழி யாக்கம் ஏதும் வரவில்லை. சோவியத் யூனியனில் பெரியார் 14.2.1932 முதல் 17.5.1932 வரை தங்கி, அங்கு ஏற்பட்டுவந்த சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங் களை அறிந்துவந்தார்.

கம்யூனிஸ்ட் அறிக்கையின் முழுமையான முதல் தமிழாக்கம், எம். இஸ்மத் பாஷாவால் செய்யப்பட்டு, இந்தியக் கம்யூனிட் கட்சியின் நூல் வெளியீட்டகமான ஜனசக்தி பிரசுராலயத்தால் 1948இல் வெளியிடப்பட்டது. பதினாறு பக்க அறிமுகவுரையுடன் கூடிய 91 பக்க மொழியாக்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை எனத் தலைப்பிடப்பட்டிருந்தது.

பெரியார், சோவியத் யூனியனுக்குப் பயணம் மேற் கொண்டதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே போல்ஷ்விக் புரட்சி குறித்த கட்டுரைகள் குடிஅரசு, ரிவோல்ட் ஆகிய சுயமரியாதை ஏடுகளில் வெளி வந்துள்ளன. சோவியத் யூனியன் பயணத்திற்குப் பிறகு, மதம் பற்றி லெனின் கார்க்கிக்கு எழுதிய கடிதம், ‘டால்ஸ்டாய்-ரஷியாவின் நிலைக்கண்ணாடி’ என்னும் லெனின் கட்டுரை ஆகியன பெரியார் ஈ.வெ.ரா., எஸ். ராமநாதன் ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டதற்கும் சான்றுகள் உள்ளன. எனவே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தமிழாக்கத்தை இருவரும் சேர்ந்து செய்திருப்பர் என ஊகிக்க வாய்ப்புண்டு.

(எஸ்.வி. ராஜதுரையின் கம்யூனிஸ்ட்  

கட்சி  அறிக்கை தமிழாக்க  நூலிலிருந்து

நன்றி: 'இந்து தமிழ் திசை'

 ஞாயிறு களஞ்சியம் 30.4.2023

நாளும் உழைத்து புது உலகம் காண்போம்!

 

 

1

தமிழர் தலைவர் ஆசிரியரின் மே நாள் வாழ்த்து!

நாளும் உழைத்து புது உலகம் காண்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மே நாள் வாழ்த்து அறிக்கை விடுத்துள்ளார்.

நாளை (மே முதல் நாள்) - மேதினியெங்கும் மே நாள் கொண்டாட்டம் குதூகலமாய்க் கொண்டாடப்படும் நாளில், அதனை இங்கு பற்ற இருந்த ‘கிரகணம்' - தொழிலாளர்கள், முற்போக்காளர்களின் கட்டுப்பாடான எழுச்சியாலும், மக்களின் குரலுக்கு செவி சாய்த்து செயல்படும் ‘திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் அரிய சாதுரியத்தாலும் மே நாள் கொண்டாட்டமாக ஆகி உள்ளது இவ்வாண்டு!

வாழ்த்தி மகிழ்கிறோம்!

‘‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்; 

அவன் காணத் தகுந்தது வறுமையாம் - அவன்

பூணத் தகுந்ததும் பொறுமையாம்''

என்ற நிலை மாறிட, நாளும் உழைத்து புது உலகம் காண்போம்!

அனைவருக்கும் மே நாள் வாழ்த்துகள்!

கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

சென்னை

30.4.2023 


வியாழன், 27 ஏப்ரல், 2023

தொழிலாளர் துன்பம் தீர பெரியார் சொல்லும் வழி!

 

பெரியாருடைய தொழிலாளர் பற்றிய சிந்தனைகளை அறிந்து கொள்ளுமுன், பெரியாருக்குத் தொழிலாளர் தொடர்பாகவும் பொது உடைமைக் கருத்துகள் பற்றியும் உள்ள தொடர்புகளை நாம் அறிந்து கொள்ளுவது நலமாகும். பெரியார் ரஷ்யப் புரட்சி 1917 இல் தோன்றுவதற்கு முன்னரே தொழிலாளர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவராக இருந்திருக்கின்றார், உடையார்பாளையம் பருக்கலில் 03.06.1973இல் நிகழ்த்திய சொற்பொழிவில் இது தொடர்பான தம்முடைய நடைமுறைகளைக் குறித்துப் பேசி இருக்கின்றார்.

“தொழிலாளர்களைத் தொழிலில் பங்குதாரராக ஆக்க வேண்டுமென்ற கொள்கையை என் வியாபாரத்தில் 1900த்தில் - அதாவது 73 ஆண்டுகளுக்கு முன் அனுசரித்தேன். என் கடையில் இருந்த மூன்று பேர்களைக் கஷ்டக் கூட்டாளிகளாக ஆக்கினேன். அவர்களுக்கு மாதம் தலா ரூ.10-8-7 சம்பளமாகும். வியாபாரத்திற்கு முதல் ரூபாய் பத்தாயிரம். இலாபத்தில் முதலாளி என்கிற எனக்கு ஒரு பாகம். என் முதலுக்கு ஒரு பாகம். கஷ்டக் கூட்டாளிகள் மூவருக்கும் ஒரு பாகம் என்று அமல்படுத்தினேன். அதாவது என் கடையில் வரும் லாபத்தை 49 பாகமாகப் போட்டு ஒரு பாகம் சாமி கணக்குக்கும், 16 பாகம் எனக்கு பணப் பொறுப்புக்காகவும், 16 பாகம் - முதலீட்டுப் பணத்திற்காகவும், மீதி. 16 பாகம் கஷ்டக் கூட்டாளிகளுக்கு என்றும் பிரித்துக் கொடுத்தேன்.” 

தொழிலாளர் பிரச்சினை தீர இதுவே சிறந்த வழி என அப்போது முதல் கூறிவருகின்றேன்.

தடம் புரண்டு போன ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (18-02-2023 'தி இந்து' ஆங்கில நாளிதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்)

 

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட் டத்தில்  ஒன்றிய  அரசு மேற்கொண்டுள்ள    மாற்றங்கள் தவறாக வழி நடத்திச்  செல்ல இயன்றவையாகவே தோன்றுகிறது

எந்த  ஒரு மக்கள் நலத் திட்டத்தின் வெற்றியும் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள  உறுதியிலேயே  அடங்கி  இருக்கிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம்  நடைமுறைப்படுத் தப்பட்ட 17  ஆண்டுகளில், கிராமப்புறப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள ஒட்டு  மொத்த  ஆக்கபூர்வமான  பலன்களை பல ஆய்வுகள் உறுதிப் படுத்தி உள்ளன.  பருவ காலம் கடந்த வேலை வாய்ப்புகளை அளித்த தன் மூலம், இந்தத் திட்டத்தினால் பயனடையும் மிகுந்த  வறுமையில் வாடிய குடிமக்களது  வாழ் வாதாரத்துக்கான வருவாய் உயர்த்தப்பட்டு அவர்களது வறுமை; குறைக்கப்பட்டுள்ளது. பருவமழை தவறிய காலங்களில் ஒரு காப்பீடாக இந்த திட்டம் அமைந்ததுடன், இந்த திட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட கட்டமைப்பு  மேம்பாட்டு பணிகள்  மூலம் ஏற்பட்ட  கூடுதல் விவசாயப்  பொருள் உற்பத்தி காரணமாக மிகப் பெரிய அளவில் உணவுப் பொருள்கள் பாதுகாப்பும்  பெறப்பட்டுள்ளது. இதனால், இந்தத்  திட்டம்  ஒரு சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு கருவியாக தொடர்ந்து  இருந்து வருகிறது.  கரோனா  நோய்த் தொற்று  காலத்தில் இது மேலும் தெளிவாகத்  தெரிவதாக இருந்தது. பல மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்த ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் அவர்கள் பணி யாற்றி  வந்த  தொழிற்சாலைகள்  மூடப்பட்டதால், தங்களது வேலைகளை இழந்து  தங்களின் சொந்தக் கிராமங்களுக்குக் குடியேறி, கிராமப்புற விவசாயக் கூலிப்பணிக்கும், கடினமான வேலை களுக்கும்  ஆட்களின் தேவை உச்சக்கட்டத்தில் இருந்தபோது,    இந்த திட்டத்தின் கீழ்   பணிகளை மேற்கொண்டு, பசி பட்டினி இல்லாமல் வாழ்ந்தனர். சாலைகள், நீர்ப் பாசனப்  பணிகளை விட அதிக  அளவில் பயன்தரும்  அளவில் இந்தத் திட்டம் இது வரை செயல்படுத்தப் படவில்லை. மேலும் மேலும் அதிக  பயன் தரும் தி;ட்டங்கள் மேலும் சிறப்பான  முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஒன்றிய அரசோ  இந்த  திட்டத்தை ஒப்புக்கு  சப்பாணி என்ற முறையிலேயே  கருதி நடத்தி  வருகிறது. இந்த திட்டம் அரசின்; மீது நிதிச் சுமையை ஏற்படுத்துவது  என்பதாகவே திட்ட நடைமுறை பற்றி  பரவலாக கருதப்படுகிறது.

இத்திட்டத்திற்கான  23  ஆவது அய்ந்தாண்டு திட்டத்தில்  நிதி ஒதுக்கீடு, அரசின் மொத்த செலவினத்தில் 2.4  சதவிகிதமாக  இருந்தது,  24  ஆவது அய்ந்தாண்டு திட்டத்தில்  1.33  சதவி கிதமாக  குறைக்கப்பட்டுள்ளது. அதுவுமன்றி, அண்மைக் காலங்களில்,  இப்பணியாளர் களுக்கான ஊதியம்  தரப்படுவதில் நீண்ட  கால தாமதங்கள்  ஏற்பட்டுள்ளன என்பதுடன், நிதி  ஒதுக்கீடு அளவும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும்,  ஆதார் மூலம் ஊதியம்  அளிக்கப்படும் நடைமுறையில் லஞ்சம் ஊழல் குறைந்து  போய் விடவும்இல்லை:   பணியாளர்களுக்கு ஊதியம் அளிப்பதில்  ஏற்படும் கால தாமதம் தவிர்க்கப் படவும் இல்லை. திட்டம் நடை முறைப்படுத்தப் படும்  காலத்தில் அலுவலர்களுக்கும், பணியாளர் களுக்கும்  பலப் பல இடையூறுகள் ஏற்பட்டன.  இத்திட்ட செல வினத்தில் 60 சதவிகிதத்தை ஒன்றிய  அரசும், 40  சதவிகிதத்தை  மாநில அரசுகளும்  ஏற்றுக்  கொள்ளும் வகையில் இந்த  சட்டம்  திருத்தப்பட வேண்டும்  என்று ஊரக  மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிரிராஜ்  சிங் இப்போது கூறியிருக் கிறார். லஞ்சம் ஊழல் இல்லாமல் இத்திட்டம் செயல் படுத்தப்பட்டால்  இது மாநில அரசு களுக்கு  பயன்படும்  என்று அவர் கூறுகிறார்.  சரக்கு  மற்றும் சேவை வரி சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, மாநில அரசுகளின் நிதி ஆதாரம் திரட்டும் எல்லைகள் மிகவும் சுருங்கிப் போயின. கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில்  மாநிலங்களின்  நிதிச் சுமை  அதிகமாக ஆகிப்போனது. இத்திட்டத்தின் 40 சதவிகித  செலவுகளை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்  என்பது,  பணியாளர்களுக்கு  ஊதியம் வழங்கப்படுவதில் மேலும் மேலும் காலதாமதத்தை  ஏற்படுத்தவே செய்யும். மேலும் இந்தத் திட்டம்தேவையின் அடிப்படையில் நடை முறைப்படுத்தப்படுவ தாகும். இத்திட்ட செலவினத்தில் மாநில அரசு களும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று  அவற்றின் மீது நிதிச் சுமையை சுமத்தாமல்,  இதுவரை செய்து வந்தது போல ஒட்டு மொத்த  செலவினத்தையும்  ஒன்றிய  அரசே மேற் கொண்டு,  இந்த திட்டத்தை மேலும்  சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண் டும். ஏழைகளின்  வேலை வாய்ப்பு உரிமையை  உறுதி  செய்யும் வகையில், இத்திட்டம் பற்றிய தனது கருத்தையும், அணுகு முறையையும்  ஒன்றிய  அரசு மாற்றிக்  கொள்ள வேண்டும்.

நன்றி:  'தி இந்து' 18-02-2023

தமிழில் :  த.க.பாலகிருட்டிணன்

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

 வெள்ளுடை வேந்தர் சர்.பிட்டி. தியாகராயர் (27.4.1852 - 28.4.1925) தியாகராயர் பற்றி தலைவர்கள்

19


தியாகராயர் எப்போதும் தன்னிச்சையான குணமுடையவர். எவருடைய விருப்பு வெறுப்புகளையும் பொருட்படுத்தாது தமக்குப் பட்ட கருத்துக்களைத் தைரியத்துடன் கூறுபவர் 

21

- டாக்டர் சி. நடேசனார்.

('இந்து' நாளிதழ் -29.4.1925-  பக்கம் 4, தியாகராயர் மறைவு குறித்த இரங்கற் பேச்சு.) 

***

20
“தியாகராயர் ஒரு பெரிய மனிதர். நம் தலைமுறையில் வாழ்ந்து வரும் பெரிய மனிதர்களிலெல்லாம் பெரிய மனிதர். இன்றைய நவீன இந்தியாவில் வாழும் மனிதர்களையெல்லாம் இவருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தியாகராயரே அவர்களையெல்லாம் விடப் பெரிய மனிதராக விளங்குகின்றார். முதலாவதாக அவர் தம்மிடம் அண்டிக்கிடந்த பெரும்புகழை அறியாதிருந்தார். இரண்டாவதாக அவர் தம்மை எவரும் பெரிய மனிதர் என்று நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு சிறிதும் கொண்டிராமல் இருந்தார். சாதாரண ஒழுக்கமுடைய குடிமகனாகவே பணியாற்றி வந்தார். அவர் ஒருபோதும் கர்வமோ ஆணவமோ கொண்டதில்லை. 

- பனகல் அரசர் 

தியாகராயர் மறைந்த போது ஆற்றிய இரங்கல் உரை. 

‘இந்து' நாளிதழ் 29.4.1925) 

***

22

 “தியாகராயருடன் பல ஆண்டுகளாக மிக நெருங்கிப் பழகியவன் யான். அவரைப் போன்ற ஒரு உண்மை நண்பரையோ அல்லது உறுதுணையாளரையோ இதுவரை நான் கொண்டிருந்ததில்லை” 

- ராஜா சர். அண்ணாமலை செட்டியார் 

(தென்னிந்திய வர்த்தகக் கழகம் வெள்ளிவிழா மலர்)

***

23
“1921ஆம் ஆண்டு பொல்லாத ஆண்டு! தொழிலாளர் கதவடைப்பு! வேலை நிறுத்தம்! ஆறுமாத வேலை நிறுத்தம்! லார்டு வில்லிங்டன் நீலகிரியினின்றும் புறப்பட்டார். சென்னை என்ன பேசிற்று ? தொழிலாளர் தலைவர்களை நாடு கடத்த லார்டு வில்லிங்டன் வந்திருக்கிறார் என்று பேசிற்று.நாடு கடத்தல் செயலில் நடந்ததா? இல்லை. ஏன்? தியாகராயர் தலையீடு. ‘மலையாளக் குழப்பம் - ஒத்துழையாமை இவைகளிடையே நாடு கடத்தல் நிகழ்ந்தால் சென்னை என்ன ஆகும்? மாகாணம் என்ன ஆகும்? மந்திரிமார் பதவியினின்றும் விலகுதல் நேரினும் நேரும்‘ என்று செட்டியார் எடுத்துரைத்தாரென்றும், அதனால் லார்டு வில்லிங்டன் மனமாற்றமடைந்து நாடு கடத்தலை எச்சரிக்கை யளவில் நிறுத்தினாரென்றும் சொல்லப்பட்டன. இவைகளை எனக்குத் தெரிவித்தவர் டாக்டர் நடேச முதலியார், தியாகராய செட்டியாரைக் கண்டு நிகழ்ச்சிகளைக் கேட்டேன். ‘நீர் நல்லவர். உமது கட்சி வேகமுடையது. வேகம் அந்தரங்கத்தை வெளியிடவும் தூண்டும். ஆதலின் அந்தரங்க சம்பாஷணையை வெளியிடுதல் நல்லதன்று’ என்று கூறினார். ‘144 பலருக்கு வழங்கப்படுகிறது; எனக்கு வழங்கப்படுவதில்லை.காரணம் ‘நாடு கடத்தும் நாட்டம் என்று சொல்லப்பட்டது. அந்நாட்டத்தை நீங்கள் மாற்றி விட்டீர்கள். நீங்கள் எனக்கு நன்மை செய்யவில்லை! என்றேன். ‘நாடு கடத்தலால் உமது வாழ்வே தொலையும்; உமது எதிர்கால வாழ்க்கையைக் கருதியே யான் தடை செய்தேன்’ என்று செட்டியார் அன்று உரைத்தது எனக்கு மகிழ்ச்சியூட்டவில்லை.” 

(திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள். பக்கம். 446)


தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து 12 மணிநேரமா? மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறவேண்டும்!

 

 தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

aaa

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரம் 8 மணியிலிருந்து 12 மணிநேரமாக மாற்ற அவசர அவசரமாக ஒரு சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்க என்று  திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (21.4.2023) அவசர அவசரமாக ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி யிலிருந்து 12 மணிநேரமாக உயர்த்துவது தொடர்பான மசோதா இன்று (21.4.2023) சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்புமூலம் நிறைவேற்றப்பட்டது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பு

இதனைக் கண்டித்து கூட்டணிக் கட்சிகள் உள்பட வெளிநடப்பு செய்துள்ளன.

‘‘வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டிற்காக தமிழ் நாட்டை நோக்கி வருகின்றன. தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும்  என்பதற்காக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எந்தத் தொழி லாளர்கள் விரும்புகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும். இது சம்பந்தமாகக் குழு அமைக்கப் படும்'' என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் விளக்கம்!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் பேசுகையில்,

‘‘வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை பார்க்கவேண்டும். இந்த நேரத்தை 4 நாள்களில் முடித்துவிட்ட பிறகு, அய்ந்தாவது நாளாக தொழிலாளர் வேலை செய்ய விரும்பினால், அவர்களுக்குச் சம்பளம் வழங்கும் வகையில் சட்டம் உள்ளது. அனைத்து நிறுவனங்களுக் கும் இந்தச் சட்டம் இல்லை. விரும்பக் கூடிய தொழிற் சாலைகள் தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

1945 இல் பெற்றுத் தந்த உரிமை

நாளொன்றுக்கு 14 மணிநேரம் உழைப்பு என்ற ஒரு காலகட்டம் இருந்ததுண்டு.

1945 நவம்பர் 28 அன்று டாக்டர் அம்பேத்கர்  அவர்களின் முயற்சியால் தொழிலாளர் பிரதிநிதி, ஆலை உரிமையாளர் பிரதிநிதி, அரசுப் பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவில் முத்தரப்பு ஒப்பந்த அடிப்படையில், தொழிலாளர் பணிநேரம் 8 மணிநேர மாகக் குறைக்கப்பட்டது என்பது வரலாறு.

இப்பொழுது நாம் பின்னோக்கிப் பயணிக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.

நெகிழ்வுத்தன்மை எங்கிருந்து வந்தது?

இதில் நெகிழ்வுத் தன்மை எங்கிருந்து வந்தது? சம்பளத்துக்காக அதிக நேரம் உழைப்பது என்ற மனோ நிலையை உருவாக்குவது மனித உரிமைக்கும், நலனுக்கும் எதிரானதல்லவா!

மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல!

மனிதர்கள் இயந்திரங்கள் அல்ல!

இதில் வருவாய் என்பதைவிட மனித உழைப்பு, மனித நேயம், நலம், குடும்ப நலன் என்பவை முக்கிய மாகக் கருத்தூன்றி கவனிக்கப்படவேண்டாமா?

விரும்பியோர் 12 மணிநேரம் உழைக்கலாம் என்று கூறுவது, ஒருவகை உழைப்புச் சுரண்டலே!

தேவை மறுபரிசீலனை!

எல்லா வகைகளிலும் மக்கள் நலன் கருதி செயல்படும் ‘திராவிட மாடல்' நல்லரசுக்கு ஏற்படக் கூடிய இந்த அவப்பெயரை - பழியைத் தவிர்க்கவேண்டும்!

எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

21.4.2023 

சனி, 22 ஏப்ரல், 2023

பணியில் மூத்தவருக்கு ஊதியம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


Viduthalai December 05, 2022 தமிழ்நாடு,
சென்னை டிச.5 அரசு ஊழியர்களில் பணியில் இளையவர் அதிக ஊதி யம் பெற்றால், அதே தொகையை பணியில் மூத்தவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டம், ஆயக்காரன் புலம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவர், சென்னை உயர்நீதிமன் றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நான் 1988ஆ-ம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். இதற்கு மறுநாள், அதாவது அதே ஆண்டு ஜூலை 21-ஆம் தேதி செல்லப்பாண்டியன் என்பவர் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 2002ஆ-ம் ஆண்டு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், 2008ஆ-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரிய ராகவும் பதவி உயர்வு பெற்றேன். ஆனால், செல்லப்பாண்டியன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரி யராக 2008-ஆம் ஆண்டுதான் பதவி ஏற்றார். என்னைவிட பணியில் அவர் இளையவர். ஆனால், 2008-ஆம் ஆண்டு எங்கள் இருவருக்கும் சிறப்பு நிலை ஊதியம் உயர்வு வழங்கும்போது, என்னைவிட அவருக்கு ரூ.3 ஆயிரம் அதிகம் ஊதியம் வழங்கப்பட்டது. இது குறித்து நான் அளித்த மனுவை நாகை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் நிராகரித்து 2011-ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் வி.காசிநாதபாரதி, மனுதாரரைவிட 6 ஆண்டுகளுக்கு பின்னர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி ஏற்ற செல்லப்பாண்டியன் ஊதியம் அதிகம் வாங்கியது மட்டுமல்ல, தற்போது அவர் வட்டார கல்வி அதிகாரியாகவும் பதவி உயர்வு பெற்று விட்டார்'' என்று வாதிட் டார். கல்வி துறை சார்பில் அரசு வழக்குரைஞர் சி.சதீஷ் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட் டறிந்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பிறப்பித்த உத்தரவில், ''நாகை தொடக்க கல்வி அலுவலர் பிறப் பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். அரசு பணி விதிகளின்படி, ஒரே பதவியில் உள்ள 2 அரசு ஊழி யர்களில், இளையவரைவிட பணி யில் மூத்தவர் குறைவாக ஊதியம் வாங்கக்கூடாது. ஒருவேளை இளை யவர் அதிக ஊதியம் பெற்றால், அதே தொகையை பணியில் மூத்தவருக்கும் வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே, 2008-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி முதல் ஊதிய உயர்வை கணக்கிட்டு, மனுதாரருக்கு 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டமாம்!

 


Viduthalai December 01, 2022 உலகம்,

லண்டன், டிச. 1- இங்கிலாந் தில் உள்ள 100 நிறுவ னங்கள் வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத் துக்கு ஒப்புதல் அளித்து உள்ளன. இதுகுறித்து "தி கார்டியன்" நாளிதழில் கூறியிருப்பதாவது.

முந்தைய பொருளா தார சூழலில் வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வையும், சலிப்பையும் ஏற்படுத்து வதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலைபார்க் கும் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதனை நடைமுறைப்படுத்தக் கோரி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், முதல் கட்டமாக 100 நிறுவனங் கள் வாரத்துக்கு 4 நாட் கள் மட்டுமே பணிபுரியும் புதிய நடைமுறையை செயல்படுத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன. சுமார் 2,600 பணியா ளர்கள் பயனடையவுள்ள இந்த திட்டத்துக்கான ஒப்பந்தத்தில் அவை கையெழுத்திட்டுள்ளன.

தற்போது நடை முறைப்படுத்தப்பட வுள்ள 4 நாட்கள் வேலை திட்டத்தால் ஊழியர்க ளுக்கான சலுகைகள் எதுவும் குறைக்கப்படாது எனவும், முன்பு வழங்கப் பட்ட அதே அளவிலான ஊதியத்தை அவர்கள் பெறலாம் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத் தால் பணியாளர்களின் வேலைத்திறன் மேம்படு வதோடு நாட்டிலும் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என அந்த நிறுவனங்கள் நம் பிக்கை தெரிவித்துள்ளன.

குறிப்பாக, ஆட் டோம் பேங்க் மற்றும் பன்னாட்டுச் சந்தை நிறு வனமான ஏவின் ஆகி யவை இங்கிலாந்தில் உள்ள தங்களது 450 பணி யாளர்களுக்கு வாரத் துக்கு 4 நாட்கள் மட்டுமே பணிபுரியும் திட்டத்தை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே பணிபுரியும் வேலைத்திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதில் பெரும்பாலானவை தகவல் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல் போன்ற சேவை துறை நிறுவனங்களாகும். மேலும், உற்பத்தி மற்றும் கட்டுமான நிறுவனங்களும் இந்த திட்டத்தில் கையெ ழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலா பட் - பெண்களுக்கான தொழிற்சங்கத் தலைவர்!

 

13









சேவா’, (Self Employed Women’s Association)  என்னும் நிறுவனம், உலகின் முறை சாராப் பெண்         பணியாளர்களுக்கான (employees of informal sector)  மிகப் பெரும் தொழிற்சங்கம். இந்தியாவின்            தொழிலாளர்களில் 92% பேர், முறை சாராத்தொழில்களில் பணிபுரிபவர்கள். இவர்கள்                   உரிமைகளுக்கான குரல், நிறுவனங்களில் பணிபுரி யும் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள்     போலப் பெரிதாக எழுவதில்லை. 15 லட்சத்துக்கும் அதிகமான பெண் உறுப்பினர்களைக் கொண்டு,                             பெண்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனம். இதன்           தலைமையகம் அகமதாபாத்தில் உள்ளது.

இந்த சங்கமானது சங்கத்தின் பெண் உறுப்பினர்க ளுக்கு நிலையான வருமானம்,               அவர்கள்                அடிப்ப டைத் தேவைகளான இருப்பிடம்மருத்துவ வசதி, குழந்தைகள் நலம் போன்றவற்றுக்காக                    உழைக்கிறது. தொழிலாளர்கள் ஒரு நிறுவனத்தின் ஊழியர்களாக இருந்தால், அந்த நிறுவனத்துடன் போராடி, பேரம் பேசி, தொழிலாளர்களுக்குச் சேர          வேண்டிய அடிப் படை உரிமைகளைப் பெற்றுத் தரலாம்.                 ஆனால், நிறுவனம் என ஒன்று இல்லாமல், முறைசாராப் பணிகளில், சீரான வருமானம் இல்லாத             பெண்களுக் கான உரிமைகளை யாரிடம் இருந்து பெற்றுத் தரு வது? அவர்களுக்கான                     அடிப்படைத்      தேவைகளை எவ்வாறு நிறைவேற்றுவது?

இலா பட், 1933 ஆம் ஆண்டு அகமதாபத்தில் பிறந்தார். தந்தை சுமந்த்ராய் பட் ஒரு வெற்றிகரமான         வழக்கறிஞர். தாயார் வானலீலா வ்யாஸ் புகழ்பெற்ற பெண்ணியவாதி. கமலாதேவி                 சட்டோபாத்யாயா துவங்கிய, அகில இந்தியப் பெண்கள் மாநாட்டின் செயலர்         (All India Women’s                         Conference).  சூரத் நகரில் பள்ளிக் கல்வி பயின்ற அவர், தனது சட்டப்        படிப்பை அகமதாபாத்தில்             முடித்தார். சிலகாலம், மும்பையின் எஸ்.என்.டி.டி என்னும் புகழ்பெற்ற கல்லூரியில் சிலகாலம்             ஆசிரியராகப் பணியாற்றி னார். பின்னர்             அகமபாத்தில் உள்ள ஜவுளித் தொழி லாளர்             கூட்டமைப்பின் (Textile Labour Association –               TLA)  சட்டப்பிரிவில் பணிக்குச் சேர்ந்தார்.

மோட்டா பென் (பெரிய அக்கா) என்றழைக்கப் பட்ட அனுசூயா சாராபாய், புகழ்பெற்ற குஜராத்தித்             தொழிலதிபர் அம்பாலால் சாராபாயின் சகோதரி. குழந்தைத் திருமணம் செய்யப்பட்டு விதவையான                  அவர், பின் தன் சகோதரர் அம்பாலால் சாராபாயின்        உதவியோடு, லண்டனில் மருத்துவம் பயிலச்                  சென்றார். படிப்புக்காக விலங்குகளை       அறுப்பது, அவரது சமண மத வழிகளுக்கு முரணாக                 இருந்ததால்,  அதை விடுத்து, லண்டன் பொருளாதாரப் பள்ளியில் (London School of Economics)                              பொருளாதாரம் பயின்றார். ஜனநாயக சோஷலி ஸத்தை முன்னெடுத்த ஃபேபியன் குழுவின்                 அனுதாபி. பெண் வாக்குரிமைக் காகக் குரல் கொடுத்த சஃப்ரகெட் இயக்கத்தில் (Suffragette Movement)         பங்கெடுத்தவர் 1913           ஆம் ஆண்டு இந்தியா திரும்பி, பெண்களுக்காகவும், ஏழைகளுக் காகவும்             உழைக்கத் துவங்கினார்.  36 மணி நேர ஷிஃப்டுகளில் பெண்கள் உழைக்க நேர்ந்த அவலத்தை                                      எதிர்த்துக் குரல் கொடுத்தார். ஜவுளித் தொழிலாளர்களின் நலன்களுக்காக உழைத்தார்.

குறுந்தொழில், அல்லது முறைசாராத் துறைகளில் பணிபுரிபவர்கள், இந்தியாவின் மொத்தத்                     தொழிலாளர்களில் 92% ஆகும். இவர்கள் ஊரக சமுகத்தின் விளிம்புகளிலும், நகர்ப்புரங்களின்             சேரிகளிலும் பெரும்பாலும் வசிக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்          பட்ட மற்றும்         பழங்குடியினத்தவர்கள் என அனைத்து ஜாதி வேற்றுமைகளையும் கடந்து, இவர்களுக்கிருக்கும்         ஒரே ஒற்றுமை ஏழ்மை. சேவா’, ஒரு சராசரி தொழிற்சங்கம்         என்பதைத் தாண்டி, இவர்களை ஒரே             சமூகமாக ஒருங்கிணைக்கும் நிறுவனமாகவும்   திகழ்கிறது.

சேவாவின் முக்கியக் குறிக்கோள், மகளிருக்கு, வேலை, வருமானம், உணவு, சமூகம் என நான்கு             தளங்களில் பாதுகாப்பை உறுதி செய்வதாகும். சமூக நலத்தில், வீடு, உடல் நலம், குழந்தைகள்                     நலம் ஆகியவையும் அடங்கும். இந்தத் தளங்களில், மகளிர் தனியாகவோ, குழுவாகவோ,                                             தற்சார்பை எய்தி, தங்கள் வருங்காலத்தைத் தாங்களே முடிவு செய்யும் சுதந்திரத்தையே சேவா’,                             பாதுகாப்பு என வரையறுக்கிறது. காந்திய வழிகளான, வாய்மை, அகிம்சை, சர்வதர்ம சமத்துவம்                 மற்றும் சிறு தொழில் கள் மூலம் சமூக மாற்றத்தை அடைவதே, ‘சேவாவின் வழி.

இந்த உறுப்பினர்களை, பொதுவாக நான்கு வகையாகப் பிரிக்கிறார்கள்:

தெருமுனை / குறு வணிகர்கள்: காய்கறி, முட்டை, மீன், இறைச்சி, வீட்டுப் பொருட்கள்,   துணிகள்                 போன்ற பொருட்களை விற்பவர்கள்.

வீட்டில் இருந்து உழைப்பவர்கள்: நெசவாளிகள், குயவர்கள், பீடி / அகர்பத்தி சுற்றுபவர்கள், அப்பளம்                     செய்பவர்கள், ஆயத்த ஆடை தைப்பவர்கள், கைவினைப் பொருட்கள் செய்பவர்கள் போன்றவர்கள். 

உடல் உழைப்பாளிகள்: வேளாண் தொழிலா ளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள்,            ஒப்பந்தத்          தொழிலாளர்கள், கைவண்டி இழுப்பவர்கள், தலைச் சுமை சுமப்பவர்கள், வீட்டு வேலை                     செய்பவர்கள் போன்றவர்கள்

சேவை மற்றும் உற்பத்தியில் ஈடுபடுபவர்கள்: உழவர்கள், மாடு மேய்ப்பவர்கள், உப்பு        உற்பத்தி                     யாளர்கள், சிறு அளவில் உணவு தயாரித்து விற்ப வர்கள் போன்றவர்கள்.

சேவா வங்கி, ஏழைகளுக்கான தேசிய ஓய்வுத் திட்டத்தையும் நடத்தி வருகிறது. இதில்      40,000                     உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இதன் மூலம், மிக எளிதாக சேமிக்கவும், அரசு மானியத்தைப்                     பெறவும் முடிகிறது. இது ஏழைகளின் முதிய வயதில், ஒரு குறைந்த                 பட்ச பொருளாதாரப்         பாதுகாப்புக்கு உதவுகிறது.