சென்னை, அக். 18- அரசு ஊழியர் களுக்கு மருத்துவப் படி, இடர் படி, பராமரிப்பு படி உள்ளிட்ட படிகளை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்டுள்ள ஆணை வருமாறு:
கடந்த 1995 ஏப்ரல் 21ஆம் தேதி மற்றும் அதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஊழியர்க ளுக்கு மருத்துவ செலவை திரும்பப் பெரும் திட்டத்தின் அடிப்படையில் தற்போது பெரும் மருத்துவச் செலவில் 15 சதவீதம் அதிகரிக்கப்பட் டுள்ளது. ஏற்கெனவே இருந்த படி ரூ.100லிருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப நல திட்டத்தில் சீருடை படி யாக கிரேட் 1 நர்சு, கண்காணிப் பாளர்கள், கிரேட் 2 தியேட்டர் நர்சுகளுக்கு ரூ.1880லிருந்து ரூ.3600 ஆகவும், பேருகால உத வியாளர்கள், கிராமப்புற நர்சு கள், ஹெல்த் இன்ஸ்பெக்டர்க ளுக்கு ரூ.1000லிருந்து ரூ.2000மாக வும் ஹெல்த் விசிட்டர்களுக்கு ரூ.900லிருந்து ரூ.1800ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வாசிங் படியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர், சிறைத் துறை மற்றும் வனத்துறை ஊழியர்களுக்கு அனைத்து கிரே டுகளுக்கும் ரூ.500ஆக வாசிங் படி உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், பொருட்களை பராமரித்தலுக்கும் படி உயர்த் தப்பட்டுள்ளது. அரசு வழக்கு ரைஞர்களுக்கு கோட், கவுன் பராமரிப்பு படியும் அதிகரிக் கப்பட்டுள்ளன. ஆரம்ப சுகா தார நிலையங்களில் உள்ள உதவி சர்ஜன், மருத்துவ அதி காரி (இந்திய மருத்துவம்) ஆகி யோருக்கும் படி அதிகரிக்கப் பட்டுள்ளது. மேலும், போஸ் மார்டம் அதிகாரி, போஸ்ட் மார்டம் உதவியாளர் ஆகியோ ருக்கும் படி அதிகரிக்கப்பட்டு உள்ளது. தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ அதிகாரிகளுக்கும், சிறப்பு உதவி அதிகாரிகளுக்கும், நர்சுகள் மற் றும் கண் காணிப்பாளர்களுக்கும் படி ரூ.2000மாக உயர்த்தப்பட்டு உள்ளது.
மலைப்பிரதேசங்களில் பணியாற்றும் அரசு ஊழியர் களுக்கு ரூ.1200லிருந்து ரூ.1500 வரை பனிக்கால படி அதிகரிக் கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் தனி உதவியாளர்கள், தலை மைச் செயலக பிரிவு அலுவ லர்கள், ஆகியோருக்கும் சிறப் புப் படி உயர்த்தப்பட்டுள்ளது. டிஜிபி, தலைமைக் காவலர், கான்ஸ்டபிள், கிரேட் 1 மற்றும் கிரேட் 2 டிரைவர்களுக்கு இடர் படி அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாநில குற்ற ஆவண பிரிவு காவல்துறையினர், அதிரடிப் படை காவல்துறையினர், வெடி குண்டு தடுப்பு பிரிவு காவல் துறையினர், கமாண்டோ பிரிவு காவல்துறையினருக்கும் படி உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.
வாடகைப்படி
வாடகைப்படி
அரசு வெளியிட்டுள்ள ஆணை வருமாறு: அரசுப் பணியில் ரூ.13,600 சம்பளம் பெறுபவர் களுக்கு வாடகைப் படியாக ரூ.1300ம் அதிகப்படியாக ரூ.64,201 சம்பளம் வாங்குப வர்களுக்கு ரூ.8300ம் மாத வாடகைப் படியாக உயர்த்தப் பட்டுள்ளது. அரசு குடியிருப் பில் வசிக்காத அரசு ஊழியர் களுக்கு இந்த தொகை 13,600 சம்பளம் பெறுபவர்களுக்கு வாடகைப் படியாக ரூ.1700ம், அதிகப்படியாக ரூ.64,201 சம்பளம் வாங்குபவர்களுக்கு ரூ.8200ம் மாத வாடகைப் படியாக உயர்தப்பட்டுள்ளது. கிரேட் 1 முதல் கிரேட் 4வரையிலான ஊழியர்களுக்கு அவர வர் வாங்கும் சம்பளத்திற் கேற்ப இந்த தொகை அதிகரிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகள் அடுத்த 3 மாதத்துக்குள் நிறைவு பெறும்
சென்னை, அக். 18- மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக சுரங்க ரயில் பாதை அமைக்கும் அனைத்துப் பணிக ளும் அடுத்த 3 மாதத்துக்குள் முழுமை யாக நிறைவு பெறும் என மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை பொது மேலா ளர் அரவிந்த் ராய் திவேதி கூறினார்.
மே தினபூங்கா முதல் தேனாம் பேட்டை (ஏஜி-டி.எம்.எஸ்) வரை நடை பெற்று வந்த 2 சுரங்கப்பாதை பணி களில் முதல் சுரங்கப் பாதைக்கான இறு திக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை செவ்வாய்க்கிழமை, தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருட் டிணன், தலைமை பாதுகாப்பு அதிகாரி ஜெயகவுரி, முதன்மை பொது மேலாளர் விஜயகுமார் சிங் உள்ளிட்டோர் பார் வையிட்டனர்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை பொது மேலாளர் அரவிந்த் ராய் திவேதி கூறியதாவது: சென்னையில் நடைபெற்று வரும் சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு கட் டத்தை எட்டியுள்ளன. அடுத்த 3 மாத காலத்துக்குள் அனைத்து சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணிகளும் நிறைவ டைந்து விடும். மே தின பூங்கா முதல் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வரையிலான பாதையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றார்.
இரண்டாம் கட்ட பணிகளுக்காக மாநில அரசு, மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த மாதம் (நவம்பர்) மாநில அரசு ஜப்பான் நிதி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
மாநகர போக்குவரத்து கழகத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து பொதுவான பயண அட் டையை பயணிகளுக்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படும் ரயில் சேவையை முற்றிலுமாக மெட்ரோ ரயில் நிறுவனத் தின் பொறுப்பில் கொண்டு வந்து இயக் குவது தொடர்பான பணிகள் நடை பெற்று வருகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் மெட்ரோ ரயிலுக் கான சென்னை சதுக்கம் கட்டப்பட வுள்ளது. அந்த பகுதியில் பாரம்பரியக் கட்டடங்களான ரிப்பன் மாளிகை, விக்டோரியா அரங்கம், அரசு மருத்துவ மனை, தெற்கு ரயில்வே தலைமையகம், சென்ட்ரல் ரயில் நிலையம் இருப்பதால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு மத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை சதுக்கம் கட்ட பாரம் பரிய கட்டடங்களைப் பாதுகாக்கும் அமைப்பின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார் அவர்.
மே தின பூங்கா முதல் தேனாம் பேட்டை (ஏ.ஜி - டி.எம்.எஸ்.) இடையே உள்ள 3 ஆயிரத்து 616 மீட்டர் நீளம் (3.5 கிலோ மீட்டர்) கொண்ட 2 சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகள் நடை பெற்று வந்தன. இதில் முதல் சுரங்கப் பாதை பணியில் ஈடுபட்டிருந்த சுரங்கம் தோண்டும் இயந்திரம் எல்.அய்.சி, ஆயிரம் விளக்கு ரயில் நிலையங்களின் வழியாக தேனாம்பேட்டை பகுதிக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் வர வில்லை. இயந்திரத்தில் உள்ள வெட் டுக்கருவிகளின் தேய்மானமே தாமதத் துக்கு காரணம் எனச் சொல்லப்படுகிறது. இருப்பினும், அதனை சரிசெய்து, பணி கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதே தடத்தில் உள்ள இரண்டாவது பாதையில் இன்னும் 450 மீட்டர் வரை தோண்ட வேண்டியுள்ளது.-விடுதலை,18.10.17