வெள்ளி, 2 அக்டோபர், 2015

பெண்களுக்காக பெண்களால் இலங்கையில் முதல் தொழிற்சங்கம்

இலங்கையில் தோட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் முதல்முறை யாக தங்களின் உரிமைகளுக்காக தொழிற்சங்கத்தைத் தொடங்கி உள்ளனர். இத்தொழிற்சங்கத்துக்கு பெண்கள் ஒற்றுமை ஒன்றியம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பெண்கள் ஒற்றுமை ஒன்றியம் தொழிற்சங்கத்தை ஏற்படுத்தியுள் ளவர்களில் ஒருவரான பத்மினி விஜயசூரிய கூறுகையில், இலங்கையில் தொழில் ரீதியாக பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நோக்குடன், முதல் முறையாக பெண்களுக்காக, பெண் களால் நடத்தப்படும் தொழிற்சங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் உரிய முறையில் பதிவு செய்யப்படும்.
நாட்டிலுள்ள ஏனைய தொழிற் சங்கங்கள் பெண்களின் தொழில்சார் உரிமைகளை பெரிய அளவில் கண்டு கொள்ளாத காரணத்தாலேயே பெண் களுக்கு என்று தனியான தொழிற் சங்கத்தை தொடங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்கெனவே செயல்பட்டுவரக்கூடிய தொழிற்சங்கள் தொழிலாளர்களின் பொதுவான அல்லது முக்கியமான பிரச்சினைகளுக் காகப் போராட்டங்களை நடத்து கின்றன. ஆனால், அவை தொழில் புரியும் பெண்களின் உரிமைகளைப் பெரிதாக கருத்திற்கொள்வதில்லை.
குறிப்பாக, தொழில் செய்யும் பெண் களில் பலர் பாலியல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதோடு, தொழில் புரியும் இடங்களில் அடக்குமுறைகளையும் எதிர்கொள்கின்றனர்.
இந்த முயற்சி என்பது பிற தொழிற் சங்கங்களை பலவீனப்படுத்துவதற்காக அல்ல. தொழில் ரீதியாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முற் றுப்புள்ளி வைப்பதே இதன் நோக்கம்.
முதற்கட்டமாக ஏற்றுமதிக்காகவே அமைக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆயத்த ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் புரியும் பெண்கள் மற்றும் தோட்டத்துறையில் தொழில் புரியும் பெண்களுக்கு குரல் கொடுப்பது முக்கியமான இலக்காக இருக்கிறது.
அதேவேளை, இவ்வமைப்பு வீட்டு வேலை செய்யும் பெண்கள் மற்றும் வெளிநாடுகளில் பணி புரியும்போது பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் பெண்கள் தொடர்பான வைகளில் கவனம் செலுத்தவுள்ளது. இந்த புதிய தொழிற்சங்கத்தினூடாக தொழில் புரியும் பெண்கள் அதிக நன்மையடைவர் என்று நம்பிக்கை யுடன் பத்மினி விஜயசூரிய குறிப்பிட் டுள்ளார்.           _பிபிசி தமிழோசை
-விடுதலை ஞா.ம.,8.8.15

பணியிலிருந்து நீக்க முடிவு செய்தால் 3 மாதம் முன்பு கடிதம் வழங்க வேண்டும்

பணியிலிருந்து நீக்க முடிவு செய்தால் 3 மாதம் முன்பு கடிதம் வழங்க வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜூலை 19_ஒருவரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்தால், 3 மாதத்துக்கு முன் அவருக்கு கடிதம் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சியைச் சேர்ந்தவர் முனைவர் ஏ.தண்டீஸ்வரன். திருச்சி நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி நிறுவன இணை ஆராய்ச்சியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார். இவரை 12.6.2015இல் பணியில் இருந்து நீக்கியும், குடியிருப்பை காலி செய்யவும் நீர்ப்பாசன மேலாண்மைப் பயிற்சி நிறுவன இயக்குநர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தண்டீஸ்வரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நிறுவனத்தின் ஆட்சிக் குழு ஒப்புதலின்பேரில் பணி நியமனம் செய்யப்பட்டேன். ஆனால், ஆட்சிக் குழுவின் ஒப்புதல் பெறாமல், என்னை பணிநீக்கம் செய்து இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். சமூகப் பொருளாதாரப் பிரிவு ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறேன். என்னை வேலையில் இருந்து நீக்கினால், அப்பிரிவு இல்லாமல் போய்விடும். என்னை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந் தது. இந்த மனுவை
விசாரித்து நீதிபதி எஸ். வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
ஆட்சிக் குழு ஒப்புதலுடன் மனுதாரர் இணை ஆராய்ச்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விதிப்படி ஒருவரை நியமனம் செய்யவும், பணிநீக்கம் செய்யவும் இயக்குநருக்கு அதிகாரம் உள்ளது. ஒருவரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்தால், 3 மாதத்துக்கு முன்பு கடிதம் அனுப்ப வேண்டும். ஆனால், மனுதாரருக்கு 3 மாதத்துக்குரிய ஊதியத்தைக் கொடுத்து உடனடியாக வெளியேற்றி உள்ளனர். இது தவறு. ஒப்பந்தப்படி மனுதாரருக்கு 3 மாதத்துக்கு முன் கடிதம் வழங்கி சட்டப்படி பணி நீக்கம் செய்யலாம். கடிதம் வழங்காமல், உடனடியாக பணிநீக்கம் செய்வதை ஏற்க முடியாது. எனவே, மனுதாரர் 3 மாதம் வரை அதாவது 11.9.2015 வரை பணிபுரிய அனுமதிக்கவும், குடியிருப்பில் தங்கவும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.
-விடுதலை,19.7.15

வியாழன், 1 அக்டோபர், 2015

பெல் வாயிற் கூட்டத்தில் செயலவைத் தலைவர் பேச்சு

ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவில்லையென்றால்
வலுவான ஒன்றிணைந்த போராட்டத்தினை திராவிடர் கழகம் நடத்தும்
பெல் வாயிற் கூட்டத்தில் செயலவைத் தலைவர் பேச்சு
திருச்சி, அக்.1-_ பெல் ஒப்பந்த ஊழியர்களின் பணி நிரந்தரம் குறித்து திராவிடர் தொழிலாளர் கழகம் சார்பில் தொடுக்கப் பட்டுள்ள வழக்கு தொடர் பான வாயிற் கூட்டம் செப்.14ஆம் தேதி மாலை 4 மணியளவில் பெல் பயிற்சி பள்ளி அம்பேத்கர் சிலை அருகில் நடை பெற்றது.
இந்த வாயிற் கூட்டத் திற்கு பெல் வளாக ஒப்பந் தத் தொழிலாளர் நல செய லாளர் மு.சேகர் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ஞா.ஆரோக்கிய ராஜ், மாவட்ட செயலாளர் ச.கணேசன், திருவெறும்பூர் ஒன்றிய தலைவர் மாரி யப்பன் செயலாளர் தமிழ்ச் சுடர், ஆண்டிராஜ், சுதர்சன், செல்வம், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெல் வளாக ஒப்பந்தத் தொழிலாளர் நல சங்கத் தலைவர் வி.சண்முகம் வரவேற்புரையாற்றினார். பெல் தி.தொ.க தலைவர் ம.ஆறுமுகம் தொடக்கவுரை யாற்றினார். இவ்வாயிற் கூட்டத்தில் கலந்து கொண்டு செயலவை தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் பேசும்போது:_
பெல் நிறுவனத்தில் இரண்டு வகை பணியா ளர்கள் பணியாற்றி வருகின் றனர். ஒன்று நிரந்தர பணி யாளர்கள், மற்றொன்று ஒப்பந்த பணியாளர்கள்.  இதில் 1174 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணி யாற்றி வருகின்றனர்.
இந்த ஒப்பந்தத் தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு பெல் நிரு வாகம் மறுத்து வருகிறது. 1978 முதல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறை இருந்து வருகிறது.  ஒப் பந்தத் தொழிலாளர்களுக்கு அனைத்தும் பெல் நிரு வாகத்தின் தனிஅதிகாரி யாக இருப்பவர்தான் செய்து வருகிறார். ஆனால் தொழி லாளர்களை நிரந்தப்படுத் துவது தொடர்பான பேச்சு வார்த்தையில் வழக்கு என்று வரும் போது, இந்த ஒப்பந்த தொழிலாளர்களுக் கும், எங்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என நிருவாகம் கூறி வருகின்றது.
இது தொடர்பான முத்தரப்பு பேச்சு வார்த் தைக்கும், எந்தவித கோரிக் கைக்கும் காது கொடுத்து கேட்காத நிலையில் நிருவாகம் இருப்பதால்தான் திராவிடர் தொழிலா ளர்கள் கழகம் ஒரு வழக்கு போட்டுள்ளது. அதில் தீர்ப்பையும் பெற்றுள்ளது. அந்த தீர்ப்பில் 8 வார காலத்திற்குள் பெல் நிரு வாகம் நடைமுறைப்படுத்த வேண்டுமென கூறியுள்ளது. அதிலும் மெத்தனம் காட்டிக் கொண்டு இருப்பது தான் வேதனை அளிக்கிறது.
தொழிலாளர்களுக்கு நன்மை செய்யவிட்டாலும் தீமை செய்யாமல் இருந் தாலே போதும். இந்த 8 வார காலத்திற்காகாத்தான் நாங்கள் காத்துக் கொண்டி ருக்கிறோம். பெல் நிரு வாகம் எடுக்கும் முடிவை பொறுத்துதான் எங்களது அடுத்தக் கட்ட நட வடிக்கை இருக்கும். இல்லை யென்றால் வலுவான ஒன்றிணைந்த போராட் டத்தினை திராவிடர் கழகம் நடத்தும் என்று அவர் பேசினார்.

இந்த வாயிற் கூட்டத் திற்கு எல்.எல்.எப். இளந் தமிழன், சண்முகம், ராம தாஸ்,  சிங்கராசு, துரையப் பன், அசோகன், சங்கிலி, காமராஜ், ராமலிங்கம், பாஸ்கர், மணிமாறன், பெரியசாமி, கோவிந்தராஜ், நாதன், கருப்புசாமி உள் ளிட்ட ஏராளமான நிரந்தர ஊழியர்களும், ஒப்பந்த ஊழியர்களும், அலுவலர் களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.  நிறை வாக கவிஞர் விடுதலை கிருட்டிணன் நன்றி கூறினார்.
-விடுதலை,1,10,15