வியாழன், 30 மார்ச், 2017

கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க புதிய பொறுப்பாளர்கள் தேர்வு


12.03.17 நண்பகல் 12.00மணி அளவில் குரோம்பேட்டை, இலட்சுமி புரத்திலுள்ள பெரியார் மன்றத்தில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.முத்தையன் அவர்கள் மேற்பார்வையில் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க 2017ம் ஆண்டுக்காண புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது.
கீழ் கண்டோர் 2017ம் ஆண்டுக்காண புதிய பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் - த.ரமேஷ்
செயலாளர் - செ.ர.பார்த்தசாரதி
பொருளாளர் - கா.நாகராஜ்
துணைத் தலைவர் - கோ.குமாரி
துணைச் செயலாளர்- 1.கோ.கணேஷ், 2.ம.கருணாநிதி
செயற்குழு உறுப்பினர்கள்
1.பா.இயேசுராஜா
2.வ.வசந்தி
3.கே.சிவகாமி
செயற்குழு உறுப்பினராக இருந்த எம்.கே.சூரியகலாவதி அவர்கள் 'மே' மாதம் பணி ஓய்வு பெறுவதால் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, பாராட்டப்பட்டார்,

26 வார கால மகப்பேறு விடுப்பு: புதிய சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதுடில்லி, மார்ச் 30 இந்திய மகப்பேறு உதவிச்சட்டம் 1961- இன்படி பணிபுரியும் பெண்களுக்கு 12 வாரம் பேறுகால விடுப்பு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த கால அளவை 26 வாரங்களாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக மேற்படி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு வகை செய்யும் மகப்பேறு உதவி சட்டத்திருத்த மசோதா-2016, கடந்த மார்ச் 9- ஆம் தேதி மக்களவையிலும், 20- ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த மசோதாவுக்கு கடந்த திங்கட்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி 55 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த 12 வாரகால பிரசவ விடுமுறை தற்போது 26 வாரங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே இந்த 26 வாரகால விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களுக்கு பிரசவ விடுமுறை அளிப்பதில் கனடா (50 வாரங்கள்), நார்வே (44 வாரங்கள்) நாடுகளுக்கு அடுத்த இடத்தை இந்தியா (26 வாரங்கள்) பிடித்துள்ளது.
-விடுதலை,30.3.17

புதன், 1 மார்ச், 2017

பாலியல் புகார்களை விசாரிக்கும் குழுக்களுக்குப் புதிய வழிகாட்டும் முறைகள் மத்திய அரசு அறிவிப்பு


புதுடில்லி, ஜூலை 18_ பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் களுக்கு ஊதியத்துடன் 3 மாத விடுப்பு வழங்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு நிறுவனத்தி லும் புகார் குழு என்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள் ளது.
இந்தக் குழுவின் தலைவராக ஒரு பெண் இருப்பார். ஒருவேளை ஒரு நிறுவனத்தின் உயர் பதவியில் பெண் அதிகாரி இல்லையெனில், வேறு நிறுவனத்தில் பணியாற் றும் பெண் அதிகாரி, குழு வின் தலைவராக இருப் பார்.  மேலும், அந்தக் குழு வில் உள்ளவர்களில் பாதி யளவுக்கும் மேற்பட் டோர் பெண்களாக இருப் பார்கள்.
இந்நிலையில், இந்தப் புகார் குழுக் களுக்கு புதிய வழிகாட் டும் விதிமுறைகளை மத் தியப் பணியாளர், பயிற் சித் துறை வெள்ளிக் கிழமை அறிவித்தது. அந்த அறிவிப்பில் கூறப் பட்டுள்ளதாவது:
பாலியல் புகார்களை அலட்சியமாகவோ, யதேச் சாதிகாரத்துடனோ விசா ரிக்கக் கூடாது. பாதிக்கப் பட்ட பெண் அல்லது குற்றம்சாட்டப்பட்ட அலுவலருக்கு பணியிட மாறுதல் அளிக்குமாறு பரிந்துரைக்க புகார் குழுவுக்கு அதிகாரம் உள் ளது. மேலும், பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு ஊதி யத்துடன் 3 மாத விடுப்பு வழங்குவதற்கு பரிந்து ரைக்கவும் அதிகாரம் உள்ளது.
பாலியல் புகார் தொடர்பான விசாரணை களில், தன்னார்வ அமைப்பு அல்லது பாலியல் குற்றங் களுக்காக போராடும் பிரபல அமைப்பை மூன் றாவது நபராக புகார் குழு அனுமதிக்க வேண் டும். பாலியல் தொந்தர வுக்குள்ளான 3 மாதங் களுக்குள் பாதிக்கப்பட்ட வர் புகார் தெரிவிக்க வேண்டியது அவசியம். குற்றம்சாட்டப்பட்ட நபரின் ஊதியத்தைப் பிடித்தம் செய்ய பரிந்து ரைக்கவும், அந்தத் தொகையை பாதிக்கப் பட்டவருக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கவும் புகார் குழுவுக்கு அதி காரம் உள்ளது.
ஒரு வேளை, உள்நோக்கத் துடனோ, தவறாகவோ, போலி ஆதாரங்களைக் காட்டியோ பாலியல் புகார் கொடுத்தால், அவர் களுக்கு எதிராக நட வடிக்கை எடுக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட வர், தனக்கு எதிரான ஆதாரங்களை கொடுக்க விரும்பும் சாட்சிகளை மிரட்டினோலா, அச் சுறுத்தினாலோ அந்தப் புகார்களைக் கொடுத்த வர்களுக்கு எதிராக கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், புகார் குழுவுக்கோ, அந்தக் குழுவின் உறுப்பினர் களுக்கோ, விசாரணை அதிகாரி உள்ளிட்டோ ருக்கோ மிரட்டல் விடுத் தாலும் கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-விடுதலை,18.7.15

தொழிற்சாலைகளில் இரவில் வேலை செய்ய ஆந்திர பெண்களுக்கு மாநில அரசு அனுமதி


அய்தராபாத், ஏப்.6_ தொழிற்சாலைகளில் இரவு நேரத்தில் பெண்கள் வேலை செய்ய இருந்த தடையை நீக்கி ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவை சேர்ந்த முன்னணி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பெண்கள் இரவில் வேலை பார்க்க இருந்து வரும் தடையை நீக்கும்படி கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து மாநில தெழிற்சாலைகள் இயக்கு நரகத்தைத் தொடர்பு கொண்டு தடையை நீக்க உத்தரவிட்ட அவர் தகுந்த பாதுகப்பு வசதி களுடன் பெண்களை இரவில் வேலை செய்ய அனுமதிக்கும்படி தெரிவித்துள்ளார்.
மேலும் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவேண்டும், ஆண்களுக்கு சமமான வாய்ப்புகள், சாப்பாட்டு அறைகள், போதுமான கழிவறை வசதிகள் கட்டிக்கொடுக்க வேண்டும்,
அவர்களின் குழந்தைகளுக்கு காப்பக வசதி, பாலியல் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க குழுக்களை அமைப்பது, முக்கியமாக போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என நிறுவனங்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.
-விடுதலை,6.4.15